
ஒவ்வரு நாளும் நமக்கு ஒவ்வரு புதிய யுகம்தான். இந்த நிமிடம் போனால் அதே போல் வேறு நிமிடம் கண்டிப்பாய் கிடைக்காது. வாழ்க்கை என்பது வரப்போகும் நிமிடம் மட்டுமல்ல கடந்துபோன, கடந்து போகும் நிமிடம் சேர்ந்ததுதான். ஒன்றுமட்டும் நிச்சயம் காலம் கடந்தாலும் நாம் ஆற்றிய கடமை நம்மை நோக்கி வந்துகொண்டுதான் இருக்கும். எதையும் நம்மால் தவிர்க்கவும் முடியாது, தவிர்க்க நினைத்தாலும் நம்மால் தடுக்க முடியாது. நாம் எதை பெறவேண்டும் என்று இருக்கிறதோ அதை கண்டிப்பாய் அடைவோம். அது அரசனானாலும் சரி ஆண்டியானாலும் சரி காலம் ஒன்றுதான். பிறப்பது என்பது கண்டிப்பாய் இறக்க துணிதவனால் மட்டுமே மீண்டும் பிறக்க முடியும். ஒவ்வருநாளும் பிறப்பவன் "தான்" என்கின்ற ஆணவத்தைவிட்டு எல்லாமாக இருக்க விரும்புகிறான்.

பிறப்பது என்பது ஒவ்வரு நிமிடமுமாக நம்மை நாம் தயார்படுத்திக்கொள்வது. பயணத்தின் பாதைகள் பழுதானாலும் போகும் பாதை சரியான இலக்கினை அடைய வேண்டுமே தவிர பயணத்தை முடிதுக்கொல்வதல்ல. அழகு என்பது நாம் ரசிப்பதில் இருக்கிறதே தவிர ரசனை ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டு இருக்கும் ஆனால் ரசிக்கும் மனமானது அனைவருக்கும் பொதுவாகவே படைக்கப்பட்டிருக்கிறது. உதிர்வது மீண்டும் பிறக்கத்தானே தவிர முடிந்து போவதற்கல்ல . மனம் மகிழ்ந்து ஒரு நிமிடம் வாழ்ந்தால்கூட அந்த ஒரு நிமிட மகிழ்ச்சியே ஒரு முழு வாழ்க்கைக்கான அடையாளமாகும். வாழ்தல் என்பது நாள் கணக்காக தவறாக புரிந்திருக்கிறோம். வாழ்தல் என்பது நாம் நம்முடைய வாழ்க்கையின் முழுமையான, தன்மையான,அமைதியான, மகிழ்ச்சியான தருணத்தை மட்டுமே குறிப்பதாகும். அத்தகைய வாழ்கையை வாழும்போது ஒவ்வரு நிமிடமும் ரசித்து புதிதாக பார்த்தோமேயானால் அதுதான் நாம் புதிதாய் பிறந்ததற்கான அடையாளமாகும்.