வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

இதுதான் காதல் என்பதா?...



விரிசல்...
விழுந்த மனதுடன்
என்னவளே
உன்னை காண்கிறேன்!

இரவு நேரத்தில்...
வட்ட நிலா தெரியவில்லை
வாடாத நிலா- உன்
முகம் தான் தெரிகிறது!

வேடிக்கையை...
பார்த்தாயா உன்னைப்
பார்ப்பதே- என்
வாடிக்கையாகிவிட்டது இப்போது!

முதல்முறை...
விழித்துக்கொண்டே
கனவு காண்கிறேன்!

விழியின்...
வழியால் ஏற்பட்ட
விழைவுகள் தானோ  
இவைகள்!

பூட்டிய...
என் மனக்கதவில்
புகுந்து வாட்டும் உன் 
புன்னகைத் தவளைகள்!


வில்லில் ஏற்பட்ட...
கோளாறோ என்னவோ
அம்புக்கு ஆவேசம்
குறைந்தது!

அது போலத்தான்...
உன்னை   பார்க்காமல்
நாளெல்லாம்
நானிருப்பது!

இதுதான் காதல் என்பதா?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக