வெள்ளி, டிசம்பர் 26, 2014

சிரிப்பு...




 சிரிப்பு உணர்வின் அடையாளம் மட்டுமல்ல உள்ளத்தின் அடையாளம்.சிரிக்க மறந்த மனிதன் பலர் அழுகைக்கு காரணமாகிறான். சிரிப்பு மனிதர்க்கு மட்டுமே அழகு சேர்க்கும் மாய மந்திரம். சிரிப்பு ஒரு மகிழ்ச்சியின் அடையாளம். சிரிப்பு தன்னை மறந்த தியானம். சிரிப்பு மனதை சிறகடித்து பறக்கவைக்கும் ஒரு பகைவனையும் நண்பனாக்கும் ஒரு தந்திரம். சிரிப்புக்கு மயங்காத மனங்கள் உண்டா. சிரிக்க மறந்தவன் வாழ்கையின் சுகத்தை இழக்கிறான். சிரிக்க தெரிந்தவன் மனதின் அழுக்கை துடைக்கிறான்.சிரிப்பு பற்றி எனக்கு தோன்றிய சில வரிக்க கவிதைகள் இதோ உங்கள் மனதிற்க்கு.

      
                            சிரிப்பு...
                            உணர்வின் பிறப்பு
                            மனச்சுமையின்
                            மறைப்பு!

                            நீ சிரித்தால்...
                            உலகம் உன்னை
                            உணர்த்து பார்க்கும்
                             சிரிக்க மறந்தால்  அதே
                             உலகம் உன்னை
                             உலர்த்திப்பார்க்கும்!

                            சிரிக்க...
                            வயது வேண்டாம்
                             மனது வேண்டும்!

                             சிரிக்க...
                              சந்தர்ப்பம் வேண்டாம்
                               ஒரு
                              சம்பாசனை போதும்!

                            
                             நீ...
                             சிரிக்க நினைத்தால்
                             உலகம் உன்னைப்பார்த்து
                             சிரிக்கும் முன்பே சிரித்துவிடு!

                            நீ சிரிக்க நினைத்தால்...
                            அதை இப்போதேனும்
                            தள்ளிப்போடாமல் சிரித்துவிடு
                            இல்லையேல்
                            காலனும் உன்னைப்பார்த்து
                             சிரித்துவிடுவான்!

                              நாளை...
                              நாள்காட்டியிடம் விட்டுவிட்டு
                              இன்று இப்போது சிரிக்கப்பழகு!

                            
                             கவலைகள்...
                              உன்னை
                             கட்டிப்போட காத்திருக்கும்
                             கடமை உன்னை
                              முட்டி முட்டி உன்
                              சிரிப்பை தள்ளிப்போட
                              இடம் பார்த்து நிற்கும்!

                           
                             துன்பம் வரும்...
                              வேளையில்
                              சிரிக்கச்  சொன்னார் வள்ளுவர்
                              அப்படியிருக்க
                              துன்பம் வரும் முன்பே
                              சிரிப்பை சிறையில்
                              வைக்க வேண்டம் என்றே
                                சிரிக்க சொல்கிறேன்!
 
                                  சிரி...
                                  அதனால் துயர்
                                  போகும் என்பதை
                                  அறி!
                             

                                                 - பா. மோகன் குமார்
                                
                          
                              
                             
                           

                           

                             

                            


திங்கள், அக்டோபர் 06, 2014

இன்று புதிதாய் பிறந்தோம்...


 
   

             ஒவ்வரு நாளும் நமக்கு ஒவ்வரு புதிய யுகம்தான். இந்த நிமிடம் போனால் அதே போல் வேறு நிமிடம் கண்டிப்பாய் கிடைக்காது. வாழ்க்கை என்பது வரப்போகும் நிமிடம் மட்டுமல்ல கடந்துபோன, கடந்து போகும் நிமிடம் சேர்ந்ததுதான். ஒன்றுமட்டும் நிச்சயம் காலம் கடந்தாலும் நாம் ஆற்றிய கடமை நம்மை நோக்கி வந்துகொண்டுதான் இருக்கும். எதையும் நம்மால் தவிர்க்கவும் முடியாது, தவிர்க்க நினைத்தாலும் நம்மால் தடுக்க முடியாது. நாம் எதை பெறவேண்டும் என்று இருக்கிறதோ அதை கண்டிப்பாய் அடைவோம். அது அரசனானாலும் சரி ஆண்டியானாலும் சரி காலம் ஒன்றுதான். பிறப்பது என்பது கண்டிப்பாய் இறக்க துணிதவனால் மட்டுமே மீண்டும் பிறக்க முடியும். ஒவ்வருநாளும் பிறப்பவன் "தான்" என்கின்ற ஆணவத்தைவிட்டு எல்லாமாக இருக்க விரும்புகிறான்.

 



பிறப்பது என்பது ஒவ்வரு நிமிடமுமாக நம்மை நாம் தயார்படுத்திக்கொள்வது. பயணத்தின் பாதைகள் பழுதானாலும் போகும் பாதை சரியான இலக்கினை அடைய வேண்டுமே தவிர பயணத்தை முடிதுக்கொல்வதல்ல. அழகு என்பது நாம் ரசிப்பதில் இருக்கிறதே தவிர ரசனை ஒருவருக்கு ஒருவர்  வேறுபட்டு இருக்கும் ஆனால் ரசிக்கும் மனமானது அனைவருக்கும் பொதுவாகவே படைக்கப்பட்டிருக்கிறது. உதிர்வது மீண்டும் பிறக்கத்தானே தவிர முடிந்து போவதற்கல்ல . மனம் மகிழ்ந்து ஒரு நிமிடம் வாழ்ந்தால்கூட அந்த ஒரு நிமிட மகிழ்ச்சியே ஒரு முழு வாழ்க்கைக்கான அடையாளமாகும். வாழ்தல் என்பது நாள் கணக்காக தவறாக புரிந்திருக்கிறோம். வாழ்தல் என்பது நாம் நம்முடைய வாழ்க்கையின் முழுமையான, தன்மையான,அமைதியான, மகிழ்ச்சியான தருணத்தை மட்டுமே குறிப்பதாகும். அத்தகைய வாழ்கையை வாழும்போது ஒவ்வரு நிமிடமும் ரசித்து புதிதாக பார்த்தோமேயானால் அதுதான் நாம் புதிதாய் பிறந்ததற்கான  அடையாளமாகும்.

வெள்ளி, செப்டம்பர் 26, 2014

இறந்தகாலம்... நிகழ்காலம்... எதிர்காலம்...

 
காலத்திற்கு என்றுமே இறந்தகாலம் என்ற ஒன்றோ வருங்காலம் என்ற ஒன்றோ கிடையாது.காலத்தின் கடமை கடப்பது. அதன் கடமையை சரியாக செய்கிறது மனிதராகிய நமக்குதான் காலம் காலமாய் இந்த மூன்று காலத்தை பற்றின கவலை கண் முன்னே தோன்றுகிறது. கவலை படமட்டுமே தெரியும். மனிதருடைய தலையாய கடமையாக ஒன்று மற்றவரை கவலையடைய செய்வது அல்லது நாம் கவலைப்படுவது. ஒருவன் புலி இருக்கும் சரணாலயத்தில் ஆபத்து என்று தெரிந்தும் விழுந்து புலிக்கு இரையாவதை பார்த்து பரிதாபப்படும் நாம் உண்மையில் அந்த பரிதாபம் இறந்தவனுக்காகவா அல்லது அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன நிலைமை என்கின்ற நமது உள்ளே உள்ள   பயத்தினாலா. எல்லாம் காலம் அறியும் காலனும் அறிவான். இப்படியாக கவலைப்படுவது அல்லது கவலைபப்பட வைப்பதட்கும்தான் இந்த மூன்று காலத்தையும் நாம்  உபயோக்கிரோமே தவிர வேறு எந்த காரணத்திற்காகவும்  இல்லையென்றால் ஆசை அதற்காக நாம் இந்த மூன்று காலத்தை அப்பப்போ கடக்கிறோம்.


   முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், நாளை எப்படி இருப்போம் என்று கணக்கு பார்க்கவும் மற்றவரோடு நம்மை ஒப்பிடவும் காலத்தை நாம் பார்க்கிறோம். காலம் கடக்கும்போது ஒரு சிலர் மட்டுமே காலத்தோடு பயணிக்கிறார்கள் மற்றவர்கள் தங்களது பழைய பாதைகளையும், பெருமைகளையும் பேசிக்கொண்டே அடையவேண்டிய வழியை விட்டு பின்னோக்கியே செல்கிறார்கள்.சிலர் பயணத்தில் கவனமில்லாமல் கற்பனையான பயத்தை மனதில் போட்டுக்கொண்டு பாதை இருந்தும் பயனற்ற பயணத்தைதான் தொடர்கிறார்கள் அவர்கள் எதிர்பார்ப்பது போல் பாதையும் இல்லை பயணமும் இல்லை. இது தெரியும்போது பயணம் முடிந்துவிடுகிறது.


காலம் நம் கையில் இல்லம் நம்மிடம் இருப்பது காலத்தை பயனுள்ள வகையில் காலத்தோடு பிரயாணிப்பது மட்டும்தான். வரும் துன்பங்கள் யாவும் நிகழ்காலத்து துன்பங்களாக இருக்கட்டும். வரும் இன்பங்கள் யாவும் இப்போதே பெற்றுக்கொள்வோம் அதை இறந்த காலத்திற்கு கொண்டுசெல்வது கெட்டுப்போன உணவை சமைத்து சாபிடுவது போலாகும் அதனால் ஒரு நல்ல ருசியை தரமுடியாது அதனால் தரக்கூடியது நோய்களை மட்டுமே.எதிர்காலத்து கவலை, இல்லாத ஒன்றை இருப்பதாய்  கற்பனை செய்ய மட்டுமே பயன்படும் அதனால் ஒருபோது நிகழ்காலத்தின் சுவையினை கூட்டிவிட முடியாது. நாம் எப்போது இறப்போம் என்கின்ற எதிர்காலம் தெரிந்துவிட்டால் அதனால் வரும் துன்பம் எதிர்காலத்தில் அல்ல நிகழ்காலதில்தான்.அதனால்தான் எதிர்காலத்தை மனிதனுக்கு  தெரியாமலேயே படைத்துவிட்டான்  ஆண்டவன். மூடி வைத்த பொருள் கெட்டுப்போவதும்மில்லை, ருசியும் குறைவதில்லை. மறைக்கப்படும்போதுதான் அதை அறிய சுவாரசியம் கூடுகிரது. வெளிப்படையாய் உள்ள எதுவும் சுவாரசியத்தை தருவதில்லை. எதிர்காலமும் அப்படித்தான் அதற்கு உரியகாலம் வரும்போதுதான் அதற்கும் மதிப்பு நமக்கும்,நமக்கும்  இருக்கும் பிணைப்பு. வாருங்கள் கொஞ்சம் நிகழ்காலத்தை வாழ்த்துதான் பார்க்கலாம்.

திங்கள், செப்டம்பர் 22, 2014

வேலைக்கு பின்னால் உள்ள வாழ்க்கை


பலர் வேலைதான் தங்கள் வாழ்க்கை வேலை செய்யத்தான் இந்த உலகத்தில் அவதரித்ததாக அதுதான் தங்கள் வாழ்க்கையாக நினைத்து வாழ மறந்து அல்லது  வாழ   மறுத்து, வாழ்க்கை துரத்து யாரோ ஒரு முதலாளிக்காக அல்லது தன் தொழில் லாபம் என்கின்ற ஒரு இலக்கிற்காக தன் வாழ்கையின் சின்ன சின்ன சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்து வேலை செய்பவர்கள் பலர் . அவர்களை குற்றம் சொல்ல அல்ல இந்த எழுத்துக்கள். அவர்களுக்கு புத்திசொல்லவும் நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை. ஆனால் என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள எனக்கு கண்டிப்பாய் வாய்ப்பு உண்டு.


வேலைக்கு நடுவே உள்ள வாழ்க்கை பற்றியது இந்த எழுத்துக்கள். உண்மை சில நேரங்களில் வலிக்கத்தான் செய்யும் ஆனால் அதை மறுக்கமுடியாது. 

ஒரு சின்ன கதை 
ஒரு பெற்றோர் அவர்களுக்கு ஒரே குழந்தை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். தினமும் தன்னுடன் விளையாடகூட  தங்கள் பெற்றோர் இல்லை என்கின்ற ஏக்கம் குழந்தைக்கு. அப்போது ஒரு நாள் குழந்தை விளையாட்டாக தன் அம்மாவின் கோப்பை கிழித்து விட்டது அதை பார்த்து குழந்தையென்றும் பாராமல் கோபத்தில்  சூடு வைத்துவிட்டார் அந்த குழந்தையின் தாய்.  அந்த குழந்தை துடிப்பதை பார்த்து மனம் தாங்காமல் தாயும் அழுதுவிட்டார். குழந்தையிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு அந்த குழந்தையிடம் என்னவேண்டும் என்று கேட்டார் அதற்கு அந்த குழந்தை ஒரு மணி நேரம் உங்களது சம்பளம் எவ்வளவு என்று தன் மழலை மொழியில் கேட்டது. ஏதோ விளையாட்டாக கேட்பதாக நினைத்தி அம்மாவும் தனது ஒரு மணி நேரத்தின் சம்பளம் சொன்னார் . உடனே அந்த குழந்தை ஓடி சென்று தான் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த காசை எடுத்து  அம்மாவிடம் கொடுத்து தன்னோடு ஒரு மணிநேரம் செலவிட கூரியது அப்போதுதான் அந்த தாய்க்கு தான் எவ்வளவு பெரிய தவறு  செய்தோம் என்று புரிந்தது உடனே சென்று அந்த குழந்தையை அணைத்து முத்தமிட்டதோடு உடனே சென்று தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தையோடு விளையாட ஆரம்பித்தார்.

இதற்காக அம்மாக்கள் அனைவரும் வேலையை ராஜினாமா செய்யவேண்டும் என்பது என் கருத்தல்ல. வேலையை தாண்டின வாழ்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். தினமும் காலை பூக்கும் பூக்களை எத்தனை பேரால் அலுவலகம் செல்லுமோதும் ரசிக்க முடிகிறது என்பதுதான் என் கேள்வி.


ஒரு கோடி பணத்துக்கு உள்ள மதிப்பை காட்டிலும் உங்கள் சிரிப்பு மதிப்பு மிக்கது. நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுத்தால் திரும்ப வரும் என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்துப் பாருங்கள் அது உங்களுக்கு திரும்ப வந்து சேரும்.அன்புதான் அகிலத்தை இயக்கும் சக்தி. அதுவே நிலையான புத்தி.வேலைக்கு பின்னால் உள்ள உங்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் இல்லை என்றால் பிள்ளை வளரும் போது உங்களை ஒதுக்கி விடுவார்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும் ஆனால் உண்மை மாறாது.

வெள்ளி, செப்டம்பர் 19, 2014

பயணங்கள்




இன்று என்னுடைய தலைப்பு பயணங்களை பற்றியது பயணம் இல்லாமல் வாழ்க்கை ஒருபோது சுவாரசியம் அடைவதில்லை. பயணம்தான் புதிய தேடலின் துவக்கம். ஒரு பொருளை எடுக்ககூட நாம் ஒரு அடி பயணப்பட்டால்தான் அந்த பொருள் கைவந்து சேரும். பயணம் என்பதற்கு முடிவே இல்லை இறுதி மூச்சு இருக்கும் வரை பயணங்கள் முடிவதில்லை. அப்படி மூச்சு அடங்கியபிறகும் இறுதிப்பயணம் இருக்கும். பயனில்லாத பயணகள் இருக்கலாம் ஆனால் பயணமில்லாமல் ஒருபோதும் நாம் பயன் பெறமுடியாது.

ஒவ்வரு முறை பிரயாணிக்கும் போதும் ஒரு புதிய உலகம் நமக்காக விரிந்திருக்கும் . பிரயாணம் நம்மை அறியாமல் நமக்கு பல வழிமுறைகளை பல அனுபவங்களை தரும். இதுதான் நாம் பெறுவோம் என்று யாராலும் கூரிவிட முடியாது. காரணம் நாம் சந்தோசம் என்று நினைத்து ஆரம்பிக்கும் பயணங்கள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தலாம். நாம் இனிமையாக தொடங்கிய பயணம் இறுதி பயணமாகவும் மாறலாம். பயணம் ஒன்றுதான் அனால் அதன் தாத்பரியம் பல. இருந்தும் பயணம் என்றுமே ஒரு நல்ல அனுபவம். காலம் கடந்து நமது பயணத்தின் புகைப்படம் பார்த்து அக்கால நினைவுகள் அந்த பயணம் தந்த அனுபவங்கள் நினைத்து மெய் சிலிர்கும்பொது அந்த  பயணம் நம் வாழ்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது.

இப்போது  கண்ணதாசான் வைர வரிகள் நியாபகம் வருகிறது

" எங்கே வாழ்க்கை தொடங்கும் அது  எங்கே எவ்விதம் 
முடியும் - இதுதான் 
பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும்  பயணம் முடிந்துவிடும்  மாறுவதை புரிந்து கொண்டால் பயணம் தொடங்கிவிடும்"





 பயணம் ஒரு குறிஈடு எப்போது யாருக்கு என்ன அனுபவம்  தரும் என்பது பயணத்தின் முடிவில்தான் தெரியவரும். பயணம் ஒரு தொடர்கதை முடிவில்லா பயணம். பயணத்தை அது தரும் அனுபவத்தை, அது தரும்  ஆனந்ததை, அது தரும் துன்பத்தை, அது தரும் நெருக்கடியை, அது தரும் அசதியை, அது தரும் புதிய மனிதர்களை,அது தரும் விரயத்தை உணர்ந்து ரசித்து பயணிப்பவர்களால் என்றுமே பயணத்தை வெறுக்க முடியாது.நீங்களும் பயணித்துப் பாருங்கள் புதிய பரவசத்தோடு,வெறுப்பற்று  பயணிக்கும் பயணத்தின் புனிதம் வந்து சேரும் ஒரு புதிய அனுபவமாய். பயணங்கள் முடிவதில்லை மகிழ்ச்சியோடு பயணித்தால்.

வெள்ளி, செப்டம்பர் 12, 2014

மகாபாரதம்

 


           மகாபாரதம் சிறு வயது முதலே தூர்தர்சனில் வெளியிடப்பட்ட போது பார்த்து ரசித்து அதை CD  வடிவில் பெற்று மீண்டும் ஒரு முறை பார்த்து இது போல் மீண்டும் யாராலும் மகாபாரத்தை எடுக்கமுடியாது, நடிக்கமுடியாது என்று நினைத்ததுண்டு. ஆனால் அதை பொய்யாக்கும் விதத்தில் தமிழில் விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. மகாபாரத்தின் உண்மை கரு மாறாமல் தற்கால தொழில்நுட்ப வடிவில் அழகான நடிப்பில் என்னை மெய் சிலிர்கவைத்தது என்றால் அது மிகையல்ல. என்றுமே எனக்கு பிடித்தது  இந்த மகாபாரதம் தான். யார் நடிப்பை பாராட்டுவது என்றே புரியாத வகையில் யாவரும் போட்டி போட்டு நடிப்பது மயில் தோகை கொண்டு  மனதை வருடிக்கொடுக்கிறது.

  
உலகில் இதுவரை எத்தனையோ கதைகள் சொல்லப்பட்டாலும் அது மகாபாரதம் போல் உண்மையை பொட்டில் அடித்தது போல் கூரியதில்லை.உலகில் எந்த ஒரு உபதேசமும் கீதையை போல் உணர்தியதில்லை. காலத்தின் போக்கை, மனிதனின் ஆணவத்தை அதற்கான வீழ்ச்சியை, அன்பின் தத்துவத்தை, ஞானத்தின் தோற்றத்தை யாரும் பரமாத்மாவை போல் உணர்த்தியதும் இல்லை. அப்படி உணர்த்தியிருந்தால் அது பரமாத்மாவை தவிர யாருமில்லை. ஒருவனுக்கு பிறப்பு நிச்சயம் அதுபோல் இறப்பு  நிச்சயம் அதை அடையும் வரை மனிதன் பெரும் இன்ப துன்பங்கள் அனைத்தும்  நிச்சயம். இப்படி நிச்சயிக்கப்பட்ட விசையத்தை நாம் நிச்சயமாக உணர்த்தும் இல்லை,உணர முயர்ச்சிப்பதும் இல்லை.

ஒருவரது பாவ புண்ணியங்கள் அவனது செயல் வடிவிலானது அதை "கர்மம்" என்று அழைக்கப்படுகிறது. எந்த செயல் செய்தாலும் அது இறைவனை அடைவதாக அமையுமானால் அதுவே மோட்சத்தின்  திறவுகோல்  ஆகும். உண்மை யாதெனில் யாரும் அந்த உண்மையை உணர்வதில்லை. ஆணவம் கொண்டு அழிவை தேடும் ஆன்மா இறுதில் மறுபடியும் பிறக்கிறது. பிறப்பும் இறப்புமாக தொடர்கதையாக தொடரும் பிறப்பு இறைவனின் திருவடியை பற்றுதலால் மோட்ச்சம் பெரும் என்பதே உண்மையாகும்.
ஒருவம் பாவம் அதிகம் புரிய மீண்டும் பிறந்து அந்த பாவத்தின் பலனை அனுபவிக்கிறான்.அவ்வாறே புண்ணியம் செய்தவனும் அதற்கான நன்மையை பெற மீண்டும் பிறக்கிறான். ஆகா பலனில் பயனில்ல என்று உணர்தவனால் மட்டுமே பிறப்பறுக்கிறான்.
பலர் கர்ணனை போல் உண்மை அறிந்தும் தவறான சேர்க்கையால்அவரவர் தன்மையினை காயப்பபடுத்தி  விடுகிறார்கள். காலத்தின் கை எப்போது ஓங்கியே  இருக்கும் அதை மனிதன் மாற்ற நினைத்தால் மனிதன் மடிந்து போவானே தவிர காலம் ஒருபோது தோல்வியுறாது. அநியாயம் என்கிற ஒன்று நியாயத்தினை ஆக்கிரமிக்கும் பொது நியாயம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதே மகாபாரதம் உணர்த்தும் கருத்து.

நல்லவன் அழிந்தாலும்அவனது நியாயத்தால் அழிவற்ற கீர்த்தியினை பெறுகிறான். ஆனால் அநியாயதல் வாழ்பவன் வீல்தவனாகவே கருதப்படுகிறான்.

எது நியாயம்? எது அநியாயம்?  என்பது யாவரும் அறிவார் அதை வழிமுறை படுத்தும் விதம்தான் வாழ்கையின் அடிப்படை ஆதாரம். செயல் ஒன்றே மனிதனை வேற்றுமை படுத்துகிறது. மற்றபடி பிறப்போ அவனது வளர்ப்போ இரண்டாம் பச்சம்தான்.
 வெற்றி என்பது புஜங்கள் ஒன்று சேர்வதால் அல்ல மனங்கள் ஒன்று  சேர்வதாகும். கால சக்கரம் பல கடந்தாலும் உண்மை ஒன்றுதான் தர்மம் வெல்லும் மகாபாரதம் உணர்த்துவதும் அதுவே ஆகும்.