திங்கள், அக்டோபர் 31, 2011

போதிதர்மனாகிய என்னுடைய வரலாறு...


 திரைப்படங்கள் நமக்கு எத்தனை விசயங்களை கற்றுக்கொடுக்கிறது. காதல் முதல்கொண்டு கொலை செய்வது வரை நல்லவை, கெட்டவை  என்ற அனைத்தையும் நம்மால் மூன்று மணி நேரம் காண முடிகிறது. அந்த படங்கள் நமக்கு நிறைய கற்றுகொடுகிறது என்றால் அது மிகையாகது. போதிதருமன் என்ற அற்புதமான தமிழனை 
பற்றி 
7 ஆம் அறிவு படம் வராவிட்டால் போதிதருமனைப் பற்றி அறியாமலே போய் இருக்கும். இதோ போதிதர்மன்
பற்றிய வரலாறு.


போதிதருமனை பற்றி வெறும் வரலாறாக மட்டும் சொன்னால் சுவை இருக்காது. ஆகையால் போதிதருமனாக நான் உருமாறுகிறேன்.
இன்று 2011 ஆம் ஆண்டில் நாம் இருக்கிறோம் சற்று என்னோடு 495 ஆம் வருடத்திற்கு பயனியிங்கள்.

                 நான் தான் போதிதருமன். என்னுடைய வரலாற்றை நான் உங்களுக்கு சொல்லுகிறேன். நான்
495  ஆம் ஆண்டு சீனா சென்றேன் என்னை  போதிதர்மா என்று தமிழகத்திலும்   தா மோ என்று சீனாவிலும் அழைப்பார்கள். நான் 5 மற்றும் 6  ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர். எனக்கு இரண்டு சகோதரர்கள். நான் என்றுமே அரசாட்சியை விரும்பியதில்லை. ஆனால் என்னை கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டது. ஆனால் நான் சாகவில்லை. நான் என் குருநாதரிடம் பிரஜினாதரவிடம் சென்றேன். அவர் பல பயிற்சிகள் எனக்கு பல வருடம் அளித்தார். நான் ஒரு நாள் அவரிடம் கேட்டேன்  குருவே என்னுடைய வருங்கால கடமை என்ன?. உங்களுடைய மரணத்திற்கு பின்னால் நான் என்ன செய்ய வேண்டும்?. அவர் சொன்னார் போதிதர்மா நீ உலகபுகழ் அடையும் காலம் வந்துவிட்டது. ஆனால் புகழ் என்பது மாயை. அது நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடும். ஆகையால் நீ சீனா செல்வாய். அங்கு உனக்கான கடமை காத்திருகிறது என்றார்.



நான் சீனா செல்ல தயாராகும் நேரத்தில் எனது சகோதரர் இறந்துபோனார். அடுத்ததாக என் சகோதரர் மகன் மன்னர் ஆனார். அவர் என்னை வணக்கி அவர்  தந்தை செய்த பாவத்திற்கு வருந்தினார். அத்தோடு என்னை தலைநகருக்கு வரும்படி என்னை அழைத்தார். ஆனால் நான் சீனா செல்வதை எனது கடமையாகக்   கொண்டிருந்தேன். எனது நோக்கத்தை புரிந்து கொண்டு நான் சீனா செல்லும்போது மன்னர் புறா முலமாக அந்த நாடிட்கு நான் வருவதையும் என்னை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதையும் வேண்டி கேட்டுகொண்டிருந்தார். நான் அங்கு சென்றதும் மக்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள். நான் எதுவும் கூராமல் தியானத்தில் அமர்ந்துவிட்டேன்.

மக்களுக்கு நான் என்ன சொல்லபோகிறேன் என்று அமைதியாக காத்திருந்தார்கள். நான் அவர்களுக்கு எதுவுமே சொல்லாமல் சென்றுவிட்டேன். மக்கள் சிலர் என்மீது கோபப்பட்டார்கள், சிலர் அழுதார்கள், சிலர் சிரித்தார்கள். நான் அதைப்பற்றி எதையும் அப்போது சிந்திக்கவில்லை. மக்கள் என்னை புத்ததுறவி என்றார்கள். என்னை பலவாறு புகழ்ந்தார்கள். நான் எதையும் பொருட்படுத்தவில்லை. என்னுடைய பெருமைகளை அறிந்த தெற்கு சீனாவை ஆண்ட மன்னர் வு என்னை அழைத்து என்னோடு உரையாடினார். மன்னர் வு தன்னுடைய அருமை பெருமைகளை நான் புகழவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அவர் பல புத்த கோவில்களையும், சிலைகளையும் நிர்மானிததாகவும் அதே போல் கோவில் மற்றும் சிலைகள் உலகில் எங்கேனும் உள்ளதா என்று என்னை கேட்டார் நான் இல்லை என்று பதில் சொன்னேன். அப்படியானால் நான் சிறந்த மன்னன்தானே என்று என்னை கேட்டார். அதற்கு நான் இல்லை என்று பதில் சொன்னேன். என்னுடைய பதிலை சற்றும் எதிர்பார்க்காத வு. ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான் அவரிடம் ஒரு மன்னரின் கடமை மக்களை பாதுகாப்பது, புகழ் சேர்பதல்ல என்று கூறினேன். அதற்கு மன்னர் வு என்னை இந்த இடத்தைவிட்டு போகும்படி கோபப்பட்டார்.



நான் அவ்விடத்தை விட்டு என்னுடைய பயணத்தை தொடர்ந்தேன். நான் அடுத்த நகரமாகிய நான்ஜிங் என்ற இடத்தை அடைந்தேன் அங்கு பிரபலமான இடமாகிய பிலோவேர் ரெயின் பவில்லோன் என்ற இடத்தை அடித்தேன் அங்கு மக்கள் ஷேன் கோங் என்ற ஒரு புத்த துறவி மக்களுக்கு போதனை செய்துகொண்டிருந்தார். நான் அமைதியாக அங்கே நின்று கேட்டுகொண்டிருந்தேன். அவருடைய கருத்துக்கள் சில உண்மையும் சில உண்மையற்றதுமாக என் மனதில் பட்டது. நான் உண்மையான கருத்துகளை ஏற்றேன். உண்மையற்றதை நிராகரித்து கூரினேன். என் மீது கோபம் கொண்ட ஷேன் கோங் என்னை தாக்கினார். நான் திருப்பித்தாக்காமல் என் வழியில் நான் சென்றேன்.


என்னுடைய பொறுமையை பார்த்து என்னிடம் கற்றுக்கொள்ள ஷேன் கோங் என்னை பின்தொடர்ந்தார். நான் ஷவோலின் கோவில் அருகில் சென்றேன். என்னுடைய வருகையை அறிந்து அந்த கோவிலின் புத்ததுறவி என்னை அந்த கோவிலில் தங்கும்படி என்னை அழைத்தார். ஆனால் நான் அவரது அழைப்பை ஏற்காமல் ஒரு குகையில் சென்று தியானம் செய்தேன். என்னை பின் தொடர்ந்து வந்த ஷேன் கோங். அவருக்கு பாடம் கற்றுத்தரும்படி கேட்டார். நான் பதில் ஏதும் கூராமல் அமைதியாக தியானம் செய்தேன். அவர் என்னை ஷவோலின் கோவிலுக்கு வரும்படி என்னை அழைத்தார் நான் மெளனமாக என் தியானத்தை தொடர்ந்தேன். ஒம்பது வருடம் எனக்காக அவர் காத்திருந்தார். காலம் கடந்தது பதிமூன்று வருடங்களுக்கு பிறகு ஒரு பனிகாலத்தில் ஷேன் கோங் கோபமடைந்து என்மேல் பனிகட்டியை வீசி எறிந்தார் நான் தியானத்தில் இருந்து விழித்துக்கொண்டேன். அவர் மீண்டும் என்னை கற்றுக்கொடுக்கும்படி வற்புறுத்தினார். நான் சொன்னேன் இந்த பனித்துளி எப்போது சிவப்பாகிறதோ அப்போதுதான் நான் உனக்கு கற்றுக்கொடுப்பேன் என்று. உடனே ஷேன் கோங்  தனது ஆயுதத்தால் கையை அறுத்து அதில் வரும் ரத்தத்தை பனியில் கலந்தார். நான் உடனே அவரை ஷவோலின் கோவிலுக்கு அழைத்து சென்றேன்.

 அங்கு உயரமான அந்த கோவில் சுவற்றில் ஒரு துவாரத்தை செய்தேன் அதில் வந்த தண்ணிரை பருகும்படி பணித்தேன். ஷேன் கோங்  அதை குடித்தார் அந்த தண்ணிர் கசந்தது. அந்த தண்ணிரை ஒரு வருடம் பயன்படுத்தினார் ஷேன் கோங்  மீண்டும் என்னிடம் வந்தார் கற்றுகொடுக்கும் படி கேட்டார். நான் மீண்டும் ஷவோலின் கோவிலில் ஒரு துவாரத்தை இட்டேன் அந்த தண்ணிர் புளித்தது. அதை ஒரு வருடம் பயன்படுத்தினார் ஷேன் கோங் . மீண்டும் என்னிடம் வந்தார் நான் மீண்டும் ஒரு துவாரத்தை அமைத்தேன். அந்த தண்ணிர் உப்பு கலந்திருந்தது. அதை ஒரு வருடம் பயன் படுத்திய பிறகு நான் கடைசியாக ஒரு துவாரம் அமைத்தேன் அதில் வந்த தண்ணிர் இனித்தது. அதை ருசித பிறகு ஷேன் கோங்  புரிந்துகொண்டார் வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை என்பதை உணர்ந்துகொண்டார். பிறகு நான் அவருக்கு பல பாடங்கள் கற்றுக்கொடுத்தேன். எனக்கு பிறகு ஷேன் கோங்  ஷவோலின் கோவிலை நிர்மாணித்தார். இதுவே  என்னுடைய வரலாறு.

சனி, அக்டோபர் 29, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம் - 2


அர்ஜுன் ஜோதியிடம் அவளது பெயரை கேட்டுவிட்டு தனது சீனியரிடம் சென்று சொல்கிறான்.

அண்ணா அவங்க பெயர் பூஜா!

எது அண்ணாவா? மரியாதையா சார்னு கூப்பிடு.

ஓகே சார்!

எங்க காலேஜ் ரைம்ஸ் சொல்லு!

சார் அது எனக்கு தெரியாது சார்!

தம்பி உன் பெயர் என்ன சொன்ன.... அர்ஜுன் இங்க வா நான் சொல்லித்தரேன்.என்று ஒரு சீனியர் 
மைட்டி! மைட்டி! சீனியர் சார்.. என்ற ரைம்சை சொல்லிகொடுத்து அர்ஜுனை சொல்ல சொன்னான்.

  அர்ஜுன் நான்கு முறை சொன்னதும் தனது முதல் நாள் வகுப்புக்கு செல்ல அனுமதி கேட்டான்.

கிளாஸ் போகனுமா! போ... ஒரு நிமிஷம் பூஜா  எங்கிருந்து வரா அப்டிங்கற விபரத்தை கிளாஸ் முடிந்ததும் நீ  என்கிட்ட வந்து  சொல்லணும்!

சார்! உங்க பெயர்?

எதுக்கு என்னைப்பற்றி ரிப்போர்ட்  செய்யவா! கிளாஸ் முடிந்ததும் இதே இடத்திற்கு வா நாங்க இருப்போம் இப்ப கிளம்பு! என்று குத்தலாக பதில் சொன்னான்  சீனியர் ரமேஷ்.

 ஓகே சார்! என்று அர்ஜுன் தனது வகுபிட்கு கிளம்பினான். 


அர்ஜுன் முதல் நாள் என்பதால் வரவேற்புரை நடந்து கொண்டிருந்தது. அர்ஜுன் மெல்ல  நுழைந்தான். அவன் பார்த்த அத்தனை முகங்களும் புதிது அதில் ஒரு முகம் மட்டும் அவன் சற்று முன்பு பார்த்த பூஜா. மிகவும் அழகாக இருந்தாள். முதல் நாள் என்பதால் பாடம் ஏதும் நடத்தாமல் ஒவ்வொருவராக வந்து தன்னை பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டார்கள். அவன் வருவதற்கு முன்பே பூஜா பேசிமுடித்துவிட்டு கீழே இறங்கி வந்தாள்.அவள் அர்ஜுனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு போய் அமர்ந்தாள்.   அவனால் பூஜாவைப் பற்றி  அன்று   அறிந்துகொள்ள  முடியவில்லை. கல்லூரி முடிந்தும் பூஜாவை அவரது அப்பா சுவாமிநாதன் காரில் அழைத்து சென்றுவிட்டார் . அர்ஜுன் மாலை சீனியர் சொன்னது போல் அவர்களை போய் பார்க்காமல்  தனது பைக்கை எடுத்துக்கொண்டு வீடிற்கு சென்றான். அர்ஜுன் அவனது அம்மாவிடம் எதையும் மறைக்க மாட்டான். எல்லாவற்றையும் அவன் அம்மாவிடம் சென்று சொல்லிவிடும் சுபாவன் உடையவன்.

வா அர்ஜுன்! உனக்காக ஸ்வீட் செய்தேன். இந்தா சாப்பிடு என்று ஊட்டிவிட்டார் அர்ஜுனுடைய அம்மா கவிதா.

எப்படி இருந்தது முதல் நாள் காலேஜ்? 


சூப்பர் அம்மா! என்னை  சீனியர் பசங்க ராகிங் செய்தாங்க. ஒரு அழகான பொண்ணுகிட்ட  பெயர் கேட்க சொன்னங்க. நான் கேட்டேன் அவங்க பெயர் பூஜா! அப்பறம் அந்த பொண்ணு என் கிளாஸ் தான் படிக்கிறாங்க. சீனியர் அவங்களைப்  பற்றி விபரங்கள்   கேட்டு சொல்ல சொன்னாங்க. ஆனா அவங்ககிட்ட இன்னைக்கு பேச முடியலை என்று கல்லூரியில் நடந்ததை ஒன்று விடாமல் ஒப்பித்தான் அர்ஜுன்.

ரொம்ப அழகா இருக்குமா  அந்த பொண்ணு?என்று கவிதா கேட்டதற்கு  வெட்கப்பட்டான் அர்ஜுன்!

இருவரும் பேசிகொண்டிருக்கும் போது அர்ஜுன் அப்பா சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வீட்டினுள் நுழைந்தார்.

என்ன அர்ஜுன் இன்னைக்கு காலேஜ் எப்படி இருந்தது?

நல்லா  இருந்தது அப்பா! என்று  பதில்  சொல்லிவிட்டு அர்ஜுன் தனது அறைக்கு சென்றான். அர்ஜுன் அவன் அப்பா மீது பயம். அர்ஜுன் அப்பா பார்க்க கொஞ்சம் முரட்டுதனமாக தெரியும். அதனால் அவன் அம்மாவிடம் பேசுவது போல் அப்பாவிடம் பேச மாட்டான்.



மறுநாள் அர்ஜுன் சீனியர் கண்களில் படாமல்   வகுப்பிற்கு சென்றான்.  பூஜா அமர்ந்திருந்த  இடத்திற்கு பக்கத்தில் சென்று  அமர்ந்தான் அர்ஜுன்.அப்போது  பூஜா   எழுதிக்  கொண்டிருந்தாள். அர்ஜுன் பூஜாவை  ஓரக் கண்ணால்  பார்த்தான். பூஜா  திரும்புவதாக இல்லை. அவன் உள்நெஞ்சம் படபடத்தது, பூஜாவிடம் பேசவேண்டும் என்று அவன் மனம் துடித்தது. அர்ஜுன்  தன்னை கவனிப்பதை உணர்ந்த பூஜா அர்ஜுனிடம் திரும்பினாள்.


அர்ஜுனிட்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

என்ன அர்ஜுன் இன்னைக்கு மறுபடியும் ராகிங் செய்தார்களா என்று கேட்டாள்?

அவன் சற்றும் எதிர்பாராத அந்த கேள்விக்கு தலையாட்டி பதில் சொன்னான்.

வேற என்ன சொன்னங்க?

அவங்க உன்னைப்பற்றிய   விபரம் எல்லாம் கேட்டுட்டு வர சொன்னாங்க.

சொல்லாட்டி என்ன செய்வாங்க?

என்னை வீட்டிக்கு போக விடமாட்டாங்க.

பூஜா மௌனமானாள்.

ப்ளீஸ் எனக்காக உன்னைப்பற்றிய விபரம் சொல்லு.

சரி! நான்  படிச்சது கோயம்புத்தூர் அவிலா கான்வென்ட். என் சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்ப  இருக்கிறது பெசென்ட் நகர் சென்னை. அப்பா பெயர் சுவாமிநாதன். அப்பா சொந்தமா பிசினஸ் செய்கிறார். என்று தன்னை பற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தாள் பூஜா.

பூஜாவிற்கு நன்றி   சொல்லிவிட்டு  கிளம்பினான் அர்ஜுன்!

                                                                          ( நட்பு தொடரும்...)




புதன், அக்டோபர் 26, 2011

மறந்துபோன காதல் கதை... (பாகம்-1)



       காதல் ஒரு ஆணுக்கும், பெண்ணிட்குமான புரிதல் என்னும் ஒப்பந்தம். பிரபஞ்சத்தின்  அழகாக ரகசியம் காதல். இது யாருக்கு எப்போது வரும் என்றெல்லாம் தெரியாதபோது வரும் காதல் முடிவில் வெற்றி அடைந்தாலும், அடையாவிட்டாலும் காலம் முழுவதும் மனதிற்குள் மௌனமாய் மண்டியிட்டு கிடக்கும் ஒரு வெளிப்பாடே காதல்.  அது வளர்ச்சி அடையாவிட்டாலும் எங்கோ நம் மனதிற்குள்  ஒரு மூலையில் தேங்கி நிற்கும் என்பது எக்காலத்திலும் யாராலும் மறுக்க முடியாத 
ஒன்று. 

கல்லுரி முதல் நாள் அர்ஜுன் வேக வேகமாக கிளம்புகிறான். 

டே அர்ஜுன்! இங்க வாட முதல் நாள் காலேஜ் போகும்போது  நெற்றிக்கு திருநீர் இட்டுக்கிட்டு போடா! என்றார்  அர்ஜுன் அம்மா கவிதா.

ஓகே அம்மா! என்று நெற்றிக்கு திருநீர் இட்டுக்கொண்டு தனது பைக்கை எடுத்து கொண்டு  கல்லூரிக்கு  செல்கிறான் அர்ஜுன்!
                                                            ***

ஏண்டி பூஜா இன்னுமா டிரஸ் பண்ற. முதல் நாள் காலேஜ் போற  கொஞ்சம் சீக்கிரம் வாடி என்றார்  பூஜாவின் பாட்டி பங்கஜம்.


பாட்டி போகலாம் என்று தனது அறையை விட்டு வெளியே வந்தாள்  பூஜா. அவள் அணிந்த பாவாடை தாவணியை 
பார்த்து கண்ணத்தில் ஒற்றிகொண்டார் பங்கஜம்.

பூஜா பாவாடை தாவணியில் இருக்கும் அழகை பார்த்து பூஜாவின் அப்பா சுவாமிநாதனுக்கு விபத்தில் இறந்த தனது மனைவி செல்வி நியாபகம் வந்தது.

அப்படியே உன் அம்மாவை பார்க்கற மாதிரி இருக்கு என்று  பூரித்தபடியே  பூஜாவை காரில்  கல்லூரிக்கு அழைத்து செல்கிறார் பூஜாவின் அப்பா சுவாமிநாதன்.

பூஜாவும், அர்ஜுனும் ஒரே நேரத்தில் கல்லூரியை அடைகின்றனர்.

பூஜா காரை விட்டு இறங்கி நடக்கும் போது அர்ஜுன் தன்னை அறியாமல் பூஜவையே பார்த்து கொண்டிருந்தான். அவன் மட்டுமல்ல அந்த கல்லூரியே பூஜாவின் அழகில் சொக்கிப்போனது. இவ்வளவு அழகான பெண் நம்ம கிளாஸ் வரணும் என்று கடவுளை  வேண்டிக்கொண்டான் அர்ஜுன். 

அப்போது அர்ஜுனை வழிமறித்து அவனை பற்றி விசாரிதனார் சீனியர் மாணவர்கள்.

அர்ஜுனிடம் இப்ப ஒரு பெண் போனாலே அவள் பேரை கேட்டுகிட்டு வா... என்று அர்ஜுனுடைய பைக் சாவியை கைபற்றிக்கொண்டனார்.

ஒரு வகையில் சந்தோசம் மனதிற்குள் ஓடிகொண்டிருக்க ஓடிப்போய் பூஜாவை வழிமறித்தான்.

சாரி மேடம்! என் பெயர் அர்ஜுன் முதல் ஆண்டு  மாணவன்! சீனியர் ராகிங் பண்டாரங்க அவங்க என் பைக்சாவியை வாங்கிடாங்க! அவங்களுக்கு உங்க பெயர் கேட்டு சொல்லணுமாம். ப்ளீஸ் உங்க பெயர் சொல்லுங்க? என்று அர்ஜுன் பதட்டத்துடன் கேட்டான்.

பூஜா! என்று தன் பெயரை கூரினாள்.

நன்றி! என்று சொலிவிட்டு அர்ஜுன் சீனியரை நோக்கி நடந்தான்
அர்ஜுன் மனதில் பூஜா என்ற பெயர் பம்பரமாய் சுழன்றது. மனதிற்குள் இடைவிடாது சொல்லிக்கொண்டே போனான் அர்ஜுன்.


                                                                             ( காதல் தொடரும்...)





  


ஓர் இரவில்... ஓர் மரணம்... கடைசி பாகம்...

கார்திகிட்கு நிருபமா தொலை பேசியில் அழைத்தார்.

கார்த்திக் எங்கே இருகிங்க?

நான் ரவீந்திரன் சார் வீட்டில் இருக்கேன். சொல்லுங்க நிருபமா.

கார்த்திக் உடனே நியூஸ் சேனலை பாருங்க!

கார்த்திக் உடனே நியூஸ் சேனலை மாற்றியதும்  அதில் ராபர்ட் சுட்டு கொல்லப்பட்டதையும் சக்தியை போலீஸ் மீட்டு வருவதையும் காண்பிக்கப்பட்டது.


அந்த காட்சியை பார்த்துகொண்டிருந்த ரவீந்திரன் உடனே தனது உயர் அதிகாரி சுரேந்தர் சின்காவிற்கு போன் செய்தார்.

சார் இது எப்படி நடந்தது? என்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும்  கேட்டா ர் ரவீந்திரன்.

ரவீந்திரன் நீங்க உங்க மனைவியை கடத்தியதால உங்களுடைய மன அழுத்தம் என்னால் உணர முடிந்தது. அதனால நான் ஒரு ஸ்பெஷல் போலீஸ் குழுவை நியமித்தேன். கொலைகாரன் ராபர்ட் என்று தெரிந்ததும்
நாங்கள் மிகவும் உசாராக இந்த வேலையை செய்தோம். ஒரு வண்டி விடாமல் சோதனை  செய்தோம். ஒரு பெரிய கனவாகன ஊர்தியில் ராபர்ட்டுக்கு இரண்டு வருடம் பாண்டிச்சேரியில் அடைக்கலம் கொடுத்த செபாஸ்டியனை கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தியதில் அவனுடைய பிளானை தெரிந்து கொண்டோம். அது என்னவென்றால் உங்களை கொலை செய்ய சொல்லும் போது எல்ல போலீஸ் குழுவும்  உங்களையே கவனிக்கும் அப்போது ஒரு பெரிய வைர கடையில் வைரங்களை கொள்ளை அடிப்பதுதான் அவர்கள் திட்டம். அந்த கொள்ளைக்கு பிறகு அதில் வரும் பணத்தை வைத்து தங்கள் முகத்தையே
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக்கொல்வதுதான் அவர்கள் திட்டம். இந்த மொத்த பிளானும் ராபர்ட் போட்ட திட்டம் அதோடு நிருபமா அவர்களது கைபையில் சிவா பதிவு செய்திருந்த  அவர்கள் திட்டம் பற்றிய வீடியோ காட்சிகள் மேலும் அவர்கள் திட்டத்தை உறுதி படுத்தியது. அந்த வீடியோ தேடலில்தான் இத்தனை கொலைகளை செய்தான் ராபர்ட். செபாஸ்டியனை ராபர்டிட்கு போன் செய்ய வைத்தோம். அவனிடம் திட்டங்கள் சரியாக நடப்பதாய் பேச வைத்தோம்.

பிறகு போலீஸ் குழு அவன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து. போலீஸ் வருவதை பார்த்து போலிசை சுட்டான் அப்போது நடந்த சண்டையில் அவனை நாங்கள் சுட்டு கொன்றோம். அவன் இறந்ததை உறுதிபடுத்தியதும் சக்தியை மீட்டோம்.

சார் அப்ப என் கைல இருக்கிறது அணுஆயுதம் இல்லையா?

இல்லை ரவீந்திரன் அது அவனுடைய மாஸ்டர் பிளான். அது அணு ஆயிதம் அப்டின்னு சொன்னதும்  நம்மை திசை திருப்ப அவனது பிளான். நாங்களும் அவன் பேர் அழிவை நோக்கிதான் இவ்வளவும் செய்கிறானோ அப்டின்னு நினைத்தேன். ஆனால் சரியான நேரத்தில் நிருபமா அந்த வீடியோ தொகுப்பை கொடுத்தார். அதில் அவர்களது உண்மையான பிளான் மற்றும் யார்?யார்? இதில் ஈடுபட்டார்கள் என்று  தெளிவாக தெரிந்தது. அதை வைத்துதான் செபாஸ்டியனை எங்களால அடையாளம் காண முடிந்தது.

ரவீந்திரன் தொலைகாட்சியை பார்த்கும் போது போலீஸ் ராபர்டின் உடலை எடுத்து வந்தார்கள்.

ரவீந்திரன் உங்க மனைவி சக்திகிட்ட பேசுங்க என்று தனது செல் போனை சக்திகிட்ட கொடுத்தார் சுரேந்தர் சின்க.
எப்படி இருக்க சக்தி?

நான் நல்ல இருக்கேன்.

சக்தி உன்னை கடத்தியதில் இருந்து நான் செத்துட்டேன். இப்பதான் எனக்கு உயிரே வந்தது.

சக்தி தனது அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மௌனமாய் ரவீந்திரன் பேசுவதை கேட்டுகொண்டிருந்தாள்.

சக்தி " I Love YOU " உனக்கு ஏதாவது நடந்திருந்தால் கண்டிப்பாய் நானும் உயிரோட இருந்திருக்க மாட்டேன் என்று ரவீந்திரன் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

சக்தி கண்களில் நீர் வழிய " I Too Love YOU "   என்று போனை கட் செய்தாள்.

                                                                                              (முற்றும்...)

ஓர் இரவில்... ஓர் மரணம்... பாகம்- 14


கார்த்திக் சிறிது நேரத்தில் ரவீந்திரன் வீடிட்கு வந்து சேருகிறான். அவன் வருவதை சற்று ஆறுதலாக நினைக்கிறார் ரவீந்திரன்.
சார் என்ன ஆச்சு?

கார்த்திக் என் மனைவியை கடத்திடாங்க இத்தனை கொலைகளுக்கும் காராணம் அணுவின்யாணி ராபர்ட். இந்த துப்பாக்கிய வச்சு அவன் சொல்றவனை கொலை செய்யணுமாம் இல்லை என்றால் என் மனைவி சக்தியை கொலை செய்திடுவானம். 

சார் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு! ஒரு போலீஸ் உங்களையே கொலைகாரனா ஆக்க  முயற்சியை
இதுவரைக்கும் நான் படத்தில் கூட பார்த்ததில்லை. சார் அந்த துப்பாக்கிய இப்படி கொடுங்க  என்று துப்பாக்கியை வாங்கினான் கார்த்திக்.

சிட்! சார்  இது அணு ஆயுதம்!

ஆமாம் கார்த்திக் அவனும் அதையேதான் சொன்னான். 

சார் அவன் உங்கள ஒரு கொலை செய்ய சொல்லலை ஒட்டுமொத்தமா அவன் உங்களை வைத்தே ஒரு ஊரையே அழிக்க பிளான் போற்றுகான். சார் உங்க கணிப்பொறியை திறங்க என்று கார்த்திக் சொன்னதும். அதில் அணு ஆயுதம் என்று ஆங்கிலத்தில்  அடித்ததும் அதை பற்றின முழு விபரமும் வந்தது.

  


சார் இதை பார்திங்களா ஒவ்வரு நாடும் தன்னுடைய பாதுகாப்பு என்ற பெயரில் அணு ஆயுதம் தயாரிச்சுகிட்டு இருக்காங்க. சார் ஒரு பத்திரிகையாளனாய் எனக்கு தெரிந்ததை நான் சொல்றேன்

லிபியா நாட்டை நாற்பது வருசங்களுக்கு மேல் ஆட்சி செய்த கடபியை பற்றி உங்களுக்கு சொல்றேன். கடபியை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அணுசக்தி ஒபந்தம் என்ற கொள்கைப்படி அவர்கிட்ட இருந்த அணு ஆயுதங்களி பிரிட்டிஷ் 
அரசாங்கம் வாங்கிடாங்க. அவருக்கு உறுதுணையா இருப்பாங்க என்ற ஒரு காரணத்துக்காக அவர் பிரிட்டிஷ் அரசுக்கு சொன்னத செய்தாரு.ஆனா  புரட்சிப்படை  அவரை
சுற்றி வளைக்கும்போது அவர்கிட போதுமான ஆயுதம் இல்லாமல் அவர் நம்பிக்கிட்டு இருந்த உதவியும் கிடைக்காமல் கொலை செய்யப்பட்டார். கிட்டதட்ட எல்ல நாடுகளுமே அணு ஆயுதத்தை ஒரு போர் கருவியா பயன்படுத்த குவித்து கொண்டிருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த 
அணு ஆயுதம் இல்லாத சில நாடுகள் கூட அணு ஆயுதம் இல்லாமல் இருப்பதை தனக்கு ஆபத்து என்ற கோட்பாடோடு அணு ஆயுதம் தயாரிக்க முனைந்திருகிறது. எல்லோருடைய இலகும் மூன்றாம் உலக யுத்தம்  வந்தால்  அதற்கு எப்படி சண்டையிடுவது என்ற ஒரு பயமே எல்லோரையும் அணு ஆயுதத்துக்கு மாற்றி இருக்கிறது.

ஜப்பான் அணுமின் நிலையம் புகோசிமா வெடிபிட்கு பின் உலகத்தில் அணு விபத்து பற்றின பவரலான பயம் தொற்றிக் கொண்டு   இருக்கிறது. பல நாடுகள் தங்களது அணுமின் நிலையங்களை மூடிவிட்டது. ஆனால் அதைப்பற்றி கவலைபடாத ஒரே நாடு நம் இந்தியாவகத்தான் இருக்கும். 

காரணம் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க அரசு மிக தீவிரமாக முயற்சிக்கிறது. அதற்கு ஆனா செலவுகளையும் அதில் கிடைக்கப்போகும் லாபத்தை மட்டுமே பார்க்கும் நம் பிரதமர். அதனால் வரும் அபாயத்தை பற்றியும் கவலை படாமல்.
இரண்டாயிரம் மெகவாட்  மின்சாரத்திட்காக மக்களின் வாழ்கையை பணயம் வைக்க 
ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை மக்களின் விழிப்புணர்வின் மூலம் முறியடிக்கப்பட்டது.   

இந்த அணுவீச்சினால் ஹிரோஷிமா நாகசாகியில் இன்னும் மக்கள் அவதிப்பகிறார்கள். இந்த அணு சக்தியானது நன்மைக்காக பயன்படுத்துவதாக கூரிக்கொண்டு காய்களை நகர்த்துகிறார்கள்.
 அது தவறாக போகும் போது அது ஏற்படுத்தும் அபாயம் மிக கடுமையானதாக இருக்கிரது. இந்த அணு ஆயுதத்தை தீவிரவாதிகள் பயன்படுத்த முயற்சிகிறார்கள் அதில் ஒன்றுதான் இந்த துப்பாக்கி என்று கார்த்திக் அணு ஆயுதத்தை பற்றி சொல்லி முடித்தான்.

(செய்திகள் தொடரும்....)

திங்கள், அக்டோபர் 24, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... பாகம் 13



இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தனது மனைவி சக்தியை காப்பாற்ற  என்ன செய்வது என்று புரியாமல் வெறுத்து போய் அமர்ந்திருந்தான். அப்போது ரவிந்தரனுடைய மேல் அதிகாரி தொலைபேசியில் அழைகிறார்.

 ரவீந்திரன் அந்த கொலைகாரன் மறுபடியும் உங்ககிட்ட பேசினான?

இல்லை சார்...
ரவீந்திரன் நீங்க சொன்ன செய்திகளை  வைத்து  ஆராய்ந்து பார்த்தால்  அந்த கொலைகாரன்  ராபர்டா ஆகத்தான் இருக்கணும்.
சார் அவனைப்பற்றி  விபரம் சொல்லுங்க சார்!

ராபர்ட் ஒரு கொடூர கொலைகாரன் அது மட்டுமேல்லை அவன் ஒரு சைண்டிஸ்ட்  அவன் தன்னோட கண்டுபிடிப்பை தவறாக உபயோகிச்சான். அதை எதிர்த்த அவனது மனைவி மகளை கூட அவன்  கொலை செய்திட்டான். அவனை பத்து வருசத்துக்கு முன்னாடி கைது 
செய்து  திகார் சிறையில  அடைச்சோம். அங்கிருந்த ஒரு காவலாளிய கொடூரம கொலை செய்துட்டு தப்பி ஓடிட்டான். அவனை கிட்டதட்ட இரண்டு வருசமா தேடிக்கிட்டு இருக்கிறோம். அவனுடைய புகைப்படதை  உனக்கு மெயில் அனுப்பி இருகிறேன். கொஞ்சம் பார்த்து இந்த கேசை முடிக்கணும். அவனால இனி ஒரு கொலை கூட நடக்க கூடாது. அதை நீதான் பார்த்துக்கணும். உன்னையே அவன் திட்டத்துக்கு பயன்படுத்த நினைக்கிறான் அதனால  நீ அவசரபடாதே!

எஸ் சார்! என்று போனை கட் செய்துவிட்டு தனது கணிப்பொறியை இயக்கினான்.


சிறையில் ராபர்டுடைய இறுகிப்போன முகம் தெரிந்தது. அந்த கண்களில் உள்ள கொலை வெறியை பார்த்து மேலும் வெறுத்து போனான் ரவீந்திரன். ராபர்டுடைய புகைப்படத்தை பார்த்து கொண்டிருக்கும் போது அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

இன்நேரத்துக் நான் யாருங்கறது நீ கண்டுபிடிச்சுருப்பே...

ராபர்ட் என் மனைவி சக்திய ஒன்றும் செய்திடாதே ப்ளீஸ்!

உனக்கு சக்தி உயிரோட வேணும்னா எனக்காக நீ ஒரு கொலை செய்யணும்.

ரவீந்திரன் மெளனமாக ராபர்ட் பேசுவதை பொறுமையோடு கேட்டுகொண்டிருந்தான்.

நீ யார எப்படி கொலை செய்யணும்னு நானும் உனக்கு ஒரு மெயில் அனுப்புகிறேன். அப்பறம் ஒரு விஷயம் இந்த கொலையை பற்றி உன் மேல் அதிகாரிக்கோ வேற யாருக்காவது சொன்ன உன் மனைவிய கொலை செய்திடுவேன்.

என்னை எதுக்காக கொலை செய்ய சொல்ற? நான் ஏன் கொலை செய்யணும்?

அது உன் தலையெழுத்து  சரி நீயே  முடிவு செய்துக்கோ உனக்கு உன்னோட அழகான சக்தி உயிரோட  வேணுமா? இல்லை நான் கொலை செய்ய சொல்ற ஆளோட உயிர் வேணுமான்னு? என்றபடி தொலைபேசி கட் செய்தான் ராபர்ட்.

                                                                 ( விறுவிறுப்பு தொடரும்... )


ஞாயிறு, அக்டோபர் 23, 2011

அணுவிலிருந்து அகிலம் உருவானதை அறிய டிச்கோவேரி சேனல் தமிழ் பாருங்கள்...


                                       வெறும் பொழுதுபோக்கை மட்டுமே மையப்படுத்தி கலாசார சீரழிவிற்கு காரணமாய் இருக்க கூடிய தொலைக்காட்சி அலைவரிசைகள் 
மத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கொண்டுடிருக்கும் டிச்கோவேரி சேனல் தமிழ் தொலைக்காட்சி தெளிவான 
தமிழ் உச்சரிப்பின்  மூலம் அணுவிலிருந்து அகிலத்தை நம்மால் உணர முடிகிறது. டிச்கோவேரி சேனல் தமிழ் முற்றிலும் மாறுபட்ட நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம் வீடிட்கே கொண்டு சேர்க்கிறது என்றால் அதை நாம் வரவேற்க வேண்டிய  ஒன்று. ஒரு சூறாவளியை, சுனாமியை நம் கண்முன் நிறுத்தி நமக்கு இயற்கையின் பிரம்மிப்பையும், ஆச்சரியத்தையும் அதனால் ஏற்படும் பேரழிவையும்  நமக்கு கண்முன்னே  காண்பிக்கப்படுகிறது என்றால் அதன் ஆச்சரியத்தை நம் மிகைப்படுத்தி கூராவிட்டாலும் அதுவே உண்மையாகிறது.  

                       பறவைகள் முதல் கடலில் வாழும் சுறா மீன்கள் வரை எல்ல உயிரினங்களையும் நாம் பிரமிக்க தக்க வகையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அதன் உடல் சம்பந்தப்பட்ட அத்தனை விசயங்களையும் நமக்கு அக்குவேராய் ஆணிவேராய் நமக்கு 
காட்சியளிப்பது உலகத்தின் அதிசயங்களை நமக்கு சாட்சியமாக்கி இருகிறது. நாம் பார்க்கும் விஷயங்கள் வெறும் பொழுதுபோக்காய் மட்டும் இல்லாமல் அது நமக்கு நிறைய செய்திகளை  தருமானால் அதை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். பிரபஞ்சம் ஒரு விஸ்தாரமான மிக பிரமாண்டமான ஆற்றலை கொண்டது. அதை நாம் சாதாரண கண்ணோட்டத்தோடு பார்த்தால் அது நமக்கு சாதரணமாகவே காட்சியளிக்கும். உலகத்தை  நாம் அறிவுகண் கொண்டு ஆராய்ந்தால் உலகம் ஒரு மிக பெரிய அதிசயம். அதில் மனிதன் என்ற நாமே ஒரு மிகபெரிய  அதிசயம் என்பது புலப்படும்.


மனிதன் வாழ மிக முக்கியமான அம்சமாக இருக்ககூடிய ஒன்று மரங்கள். மரங்கள் நமக்கு தரகூடிய அத்தனை விஷயங்களுமே மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று. மரம் நமக்கு உற்ற நண்பன் அதை அழிபதனால் நமக்கு நாமே சமாதி கட்டிகொல்கிறோம்.அத்தகைய மரங்கள் தாவரங்கள் அதனால் நிகழக்கூடிய் அதிசங்களை நமக்கு துல்லியமாக விளங்கவைய்கிறது
டிச்கோவேரி சேனல் தமிழ்.

 நமது கலாச்சாரமாகிய சிற்பங்கள், கோவில்கள் கல்வெட்டுகள் என்று அனைத்தின் சிறப்பம்சங்களையும் ராஜராஜ சோழன் முதல் ராஜேந்திர சோழன் வரை கட்டப்பட்ட கோவில்கள் பற்றிய உண்மைகள் நம்மால் கற்பனை கூட செய்து பார்த்திராத விசயங்களை நமக்கு நம் கண்முன்னே காண்பிப்பதில் சிறந்து விளங்குகின்றது 
டிச்கோவேரி சேனல் தமிழ் என்றால்  அது மிகையாகத்து. நாம் மறந்துபோன மற்றும் தெரிந்துகொள்ளாமல் போன விஷயங்கள் என்ற அதனை அதிசயங்களும்  நாம் அறிந்துகொள்ள இந்த சேனல் உதவுகிறது. உலகம் எப்பேர்பட்ட அதிசயம் என்பதும் அதில் எப்படி நாம் வாழுகிறோம் என்பதும் நாம் இதுவரை அறிந்திடாத விசயங்களை நமக்கு சாட்சியம் ஆக்குகிறது இந்த சேனல்.

இதுவரை நடந்த உலக அழிவுகள் மற்றும் இயற்கையின் மாறுபட்ட செயல்களை ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்கவைகிறது இந்த சேனல். ஹிட்லர் பற்றியும் இரண்டாம் உலக போர் பற்றிய காட்சிகளும் வர்ணனைகளும் உலகம் எத்தகைய சூழலை சந்தித்தது போன்ற  விசயங்களை, செய்திகளை நம்மால் உணர முடிகிறது. இயற்கை வரம்பில்லதது அதன் வடிவமைப்பு அலாதியானது. பிரபஞ்சம் ஏன் தோன்றியது? எப்படி தோன்றியது? எந்த  கேள்விகளுக்கும் நம்மால் சரியான பதிலை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
இந்த அதிசயங்களை பார்க்க வாய்ப்பு கிடைப்பதே ஒரு அரிதான விஷயம் தான், அது நமக்கு சுலபமாய் கிடைகிறது என்றால் அது நாம் கண்டிப்பாக வரவேற்கதக்க விஷயம் தான்.

மனிதனின் கண்டுபிடிப்புகள் உலக அதிசயங்கள் என்று எத்தனை விசயங்களை உள்ளடக்கியது இந்த  உலகம். இந்த இயற்கை நமக்கு முன்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது நமக்கு பின்பும் இருக்கும் ஆனால் நாம் தான் இந்த இயற்கை போன்று நிலையாக இருபதில்லை நாம் வாழும்போதும் சரி வாழ்த்து மடிந்த பின்னரும் சரி நாம் என்றுமே நிலையானவர்கள் அல்ல. இதைத்தான் இரண்டு உலக யுத்தங்களும் 
நமக்கு சாட்சியமளிகின்றது.

மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பந்தம் மிக உணர்ச்சிமிக்கது. அதை அழிக்க நினைத்தால் நாம் அழிவோம். நமக்கு கொடுக்கபட்ட வாழ்கையை எவ்வளவு சிறப்பாக வாழ முடியுமோ அவ்வளவு சிறப்பாக
வாழ்த்து நாம் இயற்கையை நேசிக்க கற்றுகொண்டால். நமக்கு வாழ்கை சிறப்பானதாக இருக்கும். ஆகையால் பொழுதுபோக்கு நிகழ்சிகளை குறைத்து கொண்டு வாழ்கையின் பரிணாம வளர்ச்சியை பற்றியும் அணுவிலிருந்து அகிலம் உருவானதை பற்றியும் அறிந்து பயனடைய டிச்கோவேரி சேனல் தமிழ் நிகழ்ச்சியை பாருங்கள். உண்மை புலப்படும். நீங்கள்  நன்மை பெறுவீர்கள்.  

திங்கள், அக்டோபர் 17, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... பாகம்-12


சக்தி நீ ரொம்ப அழகா இருக்க. நீ பார்க்க வெளிநாட்டு பொண்ணு மாதிரி இருக்க. எனக்கும் உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தா. உன்ன பார்க்கும் போது என் பொண்ண பார்கர மாதிரியே இருக்கு. அப்படியே உன்னோட கண்கள்  என் பொண்ணோட கண்கள்  மாதிரியே இருக்கு. என்னோடைய ஆராய்ச்சி நான் செய்த  சாதனைகளும் அதற்கு  நான் சந்தித்த  சோதனைகளும் நீ நினைத்துகூட பார்த்திருக்க மாட்டாய் . என் ஆராய்சிக்காக நான் என் குடும்பத்தையே இழந்தேன். சக்தி நான் ஒரு கொலைகாரன உன் கண்ணிற்கு தெரியலாம். ஆனால் நான் கொலை செய்யும் பொது நான் அனுபவிச்ச துன்பங்கள்தான் என்ன கொடூரம கொலை செய்ய வைக்கிறது . சக்தி நானும்  என் குடும்பத்தோட சந்தோசமா இருந்திருப்பேன். ஆனா, என்ன இந்த நிலைக்கு கொண்டுவந்த  இந்த அரசையும், அரசாங்கத்தையும் 
பழிவாங்கியே தீருவேன் என்று ஆவேசமாக தன் வரலாறு பற்றி கூரி கொண்டிருக்கும்போது சக்திக்கு இருமல் வந்தது.

இரு சக்தி என்றபடி சக்தியின் வாயில் உள்ள துணியை எடுத்துவிட்டு  சக்திக்கு தண்ணிர் கொடுத்தான்.

உங்க பெயர்  தெரிஞ்சுகலாம?

 ராபர்ட். 

நீங்க ஒரு அணு
விண்யானியா?

ஆமாம்.

எதுக்காக இப்படி அப்பாவிகளை கொலை செய்யரீங்க?

எனக்கு அப்பாவின்னு யாரும் தோணலை எனக்கு அளிக்கப்பட்ட அநீதிக்கு நான் பழிவாங்க நினைக்கறேன்.

உங்களமாதிரி பாதிக்கப்பட்ட எல்லோரும் கொலை செய்ய ஆரம்பிச்சா  மனுஷங்க உயிர் வாழவே முடியாது.

என்னை பொறுத்தவரை நான் செய்யறது சரிதான். நான் கஷ்டப்பட்டு  அணுவிலிருந்து கண்டுபிடிச்ச ஒரு மனிதனுடைய செல் மற்றும் ஹீமோக்ளோபின வடிவம் மாற்று முறையியால  ஒரு கேன்சர் உள்ளவரைக்  கூட காப்பாத்தி அவருக்கு அணுவோட "பாயிண்ட் ஜீரோ டைமென்சன்" மூலமா செல் மாற்றும்  ஒரு அற்புதமான ஒரு கண்டுபிடிப்பை  என்கிட்ட இருந்து அரசாங்கம் பரிச்சதும் இல்லாம அந்த கண்டு பிடிப்பு மனித வர்கத்துக்கு எதிரானதுனு  சொல்லி என்னை  கைது செய்துடாங்க. என்னுடைய அபாரமான கண்டுபிடிப்ப அவங்க அலட்சியம்  செய்ததும் இல்லாம என்னை  கைது செய்தது என்னால ஏத்துக்க முடியலை. என்ன கைது செய்ததைப்  பார்த்து என் மனைவியும், என் ஒரே மகள்  உன்ன மாதிரியே அழகா இருப்பா அதே கண்கள் அவ அழகை பார்த்து அவளுக்கு 
ரோசலின்னு பெயர் வைத்தேன்  இருவரும்   தற்கொலை செய்துகிட்டாங்க. அரசாங்கம் நான் அந்த பார்முலாவ வெளிநாட்டுக்கு விற்க முயற்சித்ததா என் மேல பொய் குற்றச்சாட்டு விதிச்சாங்க. கிட்டதட்ட பத்து வருஷம் ஜெயிலையே பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு நாள் ஒரு சந்தர்பம் கிடைத்தது அங்க இருந்த காவலாளிய
கொலை செய்துட்டு அவன் டிரஸ், துப்பாக்கி எல்லாதையும் நான் எடுத்துகிட்டு வந்துட்டேன்.

ஆனா எதுக்காக சிவா, ராஜு, அனிதாவை கொலை செய்தீங்க?

நான் தப்பிச்சு பாண்டிச்சேரி போனேன்  அங்க என்னுடைய பழைய நண்பர் ஒருவர்  அவருகிட்டா போனேன் என்னை யாருக்கும் தெரியாம அவரு பார்த்துகிட்டார். அவரு ஒரு பெரிய திட்டத்தை எனக்கு சொன்னார். அதன்படி சென்னையில இருக்கற ஒரு பெரிய வங்கியை கொள்ளையடிகரதான் அதற்கு என்னுடைய விஞ்யான மூலை தேவைபட்டது.எனக்கும் இந்த அரசாங்கத்தை பழிதீர்க்க ஒரு சந்தர்ப்பம் ஆகையால் அதை செய்ய ஒப்புக்கொண்டேன். திட்டம் தயாரானது.திட்டத்தை 
செயல்படுத்த சென்னையை முழுவதும் தெரிஞ்ச ஒரு ஆள் தேவைப்பட்டபோது தான் எங்களுக்கு சிவா அறிமுகமானான்.   
 அதை செய்ய சிவாவை நாங்கள்  பயன்படுத்த நினைத்தோம். சிவா முதலில்  எங்க வலையில சிக்கவில்லை கொஞ்சம் கொஞ்சமாக அவனை திட்டதிற்கு ஒப்புக்கொள்ள  வைத்தோம். அவனுக்கு பணத்தாசை காட்டி எங்க திட்டத்தை நாங்க அவன்கிட்ட சொல்லும்போது அவன் எங்களுக்கு தெரியாம வீடியோ எடுத்து எங்களையே பயமுறுத்தினான். அதனால அவனை  கொலைசெய்தோம். அவன் பதிவு செய்த வீடியோவை   தேடினோம் அந்த முயற்சியில்  ராஜுவையும், அனிதாவையும் கொலை செய்ய நேர்ந்தது. இதுக்குமேல அந்த வீடியோவை  தேடி கொலை செய்வது புத்திசாலித்தனம் இல்லை.அதனால் உன்னை  கடத்தி எங்க திட்டத்தை  உன்னுடைய  கணவனை செய்ய வைக்க திட்டமிட்டோம். எங்க வேலை முடிஞ்சதும் உன்னை உயிரோட விட்டுவிடுவோம். நீ உயிரோட திரும்பி போகறது உன் கணவனுடைய பொறுப்பு. 

(சுவாரசியம் தொடரும்...)

   

திங்கள், அக்டோபர் 10, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... பாகம் - 11


இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தன் வீட்டு கதவை திறந்ததும் எதிரே  உள்ள மேஜையில் ஒரு துப்பாக்கியும் அதன்  கீழே அந்த துப்பாக்கியை உபயோகப்படுத்தும் வரைபடமும்,  விளக்கமும் இருந்தது.அதை எடுத்து பார்த்து கொண்டிருந்தபோது 
அவரது அலைபேசி  மணி ஒலித்தது.எடுத்து காதில் வைத்தார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்.

என்ன இன்ஸ்பெக்டர்  வீட்டுக்கு வந்துட்டியா? என்று ரவீந்திரன் மனைவி சக்தி அலைபேசியில் இருந்து  அந்தக்  குரல் ஒலித்தது.  

ஆமாம்! என்ற ஒற்றை வரியில் பதில் அளித்தார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்

அங்க ஒரு துப்பாக்கி இருக்கும் அது சாதாரண துப்பாக்கி இல்லை. அதக்குள்ள இருக்குற புல்லெட்
ஒரு ஊரையே சுடுகாடாக்கற பயோ வெப்பன். அந்த துப்பாக்கி கீழ இருக்கற வரைபடத்த பார்த்து வச்சுகோ   இன்ஸ்பெக்டர். இந்த துப்பாக்கிய வச்சுதான் நான் சொல்ற வேலைய நீ முடிக்கணும். 


நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?

அதுக்கு நேரம் இல்லை இன்ஸ்பெக்டர்.

ப்ளீஸ்! எனக்கு பதில் தெரிஞ்சிக்க கொஞ்சம் சந்தர்பம் கொடு எதுக்காக இப்படி  செய்யற? உன்னுடைய நோக்கம்தான் என்ன?  ஏன் இந்த அடுக்கடுக்கான கொலைகள்? இத தெரிஞ்சுக்காம என்னால எப்படி நீ சொல்றத செய்ய முடியும்?

இன்ஸ்பெக்டர் நீ நல்லா பேசற. சரி நீயே இவ்வளவு தூரம் இறங்கி வந்துட்ட அதனால  சொல்றேன். நீ செய்யப்போற வேலை எனக்கு ரொம்ப முக்கியம் அது எங்க கூட்டத்துக்கு ரொம்ப ரொம்ப  முக்கியம். மொதல்ல
இந்த வேலைய சிவா கிட்டதான் ஒப்படைக்கறதா பிளான்   ஆனா எங்க திட்டத்துக்கு அவன் ஒத்துளைகல அவன் பத்திரிகை புத்திய எங்க கிட்டையே  காட்னான். எங்கள அவன்  காட்டி கொடுப்பதுக்கு முன்பே அவனை கொலை செய்ய தீர்மானிச்சோம். அவனை கொலை செய்த பிறகு அவன்  செல் போன்ல   இரண்டு நாள் முன்புவரை   அவன்  யார் யார் கிட்ட பேசினானோ அவர்களை எல்லாம்தான் கொலை செய்தேன். இன்ஸ்பெக்டர் எனக்கு கொலை செய்ய விருப்பம் இல்லைதான் ஆனால் அது இப்போ தவிர்க்க முடியாத ஒன்றாகிடுச்சு.

இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் செய்வதறியாது திகைத்து போய் அவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார் . 

இன்ஸ்பெக்டர் சுதாகரித்து கொண்டு மீண்டும் ஒரு கேள்வி கேட்டார்
 உங்களை பற்றியும் உங்க கூட்டத்தைப்   பற்றியும்  நான்  தெரிஞ்சுக்கலாமா?

இன்ஸ்பெக்டர் நான் எல்லாதையும் சொல்வேனு தப்பு கணக்கு போடாத. நீ கெஞ்சிக்  கேட்டதால நான் சொன்னேன். அந்த துப்பாக்கிய உபயோகபடுத்த முதல்ல தெரிஞ்சுக்க உனக்கு ஒரு மணிநேரம் தான் டைம். நான் மறுபடியும் உன்ன கூப்பிடுவேன். அதுக்குள்ள ஏதாவது புத்திசாலிதனமா செய்ய நினைச்ச உன் மனைவி சக்தி..... புரியும்னு நினைக்கறேன்.

                                                                                                             (மிரட்டல் தொடரும்...)


   
  

சனி, அக்டோபர் 08, 2011

பெண் எப்போது அடிமையானாள்...


பெண் எப்போது அடிமையானாள் என்ற பல நூல்களை ஆராய்ந்தால்,
Dr . ஷாலினி எழுதிய "பெண்ணின் மறுபக்கம்" என்ற புத்தகத்தில் ஆதி காலத்தில் பெண்ணே முதன்மையாக கருதப்பட்டது உணர்தப்பட்டுள்ளது. ஒரு பெண் தான் விரும்பும்  ஆணை  தனக்கு துணையாக்கிக்  கொண்டனர் அக்காலத்தில் . அப்போது பெண்களே தெய்வம் என்ற ஒரு நிலைபாட்டினை வகுத்திருந்தனர். ஒரு கூட்டம் என்றல் அதற்கு தலைமை தாங்குவது ஒரு அரசி என்ற ஒரு பெண்ணாகத்தான் இருந்தது. காலமாற்றம் பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையே பல 
வித்யாசத்தை இயற்கை படைத்திருந்தது. பெண்ணின் உடல்வாகு மென்மையானதாகவும், ஒரு குழந்தையை பத்து மாதம் சுமக்கும் ஒரு சுமைதாங்கியாக,  பெண் பல சுமைகளை
சுமக்கும் உடல்வாகை கொண்டததாக படைக்கப்பட்டாள். அப்போது பசி என்பதே முக்கிய அம்சமாக இருந்தது. பசியை ஆற்ற ஆண்களும் பெண்களும் சேர்ந்து
வேட்டையாடினார்கள். இயற்கை அபோதுதான் ஆண்களுக்கு உடல் வலிமையை மிருகங்களை எதிர்த்து போராடும் சக்தியை
கொடுத்தது. பெண்களால் குறிபிட்ட அளவே வேட்டையாட முடிந்தது. ஆகையால் பெண்கள் வீட்டை கவனித்துகொள்ள ஆண்கள் வேட்டையாட சென்றனர்.
  காலம் பெண்ணை ஆணை எதிர்பார்த்து வாழ்கையை நடத்த வேண்டிய கட்டாயதிட்கு தள்ளப்பட்டது. மெல்ல மெல்ல ஆணின் கை ஓங்கியது முதலில் பெண்கள் ஆண்களை அடிமையாக நடத்தியதை மனதில் கொண்டு பெண்களை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கலவியலுக்கு அதிகமாக பயன்படுத்தினர் . பெண் ஆணை கலவியலுக்கு தேர்வு செய்யும் காலம் போய் ஆண் தன் உடல் வலிமையால் பெண்ணை அடிமையாக்கி, அபகரித்து செல்வது வழக்கமானது. ஒரு ஆண் பல பெண்களோடு கலவு கொள்வது வழக்கமாகிப்போக காலமாற்றம் பெண் ஒரு ஆணுடன் வாழ தீர்மானம் நிறைவேற்றபட்டது.

ஒரு பெண் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யும்படி தன்மை உடையவள். அனால் ஆணின் தன்மையானது ஒரு நேரத்தில் ஒரு  வேலையைதான் சரியாக செய்ய முடியும். அந்த ஆண் அந்த வேலையை மிக சரியாக செய்வதுதான் அவனது இயல்பு. பெண் அப்படியல்ல அவள் ஒரே  நேரத்தில்  பல வேலைகள் செய்ய முடியும். அதனால்தான்  ஆணுக்கு எந்த பெரிய விஷயமும் சீக்கிரம் மறந்து விடுகிறது. ஆனால் ஒரு பெண்ணிற்கு அப்படியல்ல ஒரு சின்ன விஷயம் கூட மறப்பதில்லை. அதனால்தான் ஆண் அவனது திருமண நாளை, மனைவியின் பிறந்தநாளை, குழந்தையின் ராசியை கூட  மறந்து விடுகின்றனர். ஆனால் பெண்கள் அதை ஆண் வேண்டுமென்றே மறந்துவிட்டதாக சண்டை போடுவார்கள்.

ஆதி காலத்தில் பெண்களை கடவுளாக நினைத்து வழிபடும்போது இத்தகைய ஒரு சிலை வடிவத்தை தான் நிர்மாணித்தனர். இதை எதிர்த்த ஆண் பெண் சிலைகளை உடைத்துவிட்டு ஆண்களே கடவும் அவர்களுக்கு அடிமைகள் பெண்கள் என்பதை ஒவ்வரு பெண்ணின் மனதிலும் விதைத்தனர். ஒரு ஆண் எது சொன்னாலும் அப்படியே செய்வது தான் பெண்ணின் கடமை அதுவே தர்மம்  என்ற ஒரு அடிமைத்தனத்தை ஆதி முதலே விதைத்து விட்டனர். ஆண்களை கவர்வதற்கே 
பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொண்டனர். இப்படியாக ஒரு சமுதாய கட்டமைப்பு உருவாக காரணமாக அமைந்து விட்டது.


  பண்டைய காலத்தில் ரோம் நகரில் பெண்களின் நிலைமை மிக  மோசமானதாகவே இருந்தது. இன்றும் பெண்களுக்கு இலைக்கப்படும் கொடுமைகள் நிகழ்த்து கொண்டே இருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாசாந்தியில் வன் கொடுமைக்கு ஆளான பதினெட்டு பெண்களும் இதட்கு உதாரணம்
ஆண்களின் அரக்க தன்மையை பெண்களின் மீது காட்டுவது என்பது ஒரு மிக பெரிய கொடுமை. ஒரு ஆண் பெண்ணை நிர்வாணபடுத்துவது அவளை கற்பழிப்பது என்ற மிருகத்தன்மை வாய்ந்த
ஆண்களின் மன நிலை கிட்டதட்ட எல்ல காலத்திலும் இருந்தது, இருகின்றது என்பது
ஒரு கசக்கும் உண்மை.

ஆதி காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுகப்பட்டது. பெண்கள் வீட்டில் மட்டுமே இருந்து கொண்டு அவளது திறமை, அறிவும் எதுவுமே பயன்படுத்த ஆண்கள் சம்மதிக்க வில்லை. காலம் மாறியது இப்போது பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. இப்போதுள்ள பெண்களுக்கு நிறைய கதவுகள் திறந்திருக்கிறது. அதை முழுமையாக பயன்படுத்தி கொண்ட பெண்கள் இன்று முன்னேறி இருகிறார்கள். ஆனால் வரும் காலங்கள் தான்  அந்த பெண்கள் தங்களுடைய சுதந்திரத்தை சரியாக பயன்படுதுகிரர்கள, இல்லையா என்பது தெரியும் காரணம் இப்போது உள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே தான் அடுத்த தலைமுறையும் பின்பற்றும். ஆகையால் அதை புரிந்துகொண்ட செயல்படுவது ஆண், பெண் இருவருக்குமே நல்லது.

ஓர் இரவில்... ஓர் மரணம்... பாகம் - 10


அனிதா கொலையானதை கண்டு மேலும் பயந்து போன நிருபமாவிட்கு ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது.பயந்தபடியே பேசுகிறாள் நிருபமா.

நிருபமா உன்னதான் கொலை செய்யலாம்னு வந்தேன் உன் நல்ல நேரம் நீ கார்த்திக் தம்பியோட வெளியில போய்ட, சரி 
வந்தது வந்தாச்சு வெறும்கையோடு போக மனசில்ல அதான் அனிதாவ போட்டேன் என்று சாதரணமாக பதில் சொன்னான்.

டேய் ராஸ்கல்! யாருடா நீ எதுக்குடா இப்படி செய்யற? உனக்கு என்ன வேணும்?

எனக்கு உன் உயிர் தான் வேணும் அத குடுத்துடு நான் வேற யாரையும் கொலைசெய்ய மாட்டேன். பேசிகொண்டிருகும்போது இன்ஸ்பெக்டர் ரவீந்தரன் 
நிருபமா கையில் உள்ள செல் போனை வாங்கி  கோபமாக 
டேய்! நீ ஆம்பளைய இருந்த நீ யாரு எதுக்கு இந்த  கொலைகள செய்யறேங்கரத சொல்லு.

கோபப்படாத இன்செப்ச்டோர் நான் பேசறது யாரு மொபைல் நம்பர்னு கொஞ்சம்  பாரு!

ஷிட்!  என் மனைவிய ஒன்னும் செய்திடாத ப்ளீஸ்! ப்ளீஸ்!... 

இப்ப காட்டவா நான் அம்பாளைய! இலையானு!

ப்ளீஸ்! ப்ளீஸ் உன்ன கெஞ்சி கேட்கறேன் அவள ஒன்னும் செய்திடாதே.
  அப்படினா நான் சொல்றத நீ செய்யணும் இல்லை அனிதா செத்த மாதிரி உன் மனைவியும் சாவா
உடனே உன் வீட்டுக்கு போ! என்று மிரட்டியபடியே செல் போனை  செயலிழக்க செய்தான்.

எல்லோரும் பதட்டத்துடன் இன்ஸ்பெக்டர் ரவீந்தரனை பார்த்தனர். 

அவன் என் மனைவியை கடத்திடான் அவன் சொன்னத நான் செய்யனுமம் இல்லாட்டி   என் மனைவி சக்தியை கொலை செஞ்சிடுவானம் என்று மிரண்டபடியே  வீட்டை நோக்கி  சென்றார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்.

கார்த்திக் நடக்கறது ஒண்ணுமே புரியல, எதுக்கு இப்படி நடக்குது ஏன் அந்த கொலைகாரன் இப்படி செய்யறான்? என்று விம்மியபடியே கேட்டுகொண்டிருந்தாள் நிருபமா.

நிருபமா கொஞ்சம் பொறுமையா இருங்க என்று ஆறுதல்  சொன்னார் கார்த்திக்.

இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் அவரது  வீட்டை அடைந்தார்.  

( பதட்டம் தொடரும்...)



புதன், அக்டோபர் 05, 2011

"எங்கேயும் எப்பொதும்" திரைப்பட விமர்சனம்...


எந்த திரைப்படம் நம்மை மூன்று மணி நேரம் நம்மையே மறக்கச் செய்கிறததோ அதுவே நல்ல திரைப்படம். அந்த மூன்று மணி நேரம் நமக்கு காண்பிப்பது நல்லதும்,கெட்டதும் சேர்ந்த ஒரு கலவை தான் என்றாலும்  அந்த  திரைப்படங்கள் நமக்கு சில விஷயங்களை சீக்கிரம் புரியவைத்து விடுகிறது.  அப்படிப்பட்ட திரைப்படம் நல்லவைகளை 
நமக்கு காண்பித்தால் நமக்கு நல்ல சிந்தனையை   ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை,
 அதுவே தவறானதாக  அமைத்தால்   சிந்தனை  வேறு விதமாக இருக்கும் அதிலும் சந்தேகமில்லை.ஒரு நல்ல திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் அது நம்மை அப்படத்தோடு ஒப்பிடவைக்குமானால், நம்மை திரைப்படம் முடிந்தும் அந்த திரைப்படத்தின் நினைவுகள் நம்மை செயலிலக்கச் செய்யுமானால் அந்த திரைப்படம் கண்டிப்பாக நம்  மனதில் ஆழ பதிந்துவிடும்.


"எங்கேயும் எப்போதும்"

இந்த படம் பார்த்துவிட்டு என்னால் எனது வாகனத்தை வேகமாக ஓட்டவே முடியவில்லை என்பதே இப்படம் என்னை பாதித்த முக்கிய  விஷயமாகும். எங்கேயும் எப்போது நடக்கக்கூடிய ஒரு விபத்து "எங்கயும் எப்போதும்"என்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டிருகிறது.
திரைப்படம் ஒரு முக்கிய விபத்தை பற்றிய படம் என்பதால் இயக்குனர் அவர்கள் "அலைபாயுதே" படத்தை பின்பற்றி இருக்கிறார். அலைபாயுதே படத்தில் வருவது போல் ஒரு காட்சி படமாக்கி பின் கொஞ்சம் இடைவேளை விட்டு அந்த காட்சியை முழுமையாகும் போது அதை முழு காட்சியாக காட்டி இருக்கிறார்கள். அலைபாயுதே படத்தின் கடைசி காட்சியை கூட அப்படியே அமைத்திருக்கிறார்கள். சாலினியை விருப்புவதாக மாதவன் கூறும்போது ஏற்படும் உணர்வு  சற்று குறைவாகவே ( குறையாகவே) இப்படத்தில்
 நமக்கு தோன்றுகிறது காரணம் அது அலைபாயுதே படத்தின் காட்சி என்பதால்.


இந்த படத்தில் குறிப்பிட்டு கூறவேண்டிய ஒரு மைனஸ் இப்படத்தில் வரும் ஹீரோ அடிக்கடி சிகரட் பிடிப்பது. அதை முதலில் வெறுக்கும் கதாநாயகி அனாய ஹீரோவை காதலிக்க ஆரம்பித்ததும் ஹீரோ கேட்காமலேயே சிகரட் வாங்கி தருவதும் சிகரெட் பெட்டியை வைத்து அழகுபார்ப்பதும் ஒரு நல்ல விஷத்தை சொல்வார்கள் என்று நம்பி போன எனக்கு சற்று ஏமாற்றம். மற்றொரு ஜோடியான அஞ்சலிக்கும்,ஜெய்கும் உள்ள காதல் காதலாக தோன்றவில்லை அது நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராத வசனமாகவே காட்சியளிகிறது. அதில் அஞ்சலி ஜெய்யிடம் தண்ணியடிபய என்று கேட்கிறார் அதற்கு ஜெய் இல்லை என்று சொன்னதும் அஞ்சலி கூறும் வசனமாக " நான் மட்டும் ஆம்பளையா பொறந்திருந்த உலகத்துல இருக்கற அத்தன சரக்கையும் அடிச்சிருப்பேன்"  என்று ஆணாதிக்க சமுதாயத்தை சுட்டிக்காட்டும் கதாபத்திரம் போதாகுறைக்கு செவிலியர் வேலை செய்யும் கதாபத்திரம் ஊருக்கு மட்டுமே உபதேசம் என்பது போல்தான் உள்ளது. இரண்டு கதானயகிகலுமே தம் அடிப்பது மற்றும் தண்ணி அடிப்பது தப்பில்லை என்பது போல் காட்டுவது குடும்பத்துடன் படம்
பார்க்க வருபவர்களை சற்று சலிக்கவே செய்யும்.


முதல் முதலில் சென்னைக்கு வரும் கதாநாயகி அனாய ஒரு நாள் பழகியதுமே காதலிப்பது முரண்பாடு என்றால் இன்னொரு ஜோடியாக வரும் அஞ்சலி ஜெய்யை
HIV டெஸ்ட் எடுத்து வரசெய்து அதன் பின் ஏதோ ஒப்புக்கு " I LOVE
YOU " என்று சொல்வது நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. பாடல்கள் இரண்டு பாடல்கள் கேட்கும் படியாகவே உள்ளது. ஜெய் இன்னும் விஜய் ஸ்டைலை விடவில்லை அது வளரும் நடிகரான அவருக்கு நல்லதில்லை.
அஞ்சலி இதட்கு முந்தைய படம் " அங்காடி தெரு" போலவே இந்த படமும் இருப்பது போன்ற உணர்வு இரண்டுமே ஒரு கொடூர விபத்தை மையமாக கொண்டவை என்பதால் அவரது அழுகை அங்காடி தெருவை நினைவு படுத்துகிறது.

இவர்கள் அல்லாத ஒரு கல்லுரி படிக்கும் ஒரு பெண் ( தேவதை) போல் மனதில் வந்து பதியும் அந்த  பெண் கதாபத்திரம் ஜோதி. அந்த பெண் விபத்தில் மரணமடைவது "GOD FATHER -3 " படத்தில் அல்ப சினோ மகளாக வரும் ஒரு அழகான பெண்ணை அல்ப சினோவை சுடும் எதிரிகள் அவரை குறிவைக்க தவறி அந்த பெண்ணை மரணமடைய செய்கிறது அந்த காட்சி அமைப்பு கிட்டதட்ட அந்த காட்சி நம்மை விட்டு நீங்க கிட்டதட்ட பத்து நிமிடம் ஆகும். அப்படிப்பட்ட ஒரு காட்சி இப்படத்திலும் அந்த அழகான குட்டி தேவதை சாவது மனதை வாட்டியது.ஒவ்வரு கதாபத்திர பின்னனியும் ஒரு குடும்ப அமைப்பில் உள்ள முக்கிய கதாபத்திரம் இப்படிப்பட்ட ஒரு விபத்தால் இறந்தால் அந்த குடும்பம் என்னாகும் என்பதை ஒரு விபத்தை நேரில் பார்த்தல் எப்படி இருக்குமோ அதை படத்தில் காட்டி இருப்பது மக்களுக்கு விபத்து பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்பலாம். இந்த படத்தை தயாரித்த 
A.R. முருகதாஸ்  இயக்குனர் மற்றும்
 நடிகர்,நடிகைகளுக்கும் படத்திற்கு உழைத்த அனைவர்க்கும் ஒரு நல்ல படத்தை கொடுத்தமைக்கு பாரட்டுகள் மற்றும் நன்றிகள்.