நாடிட்கும் நாடு விடுதலைக்கும் பாடுபட்ட பல நல்ல தலைவர்கள் விட்டுச்சென்ற இந்தியாவை எப்போது அரசியல் சானக்கியர்களிடம் ஒப்படைதோமோ அப்போது தொடங்கியது "தடியெடுத்தவன் தண்டல்காரன்"என்ற எங்கள் ஊர் பழமொழிக்கு சான்று. ஒரு நாடு இப்படி இருக்கவேண்டும் என்ற ஒட்டுமொத்த எண்ணங்களும், எதிர்பார்புக்களுமே ஜப்பான் என்னும் ஒரு சிறிய நாட்டை பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தியது. நாடு வளம்பெற எடுக்கும் எல்லா ஏற்பாடுமே வரவேற்கத்தக்கது. ஒரு நாடு ஏழைகளை தரம் உயர்த்த நினைத்தால் அந்த நாடு ஏழைகள் இல்லாத நாடாக மாற்ற முயற்சிகள் எடுக்கவேண்டும், அதைவிடுத்து ஏழைகளை ஏழையாகவே வைத்து அவர்களிடம் தேர்தல் வந்தால் மட்டும் கட்டிப்பிடித்து கைகுலுக்கி உங்களுக்கு அதை செய்வேன், இதை செய்வேன் என்று வாய் கிழிய சவுடால்விடுத்து. மக்களை அந்த பாடுபடுத்தும், அரசியளும், அரசியல்வாதிகளும் என்ன கிழித்துவிட்டார்கள் மக்கள் நலனுக்காக என்று பாரத்தால் நமக்குதான் இதயம் நொறுங்குகிறது.
ஒரு பட்ஜெட் மேடையை கிட்டதட்ட பாக்சிங் மேடையாக மாற்றிய பெருமை மம்தா அவர்களையே சாரும். தினேஷ் திருவேதி அவர்களின் ரயில்வே பட்ஜெட் தன்னை ஆலோசிக்காமல் எடுத்த முடிவு என்று தினேஷ் திருவேதியை ராஜினாமா செய்யவைததோடு மட்டுமல்லாமல் மதிய அரசை பயமுறுத்தி இருக்கிறார் என்றால் நாட்டுக்காக அரசியலா? இல்லை அரசியல்வாதிகளுக்காக அரசியாலா? என்று சற்று நிதானமாக யோசித்தால் உலகில் எங்குமே நடக்காத சாதனையை இந்தியா நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக உணரலாம்.
எப்படி சச்சின் அவர்களின் சாதனையை யாராலும் செய்ய இயலாதோ அதேபோல் மம்தா அவர்களின் இந்த சாதனையை யாராலும் நிகழ்த்த முடியாது என்றே தோன்றுகிறது. ஏதோ வீட்டுக் கணக்கை எனக்கு தெரியாமல் செய்துவிட்டதை திரும்பப்பெறுவது போல நாட்டுக்கணக்கை திரும்ப பெற்றுவிட்டார். தனக்கு அடிபணியாத யாரையும் தான் விட்டுவைக்க போவதில்லை என்பதை எவ்வளவு வெளிப்பாடாக செய்கிறார் இந்த அம்மையார். நமது நாட்டில் நிகழும் அரசியல் கோமாளித்தனத்தை பாரத்தால் நம்மீது படையெடுத்த ஆப்கானிஸ்தான் மன்னர்களை மிஞ்சிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் தான் நினைத்ததை சாதித்துவிட்ட சச்சின் அவர்களுக்கும், மம்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வோம் வேறு என்ன சொல்லமுடியும் இப்போது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக