மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்னும் பெயர்தான் M . S . சுப்புலட்சுமி என்று எல்லோராலும் அழைக்கப்படும் இசை மேதை. இவரை பற்றிய ஒரு சிறு குறிப்பு. இவர் வாழ்ந்த காலம் (16 September 1916 – 11 December 2004 ) ஆகும். இவர் மதுரையில் பிறந்தவர். இவர் கர்நாடக இசைக்காக "பாரத ரத்னா பெற்ற முதல் இசைக்கலைஞர். இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசை தொகுப்பை வெளியிட்டவர். இவர் 1929 ஆம் ஆண்டு தனது
13 ஆவது வயதில்முதல் அரங்கேற்றத்தை மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றினார். இவர் முதல் முதலாக மக்கள் முன்பு அரங்கேறியது இவருடைய 16 வது வயதில் கும்பகோணம் மகாமகம் விழாவில்.இவர் பெற்ற பட்டங்கள் 1954 ஆம் ஆண்டு Padma Bhushan விருது ,1956 யில் Sangeet Natak Akademi விருது, 1968 ஆம் ஆண்டு Sangeetha Kalanidhi விருது, 1974 ஆம் ஆண்டு Ramon Magsaysay என்ற விருதை முதல் பெண்ணாக பெற்றார்.1975 ஆம் ஆண்டு Padma Vibhushan விருது, 1988 யில் Kalidas Samman விருது, அதனோடு 1998 ஆம் ஆண்டு Bharat Ratna விருது பெற்றவர். இவரை திருப்தி தேவஸ்தானம் இவரை ஆஸ்தான பாடகராக நியமித்தது.
M . S . சுப்புலட்சுமி அவர்கள் பாட ஆரம்பித்தால் அவர் பாடும் பாட்டாகவே மாறிவிடுவார். அவரது பாட்டு தேனை போல் சுவையானது. ஒரு பூவைப் போல் மென்மையானது. "குறை ஒன்றும் இல்லை" என்ற பாடலை பாடும் பொது அவரது கண்ணில் இருந்து நீர் வந்து நமது மனதை நிறைக்கும். ஒவ்வரு சுரமும்
நமது மனதை இனிமையாக வருடிச்செல்லும் வசந்தகாலம். வயது உடலுக்குத்தான் குரலுக்கு அல்ல என்ற குறையில்ல மனம் படைத்தவர்.
M . S . சுப்புலட்சுமி அவர்கள் தமிழ் நாடிட்கு கிடைத்த பொக்கிஷம். இவரது குரல் மனதை தூய்மை படுத்தும். இவரை இசைத்தாய் என்று அழைப்பதே பொருத்தம். இந்த குயில் மீண்டும் பிறக்காத
என்று எனக்குள் ஏக்கம். இவரை பெருமைப்படுத்துவதே எனது நோக்கம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக