வியாழன், ஜனவரி 22, 2015

புகழின் போதையில் புத்தி கெட்ட மனிதர்கள்...







புகழின்  போதையில் "தான்" என்கின்ற அகங்காரத்தில் புத்திகெட்ட மனிதன் இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தின் தான் மட்டுமே ராஜா என்கின்ற ஆணவத்தில் ஒவ்வரு உயிரையும் தனக்கு அடிமையாய் எண்ணுகின்ற ஒரு மதிகெட்ட மனம் வருங்காலத்துக்கு ஒரு பாடம்.எப்போது ஆணவம் நம்மை ஆட்கொல்கிறதோ அப்போது நம்மிடம் இருக்கும் நல்லவை அழிந்து, செயலிழந்து போகிறது. பக்குவம் நம்மைவிட்டு நகர்த்துவிடுகிறது. புகழ் என்பதே ஒரு போதை அந்த போதையோடு சேர்ந்த அதிகாரம், அந்த அதிகாரத்தோடு சேர்ந்த செல்வாக்கு எப்போது ஒருவன் இவற்றை ருசிகண்டு விடுகிறானோ அப்போது அவன் நல்லவை, தீயவைகளை தரம் பிரிக்கும் தகுதியை இழக்கிறான். உலகத்தில் அனைவருக்கும் புகழ்,அதிகாரம் மற்றும் செல்வாக்கு தேவைப்படுகிறது.புகழ் என்னும் போதையில் இருப்பவன் குணத்தை இழக்கிறான். அதிகாரம் என்னும் போதையில் இருப்பவன் நல்ல ஒழுக்கத்தை இழக்கிறான். ஆடம்பரம் என்னும் போதையில் இருப்பவன் நல்லவை அனைத்தையும் இழக்கிறான். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று கிடைக்கும். நாம் தீயதை இழக்க நினைத்தால் நல்லதை பெற முடியும். நல்லதை இழக்க நினைத்தால் தீயதைதான் நம்மால் பெற முடியும். ஹிட்லர் ஒரு ஜெர்மானிய சாம்ராஜியதையே உலகத்தின் ஆளுமையாக ஆக்க நினைத்து தனக்கு பிடிக்காத யூத இனத்தையே கொன்று குவித்தார். அந்த யூத இனம் அழியவேண்டும் என்று நினைத்தார் ஹிட்லர். அந்த யூத இனத்தில் பிறந்தவர்தான் சிக்மண்ட் ப்ராய்ட் என்னும் மேதை. ஹிட்லரால் உருவாகப்பட்ட நாசிசமும் அழிந்தது ஹிட்லரும் அழிந்தார். ஆனால் ஹிட்லர் செய்த கொடுமைகள் ஹிட்லரின் மோசமான வரலாறு அழியவில்லை.

ஒவ்வரு மனிதர்க்கும் இப்படியான ஒரு அதிகாரமோ, புகழோ,பண பலமோ கிடைக்கும் என்று கூரமுடியாது.அப்படி அமையும்போது அது தனக்கான ஒரு அங்கீகாரம் மற்றும் அடையாளமாக நினைக்காமல்  அது தனக்கு மட்டுமே உரிய சொத்தாக நினைத்து  அதற்கு ஏற்ப பல பாவங்களை செய்து யாரும் மன்னிக்க முடியாத அளவில் பிறர் வாட பல செயல்கள் செய்து.நரை கூடும் முன்பே பலர் உயிர் போக காரணமாய் இருக்கும் மதிகெட்ட மனிதரின் அழுகையும்  சாபமே. தான் மட்டுமே வாழ தகுதியானவன் என்கின்ற ஆணவம், அதிகாரம் ஆகியவை எப்போதும் ஒரு நல்ல தலைவனை உருவாக்காது. அதிகாரம் எப்போதும் நம் சொத்தாக முடியாது. அதற்கு நாம் எஜமானர் அல்ல. நாம் எஜமானர் என்று நினைக்கும்போதே நாம் நம்முடைய ஆணவத்தின் அடையாலமாகிவிடுகிறோம். அடிமையாவதும் தவறு அடிமைப்படுத்துவதும் தவறு. நம்மோடு உலகம் முடிவதில்லை நம்மை தாண்டிய உலகம் நாம் செய்யும் ஒவ்வரு செயலுக்கான கர்மவினைகளை நமக்கு நிச்சயம் அளிக்கும். 


செவ்வாய், ஜனவரி 13, 2015

இன்று நாம் செய்வதுதான் நாளை நமக்கே திரும்ப வரும்...

 


மனிதர்களில் பலப்பேர் தன்னை தாண்டி யோசிப்பதே இல்லை. தான், தான், தான் என்கின்ற எண்ண ஓட்டத்தில் ஒரு சுயநல வாழ்க்கை வாழுகின்றனர். தான் வாழ்ந்தால் போதும் என்கின்ற மனநிலைதான் பலருக்கு. சில நேரங்களில் அவர்களை பார்த்தால் நமக்கு எரிச்சல் வரும் சென்று அவர்களின் முகத்தில் அடிக்கவேண்டும் என்று தோன்றும். அந்த மனிதர் நமக்கு நெருங்கிய உறவாக இருக்கலாம், நாம் சந்தித்த மற்றும் சந்திக்காத மனிதராக இருக்கலாம், நமக்கு மேல் அதிகாரியோ சக ஊழியரோகூட இருக்கலாம். துணைவனோ அல்லது துணைவியாகவோ இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் செயல்கள் எல்லாமே ஒரு அக்மார் முத்திரை குத்தப்பட்ட சுயநலம் என்றால் நமக்கு வரும் கோபமும், வன்மமும் தோன்றும். அப்போது அவர்களை எதிர்த்தோ அல்லது திட்டவோ முடியாத சூழ்நிலையில் நாம் நம் மனதினுள் சபிப்போம்.அது மட்டுமே நம்மால் செய்ய  முடியும். ஒவ்வரு மனிதனும் இப்படி தன்னை தாண்டி சிந்திக்காமல் சுயநலமாக சிந்தித்தால் அதனால் நம்மை சார்ந்ததவர்களுக்கோ, உறவுகளுக்கோ பாதிப்பு ஏற்படுமானால் அதனால் அப்போது நமக்கு நன்மையாக இருக்கலாம் அதனால் "தான்" என்கின்ற அகங்காரம் நம்மை அத்தருணத்தில் நம்மை திருப்பதி படுத்தலாம் ஆனால் காலம் அதோடு நின்றுவிடாது. ஒன்றை  புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் இன்று என்ன செய்கிறோமோ, செய்யப்போகிறோமோ  அது நன்மையாக இருக்கலாம் அல்லது தீமையாக இருக்கலாம் எது செய்தாலும் காலம் கடந்து வரும் பலன் வட்டியோடு நமக்கு அந்த நன்மையையோ அல்லது தீமையையோ நமக்கு வந்தே தீரும்.


 ஒரு உதாரணம் வேண்டுமானால் நீங்கள் பார்க்கும் புதிய நபரை பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்து பாருங்கள் அதே புன்னகை அந்த மனிதரிடமிருந்து நாம் திரும்ப பெற முடியும். அதே மனிதரை நாம்  கோபமாய் பார்த்தால் அதே கோபம் கொஞ்சமும் குறையாமல் நமக்கு கிடைக்கும். இன்று நாம் சுயநலமாக  இருந்தால் இன்னொருவர் நம்மிடம் அதே சுயநலத்தொடுதான் நம்மிடம் பழகுவார்.உலகத்திற்கு நாம் என்ன கொடுக்கிறோமோ அதேதான் நமக்கு திரும்பவரும்.

 

அக்பர் தனது சபையில் பீர்பாலிடம் கேட்டார் பீர்பால் நாம் ஒன்றை மற்றவருக்கு நாம்  கொடுத்தால் அதுவே நமக்கு திரும்ப வரும்  என்பது உண்மையா என்று கேட்டார். அதற்கு பீர்பாலும் ஆம் அரசே நாம் செய்யும் நன்மையாகினும், தீமையாகினும் நாம் ஒன்று செய்தால் அது நமக்கு திரும்ப நமக்கே வரும் என்றார். அப்படியானால் பக்கத்தில் வா என்று பீர்பாலை அழைத்து அவரது கன்னத்தில் அடிகொடுத்துவிட்டு நீ கூறுவது உண்மையானால் இன்று இரவிற்குள் இந்த அடி எனக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று சொன்னவாறே சென்றுவிட்டார் அக்பர். உடனே      வீ ட்டுக்கு வந்த பீர்பால் தனது மனைவியை வரசொல்லி ஒரு அடிகொடுத்தார் பிறகு தனது மனைவியை பார்த்து இன்று ஒரு கனவு கண்டேன் அதில் கடவுள் தோன்றி உனக்கு மிகவும் பிடித்தவர்க்கு ஒரு அடி கொடுக்க சொன்னார் எனக்கு உன்னைத்தான் மிகவும் பிடிக்கும் அதனால்தான் உன்னை அடித்தேன் என்று சொன்னார். அவரது மனைவி சென்று அதேபோல் தனது தோழி கன்னத்தில் அடித்து பீர்பால் கூறியதைபோல் தனது கனவில் கடவுள் வந்து தனக்கு பிடித்தவர்களை அடிக்க சொன்னதாகா சொல்லி அடித்துசென்றார். இவ்வாறு ஒருவரை மற்றவர் அடிப்பது ஒரு விளையாட்டாக எல்லோரும் செய்தனர்.இரவு அரசர் வந்ததும்  ராணி அரசரது கன்னத்தில் அடித்தார். அரசரும் அதிர்ச்சியாக  பார்த்தார் அதற்கு ராணி சொன்னார் நமது நாட்டில் ஒரு விளையாட்டு துவங்கி இருக்கிறார்கள் அதன்படி நமக்கு யாரை மிகவும் பிடிக்குமோ அவரது கண்ணத்தில் ஒரு அடி கொடுக்க வேண்டுமாம்  இப்போதுதான் தோழி என்னை அடித்தாள் நான் உங்களை அடிக்கிறேன் என்று கூரினார். அப்போதுதான் அரசருக்கு புரிந்தது, ஒன்று நாம் செய்தால் அதுவே நமக்கு திரும்பவும் வரும் என்பதை.சுயநலமும் அப்படிதான் நாம் ஒருவரோடு சுயநலமாக நடந்து கொண்டால் நம்மிடமும் பிறர் சுயநலமாக நடந்துகொள்வர்.

செவ்வாய், ஜனவரி 06, 2015

குரு வணக்கம்...




குரு நம்மை நம் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு கொண்டுசெல்பவர். குருவிற்கு  என்றுஒரு மரியாதை எப்பவுமே உண்டு. குரு தன் நிலை தாழ்த்தபோதிலும் தனது சீடர்கள் நிலை உயர்வை கண்டு ரசிப்பவராக இருப்பரே உண்மையாக மதிக்க தக்க குருவாகும்.

                   " குரு பிரம்மா
                     குரு விஷ்ணு
                     குரு தேவோ -மகேஸ்வரகா
                     குரு சாக்ஸா
                     பரபிரம்மா தஸ்மைஸ்ரீ
                     குருவே நமக".

நம்மை தீய வழிகளிலிருந்து நல் வழிக்கு இட்டு செல்வதே குருவின் கடமையாகும்.



குருவை வணங்குவது கலைக்கும், கலைஞர்க்கும் உயர்வை தரும். குரு வணக்கமே பாரத கலையின் முதல் வணக்கம். ஆகவேதான் தாய், தந்தை,குரு பிறகு தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கு முன்பு வணங்கவேண்டியது தாய், தந்தை, குரு ஆகும். தனக்கு தெரிந்த கலையை ஒழிவு மறைவின்றி தனது சீடருக்கு வழங்கும் ஒரு உயரிய நோக்கமே குருவாகும். ஒருவன் தன் நிலையில் இருந்து மேலான நிலையை அடைய குருவின் தயவின்றி முடியாது.



 எப்போது ஒரு சீடன் குருவிடம் பாடம் கற்க தயாராகிரானோ அப்போதே அந்த சீடனுக்கு பாடம் நடத்த ஒரு குருவும் தயாராகிவிடுவர். குருவிடம் யார் தன்னை முழுமையாக சரணடைகிரார்களோ அவர்கள் எல்ல கல்வியையும் அந்த குருவிடமிருந்து கற்கிறார்கள். ஒரு குரு தன்னைவிட சீடன் திறமையை இருப்பதை பார்த்து ஆனந்தம் கொள்வாரே தவிர பொறாமை கண் கொண்டு பார்க்கமாட்டார்.



குருவை வணங்கு உயர்வை பெரு. குரு பக்தி என்றுமே நம்மை கைவிடாது. குரு நம்முடைய அறியாமை இருளை நீக்கி நமக்குள்ள அறிவின் ஒளியை நமக்கு தருகிறார். நமக்கு கட்டுப்படுத்துபவரெல்லாம் எல்லாம் குருவல்ல நமக்கு கற்றுத்தருபவர்தான் உண்மையான குரு. நீ வாழ்வில் முழுமை அடைய உடனடியாக குருவை தேடி அடை என்று கூருவதும் அதன் அடிப்படைதான். குரு யாராகவும் இருக்கலாம் அவரால் நமக்கு நல்ல கல்வியை தரக்கூடியவராய் இருக்கவேண்டும்.




                     

திங்கள், ஜனவரி 05, 2015

தேனீரும் ஜென் கதையும்...




 வாழ்க்கை என்பது ஒரு தேநீர் சுவைப்பது போன்றது என்கிறது ஜென் கதை. ஜென் கதைகள் எப்போதுமே வாழ்கையின் உள்ளர்த்தத்தை அதன் போக்கில் சொல்வதுதான். ஜென் கதைகள் சிறியவையாக இருப்பினும் அதன் ஆழம் ஒரு பெரிய அத்தியாயத்தை போன்றது. ஒரு தேனீர் அருந்தும்பொதுகூட விழிப்புணர்வோடு ஈடுபாடுடன் செய்யவேண்டும் அதை முழுமையாக உணர்த்துவதே இக்கதையின் நோக்கமாகும். இக்கணமே வாழ் என்பதே இதன் தாத்பரியம். ஒரு தேனீர் நிறமானது கண்ணிற்கு இதமாக இருக்கவேண்டும். பிரவுன் கலரில் கண்கள் முதலில் அந்த நிறத்தை பருகவேண்டும். பிறகு அதன் நறுமணம் நமது மூக்கின் நாசி துவாரம் வழியாக   சென்று  நமக்கு  புத்துணர்வு அளிப்பதாக இருக்கவேண்டும். பிறகு அதன் சுவையானது நாவிற்கு இனிமையை தருவதாக மனதிற்கு ஒரு பரவசத்தை ஏற்படுத்தி நம்மை வேகமாக இயங்க செய்யவேண்டும். ஆகா ஒரு தேனீர் எவ்வாறு அருந்தவேண்டும் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் எப்படி வாழ்கையை ஒவ்வரு கனமும் ரசித்து வாழவேண்டும் என்கின்ற தத்துவமும் அதனுள் அடங்கி இருக்கிறது



ஜென்  கதைகள் எப்போதுமே ஒரு ஆழ்த்த துளையிடுதளை நம் மனதிற்குள் புகுதிக்கொண்டே இருக்கும். ஒரு குருவிடம் சிஷ்யன் ஒரு கேள்வி கேட்கிறான் குருவே நீங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதாய்  உணர்கிறேன். உங்களிடம் கேட்கும் அனைத்துமே நான் முன்பே கேட்ட தத்துவமாக, பாடமாக இருக்கிறது என்று கூரிக்கொண்டெ தேனீர் கோப்பையில் உள்ள தேனீரை ஒரு சிறிய கிண்ணதிட்குள்  ஊற்றியபடியே கேட்டார். அதற்கு குரு இன்னும் கொஞ்சம் தேனீரை ஊற்றும்படி கட்டளையிட்டார். கொஞ்சம் தேனீர் ஊற்றிய பிறகு தேனீர் கிண்ணம் நிரம்பிவிட்டது. குரு இன்னும் ஊற்ற சொன்னார் அதற்கு அந்த சீடன் குருவே கிண்ணம் நிரம்பிவிட்டது திரும்பவும் ஊற்றினால் தேனீர் வீணாகிவிடும் என்றார். அதற்கு குரு உன் மனமானது எதுவுமற்ற  கிண்ணம் போல் எதுவுமற்று  இருந்தால் மட்டுமே நான் கூருவதை முழுமையாக ஏற்க முடியும். உன் மனம் நிரம்பி இருந்தால் புதிய விஷயம்கூட புக இடமிருக்காது.ஆகையால் உன் மனதை எப்போது காலி தேனீர் கோப்பையாக வைத்துக்கொள்.



 

வெள்ளி, ஜனவரி 02, 2015

அதிசயம்...







 அதிசயங்கள் என்று நாம் சில வரையறை வைத்திருக்கிறோம் ஆனால் அவைமட்டுமா அதிசயம் மனிதனாய் நாம் பிறந்ததுகூட ஒரு அதிசியம்தான். என் முகம் போன்று வேறொரு முகம் இதுவரை என் கண்களில் அகப்படவில்லை. இரட்டையர் என்று பிறந்தாளும் அவர்களுக்குள் விதியாசம் சிறியதேனும் இருக்கத்தான் செய்யும். பிறந்தவர் ஒரே முகமுடையவராக இருக்கலாம் ஆனால் ஒரே கை ரேகை யாருக்குமே அமையவில்லை இது எவ்வளவு பெரிய ஆச்சரியம். உலகம் ஒரு அதிசியம் என்றால் ஒரு துளி விந்தில் இருந்து உதையமான ஒரு கோடி செல்களில் இருந்து ஒரு செல் கருமுட்டையை முட்டி முட்டி தன்னை முழுமைபடுத்திக்கொண்டு உருவாகும் ஒரு உயிர் ஒரு அதிசயம் என்றால் அந்த உயிர் ஜனித்து உயிர் வாழ்த்து ஒரு அர்த்தமற்ற வாழ்கையை வாழ்த்து ஒரு அர்த்தமற்ற மரணத்தை சந்தித்து போகும் பலரும் , வாழ்கையின் தாத்பரியங்களை உணராமல்  பிரபஞ்சத்தில் தான்மட்டுமே வாழ தகுதியானவன் என்ற இறுமாப்போடு பிறகு காணமல் போகும் கானல் நீராய் பலரும், ஏன் பிறந்தோம் என்று உணராமல் தன்னையும் தாழ்த்திக்கொண்டு பிறரையும் இம்சித்து வாழ்கையை நரகமாக்கிக்கொண்ட பலரும், தன் தேவைகள் வெறும் இச்சை சார்ந்த செயல்கள் செய்து தானும் நிம்மதியற்று பலரது நிம்மதியை கெடுத்து பிறகு மாயமாகும் பலரும், தன்னை உணர்த்து தன் சுற்றத்தையும் உணர்த்து வாழ்க்கை வாழ்வதை தவிர வேறொன்றுமில்லை என்பது உணர்த்து வாழும் சிலரும்கூட ஒரு அதிசயன்தான்.







நேற்று என்பது கடந்துபோன அதிசயம். இன்று இப்போது என்பது நம்மிடம் இருக்கக்கூடிய அதிசயம் நாளையென்பது நம்பப்படுகின்ற அதிசயம். அதிசயங்கள் பற்றி  சொல்ல எவ்வளவோ இருக்கிறது. காலத்தை விட அதிசயதிட்கான ஒரு உதாரணம் வேறு எதுவும்  இல்லை. காலை கண் விழிப்பது முதல் இரவு கண்ணுறக்கம்கொல்வது வரை அனைத்தும் ஓர் அதிசையம்தான்.


கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை எத்தனை அதிசயம் நாம் அன்றாடம் காண்கிறோம். மரணம்கூட ஒரு அதிசயம்தான். புதியவைகள் வரும்போது பழையவைகள் விடைபெற்றுதானே ஆகவேண்டும் அதுவும் ஓர் அதிசையம்தான்.