பலர் வேலைதான் தங்கள் வாழ்க்கை வேலை செய்யத்தான் இந்த உலகத்தில் அவதரித்ததாக அதுதான் தங்கள் வாழ்க்கையாக நினைத்து வாழ மறந்து அல்லது வாழ மறுத்து, வாழ்க்கை துரத்து யாரோ ஒரு முதலாளிக்காக அல்லது தன் தொழில் லாபம் என்கின்ற ஒரு இலக்கிற்காக தன் வாழ்கையின் சின்ன சின்ன சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்து வேலை செய்பவர்கள் பலர் . அவர்களை குற்றம் சொல்ல அல்ல இந்த எழுத்துக்கள். அவர்களுக்கு புத்திசொல்லவும் நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை. ஆனால் என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள எனக்கு கண்டிப்பாய் வாய்ப்பு உண்டு.
வேலைக்கு நடுவே உள்ள வாழ்க்கை பற்றியது இந்த எழுத்துக்கள். உண்மை சில நேரங்களில் வலிக்கத்தான் செய்யும் ஆனால் அதை மறுக்கமுடியாது.
ஒரு சின்ன கதை
ஒரு பெற்றோர் அவர்களுக்கு ஒரே குழந்தை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். தினமும் தன்னுடன் விளையாடகூட தங்கள் பெற்றோர் இல்லை என்கின்ற ஏக்கம் குழந்தைக்கு. அப்போது ஒரு நாள் குழந்தை விளையாட்டாக தன் அம்மாவின் கோப்பை கிழித்து விட்டது அதை பார்த்து குழந்தையென்றும் பாராமல் கோபத்தில் சூடு வைத்துவிட்டார் அந்த குழந்தையின் தாய். அந்த குழந்தை துடிப்பதை பார்த்து மனம் தாங்காமல் தாயும் அழுதுவிட்டார். குழந்தையிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு அந்த குழந்தையிடம் என்னவேண்டும் என்று கேட்டார் அதற்கு அந்த குழந்தை ஒரு மணி நேரம் உங்களது சம்பளம் எவ்வளவு என்று தன் மழலை மொழியில் கேட்டது. ஏதோ விளையாட்டாக கேட்பதாக நினைத்தி அம்மாவும் தனது ஒரு மணி நேரத்தின் சம்பளம் சொன்னார் . உடனே அந்த குழந்தை ஓடி சென்று தான் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த காசை எடுத்து அம்மாவிடம் கொடுத்து தன்னோடு ஒரு மணிநேரம் செலவிட கூரியது அப்போதுதான் அந்த தாய்க்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்தோம் என்று புரிந்தது உடனே சென்று அந்த குழந்தையை அணைத்து முத்தமிட்டதோடு உடனே சென்று தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தையோடு விளையாட ஆரம்பித்தார்.

இதற்காக அம்மாக்கள் அனைவரும் வேலையை ராஜினாமா செய்யவேண்டும் என்பது என் கருத்தல்ல. வேலையை தாண்டின வாழ்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். தினமும் காலை பூக்கும் பூக்களை எத்தனை பேரால் அலுவலகம் செல்லுமோதும் ரசிக்க முடிகிறது என்பதுதான் என் கேள்வி.
ஒரு கோடி பணத்துக்கு உள்ள மதிப்பை காட்டிலும் உங்கள் சிரிப்பு மதிப்பு மிக்கது. நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுத்தால் திரும்ப வரும் என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்துப் பாருங்கள் அது உங்களுக்கு திரும்ப வந்து சேரும்.அன்புதான் அகிலத்தை இயக்கும் சக்தி. அதுவே நிலையான புத்தி.வேலைக்கு பின்னால் உள்ள உங்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் இல்லை என்றால் பிள்ளை வளரும் போது உங்களை ஒதுக்கி விடுவார்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும் ஆனால் உண்மை மாறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக