ஞாயிறு, ஜூலை 31, 2011

என்னை கவர்ந்த இரண்டு வெளிநாட்டு பெண்கள்....


 இரண்டு பெண்கள் இந்த மாதம் ஜூலை2011  இல் இந்தியவுகுள் பயணம் செய்திருக்கிறார்கள்   அவற்றில் 
ஒருவர் பாகிஸ்தானியர் மற்றொருவர் அமெரிக்கர். முதலில் அந்த பாகிஸ்தானியரை பற்றி பார்போம்.     
பாகிஸ்தானில் முல்தான் என்னும் இடத்தில் 19 - november  - 1977 இல் பிறந்தவர். இவரது வயது 34 , இவர்தான் இப்போது  பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் பெயர் ஹென்ன ரப்பின் 
க்ஹர். இவர் மிகபெரிய பணக்கார குடும்பத்தை சேர்த்தவர். இவரது தந்தை குலாம்  முஸ்தபா க்ஹர். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன பெயர் annaya  மற்றும் dina என்பதாகும்.


இவரது இந்தியா வருகை பாகிஸ்தான், இந்திய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு அமைய வாய்பிருகலம் என்று தோன்றுகிறது. அதற்கு காரணம் அவர் ஒரு அழகான பெண் என்பதாக கூட இருக்கலாம்.

 இவரது ஒவ்வரு செயலும் செய்தியாக வந்தது, ஒரு பாரட்டப்படவேண்டிய செய்தி என்னவென்றால் ஒரு பெண்ணை வெளிஉறவு துறை அமைச்சராக்கி அந்த பெண்ணை இந்த காலகட்டத்தில் பேச்சுவார்தைக்கு அனுப்பியது தைரியமான ஒரு செயல். பொதுவாக முசல்மான் வீட்டு பெண்கள் பர்தா என்னும் முழு உடல் மறைக்கும் உடையை உடுத்திக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் இருந்த நிலை மாறி அவரது இயல்பிலான 
உடையனிது வந்தது எல்லோரையும் கவர்ந்தது. அந்த தைரியமும், துணிச்சலும் உடைய அழகும் நிறைந்த ஹென்ன ரப்பின் க்ஹர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

முஸ்லிம் நாடான பாகிஸ்தானே பெண்களுக்கு முன்னுரிமை தருகிறது என்றால் இந்தியாவும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவிகிதமாக உயர்த்துவது தப்பே இல்லை. அப்படி செய்தால் பாகிஸ்தானுக்கு ஹென்னா ரப்பின் போல இந்தியாவுக்கும் திறமையான அமைச்சர்கள் கிடைப்பார்கள்.
அடுத்ததாக நமது இந்தியாவுக்குள் பிரவேசித்த ஹில்லரி கிளிண்டன் அவர்கள். இவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு இவர் 67 ஆவது அமெரிக்க secretory  of  state . இவர் 26 - october  - 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். இவரது கணவர் முன்னால் ஜனாதிபதி திரு கிளிண்டன் ஆவர். இவர் 1973 ஆம் ஆண்டு  yela  சட்ட கல்லூரியில் சட்டம் படித்தவர். இவர்தான் அமெரிகாவின்  முதல் பெண் secretory  of  state  ஆகும். 

இவரது சிரித்த முகமும். எதையும் சமாளிக்கும் திறமையும் உள்ள ஒரு வெற்றி பெண்மணி  என்றால் அது மிகையாகது. காரணம் இவரது கணவர் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி, இவர் இப்போது secretory  of  state , இருந்தும் இவர் பார்க்க எளிமையாகவும், அடுத்தவர்களோடு நட்பாக பழகும் விதமும் அனைவரையும் கவரும் விதமாக உள்ளதுதான்.

இவர் ஒபாமாவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிட முயற்சித்தாலும்  இறுதியில் ஒபாமவுடைய மக்கள் செல்வாக்கை பார்த்து இவர் ஒதுங்கி நின்று இப்போது ஒபாமவோடே பனிபுரிவது பாரட்டப்படவேண்டிய செயல். ஒரு பெண் அழகாக இருந்தால் மட்டும் போதாது நாடளவும் திறமை இருக்கவேண்டும்  என்பதற்கு 
ஜெயலலிதா,மம்தா அவர்களை  போல் இவர்களும் வரவேட்கபடவேண்டியவர்கள்.   

பூமியை காப்பாற்றுவது நம் கடமை...

  
                               இந்த பூமி ஆரம்பத்தில் சிரிக்கும் குழந்தையை போல் தான் இருந்தது. எப்போது மனிதன் 
நாகரிகம் அடைந்தானோ அப்போது பூமியின் தன்மை மாறி  விட்டது. அவனது முதல் தேவை பசி அடுத்ததாக ஏற்பட் காம உணர்ச்சி அதற்கு பிறகு அவனது தேவைகள் ஒவ்வொன்றாக வளர்த்தது. அந்த வளர்ச்சிக்கான 
தேடல் ஆரம்பமானது. அவன் தேடிய ஒவ்வொன்றும் அவனுக்கு கிடைக்க, இயற்கை தன் இயல்பை மாற்றிகொண்டது. அப்படி இயற்கை நமக்கு இட்ட பிச்சைதான் இந்த சொகுசு வாழ்க்கை, வானத்தில் பறக்கிற விமானம் எல்லாம். அப்படி இருக்கும்போது மனிதனுக்கு எப்படி புதிய சிந்தனை பிறந்ததோ அதே போல் ஆணவம், அகங்காரம், திமிர், ஒன்றை அழிக்கும் குணம் என்ற வேண்டாத குப்பைகள் அவன் மனதிற்குள் புகுந்தது. அப்படி உருவான தீய எண்ணங்களே இப்போது உலகம் வெப்பமையமாக காரணமாக அமைந்து விட்டது.


இப்போது உள்ள  பனிக்கட்டி மலை உருகிக்கொண்டே வருகிறது. பனிக்கட்டி மலை முழுவதும்  உருகினால் நாம் பெறப்போவது படத்தில் காண்கிறபடி  மிக பெரிய அழிவு என்பது தான் பதில். நாம் இப்போதிருந்து இதை தடுக்க முடியாமல் விட்டால் அழிவு வருவது நிச்சயம்.
உலகம் வெப்பமையத்தால் எரிந்துகொண்டிருகிறது. பூமியை காப்பாற்றுவது நம் கடமை. ஆகையால் முடிந்தவரை நாம் உபயோகிக்கும் வாகனங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும். தண்ணிரை சேமிக்கவேண்டும். மரங்கள் வளர்க வேண்டும். நச்சு புகைகள் அதிகம் வெளிவராதபடி வாகனங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் பூமி வெப்பமடைவதை ஓரளவுக்கு தடுக்க முடியும். இதுவரை பூமி நம்மை காத்தது அதற்கு நன்றிக்கடனாக நாம் அதை காப்பாற்ற வேண்டும்.

வியாழன், ஜூலை 28, 2011

ஜென் கதைகள்


                          ஜென் கதைகளில் கூரப்படும் ஒவ்வரு கருத்துகளும் மிக ஆழமாக உணரக்கூடிய கருத்துகள் ஆகும். வாழ்கையில் எந்த ஒருகட்டதிலும் அவைகள் நமக்கு ஒரு தீர்வை தரக்குடியவையாகும். ஜென் துறவிகளின் கதைகளில் நகைச்சுவைக்கும் ஒரு தனி இடமுண்டு 

  • ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார் அவர் எப்போதும் சிரித்துகொண்டே இருபதோடு மற்றவர்களையும் சிரிக்கவைதுக்கொண்டிறுப்பார். மக்களும் அவர் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள். ஒரு நாள் அவர் மரணப்படுக்கையில் இருந்தார் மக்கள் அவரை சுற்றி நின்று அழுதவண்ணம் இருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு சீடனை அழைத்து. தன் சிதைக்கு தீ மூட்டும்முன்  தன்னுடைய உடம்பை நீரில் நனைத்து விட வேண்டாம் என்று கூரிவிட்டு இறந்துவிட்டார் மக்களும் சீடர்களும் அழுதபடியே அவரது சிதைக்கு நெருப்பு மூட்டினர் அப்போது அவரது  உடம்பிலிருந்து  மறைத்து      வைக்கபட்டிருந்த  பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் வெடித்தது சோகமாய் இருந்த மக்கள் சிரித்து விட்டார்கள். இறந்த பின்னும் மக்களை சிரிக்க வைத்ததால் அவருக்கு சிரிப்பு புத்தர் என்றே அழைக்க ஆறாம்பிதுவிட்டார்கள். 


  • ஒரு நாள் ஒரு சீடன் தனது குருவிடம், குருவே நான் உங்களிடம் நீண்ட நாளாக சீடனாக இருகிறேன். உங்களுடைய பாடங்கள், உபநிசங்களை பலமுறை எனக்கு போதித்திருகிரிர்கள் இருந்து ஏன் எனக்கு  அதையே  போதிகிரிர்கள்  என்று கேட்டார். அதற்கு குரு அந்த சீடனை அழைத்து தேனீரை  கோப்பையில் ஊற்றசொன்னர். சீடன் அந்த கோப்பை நிரம்பும்படி ஊற்றிவிட்டார். அதை பார்த்து குரு மீண்டும் ஊற்ற சொன்னார். சீடன் அதற்கு குருவே கோப்பை முழுமை அடைந்து விட்டது மீண்டும் ஊற்ற  இடமில்லை  என்றார். குரு அந்த தேனீரை கீழ ஊற்றிவிட்டு மீண்டும் நிரப்ப சொன்னார். சீடனும் தேனீரை மீண்டும் நிரப்பும் போது அந்த சீடனிடம். எப்போதும் ஒரு வெற்று கோப்பையாக மனம் இருந்தால் தான் அதற்குள் நிறைய ஊற்ற முடியும். முழுமையாக ஊற்றப்பட்டதாக மனம் இருந்தால் புதியவைகள் உள்ளே நுழைய வாய்பிருக்காது என்று கூரி சீடனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார்.  

  • ஒரு முறை ஒரு புத்த துறவி கடற்கரையில் அமர்ந்து கண் மூடி மந்திரம் சொல்லிகொண்டிருந்தார்.அப்போது அவர் மீது பல  பறவைகள் வந்து அமர்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தது. அதை பார்த்த சிறுவன்   அந்த துறவியிடம் எப்படி பறவைகள் உங்கள் மீது  வந்து பயமில்லாமல் அமர்கின்றன என்று கேட்டான் அதற்கு அந்த துறவி நான் அந்த பறவைகளை துன்புறுத்தவில்லை அதனால் அவைகள் என்மீது அமர்கின்றன என்றார். அப்போது அந்த சிறுவன் எனக்கு ஒரு பறவையை நாளை பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அதற்கு    அந்த துறவி சரி என்று ஒப்புக்கொண்டார். அடுத்தநாள் அந்த துறவி மனதில் நிம்மதியற்றுபோய் அந்த பறவையை சிறைபிடிக்க நினைத்தார் எப்போதும் அவர்மீது வந்து அமரும் பறவைகள் ஒன்று கூட அவர் பக்கத்தில் அமரவில்லை. அந்த துறவி அந்த பறவைகளை சிறைபிடிக்கும் நினைப்பு  அந்த பறவைகளுக்குள் எழுந்து  எந்த பறவையும்  வந்து   அமரவில்லை. பிறகு தான் செய்த,செய்ய நினைத்த தவறை நினைது வருந்தினார் அந்த துறவி.

செவ்வாய், ஜூலை 26, 2011

புல்லட் ரயில் விபத்தில் சீனா அரசு செய்த தவறு...



சீனாவில் புல்லட் ரயில் விபத்து நடந்து 34 பேர் உயிரிழந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம் 
சீனா அரசு  உலக நாடுகளுடன் போட்டி போடுக்கொண்டு வளர்கிறது அந்த வளர்ச்சின் வேகம் 
கிட்டதட்ட புல்லட் ரயிலின் வேகம் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வல்லரசு நாடாக என்னதான் சீனா வளர முயற்சித்தாலும் அதனிடம் இருப்பது ஒரு போலித்தனமான அணுகுமுறைதான். ஒரு வளர்ச்சியடைந்த நாடக சீனா தன்னை வெளிபடுதிக்கொள்ள நவீன மயமான தொழில்நுட்பத்தை 
கையாள்கிறது. ஆனால் சீனா ஒன்று புரிந்துகொள்ளவில்லை உலகநாடுகளை எப்போதும் தன்வசம் ஈர்கவைக்க நினைத்த 
ஜப்பான் ஒரு மிக பெரிய பூகம்பத்தாலும், சுனாமியாலும் ஒரு அணுமின் நிலையமே வெடித்து சிதறியது அதை 
பார்த்து உலகமே பயந்து நடுங்கியது. அந்த ஒரு பெரிய படிப்பினை ஜப்பானை நிச்சியம் வேறு நல்ல சிந்தனையை தூண்டி இருக்கும். அப்படிப்பட்ட படிப்பினை மற்ற 
நாடுகளிடம் இல்லை என்பதே உண்மை. எப்போதும் ஒரு அனுபவம் நமக்கு ஏற்படுமோ அதுவரை நாம் செய்யும் தவறுகள்   தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம் அதற்கான ஒரு உதாரணமே புல்லட் ரயில் விபத்து.

சீனா செய்த தவறு என்னதான் தொழில்நுட்பம் வளர்த்த நாடக இருந்தாலும் விதியை வெல்ல 
முடியாது என்பதற்கான ஒரு உதாரணமாக இரண்டு புல்லட் ரயில்கள் நேருக்கு நேர் 
மோதிகொண்டது. சீனாவில் உள்ள   புல்லட் ரயில் வேகம் 200 km/h என்பதாகும் அந்த ரயில் கிட்டதட 9,676 km (6,012 mi) பயணிக்க கூடியது அப்படிப்பட்ட ஒரு அதிநவீன ரயிலை பயன்படுத்தும் சீனா பாதுகாப்பு நிலையில் மட்டும் கோட்டைவிட்டது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. ஒரு அதிவேக ரயில் இடையில் நின்றால் அந்த தகவல் உடனே மேலிடதிற்கு தகவல் சொல்லுவதட்குள் அடுத்த ரயில் வந்து மோதுகிறது என்றால் எப்படி அத்தனை வேக ரயிலை உடனே நிறுத்த முடியும். ஆகா சீனா வேகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் விபத்தை தடுக்கவோ அல்லது ஆபத்தில் இருக்கும் பிரயாணிகளை காபற்றவோ எந்த முன்எச்சரிகை நடவடிகையும் எடுக்கவில்லை என்பது உறுதியாகிறது.

இந்த விபத்தின் அடையாளம் என்னவெனில் சீனா தன்னுடைய வளர்ச்சியை அடுத்த நாட்டினர்கு காட்டும் வெறியில் புல்லட் ரயிலை நிருவியதே தவிர மக்கள் மீது உள்ள அபிமானத்தால் அல்ல என்பது தெளிவாகிறது. மின்சார ஒயர் அறுந்து புல்லட் ரயில் நின்றுவிட்ட உடனே மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை, மற்றும்  ஒரே பாதையில் இரு புல்லட் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும்படியான காரணத்தினால் சீனா பாதுகாப்பு விசையத்தில் கூடுதல் 
அக்கறை கொள்ளவேண்டும் என்பது தெளிவாகிறது. 

திங்கள், ஜூலை 25, 2011

முன்றாம் உலகயுத்தம் நடக்கபோவது தண்ணீருக்காக...



              இந்த உலகம் துவங்கியதில் இருந்து பல யுத்தங்கள் போர் என்று பார்த்துவிட்டாலும்.
இரண்டு உலக யுத்தங்கள் எல்லோர் மனதிலும் திகிலையும், ரணத்தையும் ஏற்படுத்தியது மறுக்கமுடியாத  உண்மை. இரண்டு உலக யுத்தங்கள் கற்றுகொடுத்த பாடம் அதிகம்.ஆனால் நாம் கற்றுக்கொண்ட பாடம் மிக குறைவும். இன்னொரு ஹிட்லரோ, இன்னொரு முசொலினியோ அவதரித்துவிட்டர்கலா? இல்லையா? என்பது தெரியவில்லை ஆனால் இன்னொரு உலகயுத்தம் நடக்க 
பல நாடுகள் அடித்தளம் அமைத்து கொண்டிருகிறது என்பதே கசக்கும் உண்மை. 

இப்போதுள்ள தொழில்நுட்பம்  அதையே பறைசாற்றுகிறது. இருந்த இடத்தில் ஒரு பட்டன் அழுத்தினால் 
ஒரு நாடே அழிவதை படம் பார்ப்பதை போல் பார்த்து ரசிக்கும் அளவுக்குத்தான் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதே.
முன்பு நேருக்கு நேர் சண்டையிடும்போது சாவின் வலியும், உயிரின் முக்கியதுவம் புரியும். அதனால்தான் பலரது மரணத்திற்கு பிறகு 
புத்தி வந்து உலக யுத்தம் நின்றது. ஆனால் இப்போது எல்லாம் நவினமயமாகிவிட்டது. யார் யாரை கொன்றார்கள் என்றே தெரியாமல் போகும் அளவிற்கு
ஒரு ஏவுகணை பிரயோகித்தல் ஒரு பகுதில் இருந்து இன்னொரு பகுதியே இல்லாமல் அழிக்கமுடியும். இப்போது உலகயுத்தம் தொடங்கினாலும் ஒவ்வரு நாடுகளும் கண்டுபிடித்த அதிநவீன ஆயுதங்கள் கொண்டு உலகை ஒரு வாரத்திற்குள் 
 அழித்துவிடலாம்.

    இப்போது மனிதாபிமானம் செத்துகொண்டிருப்பதால் யாருடைய சாவும் யாரையும்  பாதிக்கபோவதில்லை, அவரவருக்கு சாவு வரும்போதுதான்  பெரியவிசையமாக கருதப்படும். இப்போது ஏற்றத்தாழ்வு இல்லாமல் கிட்டதட்ட எல்லாநாடுகளும் ஆயுதங்களை ஏந்தி நிற்பதால் முன்றாம் உலகயுத்தமே  கடைசி யுத்தமாக இருக்கும் காரணம் அடுத்த உலக யுத்தம் வர வாய்பிலதபடி யாரும் உயிரோடிருக்க போவதில்லை.

அடுத்த உலகயுத்தம் 50 வருடங்களுக்குள் நடக்கலாம் என்ற கணிப்பு நிகழ்கிறது. அடுத்த உலக யுத்தம் நடக்க காரணமாய் அமையபோவது தண்ணீருக்காக.கிட்டதட்ட எல்லா நாடுகளும் 
பணபலம் மற்றும் ஆயுதபலம் அதிகபடுத்திக் கொண்டாலும் இயற்கையாய் கிடைக்கும் 
தண்ணீரையோ, காற்றையோ போலியாக உருவாக்க எந்த கொம்பனாலும் முடியாது. ஆகையால் 
எங்கு தண்ணிர் வளம் உள்ளதோ அந்த நாட்டை கைப்பற்ற எல்லா நாடுகளும் முயற்சிக்கும். பிறகு 
அந்த நாட்டை ஆதரித்து சில நாடுகளும் அதை எதிர்த்து சில நாடுகளும் சண்டையில் குதிக்க ஒவ்வரு நாடாக ஒன்னு சேர உலக யுத்தம் ஆரம்பமாகும். இதட்கு நல்ல உதாரணம் 
சீனா பிரம்மபுத்ரா நதி இந்தியாவுக்குள் நுழையவிடாமல் அணைகட்டி வருகிறது. 

இந்த உலகயுத்தம் நம்மால் தடுக்க முடியும் அதற்கு நாம் மனிதாபிமானத்தை வளர்த்துகொள்ளவேண்டும். அத்தோடு வீண் பொறாமைகளை விட்டொழித்து எல்லோரையும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தண்ணிரை சேமிக்கவேண்டும். விட்டுகொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை போல் பிறரையும் பார்க்க வேண்டும். இப்படி நம்மை நாமே மாற்றிக்கொண்டால்தான்  உலகம் மனிதர்கள் வாழ உகந்ததாய் இருக்கும். இல்லை என்றால் உலக யுத்தத்தை தடுக்க யாராலும் முடியாது என்பதே உண்மையிலும் உண்மை.
   

ஞாயிறு, ஜூலை 24, 2011

உக்கிரமடையும் நில மோசடி...


கடந்த ஆட்சியில் நில மோசடி என்பது சர்வ சாதரணமாக நிகழ்தது என்பது இப்போது பலர் கொடுக்கும் புகாரில் இருந்து தெரிகிறது. அதில் பல மந்திரிகள் உள்ளனர் என்பது சற்று வருத்த படவைகிறது. காரணம் மக்களிடம் ஓட்டு பிச்சை வாங்கி சிம்மாசனத்தில் அமர்ந்த பிறகு ஓட்டு போட்ட அந்த மக்களிடம் இருந்த நிலத்தை பிடுங்கி தன்னுடையதாக்கிக்கொள்ளும் கேடுகெட்ட வர்க்கங்களை வேறு என்ன சொல்லி திட்டுவது. இவர்கள் செய்த உருட்டல், மிரட்டல் எல்லாம் ஒரு சில கால அளவுதான் என்பது புரியாமல் பல கேவலங்கள் செய்தவர்கள் காலம் ஒருபோதும் சும்மா விட்டுவிடாது. 


பலர் பாடுபட்டு வாங்கிய நிலத்தை தனது அதிகாரத்தாலும், பணபலத்தாலும் மிரட்டி பிடுங்கி கொண்டது என்பது ஒரு நல்ல மனிதன் செய்ய கூடிய செயல் அல்ல. இனி இந்த நில மோசடி நிகழாமல் தடுப்பது எதிர்காலத்தில் நடக்கபோகும் கொலை மற்றும் தற்கொலையை தடுக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது கொடுகபட்டிருக்கும் நில மோசடி வழக்கு உண்மையாயின் அதை அபகரிதவர்களிடம் இருந்து பெற்று உரியவர்களுக்கு வழங்குவதோடு அந்த நில பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை வழங்கவேண்டும் என்பதே இப்போதைக்கு அரசு செய்யவேண்டிய முக்கியமான வேளையாகும்.

யானைகளை காப்பற்றவேண்டிய நாமே அதை வதைக்கிறோம்...



         யானைகள் விவசாய நிலங்களை துவம்சம் செய்வதாகவும் அதை விரட்ட வெடி வைப்பதும், அதை விரட்டியடிப்பதும் நம்முடைய மனசாட்சியை மண்ணிற்குள் புதைத்துவிட்டு யானைகள் மீது பழிபோடுகிறோம். யானைகளுக்கு எப்போதுமே ஒரு குணமுண்டு அவைகள் பழையதை எப்பொதும் மறப்பதில்லை ஆனால் மனிதர்களுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு அது பழையது நினைவில் வைப்பதே இல்லை. நாம் எப்படி முன்னேறினோம் என்பதையும் அதற்கு உதவியவர்களை கூட நாம் அலச்சியம் செய்வது என ஒரு மொக்கையான வாழ்க்கையை வாழ்கிறோம். அப்படிப்பட்ட நாம் யானைகள் வந்து போகும் பாதையை வழிமறித்து கோவையில் உள்ள மருதமலையை சுற்றி பல பள்ளிகள், அமிர்த தொழில்நுட்ப கல்லுரி, தியானலிங்கம் என்று அடுகடுகான கட்டிடம் கட்டி "வெஸ்ட் காட்ஸ் மற்றும் ஈஸ்ட் காட்ஸ்" என சொல்லப்படும் யானைகள் வந்துபோகும் பகுதியை வளைத்து வளைத்து கட்டடம் கட்டிவிட்டதும். யானைகள் தாங்கள் வரும் பாதைகள் அடைக்கப்பட்டு அதற்கான குடிநீர் தேடி வயலில் உள்ள வாசத்தை நுகர்ந்து வருகின்றன. அந்த யானைகள் மீது எந்த தவறும் இல்லை. அப்படி வரும் யானைகள் வேட்டு வைத்து துரத்துவதும் அதை துன்புறுத்துவதும் என்பதை தாண்டி அந்த யானைகளுக்கு ரேடியோ காலர் மாட்டுகிற பெயரில் அதை துரத்தி அதில் ஒரு  யானை  பெரிய குழிக்குள் விழுந்து இறுதியாக உயிரை விட்டது.

                நான்  கேட்பது இதுதான் அந்த யானை செய்த குற்றம் தான் என்ன? செய்த தவறெல்லாம் நாம் செய்துவிட்டு எதற்காக ஒன்னும் தெரியாத யானைகளுக்கு ஒரு கைதிக்கு விளங்கிடுவது போல் யானைகளுக்கு ரேடியோ காலர் மாட்டி அதை அடிமையாக்க நினைக்கிறோம். அதனுடைய சுதந்திரத்தை பறிக்கும் மனிதவக்கிரம்  என்பது புரியாமல் ஒரு யானை இறந்த பிறகு அந்த முடிவு முட்டாள்தனமானது என்று கூரி என்ன பெறப்போகிறோம்? யானையை காப்பாற்ற எடுக்கும் முயற்சியை கைவிட்டு பிச்சை காசிட்காகவும், ஆடம்பர வாழ்கைக்காகவும் பணம் பெற்றுக்கொண்டு பிழைப்பு நடத்துவதும். பணமிருக்கும் திமிரில் எல்லாவற்றையும் சொந்தமாகிகொண்டு சுயநல மனிதர்களுமாக வாழ்வது ஒரு வாழ்க்கையல்ல என்பதை நினைவில் கொண்டு உடனடியாக அந்த யானைகள் வரும் பாதையை சரிசெய்து செய்த பாவத்தை கலுவிகொண்டால் நல்லது. இதை உடனடியாக செய்யா விட்டாலும் அதற்கான முயற்சிகள் எடுத்தாள் யானைகள் நம்மை பயமுறுத்தாது. நாமும் யானையை விரட்டும் அவசியம் இருக்காது.









சமச்சீர் கல்விக்கு வேண்டும் சமத்துவம்...


சமச்சீர் கல்வி தேவையா? இல்லையா? என்பது நீயா? நானா? என்ற நிகழ்ச்சியை போல் விடாமல் சண்டைபோடுகிறது தமிழக அரசு. ஒரு கல்வி என்பது யாராலும் அழிக்கமுடியாத,திரும்பிபெற முடியாத சொத்து அதை உணர்துதான் ஆதிகாலத்தில் ராஜாக்கள் கூட தங்களது மகனையோ மகளையோ குருகுல கல்விக்கு அனுப்பிவைத்தனர். குருகுலம் என்பது ராஜாமகன் என்றோ சிப்பாய் மகநென்றோ பார்க்காமல் பொதுவான கல்வியை போதிப்பர் அதுவே சமச்சீர் கல்வி என்பது. இங்கு எங்கும் சமச்சீர் கல்வியை காணமுடியவில்லை. சமச்சீர் கல்வி என்ற பெயரில் வெறும் பாடங்கள் குறைகபட்டுள்ளது. இப்போது நவீனமயமான காலகட்டத்தில் சமச்சீர் கல்வி என்று ஒரு வேகதடையைதான் புகுத்தி இருக்கிறது என்று ஒருபக்கம் பார்த்தாலும். அது சரியான கல்வியல்ல என்று அதை தடைசெய்ய தமிழக அரசு எடுக்கும் முயற்சி உண்மையில் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. காரணம் பசித்தவனுக்கு காய்த்த ரொட்டி துண்டு  கிடைத்திருந்தால் அவனுக்கு அது பசியாற்றி இருக்கும் அதை தட்டிவிட்டு அது சுவையாக இல்லை அதனால் அவன் சும்மா இருந்தாலும் பரவாயில்லை அந்த ரொட்டி துண்டை  மட்டும்  தின்றுவிட கூடாது  என்பதில் உறுதியாக உள்ளது தமிழக அரசு. 

                  கல்வி என்பது அறிவு வளர்சிக்கே தவிர ஆடம்பரத்தை காட்டுவதற்கு இல்லை. அறியாமை அகற்றவே கல்வி இருக்கவேண்டுமே தவிர அறிந்தவைகளை அறியாமையக்குவதட்கு இல்லை. இதை புரிந்துகொண்டு அரசு மாணவர்களுக்கு எது சிறந்ததோ அதை உடனடியாக செய்ய வேண்டும். இதுவே மாணவர்களுக்கு அரசு செய்யும் சிறந்த தொண்டாகும். சமச்சீர் கல்விக்கு வேண்டும் சமத்துவமே தவிர சண்டை, சச்சரவு அல்ல.

சனி, ஜூலை 23, 2011

"சர்வர் சுந்தரம்"- வியக்கவைக்கும் படம்


திரு.பாலசந்தர் அவர்கள் இயகத்தில் நாகாஷ் அவர்களின் அற்புதமான நடிப்பும் "சர்வர் சுந்தரம்" படத்தை   பலமுறை பார்க்க தூண்டியது. நாகேஷ் அவர்களுக்கு இந்த படதிட்காகவே தாதா சாகிப் பால்கே விருது 
கொடுக்கலாம். நாகேஷ் அவர்கள் ஒரு சகாப்தம் அவரை தமிழ் சினிமாவால் என்றுமே மறக்க முடியாது. பொதுவாக 
சினிமா துறை ஒன்றும் சாதரணமாக எல்லாரும் வெற்றிபெற்றுவிடும் துறையல்ல. பலர் இந்த 
துறைமேல் உள்ள கவர்ச்சியால் வாழ்கையை துளைத்துவிடுகிறார்கள். என்னதான் பல திறமைகள் 
இருந்தாலும் ஒரு வாய்ப்பு சரியாக அமைய வேண்டும். அப்படி அமையவில்லை  என்றால் அந்த துறையே அவர்களுக்கு ஒரு சாபமாகிவிடும். இதை இந்த படத்தில் சரியாக நடித்து புரியவைத்திருக்கிறார் நாகேஷ் அவர்கள்.

    இந்த படத்தில் நாகேஷ் தவிர யாராலும் இந்த படத்தை இவ்வளவு அழகாக படைத்திருக்க முடியாது. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்துகொண்டிருந்த நாகேஷ் அவர்களை சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், நீர் குமிழி போன்ற படங்கள் ஒரு நல்ல குணசித்திர நடிகராக மட்டுமல்லாமல் ஒரு படதின் நாயகனாக பிரதிபலிக்க செய்தது.


நாகேஷ் அவர்களுக்கு பக்கபலமாக ஒரு நல்ல நண்பன் எப்படி இருக்கவேண்டும் என்பதை முத்துராமன் அவர்கள் மிக சிறப்பாக செய்திருப்பர். நண்பன் தன்னுடைய நிலையை வருத்ததோடு  கூரும்போது மட்டுமல்லாது அவனது வாழ்க்கை தலைகீழாக மாற்றவும் ஒரு நண்பன் நினைத்தாள் முடியும் என்பதை எவ்வளவு இயல்பாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது இந்த படத்தில்.

                                    
இந்த படத்தில் ஒரு நல்ல விசையம் என்னவென்றால் எல்ல கதாபதிரமும் நல்லபடியாக சித்தரிக்கப்பட்டது தான் ஒரு வில்லன் இல்லாத திரைப்படம் என்பதை சொல்லிக்கொள்ள பெருமைப்பட வைக்கிறது இந்த படம். காதல் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் ஒருவனை உயர்த்தும். அதே காதல் தோல்வி அடைந்தால் அந்த மனிதனின் மனதை எவ்வளவு பக்குவபடுத்தும் என்பது நாகேஷ் நடிப்பில் நம்மால் உணரமுடிகிறது.


            இந்த படம் எல்லார் மனதிலும் துளைத்து அப்படியே மனதோடு ஒட்டிகொண்டது தாய் பாசமே. தன் தாயை மிஞ்சும் பாசத்தை நாகேஷ் அவர்களும் மகனை மிஞ்சும் பாசமாக படத்தில் போட்டிபோட்டு நடிதிருபார்கள். தாயின் இறபிட்கு பிறகு ஆடம்பரமான வாழ்க்கை போலிவாழ்க்கை என்றும், சர்வர் வேளையில் இருந்த நிம்மதி நடிகனாக இருக்கும்போது இல்லை என்று  அவரவர் தொழிலை நேசிக்கவேண்டும் என்பதை புரியவைகிறது இந்த படம். வாழ்க்கை, நிம்மதி எல்லாம் ஆடம்பரத்திலும், காசு சேர்ப்பதில் மட்டும் இல்லை ஆத்மார்த்தமாக, அர்த்தமுள்ளதாக, அடுத்தவர்களுக்கு உதவுவதாக இருப்பதே வாழ்க்கை என்பதுதான் இதன் கருத்து.

எங்கே பத்திரிகை தர்மம்?

சிலர்  அன்றாடம்  கண்விழிப்பது பத்திரிக்கையில்தான். நமக்கு சில நேரம் நல்ல செய்திகளும் பலநேரம் கெட்ட செய்திகளும் தெரிந்துகொள்ள பத்திரிக்கை தான் உதவுகின்றன.ஒரு எட்டு பக்க பத்திரிக்கை நமக்கு உலகத்தில் நடந்த, நடக்கிற விசையங்களை பார்த்து தெரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது 
ஆனால் இப்போது பத்திரிகையின் போக்கு பலவாறு மாறிவிட்டது என்பதே உண்மை. அதற்கு நல்ல உதாரணம் 
இங்கிலாந்த் நாட்டில் நடத்திவந்த "நியூஸ் ஒப் தி வேர்ல்ட்" பத்திரிகை நல்ல உதாரணம். ஒரு ஆட்சி கவில்வதட்கும் புதிய ஆட்சி உருவாவதற்கும் இந்த பத்திரிகைக்கு பெரிய பங்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை 
ஆனால் அதற்காக அந்த ஊடகங்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கபடுவது தனிமனித சுதந்திரமே. 
அப்படிப்பட்ட தவறை செய்தமைக்காக 160 வருட பழமையான பத்திரிகையான "நியூஸ் ஒப் தி வேர்ல்ட்" அதன் உரிமையாளர் முர்டோச் பத்திரிகையை மூடிவிட்டார்.


  அவர் செய்த தவறு என்னவென்றால் பலரது தொலைபேசியை ஒட்டுகேட்டு அதை பரபரப்பு செய்தியாகி அதை வாசகர்களுக்கு சுவாரசியமாக்கித்  தந்தார். மக்கள் அபிமானத்தை பெற மற்றும் பத்திரிகை அதிகம் விற்க பலரது தனிமனித சுதந்திரத்தை பறித்துள்ளார். இதுதான் அவர் செய்த மாபெரும் குற்றம். இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதுவா பத்திரிகை 
தர்மம்? வெறும் பரபரப்பை ஏற்படுத்தி மக்களுக்கு ஒரு போலியான கிளர்ச்சியை ஏற்படுத்தி 
அதை வியாபாரமாக்கி அதில் வாழ்க்கை நடத்துவது ஒரு கேவலமான ஒன்றல்லவா! இது அங்குமட்டுமல்ல 
நம்ம ஊரிலும் நிகழக்கூடிய,நிகழ்த்துகொண்டிருக்கிற  ஒரு இழிவான செயல்.

                       இந்திய சுதந்திரம் பெறாத காலத்தில் பாரதியார் மற்றும் பல தேசபக்தர்கள் சுதேசமித்திரன் போன்ற 
பல பத்திரிகைகள் ஆரம்பித்து மக்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது கவர்ச்சியும், தப்பான கிளர்ச்சியும் தந்து மக்களை மந்தகாச நிலைக்கு கொண்டு செல்லும்படியாக இருக்கிறது 
சில பத்திரிகைகள். இப்படிப்பட்ட பத்திரிகைகள் ஒருநாள் முகத்திரை கிழிக்கப்பட்டுவிடும் என்பது "நியூஸ் ஒப் தி வேர்ல்ட்" பத்திரிகை ஒரு நல்ல பாடம் என்பது இப்போதுள்ள பத்திரிகை நண்பர்களுக்கு புரிந்தால் நல்லது.

புதன், ஜூலை 20, 2011

சின்னகுயில் பாடும் பாட்டு கேட்குதா...

எல்லோர் காதிற்கும் ஒரு இனிப்பான செய்தி சின்னகுயில் சித்ரா தன்னுடைய சோகத்தை மறந்து நம்மை சந்தோசபடுத்த நமக்காக மீண்டும் பாடவருகிறார்.
"சின்னகுயில் பாடும் பாட்டு கேட்குதா... " என்று எல்லோர் காதிலும் தன் இனிய குரலால் நம்மை தாலாட்டியவர். தன் மகளின் பிரிவில் இருந்து மீண்டு, மீண்டும் நமக்காக பாடவருவது சந்தோஷத்தில் துள்ளி குதிக்கத்தோன்றுகிறது. 
தன்னுடைய  எட்டு வயது தவமிருந்து பெற்ற குழந்தையின் இழப்பு அதனுடைய சோகம் அந்த தாய்க்கு மட்டுமே புரியும். தள்ளிநின்று பார்பவர்களுக்கு புரியாது. அதற்குதான் தாய்பாசம் என்ற  சிறப்பு பெயரை  கொடுத்து தாய்க்கு மரியாதை கொடுகின்றோம். ஒரு தாயின் அன்பு எதனுடனும், யாருடனும் நம்மால் ஒப்பிடவே முடியாது. எந்த உறவும் தாய்பாசத்தை மிஞ்சிவிட முடியாது. யாரும் ஒரு தாய் போல் இருக்கலாமே தவிர அந்த தாயாக இருக்கமுடியாது. தாய்மை ஒரு மழைத்துளியை போல இயல்பானது. ஒரு பூவை போல மென்மையானது. ஒரு மலையை போல உறுதியானது, உயர்வானது, உண்மையானது,உயிரானது, உணர்வானது.அப்படிப்பட்ட தாயின் வருகை கொண்டாடப்படவேண்டாமா?  
 ஒவ்வரு பூக்களுமே சொல்கிறதே...
வாழ்வென்றால் போராடும் போர்களமே,
ஒவ்வரு விடியலுமே சொல்கிறதே
இரவென்றால் பகலொன்று வந்திடுமே!
பா.விஜய் எழுத்தும் சின்னகுயில் குரலும் ஒலிக்காத ஊரே இல்லை,இதை கேட்டு எத்தனை பேர் தன்னம்பிக்கை அடைந்தார்கள். சின்னகுயில்
முகத்தில் எப்போதும் அழகான சிரிப்பு. ஒருமுறை  இயக்குனர் பாலா அவர்களிடம் அவருக்கு பிடித்தவர்களை பற்றி கேட்கும்போது அவர் சின்னகுயில் சித்ரா அவர்களை மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அவர் அதிகமாய் சிரிக்கமாட்டார் ஆனால் எப்போதும் சிறித்தமுகமாக இருக்கும் சித்ரா அவர்களை பிடிக்கும் என்றாராம். என்னை கேட்டால் "சின்னகுயில் சித்ரா" என்பதற்குபதில் " சிரித்தமுகம் சித்ரா" என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.    
சொல்ல மறந்துவிட்டேன் சின்னகுயில் பாடப்போவது ஒரு மலையாள படத்தில். படத்தின் பெயர் " இஷ்டம் + சிநேகம் = அம்மா" சம டைட்டில், தமிழ் படமும் இப்படி டைட்டில் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுபோகட்டும் சின்னகுயில் சித்ரா அவர்களை இசை உலகிற்கு  மீண்டும்  வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

செவ்வாய், ஜூலை 19, 2011

கோவையை காயப்படுத்தும் குற்றங்கள்...


வந்தாரை வாழவைக்கும் ஊர், மரியாதைக்கு மரியாதை கொடுக்கும் ஊர் என்றெல்லாம் கோவையை நினைத்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வரு கொடூரமாய் நிகழ்த்து கொண்டிருகிறது. நான் மனமுடைந்து வெறுத்துப் போன இரு குழந்தைகளின் கொடூரமான கொலைகளில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அடுத்து கோவையை துவம்சம் செய்யும் செய்திகள் மேலும் மேலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பட்டியலிட்டு கூர மனம் தகிக்கிறது, உணர்ச்சி வேகத்தை அடக்க முடியாமல் தவிக்கிறது.  ஒவ்வரு கொடுமை நிகழ்ந்தபின் யார் தடுப்பது இந்த குற்றங்களை. நடந்த பின்பு யாரை குற்றம்சாட்டி என்ன பலன் பெறமுடியும்?இனியாவது இப்படி ஒரு கொடூரம் நிகழாது தடுப்பது அவசியம்.

அடுத்தது குடிகாரர்களின் பட்டபகலில் நடந்தப்பட்ட கொடூர  கொலை. குடித்துவிட்டு கூத்தடிப்பதைத்  தாண்டி ஒரு கொலையை படத்தில் காண்பிப்பதை போல் பொதுமக்கள் முன்னிலையில் காவல் நிலையம் மிக அருகில் ஒரு கொலை நடந்திருப்பது உலகமே பார்க்கும்படி கேவலப்படுத்தபட்டிருப்பது  நம் கோவையைதான். என்ன செய்கிறது காவல் துறை? என்று குற்றம் சாட்டவில்லை ஆனால் அவர்கள் கொஞ்சம் விழிப்போடு இருந்தால் தவிர்களாமே என்ற நப்பாசைதான்.

கோவை மக்களை பலவாறு பயமுறுத்திக் கொண்டிருக்கும் திருட்டு, கொள்ளை,வழிப்பறி என்று அடுக்கிகொண்டே போகலாம். முன்பு பைக் மற்றும் கார் திருட்டு அதிகமாகி இருந்தது இப்போது பல இடங்களில் வீடு புகுந்து திருடுவது அதற்காக நடத்தப்படும் கொலைகள் என்று கொலை ஒரு பொழுதுபோக்க மாறி இருக்கிறது கோவை நகரம். புதியவர்கள்  யாரேனும் சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களை கண்காணிப்பது அவசியம்.
  கோவையில் இப்போது விபத்திற்கு பஞ்சமே இல்லை. என்னதான் காவல் துறை தொண்டை வலிக்க கத்தினாலும் யாரும் தலை கவசம் அணிய தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. சாலை விதிகளை மதிப்பதே இல்லை. குடித்துவிட்டு வண்டியோட்டுவது என்று பல கண்ணுள்ள குருடர்கள்  உலாவிக்கொண்டிருக்கும் போது, யாரை குறைசொல்வது எல்லோருமே குற்றவாளி கூண்டில் நிற்கும்போது.
விபத்தை தடுக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் இருந்தால் கண்டிப்பாக விபத்தை தவிர்க்கலாம்.
கோவையை மொட்டையடிக்கும் விதமாக மரங்களை வெட்டி சாய்க்கும் வெட்டி மனிதர்கள் தட்டி கேட்டு தடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்வது. மரத்தை, இயற்கையை கொன்று உயிர்வாழ துடிக்கும் சில -------------------------- களை நைய புடைத்தால் சரியாகிவிடும் இந்த நிலைமை.  
மனிதனின் சுயநலதிற்காக எல்லாத்தையும் அழித்தான். இந்த யானை சாவதற்கும் அதே சுயநல மனிதன்தான் காரணம். சுயநல மனிதர்களே கொஞ்சம் அடுத்த தலைமுறை  கொஞ்சம் வாழ்வாதற்கு வகை செய்யுங்கள்,கொஞ்சம்  இயற்கையை விட்டுவையுங்கள். வெறும்  பணம் மட்டும் அவர்களுக்கு சுவாசிக்க உதவாது.

ஞாயிறு, ஜூலை 17, 2011

"வால் - இ" அனிமேஷனில் அற்புதமான படம்

சமீபத்தில் வால்- இ என்ற அனிமேஷன் படம் பார்த்தேன். மிக அழகான காதல் கதையை அற்புதமாக ரோபோட்டுகள் மூலம் சரியாக செய்திருக்கிறார்கள். வால்-இ என்ற ஒரு சிறிய ரக ரோபோட் பூமியில் குப்பைகளை அள்ளி சேமிக்கும் வேலையை செய்துகொண்டிருகிறது. அந்த வால் - இ க்கு துணையாக ஒரு சின்ன கரப்பாம்புசி என்று இருவர்மட்டும் உலகம் என்று வாழ்த்து கொண்டிருக்கும்போது ஒரு விண்கலம் பூமியை நோக்கி இறங்குகிறது.

அந்த விண்கலத்தில்  ஈவா என்கின்ற வெள்ளை ரோபோட் பூமியை ஆராய்ச்சி செய்ய வருகிறது. வால் - இ,  ஈவாவிற்கு உதவி செய்கிறது. வால் - இ,  ஈவாவை  தனது இருப்பிடத்திட்கு கூட்டிச்செல்கிறது . அப்போது  ஈவா தனது சக்திகளை இழந்துவிடுகிறது. அதற்கு என்ன சிகிச்சை செய்வது என்று தெரியாமல்  வால் - இ திணறிப்போய்விடுகிறது.

 ஈவா மீண்டும் தன் நிலையை அடைகிறது. ஈவாவுகும் வால் - இகும் இடையே நட்பு மலர்கிறது. அப்போது வால்- இ தன்னிடம் உள்ள செடி (Plant )  ஒன்றை காட்டுகிறது. ஈவா தேடிவந்ததும் அந்த செடியைத்தான். ஈவா அந்த செடியை  தனக்குள் மறைத்துவிடுகிறது. அதன் கடமை முடிந்ததும் ஈவாவை  விண்கலம் கூட்டிச்செல்கிறது அப்போது  வால் - இ அந்த விண்கலத்தில் தாவிபிடித்துகொண்டு  விண்வெளிக்கு செல்கிறது.
வால் -இ ரோபோட்  ஈவா ரோபோட்டை மீட்டு எப்படி  பூமிக்கு கொண்டுவருகிறது என்பதுதான் மீதி கதை. அழகான அனிமேஷன், சவுண்ட் எபக்ட் என்று  அசத்தி இருகிறார்கள்.
 வால் -இக்கும் ஈவாவிற்கு உள்ள காதலை அந்த உணர்சிகளை அழகாக காட்டி இருகிறார்கள் ஸ்பெசல் எபக்ட்ஸ் மூலமாக. மொத்தத்தில் வால் - இ அனிமேஷன் படம் அனைவரும் பார்த்து ரசிக்கவேண்டிய அழகான படம்.  

திங்கள், ஜூலை 11, 2011

ராஜபக்சேவும் தமிழின படுகொலையும்....


ஹிட்லருக்கு அடுத்தபடியாக மனசாட்சி என்பதே இல்லாமல் கொடூரமான அரக்கன் ராஜபக்சே. உலகம் தொடங்கியதில் இருந்து இன்று வரை எத்தனையோ போர் நிகழ்த்திருகிறது அந்த போர்களில் பார்க்காத கொடூரம் இரண்டாம் ஹிட்லர் ராஜபக்சேவால் நிகழ்த்திருகிறது.
           மனிதன் தன் ஆணவத்தின் அதிகாரத்தின் உச்சநிலையை (பைதியகாரதனத்தை) அடுத்தவர் அழிவில் சுகம்தேடும் அயோகியதனத்தை,வரம்பு மீறிய செயலை தன்னுள் இருக்கும் மனநோயை காட்டும்  மதிகெட்ட ராஜபக்சேவின் வெறியாட்டம் உலகத்தை உலுக்கி உள்ளபோது இந்திய மட்டும் இளித்துக் கொண்டும் கைகுளுக்கிக்கொண்டும் இருப்பது நானும் உன் இனம்தான் ராக்சச இனம் என்று சொல்வதுபோல் உள்ளது.
இத்தனை உயிர்கள் உங்கள் நாட்டில் மதிப்புதான் என்ன ராஜபக்சே? எதை சாதித்துவிட்டதாக சிரிக்கிறாய் ராஜபக்சே உலகம் உன்னை உற்றுகவனிதுக்கொண்டிருகிறது. இன்று உனது வெற்றி என்று கொண்டாடும் கொடூரம் நாளை உனக்கும் வரும். 50 லச்சம் மக்களுக்கு மேல் கொன்ற ஹிட்லரும் பெரிதாக வாழ்த்துவிடவில்லை இன்று மட்டுமல்ல உலகம் இருக்கும் வரை உலகம் இயங்கும்வரை ஹிட்லரை  வசைபாடும் அணைத்து மக்களும் உன்னையும் சேர்த்து வசைபாடுவார்கள் என்பதை மறந்துவிடாதே.

 


இந்த குழந்தைகளின் மரணம் உன்னை நரகத்தின் வாசலுக்கு கொண்டுசேர்க்கும். நீ மனிதனல்ல அரக்கன் ராஜபக்சே! அரக்கன்!