சார் உங்கள பார்க்க தினசெய்தி ஆசிரியர் கார்த்திக் வந்திருகிறார் என்று கான்ஸ்டபில் இளமாறன் அனுமதி கேட்கிறார்.
வரச்சொல் என்று சொன்னதும் கார்த்திக் உள்ளே வருகிறார்.
வாங்க கார்த்திக் உட்காருங்க என்று இன்ஸ்பெக்டர் உபசரித்ததும் பேச்சை ஆரம்பிக்கிறார்.
சார் கேசை பற்றிய போஸ்ட் மார்டன் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கலாமா?
கார்த்திக் இது ஒரு சிக்கலான கேஸ் காரணம் இந்த கை ரேகை எங்ககிட இருக்கற மற்ற கைதிக யாரோடையும்
பொருந்தல. கொலையாளிக்கு இந்த கொலையை புத்திசாலிதனம பிளான் போட்டு தடயம்
இல்லாம செய்ய முயற்சி செய்திருக்கான். கொலை செய்தது பணதுக்காகவோ, நகைக்காகவோ செய்யவில்லை, அவங்க ஏதோ ஒரு
பொருளையோ, தடையத்தையோ தேடித்தான் இந்த கொலைகள் நடந்திருக்கணும். சிவா பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க கார்த்திக்?
சிவாவ எனக்கு ஒரு பத்து நட்கலாதான் தெரியும். அவர எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு காரியத்த எடுத்தார்ன அத முடிக்காம விடமாட்டார் அவ்ளோ
ஈடுபாடு வேலையில். அதுவே அவர் உயிருக்கு ஆபத்த முடிஞ்சுருச்சு. ஆனா சமையல்காரன் ராஜு ஏன் கொலை செய்யப்படானு தெரியல?
நான் விசாரிச்சதுல சிவாவும், ராஜுவும் சிறுவயசு நண்பர்கள், சிவா நல்லா படிச்சு உங்க பத்திரிகைல வேலைக்கு சேர்ந்தார் அவரது நண்பன் ராஜு படிப்பு வராம சமையல்காரர் ஆகிட்டாரு.
சார் ஆனா சிவா ஏன் அவர் நண்பர எனக்கு சமையல் செய்ய அனுப்பினாரு?
சிவா உங்ககிட்ட ராஜு இருக்கிறது ஏதொரு ஒரு வகையில அவருக்கு உதவும்னு நினைச்சிருக்கலாம். கார்த்திக் சிவா, ராஜு ரெண்டு பேரும் ஒரு திட்டதொடதான் உங்களுக்கு சமைக்க அனுப்பி இருக்கனும். அதை கண்டுபிடிக்க நீங்க எனக்கு கொஞ்சம் உதவனும்.
கண்டிப்பா இன்ஸ்பெக்டர் நான் என்ன செய்யணும் சொல்லுங்க?
சிவா என்னென்ன கேசுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரு? யார் யார சந்திசாருனு நிருபமாகிட்ட பேசி தெரிஞ்சுகோங்க. அவங்க எங்களைவிட உங்ககிட்ட கொஞ்சம் இயல்ப பேசுவாங்க.
ஓகே இன்ஸ்பெக்டர் நான் இப்பவே நிருபமாவை சந்திக்கறேன்.
சரி கார்த்திக் அவங்ககிட்ட பேசிட்டு என்ன கூப்பிடுங்க என்று கூரி கார்த்திக்கு விடையளித்தார் இன்ஸ்பெக்டர்.
( விசாரணை தொடரும்...)
























