அல்பிரேட் ஹிட்ச்காக்கின் ஒரு அற்புதமான சஸ்பென்ஸ் படம் " SHADOW OF A DOUBT". தெரேச வ்ரிக்ஹ்ட் இத்த படத்தில் மிக நல்ல நடிப்பை காட்டியிருக்கிறார். ஒரு சாதாரண கதையை சஸ்பென்ஸ் நிறைந்ததாக மாறும்போது படம் நமக்கு ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஜோசப் காட்டேன் ஒரு சிறந்த வில்லத்தனத்தை நடிப்பில் நிரூபித்திருக்கிறார். உலகப்படம் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு அழகான குடும்பம் அந்த குடும்பத்தலைவியின் தம்பிதான் வில்லன் ஜோசப் காட்டன். அந்த குடும்பத்தின் மூத்த மகள்தான் தெரேச வ்ரிக்ஹ்ட். தனது தாய்மாமா வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் நம்ம ஊர் கிராமத்து கதாநாயகியைபோல் அங்கேயும் கதாநயாகி தனது தாய்மாமன் ஜோசப் கட்டனை எதிர்பார்த்து காத்திருக்கிறார். வருவது அவரது தாய்மாமா என்றாலும் அந்த தாய்மாமா மூன்று கணவனை இழந்த பணக்கார விதவை பெண்களை கொலைசெய்துவிட்டு பணத்தை அபகரித்து வந்தவர் என்று தெரியாமல் அந்த குடும்பம் மகிழ்ச்சியோடு அவரை ரயில் நிலையத்தில் வரவேற்கிறது.
நீண்ட நாள் பிரிந்திருந்த தனது தம்பியை தெரேசாவின் தாய் கண்ணீரோடு வரவேற்கிறார். அப்போது ஜோசேப் தனது அக்கா குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு தனது மச்சானுக்கும் ஒரு ரிஸ்ட் வாட்சை பரிசளிக்கிறார். இதை பார்த்த தெரேச உணர்ச்சிவசப்பட்டு உள்ளே போகிறார். அதை தொடர்ந்து ஜோசேப் தனது அக்கா மகளுக்கு தான் கொள்ளையடித்த வைர மோதிரத்தை பரிசளித்து மகிழ்விக்கிறார்.
தெரேச அந்த பரிசை ஏற்றுக்கொண்டு தனது தாய்மாமன் மீது காதல் கொள்கிறார். தெரேச தனது காதலை மறைமுகமாக சொல்கிறார். அப்போது அந்த மோதிரத்தை பார்க்கிறார். அதில் வேறு யாரோ ஒருவரது பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் பதிக்கப்படிருப்பதை பார்க்கிறார்.
அப்போதே அவருக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் அது நகை கடையின் பெயர் என்று சொல்லி சமாளிக்கிறார் வில்லன். தெரசாவின் அப்பா ஒரு வங்கி அதிகாரி, அவரும் அவர் நண்பரும் எப்போதும் கொலை பற்றி பொழுதுபோக்கிற்காக பேசுவார்கள். அப்போது ஜோசேப் செய்த கொலை பற்றி நியூஸ் பேபரில் வந்ததை பார்த்து அதை குடும்பத்தில் உள்ளவர்கள் படித்துவிடாமல் அதை கிழித்து தனது பக்கெட்டுக்குள் மறைப்பதை தெரேசா பார்த்துவிடுகிறார். அப்போதுதான் அவருக்கு தனது தாய்மாமன் மீது சந்தேகம் ஏற்படுகிறது.
ஜோஷேபை தேடி இரண்டு காவல் துறை அதிகாரி வீட்டில் உள்ளவர்களை கணக்கெடுப்பது போல் வந்து விசாரிகிறார்கள். அதில் ஒருவர் தெரசாவை தனிமையில் சந்திக்க விரும்புவதாகவும் மறுநாள் மாலை ஒரு உணவு விடுதுக்கு வரும்படி சொல்லிவிட்டு செல்கிறார்கள். அவர் ஒரு காவல் அதிகாரி என்று தெரியாமல் தெரேசா அவரை மறுநாள் சந்திகிறார் ஆப்போது அவர் தெரேசாவின் தாய்மாமா பற்றிய உண்மையை சொல்லி தான் ஒரு போலீஸ் அதிகாரி எனவும் ஒப்புக்கொள்கிறார். இதை நம்ப முடியாமல் மறுக்கும் தெரேசா அதை கண்டுபிடிக்க லைப்ரரி சென்று தனது தாய்மாமன் ஜோசேப் மறைத்த அந்த செய்தித்தாளை எடுத்து பார்ப்கிறார் அதில் அவரது தாய்மாமா செய்த கொளைபற்றியும் அந்த கொலைகாரனை விரைவில் பிடித்து விடுவோம் என்று காவல்துறை அறிவித்ததை பற்றியும் படித்து அதிர்ச்சி அடையும் தெரேசா அந்த நிமிஷம் முதல் தனது தாய்மாமனை வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார். மறுநாள் அந்த காவல்துறை அதிகாரியை சந்தித்து தான் தனது தாய்மாமன் பற்றிய விஷயங்களை ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டு அந்த அதிர்ச்சியோடு வீடு திரும்புவார்.
தான் விரும்பிய தனது தாய்மாமன் நல்லவர் இல்லை என்று தெரிந்து வருத்தப்படும் தெரேசா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அழுவதும் பிறகு தனது தாய்மாமனை வெறுப்பது ஜோஷேபிட்கு சந்தேகத்தை ஏற்படுகிறது. தனது தாய் தனது தாய்மாமன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தனது தாய்மாமனை வீட்டை விட்டு விரைவில் போக சொல்லி வற்புறுத்துகிறார். தன்னை பற்றி தெரேசா முழுவதும் அறிந்துகொன்டத்தை அறிந்து தெரேசாவை கொலை செய்ய முயற்சிக்கிறார் ஜோசேப். அதில் இருந்து மீண்ட தெரேசா அந்த காவல்துறை அதிகாரியை காதலிக்கிறார். இது மேலும் வெறுப்பை ஜோசெபிட்கு ஏற்படுத்துகிறது. மீண்டும் ஒரு கொலைமுயற்சி அதிலும் தெரேசா தப்பிக்கிறார். இறுதியாக தான் ஊரை விட்டு செல்வதாக குடும்பத்திடம் அறிவிக்கிறார் ஜோசேப் இதை கேட்டு உள்ளுர மகிழ்கிறார் தெரேசா.
தனது அக்கா குடும்பதிடம் விடைபெற்றுக்கொண்டு ஜோசெப் ரயில் வண்டியில் ஏறுகிறார் அப்போது வழியனுப்ப வந்த தெரசாவை அழைத்து பேச வேண்டும் என்று சொல்லி அவரை உள்ளே அலைகிறார். யாரும் இல்லாத அந்த ரயில் பெட்டிக்குள் தனது ரகசியம் அறிந்த தெரசாவை ரயில் கிளம்பியதும் போகவிடாமல் தடுத்து அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலைசெய்ய முயற்சிக்கிறார் ஜோசேப். அப்போது சுதாகரித்துக்கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தெரேசா தனது தாய்மாமன் ஜோஷேப்பை ரயிலில் இருந்து தள்ளி விடுகிறார். படம் அதோடு முடிகிறது. ஒரு சஸ்பென்ஸ் கதையை சுவாரசியம் குறையாமல் தந்த அல்பிரேட் ஹிட்ச்காக்கின் இயக்கம் பாராட்டுக்குரியது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக