கருப்பு அழகி என்று வர்ணிக்கப்பட்ட "ஏழாம் கிளியோபாட்ரா" எகிப்திய நாட்டின் பேரழகி. கிளியோபட்ராவின் வரலாற்றை பார்க்கும்போது மிக செல்வாக்கான ஒரு பேரழகி மற்றும் அரசி என்பதில் சந்தேகமில்லை ஒரு அரசியால் சரித்திர சாம்ராஜ்யத்தையே ஆட்டிப்படைக்க முடியும் என்பதன் எடுத்துக்காட்டு கிளியோபட்ரா. தனது தமயன்களையே ஆட்சி பீடத்தில் ஆட்சி செய்ய விவாகம் செய்துகொண்டார் என்று பேசப்பட்டாலும் . அந்த காலத்தில் கிளியோபட்ராவை வர்ணிக்காத கவிங்கர்களே இல்லை என்னும் அளவுக்குக் அவள் ஒரு பேரழகி. இப்போதும் சொல்வார்கள் கிளியோபட்ராவின் மூக்கு சற்று கோணலாக இருந்திருந்தால் சரித்திரமே மாறியிருக்கும் என்று. அந்த அவளது வசீகரத் தன்மை உடையவர் கிளியோபட்ரா.
"கிளியோபட்ரா" படத்தில் நடித்த எலிசபத் டைலர் கிளியோபற்றாவகவே உருமாறி இருக்கிறார். ஒரு சரித்திரத்தை மாற்றிய சரித்திர நாயகி கிளியோபட்ரா என்பது நாம் ஏற்கவேண்டிய விஷயம். கிளியோபட்ரா ஜூலியஸ் சீசரை ஆட்சிக்காக விவாகம் செய்தார் , ஜூலியஸ் சீசர் இறப்புக்கு பிறகு அன்டனியோவை விவாகம் செய்துகொண்டு மூன்று பிள்ளைகள் பெற்றார்.
சரித்திரம் பலகாலமானாலும் மிக சிலரை மட்டுமே நியாபகம் வைத்திருக்கும். ஒரு கருப்பு அழகியாக எல்லோரையும் கவர்திருக்கும் காரணம் வெறும் அழகு என்பதை தாண்டி ஒரு கம்பீரம், வசீகரம், நளினம், ஆட்சி மேல் கொண்ட மோகம் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் அது கிளியோபட்ரா போன்ற பேரழகிக்கு பொருந்தும். தனது முடிவை தானே தேடிகொண்டதாகட்டும், ஆட்சியில் பங்கேற்றதாகட்டும், ஆண்களை சொன்னபடி ஆட்டிவைப்பதாகட்டும் தனக்கென ஒரு பாணியை கொண்டவராக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பவர் ஒருநாள் இறப்பர். இறப்பவர் மறுபடியும் எங்கோ பிறப்பார், இது வாழ்வின் தொடர்கதை ஆனால் யார் ஒருவர் இருக்கும்போதும் சரித்திரம் படைத்து, இறந்த பின்பும் சரித்திரம் படைக்கிறார்களோ அவர்கள் சாவை கடந்து விட்டவர்கள். சரித்திரம் என்னும் புத்தகத்தில் தனது பெயரை அழுத்தமாக எழுதிவிட்டு உலகிடமிருந்து விடைபெற்றவர்கள். அவர்களது வாழ்கையை சரித்திரத்தை அலசி ஆராய்ந்து நாம் என்ன செய்யப்போகிறோம். அந்த சரித்திரத்தில் நாம் ஒரு நல்ல பாடம் கற்றோமா என்பதுதான் இப்போது முக்கியமாக பார்க்கவேண்டிய விஷயம். அத்தகைய வகையில் பார்க்கும்போது கிளியோபட்ரா ஒரு கருப்பு உலக அழகி என்பதோடு முடித்துகொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக