"மயக்கம் என்ன" திரைப்படம் பார்த்து மயங்கிய ஒருவனாக இந்த படத்தை பற்றிய என் அபிப்ராயத்தை உங்கள் முன்னே வைக்கிறேன். கணவன், மனைவி உறவு பற்றிய உணர்வுப்பூர்வமான படங்கள் என்றால் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரும் படம் தமிழில் "அலைபாயுதே" ஹிந்தியில் "சல்தே சல்தே" மலையாளத்தில் "பருதே ஒரு பாரியா" ஆங்கிலத்தில் "
PS I LOVE YOU" இப்படி ஒரு கணவன் எப்படி மனைவியிடம் நடந்துகொள்ள வேண்டும். ஒரு மனைவி தன் கணவனுக்காக எவ்வளவு தூராம் வாழ்கிறாள் என்று இவ்வகை படங்கள் நம்மை நிலைகொண்டாலும். ஒரு விஷத்தை மட்டும் நினைவு படுத்தவேண்டியது என்னவென்றால் இப்போது வருடத்திற்கு 1500 விவாகரத்து வழக்குநிலுவையில் உள்ளது சற்று கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம். ஒரு சின்ன மனஸ்தாபம், ஒரு சின்ன சண்டை, ஒரு சின்ன வார்த்தை, நான் பெரியவனா? நீ பெரியவளா? என்ற ஈகோ. யாருக்கு யார் அடிபனிவது என்ற போட்டி.யார் சொல்வதை யார் கேட்பது? இவைகள்தான் இன்று உள்ள விவாகரதிட்கான முக்கிய பிரச்சனைகள். இயற்கை படைக்கும் போது ஆண், பெண் இருவரையும் சமமாகத்தான் படைத்தான். இருவருமே பெரியவர்கள்தான், இருவருமே சிறியவர்கள் தான் என்ற புரிதல்தன்மை இருந்தால் மட்டுமே நம்மால் ஒரு அழகான வாழ்க்கையை வாழமுடியும்.
சரி நான் மேற்கொண்டு சொன்ன ஒவ்வரு மொழி படங்கள் எப்படி கணவன் மனைவி உறவை உணர்த்தப்படுகிறது என்பதைப்
பற்றி முதலில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் பிறகு மயக்கம் என்ன எப்படி என்னை மயக்கியது என்பதை பார்ப்போம்.
மணிரத்னம் அவர்களின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவன் , ஷாலினி நடிப்பு ஒரு அழகான நீரோடையைப் போல் இருக்கும். காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய படம். இந்த படத்தின் முடிவு புரியவைப்பது என்னவென்றால்
காதலிக்கும்போது வரும் காதலை வீட திருமணத்திட்கு பிறகு வரும் காதல் உண்மையானது மட்டுமல்ல மென்மையானதும் கூட என்பதை புரியவைப்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.
ஹிந்தியில் ஷாருக்கான் மற்றும் ராணி முக்கர்ஜி நடித்த "சல்தே சல்தே" கணவன் மனைக்குள் சந்தேகம் மற்றும் ஈகோ கண்டிப்பாக இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த மற்ற உறவுகளையும் எப்படி பாதிக்கும் என்று அழகாக எடுத்துச் சொன்ன
படம் சல்தே சல்தே.
மலையாளத்தில் நான் மிகவும் ரசித்த படம் "பருதே ஒரு பாரியா". இதில் கோபிகாவும், ஜெயராமும் படத்தில் உள்ள கணவன், மனைவி எப்படி இருக்கவேண்டும் மற்றும் எப்படி இருக்கக் கூடாது என்பதை அழகாக நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் ஒரு கணவன் தன் மனைவியை எப்படி நடத்துகிறான். அதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பிரிவு. குடும்பம் என்ற அமைப்பு எப்படி நிம்மதியற்று போகிறது. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப்போவது எவ்வளவு அவசியம் என்பதை மனைவியை மதிக்காத கணவர்கள் மனதில் பதிய வைக்கிறது இந்த படம்.
ஆங்கில படத்தில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று "
P . S . I Love you ". இந்த படத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவி தனது மரணத்திற்கு பிறகு சந்தோசமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் கணவன்Cancer நோயால் இறந்துபோகிரான். இறப்பதட்கு முன்கூட்டியே அவன் மனைவிக்கு எல்லாவற்றியும்
ஏற்பாடு செய்துவிட்டு இறக்கிறான். அவனது முன்யோசனை ஒவ்வரு காட்சியிலும் அவளை மெய்சிலிர்க்கவைக்கும்
நம்மையும் கூட சிலிரிக்கவைக்கும் படம் "
P . S . I Love you ".
இந்த வரிசையில் என்னை கவர்ந்த கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல் பற்றிய படம் "மயக்கம் என்ன". ஒரு கணவன் மனைவி வாழ்கையை பற்றிய படம் இது என்பதால் மற்ற காட்சிகளை விட்டுவிட்டு படத்தின் மையத்தை பற்றி பார்ப்போம். தனுஷ் நடிப்பு மிக அழகாக உள்ளது. ரிச்சா புதுமுகம் என்று சொல்லவே முடியாது. கண்கள் பேசுகின்றன கவிதை மட்டுமல்ல வாழ்கையும் தான்.
ரிச்சா பேசாத ஒவ்வரு காட்சியும் அவரது கண்கள் பேசுகின்றது. ரிச்சா பேசுகின்ற காட்சியில் கண்கள் பேசாமல் பேசுகின்றது உணர்சிகளை. ஒரு பெண் எப்படி தன் கணவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பது இன்று அல்ல அன்றே முடிவான விஷயம்.எவன் தன்னை கடைசிவரை கூடவே இருந்து அவளை பாதுகாப்பான் என்று மனம் உணர்த்துகிறதோ அவர்களை தேர்ந்தெடுப்பார்கள் மிகவும் எதார்த்தமான முறையில்.
ஒரு ஆண் அப்படியல்ல ஒரு பெண்ணை முதல் முதலில் பார்க்கும்போது அவளது அழகை மட்டுமே அதிகம் பார்த்து
ரசிக்கிறான். அவளை அடைய அணைத்து வழிகளிலும்
முயற்சிக்கிறான். கிடைத்துவிட்டால் பின் அந்த பெண்ணை இறைவன் தனக்கு விளையாடக்கொடுத்த ஒரு அழகான பொம்மை என்பது போல் அவளை காயப்படுத்துவது, கஷ்டப்படுத்துவதுமாக நடக்கிறான். அதுவே ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது முதலில் அவன் தனக்கு எத்தகைய வாழ்க்கை தருவான் என்பதை கணக்கிட்டுகொள்வது. ஒரு பெண் நிறையா ஆண்களுடன் பழகினாலும் அவர்களுக்கு தேவையான அந்த ஒரு ஆணிடம் மட்டும் வித்யாசத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த படமும் அதையேதான் காட்டப்படுகிறது.
ரிச்சாவின் ஒவ்வரு காட்சியும் இன்றைய பெண்களின் தோற்றத்தை காட்டுகிறது. படத்தில் வரும் ஒவ்வரு பெண் தோழிகளுக்கும் ஒவ்வரு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். தனுசிட்கு தங்கையாக வரும் கதாபாத்திரமும் சரி, தோழி கதாபாத்திரமும்
சரி ஒரு ஆண் எங்கெல்லாம் ஒரு பெண்ணை காயப்படுதுகிறான் என்பதை மிக அழகாக காட்டப்பட்டுள்ளது இந்த படத்தில்.
ஒரு கணவனாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் தனுஷ். வாழ்கையில் தான் தொலைத்தவற்றை தன் மனைவி மூலம்தான் அடைய முடித்தது என்ற மிக எதார்த்தமான ஒரு வசனம் பல கணவன்மார்களுக்கு ஒரு நல்ல பாடம். மனைவி தனக்காக உழைக்கிறாள் என்பதை புரிந்தும் அவளை ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் நடக்கும் ஒவ்வரு கணவனுக்கும் ஒரு பாடம் இந்தப் படம்.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னை இசை மனதை மயக்குகிறது. இந்தப்
படம் இருவர் மட்டுமே சார்ந்தது ஒன்று கணவன் மற்றொன்று மனைவி. மற்றவை எல்லாம் இவர்களுக்கு பிறகுதான் என்பதால் படம் ஒரு
hiku கவிதை புரிந்தவர்க்கு இந்த படமும் பிடிக்கும் இதில் உள்ள கருத்தும் பிடிக்கும்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக