புதன், டிசம்பர் 28, 2011

தனிமையின் தவிப்பு... (பாகம்- 3)


ரிப்சிக்கு தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரை வீடிற்கு அழைத்து வந்து அவரை தனது கணவர் அறையில் தங்க வைத்ததோடு அவருக்கு உணவு தயாரிப்பது வித்யாசமாக  இருந்தது.தனது கணவன் இல்லாத சமயத்தில் ஒரு அறிமுகமே இல்லாத ஒரு ஆணை வீட்டில் தங்கவைப்பது   சரியா? தப்பா? என்ற கேள்வி ரிப்சியின் மனதில் உதித்துக்கொண்டே இருந்தது,  இருந்தும் தன் கணவர் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக அவளை திருமணம் செய்துகொள்ளப்போவதாக  ரிப்சியிடம்
விவாகாரத்து தரும்படி பிலிடிபியாவில் இருந்து தொலைபேசியில் தெரிவித்தது தாங்க முடியாத துயரத்தை
ஏற்படுத்தியது. தனியாக தனது வாழ்கையை எப்படி வாழப்போகிறோம் என்ற கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஜானை சந்தித்தது ரிப்சிக்கு  உள்ளுர மகிழ்ச்சியே ஏற்படுத்தியது.


ஜான் நன்றாக சப்பிட்டுவிட்டு தனது அசதியை போக்க நன்றாக  தூங்கினார். ஜான் காலை எழுந்ததும் ரிப்சி ஜானிற்கு  தேநீர் அருந்தக்கொடுத்தார்.

குட் மோர்னிங் மேம்! நான் ரொம்ப நேரம் தூங்கிடேன்னு நினைக்கிறேன்! என்றபடி மேஜை பக்கத்தில்  அமர்ந்து தேனீரை அருந்த ஆரம்பித்தார் ஜான்.

ஆமாம் நீங்க ரொம்ப அசதியா இருந்தீங்க உங்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்றுதான் நீங்கள் துயிலெழும் வரை காத்திருந்தேன். நீங்க அடுத்து என்ன செய்யப்போறீங்க Mr. ஜான்.

நான் உடனே புறப்படணும்  என் மனைவி காத்திருப்பாள். இப்போது நான் என் குடும்பத்தை ஒரு வீட்டில் தங்கவைதாக வேண்டும். எங்கு என்றுதான் புரியவேல்லை, குழப்பமமாக இருக்கிறது.

Mr.ஜான் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்கள் குடும்பத்தை இங்கேயே
தங்க வைக்கலாம்.

ஜான் சற்று தடுமாறினார் இரண்டு நிமிடத்திற்கு பிறகு ரிப்சியிடம் இதுவரை நீங்க செய்த உதவியே பெரியதுனு நினைச்சேன் என் குடும்பத்தை இங்கு தங்க சொல்வீர்கள் என்று  என்னால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை .

Mr.ஜான் நான் ஒன்றும் பெரியதாக செய்துவிடவில்லை உங்கள் நெருக்கடியான நேரத்தில் நான் உதவ முயற்சிக்கிறேன் அவ்வளவுதான். என் கணவனும் இப்போது இல்லாததால் உங்களுடைய வருகை எனக்கு சந்தோசத்தையே கொடுக்கும்.

மிக்க நன்றி! முதலில் நான் எனது வண்டியை சரிசெய்ய வேண்டும்.

அதை நான் பார்த்துக்கொள்கிறேன்  Mr.ஜான் முதலில் சென்று உங்கள் குடும்பத்தை அழைத்து வாருங்கள்.

இதற்கெல்லாம் எப்படி நன்றி சொல்லப்போகிறேன் என்றே தெரியவில்லை.சரி நான் சென்று என் குடும்பத்தை அழைத்து வருகிறேன் என்று விடைபெற்று சென்றார் ஜான்.

                                                                        ( தொடரும்...)





  

புதன், டிசம்பர் 21, 2011

தனிமையின் தவிப்பு... (பாகம்- 2)


 ரிப்சி பக்கத்தில் சென்று பார்த்தபோது முப்பது வயது இருக்கும் ஒரு ஆண் காரில் கண் மூடியபடி இருந்தார்.

உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்று ரிப்சி கேட்டார்.

நான் நன்றாக இருகிறேன் என்றபடி காரை விட்டு இறங்கி வந்தார் ஜான் பீட்டர்.

என் பெயர் ஜான் பீட்டர் இந்த விபத்திற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

என் பெயர்    ரிப்சி உங்களுக்கு கொஞ்சம் காயம் ஆகியிருக்கிறது உள்ளே வாருங்கள் என்று ரிப்சி ஜான்னை  வீட்டின் உள்ளே  அழைத்து சென்று அவரது காயங்களுக்கு மருந்து வைத்து கட்டு போட்டார்.

நன்றி

எப்படி இந்த விபத்து நடந்தது?

என்னுடைய தவறுதான் ஏதோ சிந்தனையில் வண்டியை வேகமாக ஓட்டி வந்தேன் திருப்பத்தில் வரும்போது என் மனம் என்னுடைய பிரச்சனைகளை பற்றியே நினைத்து கொண்டு வந்ததால் நிலை தடுமாறிவிட்டேன். என் கவன குறைவுதான் இந்த விபத்திட்கு காரணம்.

என்ன உங்கள் பிரச்சனை? அதை என்னிடம் சொல்ல விருப்பபட்டால் சொல்லலாம்.

நான் என் வியாபாரத்தில்   மிகப்பெரிய நஷ்டம் அடைந்துவிட்டேன். அதனால் என் வீடு இன்று ஏலத்தில் விடப்பட்டது. என் மனைவி மரியாவும், என் இரண்டு குழந்தைகளையும் ஒரு விடுதியில் தங்கவைத்துவிட்டு நான் என் நண்பனிடம் பண  உதவி கேட்கச்  சென்றேன். அவன் வெளியூர் சென்று விட்ட காரணத்தினால் வெறும் கையேடு திரும்பிவந்து கொண்டிருந்தேன்  அதனால் நான் அடுத்ததாக என்ன செய்வது என்ற யோசனையில் வந்து இந்த விபத்தினை ஏற்படுத்திவிட்டேன்.

சரி வருத்தப்பட வேண்டாம் இன்று இரவு இங்கே தங்கிக்கொளுங்கள் நாளை காலை உங்கள் காரை சரி செய்து எடுத்து செல்லுங்கள் என்று கூரியபடியே ஜான்னை அவரது கணவர் அறையில் தங்கவைத்ததோடு அவரது கணவரது உடையை ஜான் அணிய தந்துவிட்டு ஜான் சாப்பிட உணவு தயார் செய்தார் ரிப்சி.

                                                                                                ( தொடரும்...)



 


செவ்வாய், டிசம்பர் 20, 2011

தனிமையின் தவிப்பு... ( பாகம்- 1)


இந்த உலகில் குடும்ப உறவுகள் அனைத்தும் நம்மோடு இருந்தால் மற்றவைகளை 
பிறகு சம்பாதித்துக்கொள்ளலாம்  ஆனால் எல்லாம் இருந்தும் குடும்ப உறவு இல்லாமல் தனித்து வாழ்வது என்றால் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்காது வெறுமையாகவே இருக்கும். அப்படிப்பட்ட வாழ்கையைதான் வாழ்த்து கொண்டிருக்கிறார்  ரிப்சி. ரிப்சி அமெரிக்காவில்  ஒரு பணக்கார பெண்  மட்டுமல்ல  
ஒரு புகழ்பெற்ற  நடிகையும்கூட. இப்போது அவரது வயது நாற்பதை கடந்திருந்தது. 
அவரது இளமைக் காலத்தில் அவரோடு  இருந்த அனைவரும் அவரது  அழகுக்காகவும், 
பணத்துக்காகவும், புகழுக்காகவும் இருந்தார்களே தவிர யாரும் அவரை புரிந்துகொண்டு இருக்கவில்லை. பலரது 
காதல் வலையில் விழுந்து, பலரை காதலித்து கடைசியாக ஒரு இயக்குனரை மணந்துகொண்டார் ரிப்சி. அந்த இயக்குனரும் ரிப்சியை வெறும் பணதிட்காகவும் அவரது  அழகுக்காகவும்தான் மணந்துகொண்டார் என்ற உண்மையும் ரிப்சிக்கு புரியாமல் இல்லை. 
படத்தில் அவரோடு  காதல் வயப்படும் காட்சிகள் எல்லாம் 
அவரை உருகி உருகி காதலிப்பதாக வரும் காட்சிகள் எல்லாம் காட்சிகள் மட்டுமே ஒரு காட்சி கூட ரிப்சியின் வாழ்கையில் நிஜமாகவில்லை. அந்த ஏக்கம் சண்டையாகி அந்த இயக்குனரை பிரிந்தார். ரிப்சிக்கு ஒரு கரு உருவானபோது அது அந்த இயக்குனரின் வற்புறுத்தலால் கருகழைப்பை செய்துகொண்டார். இப்போது ரிப்சியிடம் இருப்பது  கடற்கரை ஓரம்  ஒரு அழகான மாளிகை. கோடிக்கணக்கான ரூபாய் அவரது வங்கிக்கணக்கில். இப்போதும் அவர் வெளியே சென்றால் அவரது புகழை அறிந்தவர்கள் அவரை மொய்துக்கொள்வார்கள். பணம், பேர், புகழ், ஆடம்பரம் இவற்றோடு தனிமை இதுதான் ரிப்சியின் வாழ்க்கை. தன்னுடைய உணவை தானே சமைத்து தானே சாப்பிட்டுவிட்டு தன் நிலையை கூட பகிர்ந்துகொள்ள ஒரு துணை இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த ரிப்சிக்கு திடீரென ஏற்பட ஒரு சப்தம் அவரை திகிலடைய செய்தது காரணம் அது ஒரு இரவு வேளை அத்தோடு அந்த வீடு சற்று ஜன நடமாட்டமற்ற ஒரு பகுதியாக இருந்தது.


ரிப்சி வேகமாக வந்து தனது வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்கம் ஒரு கார் மோதி இருந்தது. ரிப்சி தனது டார்ச் லைட் எடுத்து வந்து  பார்த்தார். அந்த காரில் முப்பது வயது இருக்கும் ஒரு ஆண் கண் மூடியபடி இருந்தார். அவருக்கு ஏதாவது அடிபட்டிருக்குமோ என்று ரிப்சி காரின் 
பக்கம் சென்று பார்த்தார்.   

                             ( தொடரும்...)


ஞாயிறு, டிசம்பர் 18, 2011

ரியாலிட்டி ஷோக்களும் மக்களின் மனஅழுத்தங்களும்...


தமிழ் சேனல்கள் ரியாலிடி ஷோ என்று சொல்லப்படுகிற நிகழ்சிகள் மக்களின் மூளையை மலுங்கடிக்கிறது. மக்களின் உணர்சிகளை காசாக்கி 
TRP ரேட்டிங் வரிசையில் முதலிடம் பெற மக்களை கேலிக்கூத்தாடுகிறது இந்த
ரியாலிடி ஷோகள். நீயா? நானா? கோபிநாத்தை பிரபலமாக்கிய நிகழ்ச்சி என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி சமுதாய அக்கறையோடு தொடங்கப்பட்டதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி யாருடைய நலனை பற்றியும் கவலைபடாமல். வெறும் தெருச்சடை போடுவது
போல ஆக்கிவிட்டது இந்த நிகழ்ச்சி. உதரணமாக: மாமியார் VS மருமகள், ஆண்கள் அதிகம் விரும்புவது சிவப்பு நிறப் பெண்களா? மாநிறப் பெண்களா? போன்ற
தேவையற்ற வெறும் மக்களை கவர செய்த முயற்சியே தவிர அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை பிரச்சனைகள் மட்டுமே
நிச்சயம். அவர்கள் பிரச்னையை தீர்க்க இந்த நிகழ்ச்சியை உருவாக்கவில்லை மாறாக  பிரச்சனைகளை
உருவாக்குகிறார்கள்.  சிலருக்கு டிவியில் தன் முகம்  தெரியவேண்டும் என்பதற்காகவே சிலர் என்ன பேசுவது என்றே
தெரியாமல் உலகத்தில் பலநாடுகள், பலதரப்பட்ட மனிதர்கள் பார்கிறார்கள் என்ற ஒரு நினைவுகூட இல்லாமல் சிலர் கண்டமேனிக்கு பேசுகின்றார்கள். வெளிப்படையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு எதிரில் இருப்பவர் மனம் என்ன பாடுபடும் என்பதுகூடத் தெரியாமல் கண்டபடி பேசி பிரச்சனைகளை விலைக்கு வாங்கிக்கொள்கிரார்கள் அல்லது வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள். மக்களும் இதைப்போன்ற
நிகழ்சிகளை விரும்பிப் பார்பார்கலானால்   அவர்கள் நிச்சயம் மனஉளைச்சலுக்கு ஆளாவர்கள்.  மன்னியுங்கள் திரு. கோபிநாத் அவர்களே உங்களுடைய மேடைபேச்சிற்கு  நான் ரசிகன்தான் ஆனால் நீங்கள் கொடுக்கும்  எல்ல தலைப்பும் சிறந்தவையல்ல. ஒரு மணிநேரம் தொடரும் நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நூறு விளம்பரம் போடும் உங்கள் நிகழ்ச்சி  எந்த  சமுதாயத்  எப்படி மாற்றப்போகிறது
என்பது எனக்கு புரியவில்லை.
இந்த நிகழ்ச்சி என்னை இப்படி எழுதவைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை உங்கள் நிகழ்ச்சி சமுதாய பார்வையில் இருந்து சற்று விலகிவிட்டது என்கின்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.


சிலநாள் நான்  விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி இப்போது வெறுப்பையே கொடுக்கிறது. முதலில் இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது குழந்தைகள் எவ்வளவு அழகாக  பாடுகிறார்கள் என்பதை பார்த்து ரசித்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சி போகப்போக குழந்தைகளுக்கு படிப்பைவிட்டு மனஅழுத்தத்தையே  தந்துள்ளது. பாடகர்களை உச்சாகப்படுத்தவரும் நீதிபதிகள் ஒவ்வரு குழந்தையை ஒவ்வரு விதமாக ட்ரீட் செய்வது 
அவர்களுக்கு  குழந்தை மீது உணமையான  அக்கறை இருக்கிறதா? அல்லது வெறும்
TRP ரேட்டிங் மட்டுமே அவர்களது குறிக்கோளா? என்பது தெரியவரும். அழகான குழந்தைகள் தோல்வி சோகம் தாளாமல் அழுதுகொண்டு போவதை
படம்பிடித்து காட்டுவது அந்த குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது ஏன் இவர்களுக்கு
புரியவில்லை. ஒரு குழந்தை நன்றாக பாடினால் சாக்லேட் மழை பொழிவதும், கண்ணத்தில் முத்தமிடுவது, தோற்ற குழந்தை எவ்வளவு மன வேதனைப்படும்   என்பது எப்போது புரிந்துகொள்வார்கள். ஒரு குழந்தை தோற்றுவிட்டால்  ஆறுதல் சொல்லவேண்டிய பெற்றோரே அழுவது அந்த குழந்தைக்கு  தான் எதற்கும் லாயக்கற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். அந்த குழந்தை பாடுவதில் வல்லவனாக இல்லாவிட்டாலும் வேறு ஒரு துறையில் சிறந்தவன்
என்பதை அந்த குழந்தைக்கு யார் புரியவைப்பது?

ஜாக்பாட் என்கின்ற பொதுஅறிவு நிகழ்ச்சி. அறிவே இல்லாதவர்கூட சுலபமாக இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்கலாம். எவ்வளவு அழகான கேள்விகள் எவ்வளவு கஷ்டமான பதில்கள். பலபேர் இந்த நிகழ்ச்சியில் சிம்ரன் உடுத்திய ஆடை அலங்காரத்தை பார்க்கவே இந்த நிகழ்ச்சியை பார்கிறார்கள்  எனலாம். ஒரு கேள்வி என்பது மக்களை விழிக்க செய்யவேண்டும் அதைவிடுத்து வெறும் மக்களை மயக்கும் கவர்ச்சிப் பொருளாக அவை இருப்பது தயவு செய்து இதை அறிவுசார் நிகழ்ச்சி  என்று 
சொல்வதை விடுத்தது அறியாமைசார்  நிகழ்ச்சி என்று சொல்வதே    சரியானதாய் இருக்கும்.

சிறியவர் முதல் பெரியவர்வரை பார்க்கும் நிகழ்ச்சியில் ஒன்றான DEAL OR NO DEAL என்ற நிகழ்ச்சி இதை நான் கடைசிவரை என்ன நிகழ்ச்சி என்றே  பார்கவில்லை. இருந்தும் மக்களை எப்படி அடிமையாகி முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதை பார்த்த போது மிகவும் வேதனைப்பட வைத்தது. நமது காலசாரத்தை குழிதோண்டி புதைப்பது போன்ற நிகழ்ச்சி ஒன்றை சன் டிவி அரங்கேற்றியது. கிட்டத்தட்ட நாற்பது பெண்கள் அரைகுறை ஆடைகளோடு காட்சிப்பொருளாய் வைத்து 
ஆடப்பட்ட சூதாட்டம்  எனலாம். இதில் மக்கள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அழுவது அதை மற்றவர்கள் ரசிப்பது என்ற அபத்தமான நிகழ்ச்சி அரங்கேறியது. நல்லவேளை ஆட்சி மாறியதால் இந்த மாதிரி 
கேவலமான நிகழ்ச்சி தடைபட்டது.     


  

ரியாலிடி ஷோக்களில் நடன நிகழ்ச்சி என்ற ஒன்று நம் கலாச்சாரத்தை மறந்து கண்டவரோடு கண்டபடி நடனமாடி கண்டபடி 
உடையணிந்து ஆண்கள் பெண்கள் என்ற ஒரு அடையாளம்கூட இல்லாமல் ஆடும் ஆட்டத்தை பெறோரே ஊக்குவிப்பது சற்று வேதனையாக உள்ளது. படங்களில் 
ஒரு கதாநாயகனும், கதாநாயகியும் எப்படி கட்டிப்பிடித்து நடனமாடுவார்களோ அப்படியே ஒரு வயதுவந்த 
ஆணும் வயது வந்த பெண்ணும் ஆடுவது நமது கலாச்சாரம் சீரழிகிறது என்பது தெளிவாக புரிகிறது. 
நடனமாடுவது தப்பில்லை ஆனால் நாகரீகத்தோடு ஆடவேண்டும் என்பதை யார் இந்த இளைஞர்களுக்கு புரியவைப்பது?     


              நாம் நடத்துவது  ஒரு தொலைக்காட்சி அதை பலதரப்பட்ட வயதுக்காரகள் பார்பார்கள் என்ற ஒரு யோசனைகூட இல்லாமல் எதையுமே எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பி மக்களின் மனதை,
மூளையை, நேரத்தை, பணத்தை, வாழ்கையை கெடுத்துக்கொண்டு இருக்கிறது இந்த
ரியாலிட்டி ஷோக்கள் இதை  சரியான முறையில்    சீரமைப்பது அரசின் கடமை. அதை அரசு செய்யாவிட்டால் பலரது வாழ்கை கெட்டுப்போகும். நிகழ்ச்சி நடத்துபவர்களும் சற்று சிந்தித்து சமுதாயதிட்கு எது நல்லதோ அதை செய்யவேண்டும் அதை விடுத்து வெறும்  TRP ரேட்டிங் மட்டுமே கருத்தில் கொண்டு மக்களை தவறான வழிக்கு அழைத்து சென்றால் அந்த பாவம் உங்களை எப்போது தொடர்ந்து வரும் என்பதை மனதில் கொண்டு நிகழ்ச்சியை நடத்துங்கள். அதுதான் நாடிட்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.


சனி, டிசம்பர் 17, 2011

பறவைகள் பலவிதம்...ஒவ்வன்றும் ஒருவிதம்...


பறவைகள்தான் எவ்வளவு அழகானவை.நாம் காலையில் அந்த பறவைகளை பார்த்து ரசிக்கமலேயே நாம் அந்த பறவைகளை தாண்டி செல்கின்றோம். பறவைகள் இயற்கையின் அடையாளச் சின்னங்கள். ஒரு பறவை தன் குஞ்சகளுக்கு உணவு கொண்டு சென்று ஊட்டும் தாய்மை உணர்வை நாம் பறவையிடம்தான் 
பார்த்து பழக வேண்டும். எப்போது ஒரு சில பெண்கள் தங்கள் பெற்ற பிள்ளைக்கு தாய்பால் கொடுக்காமல் 
மாட்டுப்பாலை கொடுத்து தங்கள் பிள்ளையை வளர்கின்றனர். தாய்பால் கொடுத்தல் அந்த பெண்களின் அழகு 
பறிபோய்விடுமாம். அப்படி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தாய் தாயே அல்ல அவள் சாயம் பூசிய
பேய். ஒரு குழந்தை பிறக்கும்போது கொடுக்கப்படும் தாய்பால்தான் அந்த குழந்தையின் மன வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் சிறந்தது என்று அறிவியல் கூரும் உண்மை. அந்த  பறவைகள் தங்கள் உணவை தேடி பல மைல் தூரம் பயணிக்கிறது அப்படி கிடைக்கும் உணவை தன் குட்டிகளுக்கு கொடுத்துவிட்டு தாய் பறவையானது சிலசமயம் பட்டினியாய்  இருக்கும் இதுதானே தாய்மை.சொல்லப்போனால் 
மனிதன் மிருகங்களிடமும்,பறவைகளிடமும்  கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் மிக அதிகமாக உள்ளது.   


பறவைகள் எப்போதுமே சுதந்திரமானவை. அவைகள் சுதந்திர காற்றை எப்போதுமே சுவாசிக்கும். பறவைகளுக்கு எல்லைகோடு கிடையாது பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே தேவையில்லை 
அவைகள் பறக்கும்போது முதுகில் டன் கணக்கில் மற்றவர்களை அழிக்க அணு ஆயுதத்தை எடுத்து செல்வதில்லை. அதற்கு அடுத்த நிமிடம் 
பற்றிய பயமில்லாமல் பறக்கிறது.


பறவைகள் எப்போதுமே கூண்டில் அடைபடுவது எந்த பறவைக்கும் பிடிக்காது. ஆனால் மனிதர்கள் சிலபேர்
அந்த பறவையை காசு கொடுத்து வாங்கிவிட்டதால் அது தனக்கு அடிமை என்று கொடூரமாக அந்த பறவைகளை கூண்டில் அடைத்து தான் பறவைகளின் ரசிகன் என்று பெருமையாக சொல்லிகொள்ளும்போது. இயற்கையாக பறவைகள் வானில் பறக்கும்போது
அந்த பறவையின் அழகை ரசிப்பதுதான் உண்மையான ரசனை. அதனை கூண்டில் அடைத்து அதை நாம் கொடுமைபடுத்திவிட்டு தான் பறவைகளின் ரசிகன் என்று சொல்வது சரியானது அல்ல.

  
  
பறவைகள் இறைவன் படைத்த ஒரு அழகான ஒரு உயிரினம். அதை மனிதர்கள் ரசிக்கவேண்டும் அவைகளை பாதுக்ககவேண்டும் அதைவிடுத்து அந்த பறவைகளை அடிமையாக்குவது நல்ல செயல் அல்ல. ஒவ்வரு பறவையும் ஒவ்வரு குணாதிசயம் கொண்டவை அவைகள்
வண்ணம், ரக்கை விரித்து பறக்கும் அழகு என்றுமே நமக்கு ஒரு அழகான உணர்வை ஏற்படுத்தும்.அதை உணர மனிதர்கள் பழகவேண்டும்.

சிட்டுக்குருவி இனத்தைபோல் பல பறவைகள் இனத்தை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். நமது செல் போன் டவர் மூலமாக வரும் அலைவரிசை சிட்டுக்குருவிகள் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி 
அதன் கருவையே  சிதைத்துவிடுகிறது .பறவைகள் அழிவை தடுக்க மனிதர்கள் 
முயலவேண்டும். பறவைகள் எப்போதுமே மனிதர்களுக்கு எந்த தீங்கையும் செய்ததில்லை. ஆகையால் அதை ரசித்து, அவற்றை பாதுகாப்பது மனிதராகிய  நம் கடமை. 

செவ்வாய், டிசம்பர் 13, 2011

பாரதவிலாஸ் படமும்... மக்கள் கற்கவேண்டிய பாடமும்...


"பாரதவிலாஸ்" என்ற திரைபடத்தை நான் சிறுவனாக இருந்தபோது பலமுறை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த படம். ஒற்றுமையான  இந்தியநாடு எப்படி இருக்கவேண்டும்
என்ற கனவோடு இந்தப்படம் எடுக்கப்படிருக்கிறது . இந்த படத்தில் ஒவ்வரு மாநிலத்தை சேர்ந்த ஒவ்வரு குடும்பமும் எப்படி கூட்டு குடித்தனம் நடத்துகிறது 
என்பதுதான் இந்த படத்தின் கதை. எல்லா மக்களும் சமம். எல்லா மக்களும் சேர்ந்த இந்திய மக்களின் ஒற்றுமையே   இந்திய நாடிட்கு பெருமை என்பதை உணர்த்தியது இப்படம்.


இந்த படத்தில் வரும்  "இந்தியநாடு என்வீடு இந்தியன் என்பது என் பேரு" என்ற  பாடல் மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். அந்த பாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் மட்டுமல்ல எல்லா  மாநிலத்தவரும் தங்கள் 
மாநிலம்,மொழி,இனம், கலாச்சாரத்தின்   பெருமைகளைப்  பற்றி பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலத்தவர் ஒற்றுமையாக  ஒரே வீட்டில் 
இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துவதே   இப்படம்.


 இந்த உலகம் அமைதியாக இருக்கவேண்டுமானால் எல்லா நாடுகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒரு நாடு அமைதியாக இருக்கவேண்டுமானால் பல மாநிலங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். மாநிலம் அமைதியாக இருக்கவேண்டுமானால் பல நகரங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். நகரம் அமைதியாக இருக்கவேண்டுமானால் பல வீடுகள் அமைதியாக இருக்கவேண்டும். வீடுகள் அமைதியாக இருக்கவேண்டுமானால் பலமனிதர்கள் ஒற்றுமையாக  இருக்கவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் எங்குமே அமைதி இருக்காது.  
   



முல்லை பெரியார் ஆணை விவகாரம். எதையும் விட்டுக்கொடுத்து அடுத்தவர்களுக்கு பகிர்ந்தளித்து வாழ்தால்தான் வாழ்க்கை அமைதி பிறக்கும். எதை நாம் கொண்டுபோகப்போகிறோம் 
என்று இத்தனை சண்டை. இயற்கை என்பது பொதுவானது யாருடைய வானத்தையும் யாராலும் திருடிவிடமுடியாது.
யாருடைய காற்றையும் யாரும்  தடுக்க முடியாது. அப்படியிருக்க ஏன் குடிக்கும் 
தண்ணிருக்கு மாட்டும் இத்தனை பிரச்சனை செய்கிறார்கள். எத்தனை ஆணை கட்டினாலும் நாம் வாழப்போவது சொற்ப நாட்களே அதற்கா இத்தனை 
சண்டைகள்?  "பாரதவிலாஸ்" படத்தை போன்று எல்லா மாநிலத்து மக்களும் ஒற்றுமையாக இருந்துவிட்டால் இந்தியா-2020 யில் கண்டிப்பாக வல்லரசு ஆகிவிடும்.


திங்கள், டிசம்பர் 12, 2011

மகாகவி பாரதிக்கு ஒரு மடல்...


 மகாகவி  சுப்ரமணிய பாரதியின் 130ஆவது பிறந்த நாள் நேற்று (11-12-2011) . இன்று(12-12-2011)  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 62 ஆவது பிறந்தநாள். எனக்கு பாரதியையும் பிடிக்கும் ரஜினிகாந்த்தையும் பிடிக்கும் ஆனால்
ரஜினிகாந்த் அவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் என் பாரதிக்கு கொடுக்கவில்லை  என்ற உண்மையை 
இன்று தினமணியில் வந்த செய்தி என்னை அரைந்ததுபோல் எனக்கு உணர்த்தியது. பாரதியை நான் மறந்து விட்டேன் என்ற 
குற்ற உணர்வு குத்தியது அப்போது, அதற்காக பாரதியிடம் மண்ணிப்பு கேட்கிறேன். " மகாகவியே உன்னை மறந்த 
என்னுடைய தவறை  மண்ணிப்பாயா?".  பாரதியை இந்த தலைமுறையே மறந்துவிட்டால் பின் அடுத்த தலைமுறைக்கு அவரது புகழை யார் கொண்டு சேர்ப்பது என்ற அச்சம், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாடிய பாரதியை போல் சுலபத்தில் 
எடுத்துக்கொண்டு போகமுடியவில்லை இப்போது.  பாரதியின் புகழ் என்றும் அழியாத ஒரு காலநிலை கடந்தவர்  பாரதி என்பதே  உண்மை.

எட்டையபுரத்து சிங்கம் பாரதியின் எழுச்சிமிகு கவிதை நம்மை மயக்கும்,  நம்மைவிட்டு போகாது 
அப்படியே நிலைக்கும். மகாகவியின் ஆற்றல் சக்திமிகு நவகவிதை. பாரதி தன்னை பெரிய கவிஞன் என்று சொல்லும்போது அதை யாரும் நம்பவில்லை.
பாரதி தன்னை தானே புகழ்த்துகொள்வதாக பேசினார்கள். ஆனால் பாரதி சொன்ன வார்த்தைகளே உண்மையாகியது. அவரது  சொல்லின் தன்மை 
புதியது.  சுவை புதிது, பொருள் புதிது அவரது  கவிதைநயம் புதிது இந்த உலகில் கவிராஜன் இல்லை என்ற குறை தன்னால் கழிந்தது என்கின்ற உண்மையை பாரதி பாடியதுபோல் இனி யாராலும்  பாட முடியும். 


விதியையும் எமனையும் சவால்விடும் பக்குவம் அவரிடம் மட்டுமே இருந்தது. பாரதி ஒரு தீர்க்கதரிசி அவரால்  மட்டுமே சுதந்திரம் பெரும் முன்பே  ஆடிப்பாடி ஆனந்த சுதந்திரம் 
அடைந்துவிட்டோம் என்று முரசுகொட்ட முடியும். பெண் விடுதலைப்பற்றி அவரைத்தவிர யாரும் குரலெழுப்பவில்லை அப்போது. 


 பாரதி சிலவருடமே வாழ்தாலும் பலவருட சாதனையை புரிந்தவர். அந்த மகாகவிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நின்புகழ் பலகாலம் நிலைக்கட்டும்.





    

    

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

எனக்கு பிடித்த ரஜினிகாந்த் அவர்களை பற்றி...


நாளை(12-12-2011)  ரஜினிகாந்த் அவர்களின்  பிறந்தநாள் என்பதால், நீயா? நானா? வில் தமிழகத்தில் ரஜினிகாந்த் என்ற மனிதர் எப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார் என்ற விவாதத்தைப்  பார்த்தபோது. ரஜினிகாந்த் என்னை எப்படி கவர்ந்தார் என்பதை சொல்லவேண்டும் என்ற ஆசை என் மனதில்  தோன்றியது. மனதிற்குள் என்னதான் ஒழித்துவைதாலும் ரஜினிகாந்த் பற்றிய பின்பம் என்னை தகர்த்து என்னைவிட்டு  வெளியே வந்துகொண்டுதான் இருந்தது. அவரது படங்களையும்
அவரது உண்மையான வாழ்கையும் பொருத்திப்பார்த்தால். அவர் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு  சிறந்த மனிதறும்கூட   அவரைப்  பற்றிய என்னுடைய அபிப்ராயம் உங்கள் முன்னால் வைக்கிறேன். ஒரு காரணமில்லாமல் ஒரு காரியமும் நடப்பதில்லை இந்த பூமியில். ஒரு பஸ்  கண்டக்டராக வாழ்கையை துவங்கிய ரஜினிகாந்த் வானத்தை எட்டிப்பிடிக்கும் 
அளவிற்கு வளர்ந்தபின்னும் இன்னும் ஆணவம், அகங்காரம் ஏதும் இல்லமால் இருக்கிறார் என்றால்
அவரைப்  புகழ்வது தப்பே இல்லை.      



 ரஜினிகாந்த் அவர்களைப்பற்றி இயக்குனர் சிகரம்  திரு.பாலசந்தர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது  "ரஜினிகாந்த் முதல் முதலில் என்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்ததும். முதலில் அவரது ஒல்லியான உருவமும், வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையும், துடிப்பும்  அவரை பார்த்தவுடன் எனக்கு தெரிந்தது. அவரது சின்ன கண்கள் பார்க்க மிக அழகாகவும், மற்றவர்களில் எளிதில் கவரும் வசீகரம் பெற்றிருந்தது. அப்போது நான் எடுத்துக்கொண்டிருந்த படம் முடிந்ததும் அடுத்த படத்தில் அவருக்கு  வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அவரை அனுப்பிவைத்தேன். அடுத்து நான் எடுத்த படம் "அபூர்வராகங்கள்" அந்த படத்தில் ரஜினியை நடிக்கவைக்கலாம் என்று முடிவெடுத்தேன். அப்போது அவர் பெயர் "சிவாஜி ராவ்". அவர் வரும் முதல் காட்சி கமல் மாடியில் இருந்து சாவியை தூக்கி வீசி பிடித்துகொண்டிருப்பர் அப்போது சாவி கீலே விழுந்துவிடும். ரஜினி அப்போது கேட்டை
திறந்து கொண்டு உள்ளே வரவேண்டும். ரஜினி அந்த கேட் இரண்டையும் திறக்கும் பாணியை பார்த்து அவர் கண்டிப்பாக எதிர்காலத்தில் சிறந்த நடிகராக
வருவார் என்று என் மனம் சொல்லியது இன்று அதுவே நடந்தது" என்று ரஜினி பற்றி அவர் பேசிய சிறு பகுதி உங்கள் முன்னால் பதிவு செய்ய நினைத்தேன்.



 ரஜினிகாந்த் அவருக்கே உரிய பாணியை மக்கள் மிகவும் ரசித்தனர் என்றாலும் அவர் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்த படம் ஆறிலிருந்து அறுபது வரை, தில்லு முள்ளு, மூன்று முடிச்சு, 16 வயதினிலே, தர்மதுரை, நல்லவனுக்கு நல்லவன், அவர்கள் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
அவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் நடித்துக்கொண்டிருந்த பலர் இப்போது காணமல் போய்விட்டாலும் இளைய நடிகர்களே நட்சத்திர அந்தஸ்து பெற முடியாமல் தோல்வியை தழுவும்போது இன்னும் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்ல அனைவரது நாடித்துடிப்பையும் அறிந்து இந்த வயதிலும் நடிக்கிறார் என்றால் அவரது உழைப்பை
கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்.

       பொதுவாக சினிமா துறையில் எவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்றாலும் தான் நினைத்ததை பேசிவிட முடியாது. ஆனால் யார்க்கும் பயப்படாமல் தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை செய்தார், பேசினார். அவரது பேச்சுக்கள் சிலநேரம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டது அவரது
குணத்தை காட்டுகிறதே தவிர தலைகனத்தை காட்டவில்லை.  சமூக பிரச்சனைகளுக்கு
குரல் கொடுத்தார். தான் வணங்கும் இறைவனை எல்லோரும் அறிய " ஸ்ரீ ராகவேந்திரா" மற்றும் " பாபா" படத்தின்  வழியாக  நமக்கு   பரிட்சயப்படவைத்தது அவரது ஆன்மபலம்    என்று சொன்னால் அது மிகையாகது.

எம்.ஜி.ஆர் என்ற மூன்றேளுது மந்திரச்சொல் எப்படி மலேசியாவையும், சிங்கப்பூரையும் ஆக்ரமித்ததோ அதேபோல்   ரஜினி என்ற மூன்றேழுத்து மந்திரச்சொல் ஜப்பானையும், இலங்கையும் ஆக்கிரமித்தது என்றால் ரஜினி சாதாரண மனிதராக நமக்கு தெரியவில்லை.   

இதுவரை ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர் என்பதை  பார்த்தோம். இப்போது அவரது நடிப்பின் துடிப்பைப் பார்ப்போம். எனக்கு தெரிந்து படங்களில் பஞ்ச் டையலாக் என்ற ஒரு 
உக்தியை முதல் முதலில்  கையாண்டது ரஜினிகாந்த் அவர்கள்தான் என்பது மறுக்க முடியாத 
உண்மை. நெஞ்சை கொதிக்கவைக்கும் வீரவசனம் என்பது அரசியலில் மட்டுமே இருந்த நிலை மாறி சினாவுக்குள் பிரவேசிக்க வைத்த 
பெருமைக்குரிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே. அவர் நினைத்திருந்தால் 1996 ஆம் ஆண்டே ஒரு கட்சியை ஆரம்பித்து நாட்டின்  முதல்வராகி இருக்கலாம். 
ஆனால் அதை அவர் செய்யவில்லை. அதுவே அவரது புகழை விண்ணுயர வைத்த உச்சநிலை.

  ரஜினி கருப்பின் அழகு. அவர் நிறம் கருப்பு ஆனால் மனசு வெள்ளை. அதனால் அவரால் யார்க்கும் எப்போதும் தொல்லையே இருந்ததில்லை. ஒருவரை புகழவேண்டும் என்று நினைத்தால் அப்போதே புகழ்ந்து விடவேண்டும். கொஞ்சம் தாமதித்தாலும் நமது ஈகோ நம்மை அதை செய்யவிடாது. ஆகையால் இன்று அவரை புகழவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிட்டது அதை தடுத்து கேரள அரசைப் போல் ஆணை கட்ட நான் ஆசைப்படவில்லை ஆகையால் இப்போதே அவரை எவ்வளவு புகழவேண்டுமோ அவ்வளவும் புகழ்ந்துவிடுகிறேன் அப்போதுதான் எனக்கு தூக்கம் வரும்.   
    

நான் ரசித்த ரஜினி படங்கள் சொல்ல ஆரம்பித்தால் நாள்புறாவும் சொல்லலாம். ரஜினி படம் என்றால் எப்போது வரும் எப்போது வரும் என்று சிறுவயதில் ஏங்கிய காலம் உண்டு. பணக்காரன் படத்தை பார்க்க  
அடம்பிடித்து  பணம் வாங்கிச் சென்று ரசித்த நினைவுகளும் 
எனக்குள் மறக்கமுடியாத நினைவுகளில் ஒன்று. படையப்பா படத்தை எத்தனை முறை 
பார்த்தேன் என்ற கணக்கு கூட எனக்கு தெரியாது. ஆறிலிருந்து அறுபது வரை படம் மட்டும் நாம் நான்கு முறை பார்த்திருப்பேன் ரஜினியின் நடிப்புக்காக 
மட்டும். இப்படி ரஜினி என்னை மயக்கிய தருணங்கள் நிறைய. 
   

ஒரு உலக புகழ்பெற்ற நடிகரான ஜாக்கி சான்  ரஜினிகாந்த் அவர்களுடன்  நடிக்க  ஆசைப்பட்டதை சொல்லவா? ஜப்பான் 
மக்கள் முத்து படத்திற்கு அடிமையானதை சொல்லவா?  இப்படி எதை சொல்ல அவரைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் சொல்ல இன்னும் மிச்சம் இருக்கும். ஆகையால் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.


வியாழன், டிசம்பர் 08, 2011

"மயக்கம் என்ன" வெளி தோற்றமும் உட்கருத்தும்...


"மயக்கம் என்ன" திரைப்படம் பார்த்து மயங்கிய ஒருவனாக இந்த படத்தை பற்றிய என் அபிப்ராயத்தை உங்கள் முன்னே வைக்கிறேன். கணவன், மனைவி உறவு பற்றிய உணர்வுப்பூர்வமான படங்கள் என்றால் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரும் படம் தமிழில் "அலைபாயுதே" ஹிந்தியில் "சல்தே சல்தே"  மலையாளத்தில் "பருதே ஒரு பாரியா" ஆங்கிலத்தில் "
PS I LOVE YOU" இப்படி ஒரு கணவன் எப்படி மனைவியிடம் நடந்துகொள்ள வேண்டும். ஒரு மனைவி தன் கணவனுக்காக எவ்வளவு தூராம் வாழ்கிறாள் என்று இவ்வகை படங்கள் நம்மை நிலைகொண்டாலும். ஒரு விஷத்தை மட்டும் நினைவு படுத்தவேண்டியது என்னவென்றால் இப்போது வருடத்திற்கு 1500 விவாகரத்து வழக்கு
நிலுவையில் உள்ளது சற்று கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம். ஒரு சின்ன மனஸ்தாபம், ஒரு சின்ன சண்டை, ஒரு சின்ன வார்த்தை, நான் பெரியவனா? நீ  பெரியவளா? என்ற ஈகோ. யாருக்கு யார் அடிபனிவது என்ற போட்டி.யார் சொல்வதை யார் கேட்பது? இவைகள்தான் இன்று உள்ள விவாகரதிட்கான முக்கிய பிரச்சனைகள். இயற்கை  படைக்கும் போது ஆண், பெண் இருவரையும் சமமாகத்தான் படைத்தான். இருவருமே பெரியவர்கள்தான், இருவருமே சிறியவர்கள் தான் என்ற புரிதல்தன்மை இருந்தால் மட்டுமே நம்மால் ஒரு அழகான வாழ்க்கையை வாழமுடியும்.
 சரி நான் மேற்கொண்டு சொன்ன ஒவ்வரு மொழி படங்கள் எப்படி கணவன் மனைவி உறவை உணர்த்தப்படுகிறது என்பதைப்
பற்றி முதலில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் பிறகு   மயக்கம் என்ன எப்படி என்னை மயக்கியது என்பதை பார்ப்போம்.



              மணிரத்னம் அவர்களின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவன் , ஷாலினி நடிப்பு ஒரு அழகான நீரோடையைப் போல் இருக்கும். காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய படம். இந்த படத்தின்  முடிவு புரியவைப்பது என்னவென்றால்
காதலிக்கும்போது வரும் காதலை வீட திருமணத்திட்கு பிறகு வரும் காதல் உண்மையானது மட்டுமல்ல மென்மையானதும் கூட  என்பதை புரியவைப்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.


ஹிந்தியில் ஷாருக்கான் மற்றும் ராணி முக்கர்ஜி நடித்த   "சல்தே சல்தே" கணவன் மனைக்குள் சந்தேகம் மற்றும் ஈகோ கண்டிப்பாக இருக்கக் கூடாது, அப்படி இருந்தால்  அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த மற்ற உறவுகளையும் எப்படி  பாதிக்கும் என்று அழகாக எடுத்துச் சொன்ன 
படம் சல்தே சல்தே. 

    


மலையாளத்தில் நான் மிகவும் ரசித்த படம் "பருதே ஒரு பாரியா". இதில் கோபிகாவும், ஜெயராமும் படத்தில் உள்ள கணவன், மனைவி எப்படி இருக்கவேண்டும் மற்றும் எப்படி இருக்கக் கூடாது என்பதை அழகாக நடித்திருப்பார்கள்.
  இந்த படத்தில் ஒரு கணவன் தன் மனைவியை எப்படி நடத்துகிறான். அதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பிரிவு. குடும்பம் என்ற அமைப்பு எப்படி நிம்மதியற்று போகிறது. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப்போவது எவ்வளவு அவசியம் என்பதை மனைவியை மதிக்காத கணவர்கள் மனதில் பதிய வைக்கிறது  இந்த படம்.


ஆங்கில படத்தில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று " 
P . S . I Love  you ". இந்த படத்தில்   காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவி தனது மரணத்திற்கு பிறகு சந்தோசமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் கணவன்
Cancer  நோயால் இறந்துபோகிரான்.  இறப்பதட்கு முன்கூட்டியே அவன் மனைவிக்கு   எல்லாவற்றியும்
ஏற்பாடு செய்துவிட்டு இறக்கிறான். அவனது முன்யோசனை ஒவ்வரு காட்சியிலும் அவளை மெய்சிலிர்க்கவைக்கும்
நம்மையும் கூட சிலிரிக்கவைக்கும் படம்  "
P . S . I Love you ".

                                        
  
இந்த வரிசையில் என்னை கவர்ந்த கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல் பற்றிய படம்  "மயக்கம்  என்ன". ஒரு கணவன் மனைவி வாழ்கையை பற்றிய படம் இது என்பதால் மற்ற காட்சிகளை விட்டுவிட்டு படத்தின் மையத்தை பற்றி பார்ப்போம். தனுஷ் நடிப்பு மிக அழகாக உள்ளது. ரிச்சா  புதுமுகம் என்று சொல்லவே முடியாது. கண்கள் பேசுகின்றன கவிதை மட்டுமல்ல வாழ்கையும் தான்.


            ரிச்சா பேசாத ஒவ்வரு காட்சியும் அவரது கண்கள் பேசுகின்றது. ரிச்சா பேசுகின்ற காட்சியில் கண்கள் பேசாமல் பேசுகின்றது உணர்சிகளை.  ஒரு பெண் எப்படி தன் கணவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பது இன்று அல்ல அன்றே முடிவான விஷயம்.எவன் தன்னை கடைசிவரை கூடவே இருந்து அவளை பாதுகாப்பான் என்று மனம் உணர்த்துகிறதோ அவர்களை தேர்ந்தெடுப்பார்கள்  மிகவும் எதார்த்தமான முறையில்.
ஒரு  ஆண் அப்படியல்ல   ஒரு பெண்ணை முதல் முதலில் பார்க்கும்போது அவளது அழகை மட்டுமே அதிகம் பார்த்து
ரசிக்கிறான். அவளை  அடைய அணைத்து வழிகளிலும்
முயற்சிக்கிறான். கிடைத்துவிட்டால் பின் அந்த பெண்ணை  இறைவன் தனக்கு  விளையாடக்கொடுத்த ஒரு அழகான பொம்மை என்பது  போல் அவளை  காயப்படுத்துவது, கஷ்டப்படுத்துவதுமாக நடக்கிறான்.  அதுவே  ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது முதலில் அவன் தனக்கு எத்தகைய வாழ்க்கை தருவான் என்பதை கணக்கிட்டுகொள்வது. ஒரு  பெண் நிறையா ஆண்களுடன்  பழகினாலும்   அவர்களுக்கு தேவையான அந்த ஒரு ஆணிடம் மட்டும் வித்யாசத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த படமும் அதையேதான் காட்டப்படுகிறது.  

ரிச்சாவின் ஒவ்வரு காட்சியும் இன்றைய பெண்களின் தோற்றத்தை காட்டுகிறது. படத்தில் வரும் ஒவ்வரு பெண் தோழிகளுக்கும் ஒவ்வரு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். தனுசிட்கு தங்கையாக  வரும் கதாபாத்திரமும் சரி, தோழி கதாபாத்திரமும் 
சரி ஒரு ஆண் எங்கெல்லாம் ஒரு பெண்ணை காயப்படுதுகிறான் என்பதை மிக அழகாக காட்டப்பட்டுள்ளது இந்த படத்தில்.  


      ஒரு கணவனாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் தனுஷ். வாழ்கையில் தான் தொலைத்தவற்றை தன் மனைவி மூலம்தான் அடைய முடித்தது என்ற மிக எதார்த்தமான ஒரு வசனம் பல கணவன்மார்களுக்கு ஒரு நல்ல பாடம். மனைவி தனக்காக உழைக்கிறாள் என்பதை புரிந்தும் அவளை ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் நடக்கும் ஒவ்வரு கணவனுக்கும் ஒரு பாடம் இந்தப் படம்.


படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னை இசை மனதை மயக்குகிறது. இந்தப்
படம் இருவர் மட்டுமே சார்ந்தது ஒன்று கணவன் மற்றொன்று மனைவி. மற்றவை எல்லாம் இவர்களுக்கு பிறகுதான் என்பதால் படம் ஒரு
hiku கவிதை புரிந்தவர்க்கு இந்த  படமும் பிடிக்கும் இதில் உள்ள கருத்தும் பிடிக்கும்.


செவ்வாய், டிசம்பர் 06, 2011

டாப்- 10 அரசியல் பிரச்சனைகள் (அரசியல் விமர்சனம்)...


பல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்போது அதில் எது சிறந்தது என்ற விமர்சனம் செய்வதை டாப் 
10  மூவீ ஸ் என்று அழைப்பது  போல் இப்போது டாப் 10  அரசியல் பிரச்சனைகளை ஆராய்வோம். அதில் எது மக்கள் மத்தியில் கடும் சீற்றமாக உருவெடுத்து உள்ளது என்பதை இப்போது காண்போம். "DAM 999" என்ற ஒரு படத்தை எடுத்து அது தமிழர்க்கும், கேரள மக்களுக்கும் கடும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது இந்த விமர்சனத்தை பிறகு ஆராய்வோம். இப்போது அந்த படத்தில் உள்ள ஒரு புகைப்படம் உங்களுக்காக. டாப் 10 பிரச்சனைகளில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது "DAM 999"  என்ற சர்ச்சைக்குரிய படம்.  




முல்லை பெரியார் அணை விவகாரம் ஒம்பதாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பிரச்சனை புதுவரவு என்பதால் இதன் தீவிரம் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம். இதோ முல்லை பெரியார் பிரச்சனை பற்றிய விமர்சனம்.
முல்லை பெரியார் அணை உடைந்தால் மக்கள் பலரது உயிருக்கு ஆபத்து என்று வாதாடிய கேரள அரசு அந்த அணையை தானே உடைக்க முன்வந்தது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை குறிக்கிறது. ஒருவர் வாழ ஒட்டுமொத்த சமுகத்தை வளைப்பதா? ஒருவன் உண்ண ஊரை தீக்கு இரையாக்குவாதா? மனிதன் மற்ற விலங்குகளை அழித்து அதை உணவாக உட்கொண்டான். இப்போது 
அவன் வெறி மனிதர்களிடமே திரும்பிவிட்டதா?  ஒரு கிலோமீட்டர் இடைவெளி உள்ள ஒரு எல்லையில் மனிதன் பூமியை, தண்ணிரை பிரிப்பதா? வானம் நமக்கு தூரம்,  இல்லையேல் வானத்தை வெட்டி எல்லை வகுத்திருப்பான் மனிதன். ஒவ்வரு சராசரி  மனிதனுக்கும் ஆயுள் என்பது  அறுபது ஆண்டுகள் என்று வைத்துகொண்டாலும்  இதில் யார் எதை தூக்கி மடியில் கட்டிக்கொண்டு போகப்போகிரார்களோ 
தெரியவில்லை?  இது ஐயப்பா உனக்கே வெளிச்சம். உன்னை தேடி போகும் கூட்டம் ஒருபுறம். தண்ணீரை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மனிதர்கள் மறுபுறம். நீ என்ன செய்வாய் பாவம். இதுவே இந்நாட்டின் சாபம்  என்று  மக்களின் புலம்பல் காதுகளை வலிக்கச் செய்கிறது.  


நீண்ட நாட்களாக உள்ள
 கூடன்குளம் அணுமின் நிலையம் பிரச்சனை மற்ற பிரச்சனைகளால் சற்று சப்தம் குறைத்து உள்ளது. மக்கள்  ஒருபுறம் இந்த அணுமின் நிலையத்தை எதிர்க்க அணுமின்  நிலையத்துக்கு பதிமூன்றாயிரம் கோடி செலவு செய்த மத்திய அரசு ஒருபுறம், மத்திய அரசுக்கு தண்ணி காட்ட நினைக்கும் மாநில அரசு மறுபுறம் என்று  பிரச்சனைகள் தீர்கப்படாமலேயே போய் கொண்டிருக்கிறது. அணுமின் நிலையம் பிரச்சனை இந்த வாரம் ஆறாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்திற்கு பின்தங்கி உள்ளது. 



ஹர்விந்தர் சிங் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை அரைந்த விவகாரம் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது. ஹர்விந்தர் சிங் இப்போது மனநல காப்பகத்திற்கு அனுப்பபடுள்ளர் என்கின்ற செய்தி மக்கள் மத்தியில்  சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  ஒரு இளைஞன் அரசியல்வாதி செய்த தப்பிற்கு அவரை தண்டிக்க நினைத்தது தவறு என்று மத்திய அரசின் முடிவாக உள்ளது.
மேற்கொண்டு இந்த பிரச்சனை எவ்வளவு தூரம் மக்கள் ஆதரவு பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

  

 கனிமொழி சிறையில் இருந்து சென்னை வந்தது பெரிய விசயமில்லை என்றாலும் அவர் ஏதோ நாடிட்காக தியாகம் செய்துவிட்டு வந்ததை போல் திமுக கொண்டாடியது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  கனிமொழியின் சிறை வாழ்க்கை முற்று பெற்றதா? இல்லையா? என்பதை 
வரும் நாட்களை காண்போம். இப்போது இந்த பிரச்சனை ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. 




 முதல் அமைச்சர் அவர்கள் மீது போடப்பட்ட சொத்து குவிப்பு விவகாரத்தில் ஜெயலிதா அவர்களது
ஆளுமை கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதிலில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
அவர் மீது போடப்பட்ட வழக்கு எப்படிபட்ட மாற்றங்கள் வரும் என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம். இப்போது இந்த பிரச்சனை ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வழக்கு  பல முறை வாய்தா பெற்று விட்டதால் இந்த பிரச்சனை பற்றி அதிக விமர்சனம் தேவை இல்லை என்ற காரணத்தினால் அடுத்த பிரச்சனையாகிய விலைவாசி உயர்வு பிரச்சனையை விமர்சிப்போம்.



 மக்களின் அன்றாட வாழ்கையில் மேலும் சுமை ஏற்றிவிட்டதாக எதிர்கட்சிகள் போர் கோடி தூக்கும் சமயத்தில் முல்லை பெரியார் அணை பிரச்சனை வந்து விட்டதால். இதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். உள்ளூர் விவகாரம் எப்போதும் இருக்கும் அதை பிறகு பார்த்துகொள்ளலாம் .ஆனால் வெளியூர் விவகாரம் எப்போதாவது வரும் என்பதால்  கட்சிகள் ஒன்று சேர்த்து போராட வேண்டிய நிலைமை வந்துவிட்டது, வேறு வழியின்றி இந்த பிரச்சனையை பாக்கி வைத்து விட்டு முல்லை பெரியார் விவகாரத்தில் தலை காட்ட தொடங்கிவிட்டனர். என்றாலும் தாங்க முடியாத சுமை மக்களை வாட்டி வதைக்கிறது என்பதால் இந்த பிரச்சனை நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது.


                  இதுவரை பெரிய அளவில் கல்லூரி மாணவர்களை பாதிக்காமல் போய் கொண்டிருந்த அரசியல் பிரச்சனைகள் இப்போது மத்திய அமைச்சர் கபில் சிபில்
facebook போன்ற  சமூக இணையதலத்தை  தடை செய்வது பற்றி பேசியது மாணவர்கள்    மத்தியில் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. இது மாணவர்களின் எதிர்ப்பு என்பதால் இரண்டு இடங்கள்  முன்னேறி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே அவர்கள் நடத்திய போராட்டம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிரதால் இந்த வாரமும் அதே இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது  அவரது போராட்டம் மக்களை ஊழலுக்கு எதிராக பேச வைத்திருக்கிறது. இந்த பிரச்னையை மத்திய அரசு எப்படியெல்லாமோ  சமாளித்து வருகிறது. இதை பற்றிய விமர்சனங்கள் நிறைய பார்த்து விட்டதால் அடுத்த முதல் இடத்தை பிடித்த பிரச்னையை  பார்ப்போம்.



         காங்கிரஸ் தவிர மற்ற அணைத்து கட்சிகளும், மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்தது ஊழலுக்கு அடுத்தபடியாக மத்திய அரசு அறிவித்த
51 % வால் மார்ட் நிறுவனத்தின் இந்திய முதலீடு. காங்கிரஸ் மக்களை திசை திருப்ப எடுக்கும் முயற்சிகள் அவர்களையே பதம் பார்க்கிறது என்பதை உணராமல் மக்களுக்கு  வேடிக்கை காட்டும் போக்கு மக்களின் சீற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது. போராட்டம் வலு பெற்றதும் அரசு பின்வாங்கியதோடு  இந்தவாரம் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.  இனி வரும் நாட்களில் மக்களுக்கு எந்தெந்த வகையில் பிரச்னையை உண்டாக்கலாம் என்று நினைப்பதை விட்டுவிட்டு நல்ல முறையில் எப்படி பணவீக்கத்தை சமாளிப்பது என்பதை மத்திய அரசு
சிந்தித்து செயல்பட்டால் நல்ல பெயர் வாங்க முடியாவிட்டாலும் கெட்ட பெயர் வாங்குவதை தவிர்க்கலாம். அடுத்தவாரம் எந்தெந்த பிரச்சனைகள் எந்தெந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பதை அடுத்தவாரம் பார்க்கலாம் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம் நன்றி வணக்கம்.