வெள்ளி, மே 25, 2012

முதல் உதவிக் கவிதை...



உதவிகள் பலவுண்டு - அதில்...
மனித உயிர்களை காப்பது
அதில் ஒன்று!
******
மனித உயிகளை காப்பது...
மனிதர்க்கு செய்யும் தொண்டு - அதில்
புண்ணியம் பலவுண்டு!
வாழ்க்கை சதுக்கத்திலே...
மரணம் ஒரு தொடர்கதை
அதற்கு தற்காலீக முடிவுரை
எழுதிடவே முதலுதவி
செய்திடுவோம்!
******
எவர் வேண்டுமானாலும் - ஒரு
உயிர் எடுக்கமுடியும்
ஆனால் - ஒரு
உயிரைக் காக்க ஒரு சிலரால்
மட்டுமே முடியும்!
 ******
உலகில்...
உண்ணதமானது
ஒருவரது உயிர்
ஒரு சிறிய உதவி - அந்த
உயிரைக்
காக்கும் பயிர்!

காலத்தால்...
செய்த உதவி
சிறிதெனினும்
வானத்தை போல்
உயர்ந்து நிற்க்கும்!
 ******
உருவம் கண்டு...
உதவாதே
உதிரம் தடுக்க
மறவாதே!
 ******
உதவும் கரங்கள்...
உன்னோடு
உதவத் தெரிந்தால்
உடனே உதவிடு!
 ******
முதல் உதவி...
என்பது
மனித உயிரை
காப்பாற்றும்
முக்கியமான
பகுதி!
 ******
அதை...
புரிந்து சரிவர
செயல்பட்டால்
பலரது சாவைத்
தடுக்கலாம்!
                                     - பா. மோகன் குமார்

புதன், மே 23, 2012

FIRST AID...

இந்த பூமியில் நாம் அன்றாடம் நடத்தும் வாழ்க்கை முறையில் எண்ணற்ற விபத்துக்கள், வியாதிக்களால் எங்கோ ஒரு உயிர் போய்க்கொண்டுதான் இருக்கிறது. ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளால் அவர்களுக்கு முதல் உதவி தேவைப்படுகின்றது. அப்படி தேவைப்படும்போது நாம் அவர்களுக்கு செய்யும் அந்த உதவி அவர்களது உயிரை காப்பாற்ற உதவும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில் நாம் ஒருவரை காப்பாற்றும் நோக்கத்தோடு தவறுதலாக எதையாவது செய்துவிட்டால் அது அவர்களது உயிருக்கே ஆபத்து உண்டாக்கலாம் ஆகையால் ஒருவரை காப்பாற்ற நாம் எடுக்கும் முயற்சி சரியானவையாக இருக்கவேண்டும் என்பதுதான் இப்போது நாம் பார்க்கப்போவது.
  நாம் தினமும் சந்திக்கும் மனிதரோ நமக்கு அறிமுகமில்லாத மனிதரோ அவர் நமக்கு பிடித்தவரோ, பிடிக்காதவரோ யாராக இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்றால் உடனே உதவி செய்வதுதான் மனிதாபிமானம். ஒருவர் திடீர் என்று மயங்கி விழுந்துவிட்டார் என்றால் அவரை நாம் மல்லாக படுக்கவைக்க வேண்டும். பிறகு அவருக்கு காற்று செல்லும்படியாக தலையை உயர்த்திப்பிடிக்க வேண்டும். ஒரு கையால் தாடையை பிடித்து அவரது வாயை திறக்கவேண்டும் பிறகு மற்றொரு கையால் அவரது மூக்கை பிடித்துக்கொண்டு அவருக்கு நமது சுவாசத்தை வாய்வழியாக ( வாயோடு வாய்வைத்து) காற்றை செலுத்த வேண்டும். அவருக்கு நாம் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 16 முறை காற்றை உட்செலுத்தவேண்டும். அவரது தலையை மடிமீது தூக்கிவைதுக்கொள்ள கூடாது. மற்றும் மயங்கி விழுந்தவர் தன் சுயநினைவு அடையும்வரை அவருக்கு வலுக்கட்டாயமாக தண்ணீரை வாய்க்குள் செலுத்தக்கூடாது.  

தண்ணீரில் ஒருவர் மாட்டிக்கொண்டால் அவரை நாம் காப்பாற்றுவது எப்படி என்பதை பாப்போம். ஒருவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மாட்டிக்கொண்டால் நமக்கு நீச்சல் தெரிந்திருந்தால் அவரை சென்று காப்பாற்றலாம். நமக்கு நீச்சல் தெரியாவிட்டால் நாம் அவருக்கு உதவ மிதவைகளை உதவிக்கு தரவேண்டும். ஏதாவது மரக்கட்டை, கயிர் ஆகியவற்றை வீசி அவரை பிடித்துக்கொள்ள செய்யவேண்டும். ஒருவர் நீரில் மூழ்கும்போது அவரது தலைமுடியை பிடித்து இழுத்துவர வேண்டும். அவருக்கு தலைமுடியில்லை என்றால் அவரது காதையோ அல்லது அவரது கால் கட்டை விரலையோ பிடித்து வரவேண்டும். பிறகு அவரை குப்புற படுக்கவைத்து அவரது வயிற்றின் நமது மீது இருகைகளாலும் மேல் நோக்கி தூக்கும்போது அவரது நுரையீரல் பகுதியில் உள்ள தண்ணீர் வெளியேறும் பிறகு அவருக்கு நாம் செயற்கை சுவாசம் தரவேண்டும்.

ஒருவருக்கு தீக்காயம் ஏற்ப்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை பார்போம். ஒருவருக்கு தீ காயம் ஏற்பட்டால் அவர்கள் மீட்டு தண்ணீரை ஊற்றவேண்டும். வேறு எதுவும் தீ காயத்தின் மீது தடவக்கூடாது. ஒருவருக்கு தீ காயம் ஏற்பட்டால் வாழை இலை மற்றும் பிளாஸ்டிக் அல்லாத படுக்கையில் படுக்கவைக்க வேண்டும். தண்ணீர் இல்லாத பட்சத்தில் ஒரு கெட்டியான போர்வை போர்த்தி காற்று உள்ளே போகமல் தடுக்கவேண்டும். இவ்வாறாக ஒருவருக்கு நாம் செய்யும் முதல் உதவி அவரது உயிரை காப்பற்றலாம்.ஆகையினால் மனிதாபிமானமுள்ள எல்லோரும் இதை தெரிந்துகொள்வது நல்லது.

செவ்வாய், மே 22, 2012

தேவைகளின் கோட்பாடு....



இப்போது காண்பிக்கப்பட்டுள்ள ப்ரமேடின் பெயர், தேவைகளின் கோட்பாடு "HIERARCHY OF NEEDS THEORY" என்பதாகும் . அப்படியென்றால் என்ன என்று கேட்கத்தோன்றுவதட்கு முன்பாகவே விளக்கி விடுகிறேன். இதை ஒரு கோட்பாடாக வகுத்தவர் "ABRAHAM MASLOW" என்பவர் ஆவர். இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வரு மனிதனும் எதை நோக்கி தனது வாழ்க்கை பயணத்தை மேட்கொள்கிரார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.ஏதோ வந்தோம் வாழ்தோம் என்றில்லாமல் மனித நாகரிகத்தின் அடிப்படை  என்ன? என்பது ஒவ்வரு மனிதனும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம். ஆதிகாலத்தில் மனிதன் ஆறாம் அறிவு புலப்படாத காலத்தில் எல்லவற்றையும் கண்டு பயந்தான். மின்னலை கண்டு பயந்தான், இருளைக்கண்டு பயந்தான், ஒளியை கண்டு பயந்தான், இப்படி இயற்கை அனைத்தையும் கண்டு பயந்தான். அப்போது அவனுக்கு தன் பயத்தை போக்கிக்கொள்ள ஒரு துணை தேவைப்பட்டது. தனக்கென ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டான். அப்படி ஆரம்பித்த கூட்டம் அதற்கு ஒரு தலைவன் அந்த தலைவன் பிடிக்காமல் அந்த தலைவனை வீழ்த்த ஒருவன் அவனுக்கு உதவிசெய்ய ஆட்கள் இப்படியாக உருவானதுதான் இப்போது அரசியல் என்ற பெயர்ளில் உலகம் முழுவதும் ஆளப்பட்டு வருவதற்கான முன்னோடி.



தேவைகளின் கோட்பாடு  என்பது மனித பரிணாம வளர்ச்சிக்கு பெரிதும் காரணமான ஒன்று. தேவைகளின் கோட்பாடு ஐந்து வகையான தேவையாக பிரிக்கப்படுகின்றது. முதலாவது தேவை ஒரு மனிதனுக்கு அடிப்படை விஷயங்கள் உணவு, உறைவிடம், உடை மற்றும் உடல் உறவு இவைகளே மனிதனின் அத்தியாவசிய தேவைகளாக முதலில் வகுக்கப்படுகின்றது. அவனது அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியானபின்பு அவனது அடுத்த தேவையான பாதுகாப்பு என்கின்ற தேவை முக்கியத்துவம் பெறுகின்றது. தனது பாதுகாப்பை பலப்படுதிக்கொள்ள குளிர் காலத்தில் குளிரை தாங்கிக்கொள்ள உடுப்பு, வெயில் காலத்திற்கு ஏற்ற உடுப்பு, மிருகங்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் என்று தனது பாதுகாப்பிட்கு தேவையான அணைத்து விசயங்களிலும் தன்னை ஈடுபடுதிக்கொண்டான். இவ்வாறாக தனது பாதுக்கப்பை பூர்த்தி செய்த பிறகு அவனுக்கென்று ஒரு கூட்டம் தேவைப்படுகின்றது. அந்த தேவைதான் மதமாக, ஜாதியாக உருமாறியது. தனக்கென ஒரு கூட்டம் அதற்கு ஒரு தலைவன் மற்ற கூட்டத்துடன் ஏற்படும் பொறாமை அதனால் ஏற்பட்ட சண்டை என்று இப்போதுவரை சண்டைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.அவனது மூன்றாவது தேவையான சமுதாய தேவை பூர்த்தியான பிறகு அவனது தேவை தன்முனைப்பாக மாறுகிறது. ஒரு கூட்டம் என்றால் அதற்கு தானே தலைவனாக இருக்கவேண்டும் என்ற ஆசை அதற்காக எடுக்கப்படும் முயற்சி, இவைதான்  தன்னை யாரென்று நிரூபிக்க பயன்படும் தேவையாகிறது. கடைசியாக தனது தேவை எல்லாவற்றையும் பூர்த்திசெய்தாகிவிட்டது என்கின்ற பக்குவமே கடைசி தேவையாகிறது. தனது தேவை பூர்த்தியாகிவிட்டதாக யார் உண்மையில் நம்புகிறார்களோ அவர்களது இறுதி தேவையே போதும் என்ற மனதின் தேவையாகும். இவைதான் தேவைகளுக்கான கோட்பாடுகள் ஆகும்.  

இதுவரை உயிருடன் இருக்கும் மனிதர்களில் தனது தேவைகள் பூர்த்தியாகிவிட்டதாக கூறும் மனிதர்கள் இருப்பதாக வரலாறுகளே இல்லை. எல்லார்க்கும் தேவைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அந்த தேவைதான் மனிதர்களின் இயக்கம் தனது தேவைகள் பூர்தியாகிவிட்டதாக யார் நினைக்கிறார்களோ அவர்கள் இவ்வுலகில் வாழத்தகுதியற்றவர் ஆகிறார்கள். தேவைகள்தான் மனிதனின் இயக்கம். ஆசைகளும், தேவைகளும் இல்லாவிட்டால் உலகம் இயங்க தகுதியற்றதாகிவிடும். மனிதர்களின் தேவைகள் கோட்பாடும் இதேதான் வழியுருத்துகின்றன. எப்போதும் தேவைகள் மனிதனுக்கு இருந்துகொண்டேதான் இருக்கும் அது காலத்தின் கட்டாயம். மரணம் எதிர்பார்த்து காத்திருப்பதுகூட ஒருவித தேவைதான். இதுதான் தேவைகளின் கோட்பாடாகும்.

ஞாயிறு, மே 13, 2012

LAKSHYA - கார்கில் போரை நினைவூட்டும் படம்...


"LAKSHYA" என்கின்ற இந்த ஹிந்தி படம் நீண்ட நாட்களாக நான் பார்க்க நினைத்த படம் இன்றுதான் பார்க்கமுடிந்தது. பார்த்ததும் சுடச்சுட இந்தப்படத்தை பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. முதலில் இந்தப்படம் கார்கில் மையமாக வைத்து எடுத்தபடம் என்று எனக்கு தெரியாது ,இந்த விஷயம் முன்பே தெரிந்திருந்தால் இவ்வளவு காலதாமதமாக பார்த்திருக்கமாட்டேன். சிறுவயதில் எனக்கு ராணுவத்தில் சேர ஆசை இருந்தது. இந்த படத்தில் வரும் "THUMBE KIGANAA KIYU HOO" என்கின்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த பாடலுக்காகவே இந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அந்த பாடலை தாண்டிய படத்தின் தொகுப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. ரித்திக் ரோஷன் வெறும் சாக்லேட் ஹீரோவாக மட்டுமே பார்த்து ரசித்த கண்கள் இந்த படத்தில் மதிப்பிற்குரிய ராணுவ வீரனாக மனதில் பதிந்துவிட்டார்.  
ஹிரித்திக் ரோஷேன் ஒரு பணக்கார வீட்டு பிள்ளையாக கல்லூரி படிப்பை முடித்து. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவரது நண்பரின் பேச்சை கேட்டு ஒரு இலக்கு இல்லாமல் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கிறார். வீட்டின் எதிர்ப்பை மீறி ராணுவ பயிற்சிக்கு செல்கிறார். ராணுவ பயிற்சி
எப்படி இருக்கும் என்று தெரியாமல் விளையாட்டுதனமாய் செயல்பட்டு பலரது முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டு தண்டனையும் பெறுகிறார். இரவு யாருக்கும் தெரியாமல் ராணுவ பயிற்சி முகாமை விட்டு வீடிற்கு தப்பி வந்துவிடுகிறார்.

பெரிய அளவில் மேக்கப் இல்லாமல் இயல்பான பெண்ணாக ப்ரீத்தி ஜிந்த நடித்துள்ளார். கல்லூரி தோழனான ஹிரித்திக்கை காதலிக்கும் ப்ரீத்தி ஜிந்த, ஹிரித்திக் தன் வாழ்கையைபற்றி சிந்திக்காமல் இருப்பதால் தன் காதலை சொல்லாமல் மனதிற்குள் வைத்துக்கொள்கிறார் ப்ரீத்தி ஜிந்த. ஹிரித்திக் ராணுவ முகாமில் இருந்து திரும்பி வந்ததை கேட்டு கோபப்படுவதோடு ஹிரிதிக்கை அவமானப்படுத்தும் வகையில் பேசிவிடுகிறார். தான் விரும்பும் பெண் தன்னை அவமானப்படுத்துவது எந்த ஆணாளும் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த அவமானத்தோடு அவன் பெற்றோர் அவன்மீது வைத்திருக்கும் கருத்தும் ஹிரித்திக்கை அவமானப்படுத்துவதுபோல் இருந்துவிடவே மீண்டும் ராணுவ முகாமிற்கு திரும்பி செல்கிறார் ஹிரித்திக். 
ஒருவனது அவமானங்கள்தான் அவனை கடினமாக உழைக்க வைக்கிறது. ஒருவனது அவமானங்கள்தான் கடுமையாய் முன்னேறவேண்டும் என்கின்ற வெறியை தூண்டுகிறது. ஒருவனது அவமானம்தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம்கூட இல்லாமல் யாரும் உயர்ந்துவிட முடியாது. தான் காதலித்த பெண் தன்னை அவமானப்படுத்திவிட்டாள் என்கின்ற கோபம் ஹரித்திகை கடுமையான ராணுவ பயிற்ச்சியில் ஈடுபடுத்தியது. ப்ரீத்தி ஜிந்த ஒரு தொலைக்காட்சி ரிபோடராக வேலை கிடைத்து தனது துறையில் முத்திரை பதிக்கிறார்.
கார்கில் போர் பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே நடந்தபோது பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். கார்கில் போரில் வெற்றிபெற்றதை நாடுமுழுவதும் பார்த்து கொண்டாடினர். இங்கே நாம் சிரித்துக்கொண்டிருக்க அங்கே ராணுவ வீரர்கள் குடும்பம் அழுதுகொண்டிருந்தது. மரணம் வரும் என்று தெரிந்தே நாடிட்காக போராடும் எண்ணற்ற ராணுவ வீரர்களுக்கு மரியாதை தரும் வகையில் இந்தப்படம் அமைந்திருக்கிறது. ஹரித்திக் ரோஷன் இந்த படத்தில் அற்புதமாக ஒரு ராணுவ வீரராகவே வாழ்த்திருக்கிறார்.
கார்கில் போர் இறுதிகட்டத்தில் எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும் என்பதை இந்த படத்தின் மூலம் உணர முடிந்தது. நாடிட்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கும் குடும்பத்தை விட்டு குளிரிலும், மழையிலும், மலையிலும் போராடும் ராணுவ வீரர்களுக்கு, இந்த படத்தில் அற்புதமாக நடித்த ஹிரித்திக் ரோஷன்,ப்ரீதி ஜிந்த, அமிதா பச்சன் மற்றும் அணைத்து படக் குழுவினர்களுக்கும் ஒரு சல்யுட். ஜெய்ஹிந்த்.

சனி, மே 12, 2012

திருநங்கையரை சகமனிதர்களாக பாவிப்போம்...

கடவுள்களில் ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் உள்ள அர்த்தனாரிஸ்வறரை நாம் கடுவுளாக ஏற்றுக்கொண்டோம் ஆனால் அதுவே ஒரு ஆணின் உடம்பில் பெண் தன்மையும் ஒரு பெண்ணின் உடம்பில் ஆணின்தன்மையும் கொண்ட சகமனிதர்களை மட்டும் ஒரு புளுவைவீட கேவலமாக பார்க்கிறது இந்த சமுதாயம். ஒரு தாயின் வயிற்றில் கரு உருவாகும்போது ஒரு வாரத்திற்கு அந்த கரு ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத நிலையில்தான் இருக்கும்.பிறகு தன் நிலை உணர்ந்து அந்த கரு ஒரு ஆண் என்றோ அல்லது ஒரு  பெண் என்றோ அறிவிக்கிறது. இந்த அறிவிப்பின் காலதாமதம்தான் திருநங்கை என்கின்ற உருவத்தை எடுக்கிறது. ஒரு அறிவிப்பு காலதாமதமான காரணத்தினால் அந்த கரு குழந்தையாய் அவதரித்த பிறகு அதன் தோற்றம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பிக்கும்போது அந்த குழந்தைக்கு ஏற்படும் துயரம் சொல்ல ஒண்ணா துயரம். கடவுளிடம் அவர்கள் கேட்கும் கேள்வி "நான் என்ன தவறு செய்தேன் ஏன் எனக்கு மட்டும் இப்படியொரு பிறப்பு" என்பது. கடவுள் மனிதனை படைக்கும்போது அவர் அனைவரையும் சமமாகத்தான் படைக்க நினைத்தார். அப்படி படைத்தால் இறுதிவரை படைப்பு தொழில் தன்னிடமே இருந்துவிடும் என்பதற்காக தான் படைத்தவைகளில் ஒரு பாதியை ஆணாகவும் ஒரு பாதியை பெண்ணாகவும் படைத்தவர் ஏனோ ஆண், பெண் என்கின்ற இருவேறு உணர்வுகளை, உடலமைப்பை ஒரு உடலுக்குள் படைத்துவிட்டார். இது படைத்தவன் குற்றம் அதற்கு கிடைக்கும் எல்லா கேலி, கிண்டல்களுக்கும் இவர்கள் ஆளாகின்றார்கள்.
திருநங்கைகள் வெறும் பாலியள்தொளிலாளியாகவும், பிச்சை எடுப்பவர்கலாகவும் இருக்கும் அவலநிலை நீடிக்கிறது. உடல்தான் வேறு வேறு எல்லோருக்கும் உணர்வு ஒன்றுதான். அவர்கள் ரத்தமும் சிவப்புதான். எங்கு சென்றாலும் மக்கள் ஏளனமாக பார்ப்பதும், பரிகசிப்பதும் நாம் அவர்களை வீட மேலானவர்கள் என்கின்ற கொடூர புத்தியே தவிர அவர்கள் பாவப்பிறவிகள் அல்ல. ஒரு மனிதனின் வக்கிரம் வெறும் பிறப்புருப்போடு முடிந்துவிடுகிறது, அதைத்தாண்டிய மனிதநேயம் என்பது செத்துவிட்ட சமுதாயத்தில் வாழ்வது மிக மோசமான விளைவையே கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திருநங்கையர் கேலி செய்வதற்கும் கிண்டல் செய்வதற்கும் உலகளாவிய பொதுசொத்தாக மாற்றப்படதே இந்த அவலத்திற்கு காரணம். திரைப்படங்கள் அவர்களை கேளிசெய்வதட்கு, காமெடி காட்சிகளை உருவாக்கவும் திருநங்கையரை பயன்படுத்துவது இன்னும் நீடிக்கிறது. அதையும் தாண்டி அவர்களை பெருமைபடுதிய படம் " காஞ்சனா". வாழ்க்கை முழுவதும் புறக்கணிப்பு என்பது யாராலும் சகித்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம். இன்று அவர்களும் தங்களுக்கு போடப்பட்ட வளையத்தை தாண்டி சாதிக்க வருகிறார்கள், சாதித்தும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தூதுக்குடியை சேர்ந்த பாரதிராஜா என்கின்ற "பாரதி". முதல் திருநங்கை பாதிரியாராக சாதித்து இருக்கிறார்.

அவர்களுக்கு உடம்பு வேறுவிதமாக இருக்கலாம் அனால் உணர்சிகள் ஒன்றுதான். வெற்றியென்பது உருவத்தில் இல்லை உழைப்பில் இருக்கிறது. யார் உழைத்தாலும் உயரலாம் அது உண்மையானதாக, புனிதமானதாக இருக்கவேண்டும். அழகு என்பதோ, கவர்ச்சி என்பதோ கடைசிவரை நம்மோடு இருப்பதில்லை. உலகில் நாம் இருக்கும் வரை அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். முடிந்தவரை அடுத்தவரை காயப்படுத்துவதை விட்டுவிட்டு காயம்பட்டவர்களுக்கு மருந்தளிப்போம். திருநங்கையரை சகமனிதர்களாக பாவிப்போம். அவர்கள் மனதாலும், உடம்பாலும் காயம் பட்டவர்கள் அவர்களுக்கு உரிய அங்கிகாரமளித்து நடப்போம். அவர்களும் வாழட்டும், அவர்களும் வெற்றிபெறட்டும்,அவர்களும் வாழ்வில் எல்ல வளமும் பெறட்டும்.

புதன், மே 09, 2012

வழக்கு எண்: 18/9 படம் வாழ்க்கை பாடம்...

பாலாஜி  சக்திவேல் அவர்கள்  இயக்கிய  படம்   "வழக்கு எண்: 18/9" .இந்த படம் வழக்கமான படம் இல்லை என்பது படத்தின் தலைப்பு உணர்த்தியது. தமிழில் இப்படியொரு படம் ஆச்சரியம்தான். இந்தப்படம் ஒவ்வருவருடைய மனசாட்சியை கேள்விகேட்பதாக அமைந்திருக்கிறது. உண்மை கசக்கும் என்பார்கள் இந்த படம் பொய்யான பிரஜைகளின் மனதை கசக்கும் என்கின்ற நம்பிக்கைதான் படத்தின் வெற்றி. வாழ்க்கை ஒவ்வருவருக்கும் ஒவ்வருவிதமாக அமைகிறது. அதன்படி யார் எதை அனுபவிக்கவேண்டுமோ அதை கட்டாயம் அனுபவிப்பர். இந்த படம் ஒவ்வர தனிமனிதனின் உணர்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் படம். பணம் என்கின்ற ஒற்றை சாட்டையை கையில் கொண்டுள்ளவர்கள் மனிதாபிமானம், அன்பு, உண்மை, தர்மம் என்கின்ற எல்லாவற்றையும் வண்டியாக்கி அதிகாரம், ஆணவம் என்கின்ற கயிற்றைக்கொண்டு அப்பாவி மக்களின் கழுத்தை இருக்கி பணம் என்கின்ற சாட்டையால் அடித்து அதில் ராஜாவாக பவனிவருகிறார்கள். அத்தகைய பணக்கார ராஜவேசதாரிகளுக்கு நியாயம் என்கின்ற இன்னொரு சாட்டையால் அடிப்பதே இந்த படம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
படத்தின் நாயகன் ஏழை சிறுவனாக தனது தந்தை பட்ட கடனை அடைக்க வடஇந்தியா சென்று ஒரு முறுக்கு கம்பெனியில் வேலை செய்கிறான். ஒரு சிறுவன் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறான் என்றதும் அது பட்டாசு கம்பெனியோ, செங்கல் சூலையோ காட்டாமல் முறுக்கு கம்பனியை காட்டும்போது இரண்டு விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது நாயகன் அடுத்து செய்யப்போகும் வேலை ஏதோ ஒரு உணவு விடுதி என்பது. மற்றொன்று கம்பனின் முதலாளி நாயகனின் பெற்றோர் இறந்ததை மறைக்கும்போது அதை மூன்று மாததிற்கு பிறகு அறிந்த அந்த முதலாளி மீது சுடும்எண்ணையை கொட்ட போகும்போது படத்தின் முக்கிய அம்சம் அந்த காட்சி தெளிவாக்கப்படுகிறது. நாயகன் நல்லவன் அதனால் அந்த சுடும்எண்ணையில் இருந்து அந்த முதலாளி தப்பினார்.நாயகன் அந்த இடத்தில் இருந்து அழுதுகொண்டே ஓடிப்போகும்போது நமது மனமும் பின்னாலையே ஓட துடிக்கிறது அவனுக்கு ஆறுதல் சொல்ல (படத்தை உண்மையாக ரசித்தவர்கள் ஆறுதல் சொல்ல நினைத்திருப்பார்கள் என்பது என் எண்ணம்). இல்லைஎன்றாலும் "ச்ச" என்று பச்சதாபமாவது பட்டிருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

படத்தின் நாயகி பாவாடை , சட்டை அணிந்த தேவதை என்று சொல்ல தோன்றியது. அந்த அழகு முகம் படத்தின் பிற்பகுதியில் அலங்கோலமாக ஆகப்போகிறது என்பதை மனம் ஏற்றுக்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டது படத்தின் கடைசி காட்சியில். நாயகி வரும் காட்சியில் ஏதோ இனம் புரியாத சோகம் படம் முழுக்க முகத்தில் காட்டப்பட்டிருந்தது. இந்த படம் பார்க்கும்போதுதான் புரிந்தது ஒரு மனிதன் தன்னைபோல சகமனிதர்களை பார்ப்பதில்லை அதற்கு சான்றுதான் இரண்டு உலக யுத்தங்களும் பலக்கோடி மனிதர்களின் மரணங்களும்.

உண்மையான காதல் வெறும் அழகை மட்டும் பார்த்து வருவதில்லை உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டால் அந்த துணை தாண்டி வேறு இணை ஏதுமில்லை. சொல்லபடாத வார்த்தைக்கு மதிப்புண்டு காதலில். வெறும் நினைப்பிலேயே வாழ்கையை இனிப்பாய் வாழ்ந்துவிட முடியும். காதல் ஒவ்வரு மனிதனுக்கு உள்ளும் ஒரு தனி உலகத்தை உருவாக்கிவிடுகின்றது. அத்தகைய காதல்தான் நாயகனை செய்யாத குற்றத்திற்கு குற்றத்தை  ஒப்புக்கொள்ள வைத்தது. காதல் தியாகமும் செய்யும், கொலையும் செய்யும் என்பதால்தான் நாயகி நாயகனை காப்பாற்ற அத்தகைய செயலை காதல் செய்யவைத்தது.  

வெள்ளை தோளையும், விலையுயர்ந்த செல்போனையும், பணக்கார பையன்களையும் பார்த்து மயங்கி கடைசியில் வாழ்கையை தொலைக்கும் சராசரி குடும்பத்து பெண்களுக்கு இந்த படம் ஒரு பாடம்.

படத்தின் இறுதிக்காட்சி மிக உருக்கமானது. பொய் சொல்லி பணம் பார்க்கும் அந்த காவல் துறை அதிகாரியின் முடிவு கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் கொஞ்சமாவது இப்படத்தை பார்த்து திருந்தினால் நல்லது. இப்படத்தை கொடுத்த லிங்குசாமி அவர்களுக்கும், பாலாஜி சக்திவேல் அவர்களுக்கும், படத்தில் நடித்த நடிகர், நடிகையர்களுக்கும் மற்றும் படக்குளுவினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

திங்கள், மே 07, 2012

கலியுகத்தின் முடிவு நெருங்கிவிட்டது...


காலம் என்கின்ற சக்கரம் சுழன்றுகொண்டே  இருக்கிறது.காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அதன் கடமையை சரியாக செய்கிறது. காலம் எப்போதுமே மனிதனுக்கு ஒரு மிகச்சிறந்த குரு. காலம் மனிதனை மாற்றுகிறது, சூழ்நிலையை மாற்றுகிறது, எதுவும் நிரந்தரமல்ல என்கின்ற நிலையை உண்டாக்குகிறது. காலம் தான் ஆசான், காலம்தான் கடவுள். இந்த கால சக்கரம் நான்கு யுகங்களாக பிரிக்கப்படுகிறது சத்ய யுகம்,த்ரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். ஒவ்வரு யுகத்திலும் ஒரு யுகபுருஷன் தோன்றி உலகை காப்பதாக இந்து மதம் "விஸ்ணுவை" யுகபுருசனாக குறிப்பிடப்பட்டுள்ளது, கிறிஸ்துவ மதம் "இயேசுவை" யுகபுருசனாக குறிப்பிடப்பட்டுள்ளது, இஸ்லாமிய மதம் "நபிகள் நாயகத்தை" யுகபுருசனாக குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் புத்த மதம் " புத்தரை" யுகபுருசனாக குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
சத்ய யுகம் இதுதான் முதல் யுகம். இந்த சத்ய யுகத்தில் தீயவை அதிகம் பார்க்கமுடியாது. இந்த யுகம் முழுவதும் சத்யம் நிறைந்த அமைதி நிறைந்த யுகம். இந்த யுகத்தில் தேவர்கள் என்று சொல்லப்படும் நல்லவர்கள் மற்றும் அசுரர்கள் என்று சொல்லப்படும் தீய மனம்படைத்த கொடியவர்கள் தனித்தனியாக வாழ்ந்தனர். தேவர்கள் மற்றும் அசுரர்கள் பலம் சம அளவில் இருந்தது. தேவர்கள் மற்றும் அசுரர்கள் இடையே அப்பப்போ சண்டை வரும். ஆனால் இரு அணியினரும் சமபலம் என்பதால் இருஅணியும் தத்தமது பலத்தை உயர்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அப்போது கடலுக்குள் அமுதம் இருப்பதை அறிந்து.அந்த அமுதத்தை அருந்தினால் அமரராக வாழும் பலத்தை அந்த அமுதம் கொடுக்கும் என்று தேவர்கள் விஸ்ணு பகவானை வேண்டினர். அந்த அமுதம் பாற்கடலை கடைந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதால் அதை கடைய தேவர்கள் மட்டும் சேர்ந்து கடைந்தால் போதாது என்பதால் விஸ்ணு பகவான் அசுரர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளும்படி யோசனை கூறினார். பார்க்கடலை கடைவதன் மூலம் வரும் அமுதத்தை தேவர்கள் மற்றும் அசுரர்கள் பங்கிட்டுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. தேவர்களும் அசுரர்களும் ஐந்து தலைகொண்ட பாம்பினை கயிறாக கொண்டு பாற்கடலை ஒருபுறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் கடைய ஆரம்பித்தனர். அப்போது வெளிப்பட்ட நஞ்சு அமுதத்தில் கலந்துவிடாமல் சிவன் அந்த விசத்தை தானே பருகினார். அந்த விஷம் அவரது உடலில் கலந்துவிடாமல் பார்வதிதேவி சிவனது கழுத்தை பிடித்து விசத்தை நிறுத்தினார். அதிலிருந்து சிவனுக்கு "திருநீலகண்டர்" என்ற பெயர் வந்தது. மீண்டும் இரு அணியினரும் பாற்கடலை கடையவே அமுதம் வந்தது அதை அவசரப்பட்டு அசுரர்கள் கொஞ்சம் பருகிவிட்டார்கள் அதனால் அவர்களது பலம் உயர்ந்து தேவர்களுக்கு கொடுக்கவேண்டிய அமுதத்தை பிடுங்கிக்கொண்டார்கள். அதன்பிறகு தேவர்களை விரட்டியடிக்கபட்டார்கள். தேவர்கள் சென்று விஸ்ணு பகவானிடம் முறையிட்டார்கள் உடனே விஸ்ணு "மோகினி" அவதாரம் எடுத்து அசுரர்களை மயங்கவைத்து அமுதத்தை மீட்டுத்தந்தார். அதில் இருந்து தேவர்கள் பலம் அமுதத்தால் உயர்ந்து அசுரர்கள் பலம் குறைந்தது அதுவே சத்ய யுகமாக ஜொலித்த காலம்.
இந்த யுகத்தில் பூமியை காப்பதற்காக இறைவன் மச்சம்,கூர்மம்,வராகம், நரசிம்மம் என்கின்ற அவதாரம் எடுத்தார். அந்த யுகம் முடிவுக்கு வந்த பிறகு ஆரம்பித்த யுகம்தான் த்ரேதா யுகம்.

அடுத்த யுகம் த்ரேதா யுகத்தில் இந்த யுகத்தில் தேவர்களுக்குள் அசுரதனமும், அசுரர்களுக்குள் நல்லவர்களுமாக இருந்தனர். இந்த யுகத்தில் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் வேண்டி முதல் அடியில் பூமியை அளந்து இரண்தாம் அடியில் வானத்தை அளந்து மூன்றாம் அடியை அசுரர்களின் அரசன் மீது வைத்து. அந்த அசுரர் குளத்தில் பிறந்தாலும் கொடுப்பதில் சிறந்தவர் என்பதை நிருபித்த அதே வேளையில் தாயை கொன்ற மகனாக பரசுராமனும், மாற்றார் மனைவியை அபகரித்த இந்திரனும், மனைவியின் மீது சந்தேகம் கொண்டு சிதையில் சீதையை இறங்கவைத்த ராமனும் தனக்குள் உள்ள அசுரதனத்தை நிரூபித்தார்கள். இந்த யுகம் முடிவிற்கு வந்தது ரமாவதாரதிட்கு பிறகு. அடுத்த யுகம் த்வாபர யுகம்.
கிருஷ்ணர் அவதரித்த யுகம்தான் த்வாபர யுகம், இந்த யுகத்தில் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் ஒரே இடத்தில் வாழ்தனர். நல்லவர்களும்,தீயவர்களும் நெருங்கிய உறவினர்களாக வஞ்சம், பகை, சூது என்று அளவில்லா துயரினை அடைந்தனர். மகாபாரதத்தின் காலம் இந்த யுகத்தில்தான் ஆரம்பிக்கிறது. இந்த யுகத்தில் நல்லவர்கள் சிலநேரம் தீயவர்கலானார்கள், தீயவர்கள் சிலநேரம் நல்லவர்கலானார்கள். ஆனால் கர்ணன் போல் நல்லவனாகவும் இருக்கமுடியாமல் தீயவைகளை விட்டு வரவும் முடியாமல் பல துயரங்களை அனுபவித்ததும் இந்த யுகத்தில்தான். தர்மன் மனைவியை பணயம் வைத்து சூதாடியது, துரியோதனன் கண்முன்னே அவனது மனைவியின் இடையில் உள்ள முத்துமாலையை கர்ணன் தவறுதலாக சிதரடித்தபோது " மணிகளை எடுக்கவோ கோர்கவோ" என்று கேட்ட பண்பு த்வாபர யுகத்தின் அமைப்பு. கிருஷ்ணனின் கீதா உபதேசம், குருசேத்திர போர் கௌரவர்கள் படை கூண்டோடு அழிந்து பாண்டவர்கள் ஆட்சியில் அமர்ந்து பிறகு ஆட்சியை தங்களது தலைமுறையினருக்கு கொடுத்துவிட்டு பாண்டவர்கள் ஐவரும் காட்டிக்கு சென்றதோடு த்வாபர யுகம் முடிவிற்கு வந்தது. அடுத்த யுகம் கலியுகம்.
இதுதான் கலியுகத்தின் இன்றைய நிலைமை.கலியுகம் இந்த யுகத்தில் தீயவைகள் அதிகமாகவும் நல்லவைகள் மிகக்குரைவாகவும் இருக்கும். இந்த யுகம் செல்லச்செல்ல தீயவை மட்டுமே மிஞ்சி நிற்கும் அந்த தீயவைகளால் உலகம் அழியும். உலகத்தின் அழிவே கலியுகத்தின் முடிவாகும். இந்த கலியுகத்தில் ஒரு மனிதனுக்குள் நல்லவையும் ,தீயவையும் இரண்டற கலந்திருக்கும். இந்த கலியுகத்தில் காமம், குரோதம், லோகம், மோகம்,மதம் ,மாச்சரியம் என்கின்ற ஆறு தீய குனங்களினாலும் மனிதன் சிக்குண்டு. மாற்றான் மனைவியை அபகரித்தல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடுத்தல், பிற உயிர்களை துன்புறுத்துதல், வன்மம், ஓரின சேர்க்கை என்று எவ்வளவு கேவலமாக வாழமுடியுமோ அவ்வளவு கேவலமாக வாழ்த்து மனிதன் மடிவான். இந்த யுகத்தில் அவதரிப்பதாக கூறப்படும் " கல்கி " அவதாரம் உலகத்தின் அழிவை குறிப்பதாகும்.