திங்கள், ஆகஸ்ட் 22, 2011

தீதும் நன்றும் பிறர்தர வாரா...



                                           டெல்லியில் உள்ள ராம் லீலா  மைதானத்தில் ஊழலை எதிர்த்து அன்னா ஹசறேவின் 7 ஆம் நாள் உண்ணாவிரதம் அரசியல் சானக்கியர்களின் தந்திரம் எடுபடாது என்பதற்கு ஒரு உதாரணம். டெல்லி  முதலமைச்சர் ஷீலா திக்சித், டெலிகாம் மினிஸ்டர் கபில்  சிபில், பா.சிதம்பரம்  மற்றும் பிரணாப் முகர்ஜி இனி  எவ்வளவு
கூவினாலும் அண்டங்காக்கா பருந்தாகாது. காங்கிரஸ் செய்த சாதனையாக
நாட்டை பற்றிய அக்கறையே இல்லாமல் திரிந்த இளைய சமுதாயத்தை ஒன்றுபட்டு நாடிட்காக போராடும் குணத்தை கொடுத்திருக்கிறது அதற்கு காங்கிரஸ் 
ஒருவிதத்தில் நாடு நன்றிசொல்ல வேண்டும்.

                      இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்றால் நாட்டுமக்கள் ஒரு அணியாகவும், ஆட்சி செய்பவர்கள் ஒரு அணியாகவும் நின்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருப்பது போல் இருக்கிறது. அந்த விளையாட்டில் இங்கிலாந்த் சென்றுள்ள நமது இந்திய அணி அடிமேல் அடி  வாங்கிகொண்டு எப்படி பலமிழந்து பழங்கதை பேசிகிறது அப்படி பேசிக்கொண்டிருகிறார் நமது பிரதமர். அவர் தோனி போன்று மிகவும் பொறுமைசாலி என்று மக்களை நம்பவைக்கிறார். பேசாமல் இருப்பது பொருமைசாளிதனம் என்றால் மற்ற அமைச்சர்கள் வாய்கிழிய மற்றவர்களை வசைபாடுவது என்னதனம் பொருமைசாளிதனமா? அல்லது
போக்கிரித்தனமா?.

                        இந்தியா எப்போதுமே ஒரு உதாரணமாக மற்ற நாடிட்கு காட்சியளித்து கொண்டே இருக்கிறது. அப்போது ஆங்கிலேயர்கள் நம்மை அடிமை படுத்தியபோது தேசதந்தை காந்தி அவர்களின் போராட்டம்
மற்ற நாடிட்கு புதுமையாக இருந்தது. மற்ற நாடுகள் தன்னை சுதந்திரம் உள்ள நாடக உயர்த்த  ஆயுதத்தை கையில் ஏந்திய போது இந்திய மட்டும் தேசிய கொடியை கையில் ஏந்தி உயிரை ஆயுதமாக பயன்படுத்தியது.
அப்படி சுதந்திரம் வாங்கித்தந்த இந்திய திருநாடு மற்ற நாடுகளுக்கு முன் உதாரணாமாக திகழ்தது. இந்தியாவின் போரட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டவர்களில் நெல்சன் மண்டேலாவும் ஒருவர். அவர் தனது நாட்டை சுதந்திர நாடக்க இந்தியாவின் வழியை கடைபிடிக்க வேண்டும் என்று குறிபிடுகிறார் என்றால் எந்த  நாடும்  இதுவரை சந்தித்திராத ஒரு  புதுமையை இந்தியா தனது கொள்கையாக செய்ததுதான் என்பது மிகைபடுதபடாத உண்மை வாக்காகும்.

                                    அப்படிப்பட்ட இந்தியா மற்றொரு உதாரணமாக திகழ்வது ஊழல் என்னும் மிகபெரிய அவமானசின்னம்தான். நேற்று நாட்டை  சுதந்திரமாக்க கொடுத்த உயிரின் விலையை, பலரது தியாகத்தை இன்று ஆட்சியாளர்கள் விலைபேசி விற்றுவிட்டனர். நாட்டையும், நாட்டு மக்களையும் பற்றி ஒரு பழைய படத்தில் பி.யு. சின்னப்பா அவர்கள் பேசும் வசனம் " இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்" என்பார் அதைப்போலத்தான் இன்று இந்த வசனம் வேறுவிதமாய் காங்கிரஸ் அமைச்சர்கள் வாயில் இருந்து பிரதிபலிக்கிறது.

                                     
                          முன்பு சரித்திரத்தை புரடிபார்த்தல் சர்வாதிகாரம் எப்போதும் நிலைத்ததில்லை. அப்படி பட்ட சர்வாதிகார முயற்சிகள் காங்கிரஸ் எப்போதும் கைவிடுவதாக இல்லை. 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டுவரை இந்திரா காந்தியின் ஆட்சியில் அவசறன நிலை பிரகடனபடுதப்பட்டது அனைவர்க்கும் தெரிந்ததே. அப்படியான ஒரு நிலையை இப்போது மக்கள் கொண்டுவந்த நிறுத்தி இருகிறார்கள். முன்பு நம் தலைவர்கள் சுதந்திர உரையில் " செய் அல்லது செத்துமடி" என்றனர் இப்போதும் அதே வார்த்தைதான் அன்னா ஹசறேவும் பயன்படுத்துகிறார். " ஊழலுக்கு எதிராக லோக் பால் மசோதாவை நிறைவேற்று அல்லது பிரதமர் பதவியை ராஜினாமா செய்". நம் பிரதமரால் எப்படி முடியும்? ஊழலுக்கு எதிராக அப்படி ஒரு லோக் பால் மசோதாவை கொண்டுவர, அவர்களது சொத்து சுஸ் பேங்க்கில் மெத்தை விரித்து தூங்கும் போது.

                                   பணவீக்கத்தை கட்டுபடுத்த முடியாத பிரணாப் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதலாவது செய்யாமல் இருக்கலாம். யார் என்ன சொன்னாலும் பெட்ரோல்
விலையை  குறைகமுடியாது என்கிறார். மக்கள் இந்த சுமையை சுமந்துதான் ஆகவேண்டும் என்கிறார். அவர் ஒரு நிதியமைச்சர் போல் பேசுவதில்லை ஒரு சர்வாதிகரிபோல் பேசுகிறார். பா.சிதம்பரம் சொல்லவே வேண்டாம் தனது மாயஜால  பேச்சுகளால் எல்லோரையும் மதி மயங்க வைப்பதில் வல்லவர். கபில் சிபில் யாரையும் விட்டுவைபதே இல்லை எப்போதும் மற்றவர்களை வசைபாடுவதில் வல்லவர். ஷீலா திக்சித் காமன் வெல்த் போட்டியில் கல்மாடியோடு சேர்த்து அவர்மீதும் ஊழல் புகார் உள்ளது. இவர்களை கொண்டுதான் சட்டத்தை உருவாக்க படுமானால் Dr . அம்பேத்கார் வகுத்த சட்டங்கள் கூட இவர்களை  பாதித்தால் அது அவர்களுக்கு செல்லுபடியாகாது போல் உள்ளது இன்றைய நிலைமை.
                                 ஒன்று  காங்கிரஸ் தனது கொள்கையை மக்களுக்காக என்ற அடிப்படையில் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் மக்கள்  அவர்களை  மாற்றிவிடுவார்கள் என்பது உறுதி.

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

ஒரு கவிஞனின் காதல் (வசன கவிதை) பாகம்- 5 ...

முன் கதை சுருக்கம்: கதிரவன் ஒரு கவிஞன் அவன் தனது நாடிட்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வருகிறான். அவன் வரும்வழியில் ராஜகுமாரி செவ்வந்தி யானை மீது உலா  வருகிறாள். செவ்வந்தியை பார்த்தவுடனே காதல் கொள்கிறான் கதிரவன். ராஜகிரியின் அரசனாகிய ராஜவர்மன் தன் மகள் செவ்வந்தியை திருமணம் செய்துவைக்க ஒரு போட்டியை அறிவிக்கிறார் அது அறிவு சம்பந்தப்பட்ட போட்டி என்பதால் அதை பிற  ராஜாக்களும், ராஜகுமாரகளும் 
குழப்பம் அடைகின்றனர். அந்த போட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கதிரவன் 
 கலந்துகொள்ள தனது தந்தையாகிய கண்ணபிரானிடம் அனுமதி கேட்கிறான். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியேறுகிறார் கண்ணபிரான். போட்டி நாள் வருகிறது அந்த போட்டி மைதானத்தில் செவ்வந்தி எதிர்பாரத விதமாக கதிரவனை பார்த்து மனதை பரிகொடுக்கிறாள்.ராஜா ராஜவர்மர் போட்டியின் விதிமுறையை மாற்றிவிட்டதாகவும் அதன்படி யார்வேண்டுமானாலும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை கேட்டு மற்ற நாட்டு மன்னர்கள் கோபமடைகின்றனர்.
                                                     (இனி...)
.மன்னரின்...
அறிக்கையில்
உடன்பாடற்ற வரம்பன் 
போட்டியை விட்டு 
வெளியேறினான்!

அவன்...
வெளியேறியதற்குக்
காரணம்
கோபம் மட்டுமல்ல
அவனுக்கு தோல்விமேல்
கொண்ட பயமும்தான்,
வரம்பன் வெறும் வாய்ச்சொல்
வீரன்!

மற்ற மன்னர்கள்...
அவரவர் இருக்கையில்
அமர்ந்தனர்
எல்லோருக்கும் முன்பு ஒரு
ஓலை வழங்கப்பட்டது
அதில்
செவ்வந்தி எழுதிய இருவரிக்கவிதை
இடம்பெற்றிருந்தது!

 அனைவரையும்...
பார்த்து ராஜா ராஜவர்மர்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள
ஓலையில் என் மகளாகிய
செவ்வந்தி எழுதிய
இருவரிக்கவிதை உள்ளது
இதை யார் பூர்த்தி செய்து
அதற்குரிய தக்க விளக்கத்தை
அளிகிரார்களோ அவர்களே
வெற்றிபெற்றவர்கலாக அறிவிக்க
படுவார் என்று அறிவித்துவிட்டு
இருக்கையில் அமர்ந்தார்!

எல்லா மன்னர்களுக்கும்...
விழி பிதுங்கியது. இருவரிகளும்
என்னவென்றே புரியாதவர்கள்
எப்படி இருவரியை பூர்த்திசெய்வார்கள்! 

அப்படி...
அந்தக்கவிதை
புரிந்தவர்களுக்கும்
பூர்த்தி செய்யும்
புலமை கிடையாது!

கதிரவனின்...
கண்கள் கலங்கியது
உணர்ச்சி வெப்பத்தில்
இமைகள் இமைக்க
மறுத்தது, காரணம்
முன்தினம் இரவு
அவனுக்கு உதித்த
அதே கவிதையின்
முதல் இருவரிகளை
பார்த்து செவ்வந்திக்கும்
தனக்கும் உள்ள கருத்தொற்றுமையை
நினைத்து நெகில்தபடியே அதை
பூர்த்தி செய்தான்!

பல வில்லேந்திய...
அர்ஜுனர்கள் 
கவி சொல்லேந்தத் தெரியாத 
காரணத்தால்
தோல்வி அடைந்தனர்!

கதிரவன்...
எழுந்தான்
அந்தக் கவிதையில்
பெண்ணியம் ததும்பியது,
காதல் அரும்பியது,
 எடுத்தான் ஓலையை
படிக்கவில்லை கவிதையை
பாடியே விட்டான்!

செவ்வதியும்...
மாடத்தில் இருந்தபடி
சந்தோஷத்தில்  துள்ளினாள்,
அவள் எழுதிய
அந்தக் கவிதையின்
கடைசி இருவரிகள்
வார்தைமாறாமல்
கதிரவன் பாடிக்கொண்டிருப்பதை
கேட்டு வியந்தாள்!

பொதுவாக...
காதலித்த பிறகுதான்
அதைப்பற்றி கவிதை
எழுதுவார்கள் ஆனால்
இங்கோ கவிதை எழுதிய
பிறகுதான்
காதலிக்க ஆரம்பிகிறார்கள்!



மக்கள் கூட்டம்...
ஆர்பரித்தது
ராஜா ராஜவர்மர்
மகிழ்வோடு
கதிரவனை கட்டியணைத்து
பாராட்டினார்
செவ்வந்தி
நாணத்தோடு வந்து
கதிரவன் கழுத்தில்
மாலையிட்டாள்!

மன்னர்கள் விரக்தியோடு...
ஊர் திரும்பினர்,
மக்கள் மகிழ்ச்சியோடு
வீடு திரும்பினர்!

கதிரவன்...
செவ்வந்தி
திருமணம் முடிந்தது
கதிரவன்
செவ்வந்தியின் கணவனானான்!

ஒரு...
கவிஞனின் திறமைக்கு
பரிசாக செவ்வந்தி என்ற
கவிதையே பரிசாக
பெற்றுவிட்டான்!

                    (முற்றும்...)





வியாழன், ஆகஸ்ட் 18, 2011

ஒரு கவிஞனின் காதல் (வசன கவிதை) பாகம்- 4 ....

முன் கதை சுருக்கம்: கதிரவன் ஒரு கவிஞன் அவன் தனது நாடிட்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வருகிறான். அவன் வரும்வழியில் ராஜகுமாரி செவ்வந்தி யானை மீது உலா  வருகிறாள். செவ்வந்தியை பார்த்தவுடனே காதல் கொள்கிறான் கதிரவன். ராஜகிரியின் அரசனாகிய ராஜவர்மன் தன் மகள் செவ்வந்தியை திருமணம் செய்துவைக்க ஒரு போட்டியை அறிவிக்கிறார் அது அறிவு சம்பந்தப்பட்ட போட்டி என்பதால் அதை பிற  ராஜாக்களும், ராஜகுமாரகளும் 
குழப்பம் அடைகின்றனர். அந்த போட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கதிரவன் 
 கலந்துகொள்ள தனது தந்தையாகிய கண்ணபிரானிடம் அனுமதி கேட்கிறான். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியேறுகிறார் கண்ணபிரான். போட்டி நாள் வருகிறது அந்த போட்டி மைதானத்தில் செவ்வந்தி எதிர்பாரத விதமாக கதிரவனை பார்த்து மனதை பரிகொடுக்கிறாள்.
                                                        (இனி...)
 
. கதிரவன்....
வெச்ச கண்
பின்வாங்காமல்
செவ்வந்தியை
பார்க்க!
 
செவ்வந்தியோ...
ஓரக் கண்ணால்
கதிரவனை
அளக்க!
 
இருவரையும்...
பிரித்து
சுயநினைவிற்கு
கொண்டுவந்தது
ராஜ ராஜவர்மரின்
பேச்சு!
 
ராஜகிரியின்...
ராஜா மட்டுமல்லாது,  
என் மகளாகிய
செவ்வந்தியின்
தந்தையாகவும்
நான் இருப்பதால்
என் மகளின்
விருப்பத்தை
பூர்த்தி செய்யும்
விதமாக
உடல் வலிவு போட்டி
வைக்காமல்
அறிவுப் போட்டியை
வைத்திருக்கிறேன்!
 
என்னுடைய...
மகளின்
மற்றொரு விருப்பதை
இங்கே முன்வைக்கிறேன்
இந்தப்  போட்டியில் கலந்துகொள்ள
ராஜா என்கின்ற தகுதி
மட்டும் போதாது
எவன் ஒருவன்  பெண்ணை
அன்பால் ஆள்கிறானோ
அவன் கண்டிப்பாக
அரசையும் மிக
சிறப்பாக ஆள்வான்!
 
நாட்டை...
ஆள்பவன் 
அரசனே 
ஆனாலும் 
முதலில் 
அவன் 
வீட்டை
நல்லபடியாய்
ஆள்பவனாக
இருத்தல்
வேண்டும்!
 
ஆகையால்...
என் மகளின்
விருப்பதிட்கேட்ப
விதிமுறைகளை
மாற்றி அமைத்திருக்கிறேன்!
 
அதன்படி...
இந்த  போட்டி இங்குள்ள
யார் வேண்டுமானாலும்
கலந்துகொள்ளலாம்
அவர்கள் திருமணம் 
ஆகாத  முப்பது
வயதிற்குள்
இருக்கவேண்டும்!
 
அந்த...
ஆடவர்
மன்னனாக
இருக்கவேண்டும்
என்ற அவசியமில்லை
நல்ல மனிதனாக
இருக்கவேண்டும்
என்பதே
அவசியம்!
 
யார் இதட்கு...
தகுதி உடையவரோ
அவர்கள் அந்த காலி
இருக்கையில் அமரலாம்
என்று தன் உரையை முடித்தார்
ராஜா ராஜவர்மர்!
 
மக்களுக்கும்...
மற்ற நாட்டு மன்னர்களுக்கும்
மிகப்பெரிய அதிர்ச்சி- ஆனால்
கதிரவனுக்கோ
மிகப்பெரிய மகிழ்ச்சி!
 
சற்றும்...
யோசியாமல்
கதிரவன்
அந்த இருக்கையில்
சென்று அமர்ந்தான்!
 
 
மன்னர்கள்...
அனைவரும்
ராஜா ராஜவர்மரை
எதிர்த்து கேள்வி கேட்டனர்!
 
மன்னர்களை...
வரவழைத்து விட்டு
சாதாரண மக்களை
போட்டியில் கலந்துகொள்ள
வைப்பதா? இது எங்களை
அவமானபடுத்தும்
செயல் ஆகாத? என்று
கோபப்பட்டனர்!
 
அதற்கு...
ராஜா ராஜவர்மர் எழுந்து
மன்னர்களே
அமைதி நான்
மன்னன் என்பதாலோ
நீங்கள் மன்னர்கள்
என்பதாலோ
பிடிக்காத ஒருவரை
என் மகளுக்கு
திருமணம் செய்துவைக்க
முடியாது!
 
இது...
பெண்களின் உணர்வுகளை
மதிக்கவேண்டிய
காலம், அவர்களுக்கும்
அவர்களது வாழ்கையை
முடிவெடுக்க சம உரிமை
கொடுக்கவேண்டிய காலம்!
 
ஆகையால்...
என் மகளின்
விருப்பப்படிதான்
இந்த போட்டியை நடத்துகிறேன்
திறமை உள்ளவர்கள்
இந்த போட்டியில் ஜெயித்து
என் மகளை திருமணம்
செய்துகொள்ளலாம். இதில்
உடன்பாடு இல்லாதவர்கள்
இப்போதே போட்டியில் இருந்து
விலகலாம் என்று கூரி தன்
இருக்கையில் அமர்ந்தார் ராஜவர்மர்!
 
                                                            (  போட்டி தொடரும்...)
 
 
 
 
 
 
 
 

புதன், ஆகஸ்ட் 17, 2011

ஒரு கவிஞனின் காதல் (வசன கவிதை) பாகம்- 3

முன் கதை சுருக்கம்: கதிரவன் ஒரு கவிஞன் அவன் தனது நாடிட்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வருகிறான். அவன் வரும்வழியில் ராஜகுமாரி செவ்வந்தி யானை மீது உலா  வருகிறாள். செவ்வந்தியை பார்த்தவுடனே காதல் கொள்கிறான் கதிரவன். ராஜகிரியின் அரசனாகிய ராஜவர்மன் தன் மகள் செவ்வந்தியை திருமணம் செய்துவைக்க ஒரு போட்டியை அறிவிக்கிறார் அது அறிவு சம்பந்தப்பட்ட போட்டி என்பதால் அதை பிற  ராஜாக்களும், ராஜகுமாரகளும் 
குழப்பம் அடைகின்றனர். அந்த போட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கதிரவன் 
 கலந்துகொள்ள தனது தந்தையாகிய கண்ணபிரானிடம் அனுமதி கேட்கிறான்
                             (இனி....)


. கதிரவா...
                     நீ இந்த நாடிட்குப்
                     புதியவன் உனக்கு  
                            இந்த நாட்டின் சட்டம்
       தெரியாது- நீ
                                    அந்த போட்டியை பார்க்க
                                      மட்டுமே அனுமதியுள்ளது
                    அந்த போட்டியில்
                            கலந்துகொள்ள அல்ல!

             ராஜாக்களும் ...
                                ராஜாக்களின் மகன்கள் 
                 மட்டுமே கலந்து
                  கொள்வார்கள் - நீ 
                    ராஜவின் மகனல்ல
                       தேரோட்டியின் மகன்
                                அதனால் உன் நினைப்பை
                   மாற்றிகொள் என்று
                    கூரிவிட்டு சென்றார்
       கண்ணபிரான்!

     சில நேரம்....
                   அறிவுக்கு எட்டியது
                                மனதிற்கு எட்டுவதே          
இல்லை
                                           கதிரவன் மனது காந்தம் போல்
                       செவ்வந்தியின் முகமே
கண்ணுக்குள்
                  ஒட்டிகொண்டிருந்தது!

போட்டி நாள்...
                              அருகில் வந்துகொண்டிருந்தது
                     அவன் அறிவிற்கு கவிதை 
                                 தீனிபோட்டுகொண்டிருந்தது அவன்
                                   மனதிற்கு செவ்வந்தியின் நினைவு
                 தீனிபோட்டுகொண்டிருந்தது!

சாதரணமாக....
ஒருவன் காதலித்தால்
                          கவிதை என்றால் என்னவென்றே
             தெரியாதவன் கூட கவிதை
எழுதுவான்!

காதலிப்பவன்...
முன்னமே ஒரு
கவிஞன்  என்றால்
கவிதை எழுத
           சொல்லிய தரவேண்டும்!



காதல்...
வந்துவிட்டால்
ராஜா மகளென்ன
ராப்பிச்சைகாரன் 
மகளென்ன
கற்பனையில்லேயே
காலம்  ஓடிவிடும்!

கதிரவன்...
கற்பனை ஓட்டம்
குதிரை ஓட்டத்தை விட
அதிகமாக இருந்தது!

தகுதி  என்பது...
திறமையில் உள்ளது
அதை பிறப்பொடு
ஒப்பிடுவது
அநாகரிகமானது என்பது
கதிரவன் வாதம்!

பிறக்கும்...
எல்லோரும்
ராஜகுமாரர்கலாக
பிறப்பதில்லை- அப்படி
பிறந்தவர்கள் என்பது
மட்டுமே செவ்வந்தியை
மணக்க தகுதியில்லை என்று
தன்னுடைய கோபத்தை
கவிதையில் கட்டிகொண்டிருந்தான்
கதிரவன்!

போட்டிக்கான நாள்....
வந்தது
போட்டிக்கு முன்பே
பேட்டியளிதவர்கள்
மூர்கமாக
அமர்ந்திருந்தனர்!

எல்லா...
மன்னர்களும் 
அமர்ந்த பிறகு 
ஒரு இருக்கை
காலியாக
இருந்தது!




கூட்டம்...
அதிகமாக
கூடி இருந்தது
மன்னர்களும்,
மன்னர் மகன்களுடைய
மனம் வெற்றியை
நாடியே இருந்தது!

செவ்வந்தி...
சிவந்த மேனியில்
உயர்ந்த ஆடையில்
தேவதையை போல்
தவழ்ந்து வந்தாள்!


உதிர்ந்த பூக்கள்...
கூட அவள்
நடந்து வருவதை
பார்த்து
புன்னகை
பூத்தது!

கதிரவன்....
கண்கள் செவ்வந்தியை
தாண்டிச்  செல்லவில்லை!

செவ்வந்தி...
 அவன்
வாழ்கையை
அழகாக்க வந்த
சாமந்தி
என்று அவன்
மனம் இடைவிடாது
சொல்லிக் கொண்டிருந்தது!


அனைத்து அரசர்களும்...
ஆவலோடு செவ்வந்தியை
பார்த்தனர் அனைவரது
கவனமும்
செவ்வந்தி என்னும் அழகை
சொந்தமாக்கி ஆளவேண்டும்
என்பது!

 கதிரவனுக்கு...
மட்டும்  அவள் மனதை
ஆளவேண்டும் என்பது! 


ஒரு பெண்...
தான் சந்திக்கும்
ஆடவன் எந்த நோக்கோடு
வருகிறான், எந்த கண் கொண்டு
தன்னை பார்கிறான்
என்னும்  பாடம்
படிக்காமலே உண்மையாக உள்ள
பெண் உள்ளத்திற்கு  புரிந்துவிடும்!

அதிலும்...
செவ்வந்தியோ  சிறந்த
மதியுடையவள், ஒவ்வரு ஆணின் பார்வையை
வைத்தே அவர்களது நடத்தையை
எடைபோடும் இளவரசி அவள்,
என்பது புரியாமல்
பார்த்துகொண்டிருந்தனர் அனைவரும்!

எதிர்ச்சையாக... 
கதிரவன் கண்களை
பார்த்தாள் செவ்வந்தி
அதில் காதல்
குடிகொண்டிருப்பதை
அறிந்து கொண்டாள்!

செவ்வந்தி...
பேரழகி மட்டுமல்ல
இனிய பாடகி
ஆடும் கலையில் மேனகை
கவிதை எழுதும்
தாரகை
மனிதர்களை எடைபோடுவதில்
மணிமேகலை!

எவன் பெண்ணின்...
கண்களை 
அதிகம் நேசிக்கிறானோ,
ரசிக்கிறானோ அவன் 
பெண்களால்
நேசிக்கவும், ரசிகவும் படுவான்!

கதிரவன்...
கண்களால் விட்ட
காதல் தூதை செவ்வந்தியின்
கண்கள் ஏற்றுகொண்டது
இரு  கண்கள் விடும்
தூதை இரு
கண்கள் புரிந்துகொண்ட பின்
 வார்த்தை தான்
எதற்கு?

கவிச்சக்கரவர்த்தி கம்பனும்....
தன் கவிதையில்
ராமன், சீதை காதலை
" அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்" அவ்வளவுதான் 
காதல், திருமணம் முடிந்துவிட்டது
என்று ஒரு வரிக்குள் காதலை சொன்ன
கம்பன் பிறந்த நாடல்லவா, ஆகையால்
முதல் பார்வையிலேயே கதிரவனை செவ்வந்திக்கு
பிடித்து விட்டதற்கு ஆச்சரியம்
எதற்கு?

இருவரது கண்ணும்...
கலந்தது
ஒரு நிமிடமானாலும்
ஒரு யுகம்
பார்த்து பழகியது போல்
ஒரு
உணர்வு இருவருக்குள்ளும்!

                                           (காதல்  தொடரும்...)










செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

இப்போது நமக்கு தேவை பாதுகாப்பா? அணுமின் நிலையமா?


நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதன் பேரில் சர்வ நாசத்தை நோக்கி செல்கிறது இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய   அணுமின் நிலையத்தை உருவாக்கும் திட்டம்.  இப்போது நம் முன் நிற்கும் கேள்வி இதுதான் நம் நாடிட்கு தேவை பாதுகாப்பா? அல்லது முதலாளிகளுக்கு லாபம் சேர்க்கும் அணுமின் நிலையமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். அந்த முடிவு செய்வதற்குள் வேறொரு பிரச்னையை உசுப்பேத்தி வேறொரு பிரச்னையை நம் தலையில் சுமத்தி மக்களை குழப்பிவிடுவதில் நம் நாட்டு அரசியல் சாணக்கியர்களுக்கு சொல்லியா தரவேண்டும். ஜப்பானில் அணுமின் நிலையம் வெடித்து பலர் கதிர்வீச்சு காரணமாக பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே, அதை அறிந்ததை வீட பயந்ததே அதிகம் அப்படி இருக்க மக்களுக்கு தேவை பாதுகாப்பா? இல்லை மின்சார காப்பா? என்பது  விடை தெரிய வேண்டிய முக்கிய கேள்வியாக நம் மனதில் நிற்கின்றது.
                    மின்சாரம் என்பது மனிதனின் வசதிக்காக படைக்கபட்டது.அந்த
வசதிக்கு நாம் அடிமையாகி இப்போது வசதி முக்கிய தேவையாகி விட்டது.
பசி, தாகம், தூக்கம்  என்பதெல்லாம் போய் பணம், ஆடம்பரம், அதிகாரம் என்பது முக்கிய தேவையாகிவிட்டது இப்போது. இயற்கை அழிகிறது, அழிகப்படுகிறது  என்று காட்டு கத்தலாக கத்தினாலும் யார் காதிலும் கேட்கபோவதில்லை. அதன் அபாயம் மனிதனை ஆட்டிவைக்கும் போது கதறி அழுது பிறியோஜனம் இல்லை.

இப்போது வாழும் தேனிகள் இறந்தால் மனிதனின் வாழ்க்கை ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக அர்த்தம் காரணம் தேனிகள் இல்லை என்றால் பூக்களுக்குள் மகரந்த சேர்கை நடக்காது பிறகு பூமியின் தன்மை முழுவதாக 
மாறிவிடும். இப்போதே பல தேனிகள் அலைபேசி கதிர்வீச்சல் உயிரிழந்து விட்டது, சிட்டுகுருவி இல்லாமல் ஆகிவிட்டது. தவளைகள் இனம் அழிந்து கொண்டே வருகிறது. தாவரங்கள் என்டோசல்பான் போன்ற பூச்சிக்கொல்லி மருந்தால் புண்பட்டு விட்டது. ஆறுகள் சாக்கடையாகிவிட்டது. கடல் மாசடைந்து வருகிறது. பனிக்கட்டி மலை உருகிக்கொண்டு வருகிறது. யானைகள் சாகடிக்கப்படுகின்றன.வாயுமண்டலம் நச்சு புகையால் அமில மழை பொழிய தயாராகி கொண்டிருகிறது, காடுகள் அழிக்க பட்டுக் கொண்டிருகிறது. பூமி வெப்பமயமாகி கொண்டிருகிறது, மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது, ஓசோன் படலம் ஓட்டையாகி விட்டது.
 இவ்வளவும் மனிதனின் சுயநலத்தால் நடந்தவை. இது பத்தாதென்று தீவிரவாதம் தலைதூக்கி அங்கங்கே வெடி குண்டுகள் வடித்து கொண்டிருகிறது, வாகன விபத்துகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இவ்வளவும் தாண்டி பூமி சுழன்றுகொண்டு தன் கடையை சரியாக செய்கிறது என்றால் அது நம் அதிஷ்டம். இவ்வளவும் பத்தாதென்று இப்போது அணுமின் நிலையம் அமைத்து சுற்றுப்புற சூழலை அழிக்க அரசே முன்வருகிறது என்றால் எப்பேர்பட்ட அரசை நாம் ஆட்சியில் அமர்தியிருகிறோம் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். இப்போது நமக்கு தேவை பாதுகாப்பா? அணுமின் நிலையமா? மக்களே கொஞ்சம் நல்ல தீர்ப்பை தேர்வு செய்யுங்கள்.

போராடுவோம்! போராடுவோம்! ஊழல் ஒழியும் வரை போராடுவோம்...


                                                    நேற்று சுதந்திர தினத்தை சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று கொண்டாடினோமா? அல்லது இன்னொரு சுதந்திரம் பெறவேண்டும் என்று  கொண்டடினோமா? என்பது தெரியவில்லை. ஆனால் மீண்டும் ஒரு சுதந்திரம் ஊழலுக்கு எதிராக  வேண்டும் என்பது  இன்று அன்னா ஹசாரே கைது நமக்கு சாட்சியமாகியுள்ளது. மத்திய அரசு ஒரு எரிமலை சீருவதட்கு முன் அதை கட்டுப்படுத்த நினைத்து தண்ணிருக்கு பதில் எண்ணையை ஊற்றிவிட்டது. அன்னா ஹசாரே கைது என்ற தவறான முடிவு ஊழலை ஊக்குவிப்பதாக உள்ளது. இந்திய ஒரு ஜனநாயக நாடு அதை அடக்குமுறையால் கைப்பற்ற எந்த நடாலும் முடியாத போது ஒரு  பணநாயகம் முரண்டு பிடிப்பதா?

                                                இந்த நாட்டுடைய வரலாறு தெரிந்தவர்கள் இந்த நாட்டை நேசிப்பவர்கள் கண்டிப்பாக ஊழலுக்கு எதிராக போராடுவார்கள். ஒரு போராட்டமில்லாமல் இந்த பூமியில் பூ கூட பூப்பதில்லை. என்டோசல்பான் மருந்து தெளித்து நிலத்தில் விசத்தன்மை ஊட்டிவிட்ட பிறகு இந்த பூமியில் பூ பூப்பது என்ற இயல்பான விஷயம் கூட இனி போராட்டம் தான். ஊழல் இல்லாத துறையை பட்டியலிட்டால் நமக்கு மிஞ்சுவது மிகபெரிய பூஜியமாகத்தான் இருக்கப் போகிறது. சீனாவை எடுத்துக்கொண்டால் ஒவ்வரு ஒலிம்பிக் போட்டிகளிலும்,காமன்வெல்த் போட்டிகளிலும் எத்தனை தங்கம் பெற்றது யார் முதலிடத்தில் வந்தார்கள் என்று ஆவலுடன் பார்ப்பார்கள். ஆனால் நம் இந்திய தேசத்தில்,காந்தி பிறந்த மண்ணில் காமன்வெல்த் போட்டிகளில் எத்தனை கோடி பணம் சுருட்டினார்கள் யார் அதில் முதலிடம் என்று பட்டியலிடும் அவலம் அது அவலம் அல்ல  நமக்கு கேவலம். ஒரு ஜனநாயகம் பணநாயகமாக மாறும் போது அது பினனாயகமாக நாறும் என்பது மூக்குள்ளவர்களுக்கு தெரியும்.


இப்போது இந்தியாவுக்குள் ஓடவேண்டியது ஊழல் என்னும் சாக்கடை கலந்த ரத்தாறல்ல நேர்மை என்னும் சுத்தாறு. தேசத்திற்காக தேசியக்கொடியை கையில் பிடித்தபடியே உயிரைவிட்ட திருப்பூர் குமரனையும், கொள்கைக்காக தன் உயிரை தியாகம் செய்த வாஞ்சினாதனையும், நாடிட்காக தூக்குக் கயிறை முத்தமிட்ட பகத் சிங்கையும், நாட்டை அடிமை நிலையில் இருந்து சுதந்திர நிலைக்கு கொண்டுவர செக்கிலுத்த வா. ஊ. சிதம்பரத்தையும், சுப்ரமணிய சிவாவையும், சுப்ரமணிய பாரதியையும், நாடிட்காக ஒரு படையை உருவாக்கிய உன்னத தலைவன் சுபாஷ் சந்திர போஸ்சையும், சுதந்திரமே உயிர் மூச்சாக கருதிய
தேசதந்தை மகாத்மா காந்தியையும் இன்னும் பல தேச விடுதலைக்காக போராடிய பல தலைவர்களையும் தியாகிகளையும் நாங்கள் இன்னும் மறக்க வில்லை. அதை மறந்தால் நாங்கள்  மனிதர்கள் இல்லை.

போராடுவோம்! போராடுவோம்! ஊழல் ஒழியும் வரை போராடுவோம்...


            

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

ஒரு கவிஞனின் காதல் (வசன கவிதை) பாகம்- 2...

 . பல ஊர்...
         பல தேசத்து
         ராஜாக்களும்
                      ராஜகுமாறார்களும்
                  ராஜ்ஜியம் விட்டு  
                                   ராஜகிரியை அடைந்தனர்!

                            . எல்லோருக்கும் கவலை 
   ஒன்றுதான்
                             வாளைத் தீட்டியவர்கள்  
                                   அறிவைத் தீட்ட வேண்டும்
                         வாள்சண்டையை விட 
                                அறிவால் சண்டையிடும்
                                 போட்டி கடினம் என்பதை
                                      உணர்ந்துதான் இருந்தார்கள்!


                               .ஒரு  தேவதையை மணக்க..
                        கொஞ்சம் வேதனையும்
                       சுமக்கதானே வேண்டும்!

.எல்லோரும்...
                             வாளை  புறம் தள்ளிவிட்டு
                                வெள்ளைத்தாளை  கையில்
எடுத்தனர்!

                           . கவிதை என்ன கடையில்
                                     வாங்கும் விஷயமா - இல்லை
                                  எல்லோரும் கவிஞனாகிவிட
முடியுமா?

                             . இது என்ன ஒரே நாளில்...
               வந்துவிடக் கூடிய
காரியமா?

                           .அழகை அடிமைப்படுத்த...
            நினைபவனுக்கும்
அழகுக்கு
                  அடிமைப்படுபவனுக்கும் 
                         வித்யாசம் இல்லையா?

                        .   இல்லை செவ்வந்திதான்...
                                   சுலபத்தில் கிடைதுவிடுவாளா
                                    காதல் பந்தி விரிக்கும் முன்பே
                                    காம ரசம் அருந்தியவர்களுக்கு
                           கவிதை எங்கிருந்து வரும்?

.  கவிதை என்பது...
                          தேன் கூட்டை உடைக்காமல்
     அதை ரசித்தபடியே
                        தேனையும் சுவைக்கும்- ஒரு
உன்னத கலை!

.அதை...
                   வாள் முனையில்
                                   வெல்ல நினைபவர்களுக்கு
                சற்று சிரமம்தான்!



                                                         . கவிதை போட்டியை...
                                                            பற்றி கேள்விப்பட்ட
                                                             கதிரவன் கைகால்
                                                             ஓடாது சிலையாய்
                                                              நின்றான்!


.கதிரவா...
  என்ன ஆனது
                       உனக்கு எங்கே போனது
           உன் மனது என்று
                     கதிரவன் சிலையென
                          நின்ற கோலத்தை பார்த்து
                          கேட்டார் கதிரவன் தந்தை
கண்ணபிரான்!

. தந்தையே...
           ராஜா ராஜவர்மன்
                                     அறிவித்த கவிதைப்போட்டியை
                           அறிந்தீர்கலா?   அதில் நான்
                             கலந்துகொள்ளலாமா? என்று 
       தன் தந்தையிடம்
            கேட்டான் கதிரவன்!
                                                                                                                  (தொடரும்....)