டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஊழலை எதிர்த்து அன்னா ஹசறேவின் 7 ஆம் நாள் உண்ணாவிரதம் அரசியல் சானக்கியர்களின் தந்திரம் எடுபடாது என்பதற்கு ஒரு உதாரணம். டெல்லி முதலமைச்சர் ஷீலா திக்சித், டெலிகாம் மினிஸ்டர் கபில் சிபில், பா.சிதம்பரம் மற்றும் பிரணாப் முகர்ஜி இனி எவ்வளவு
கூவினாலும் அண்டங்காக்கா பருந்தாகாது. காங்கிரஸ் செய்த சாதனையாக
நாட்டை பற்றிய அக்கறையே இல்லாமல் திரிந்த இளைய சமுதாயத்தை ஒன்றுபட்டு நாடிட்காக போராடும் குணத்தை கொடுத்திருக்கிறது அதற்கு காங்கிரஸ்
ஒருவிதத்தில் நாடு நன்றிசொல்ல வேண்டும்.
இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்றால் நாட்டுமக்கள் ஒரு அணியாகவும், ஆட்சி செய்பவர்கள் ஒரு அணியாகவும் நின்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருப்பது போல் இருக்கிறது. அந்த விளையாட்டில் இங்கிலாந்த் சென்றுள்ள நமது இந்திய அணி அடிமேல் அடி வாங்கிகொண்டு எப்படி பலமிழந்து பழங்கதை பேசிகிறது அப்படி பேசிக்கொண்டிருகிறார் நமது பிரதமர். அவர் தோனி போன்று மிகவும் பொறுமைசாலி என்று மக்களை நம்பவைக்கிறார். பேசாமல் இருப்பது பொருமைசாளிதனம் என்றால் மற்ற அமைச்சர்கள் வாய்கிழிய மற்றவர்களை வசைபாடுவது என்னதனம் பொருமைசாளிதனமா? அல்லது
போக்கிரித்தனமா?.
இந்தியா எப்போதுமே ஒரு உதாரணமாக மற்ற நாடிட்கு காட்சியளித்து கொண்டே இருக்கிறது. அப்போது ஆங்கிலேயர்கள் நம்மை அடிமை படுத்தியபோது தேசதந்தை காந்தி அவர்களின் போராட்டம்
மற்ற நாடிட்கு புதுமையாக இருந்தது. மற்ற நாடுகள் தன்னை சுதந்திரம் உள்ள நாடக உயர்த்த ஆயுதத்தை கையில் ஏந்திய போது இந்திய மட்டும் தேசிய கொடியை கையில் ஏந்தி உயிரை ஆயுதமாக பயன்படுத்தியது.
அப்படி சுதந்திரம் வாங்கித்தந்த இந்திய திருநாடு மற்ற நாடுகளுக்கு முன் உதாரணாமாக திகழ்தது. இந்தியாவின் போரட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டவர்களில் நெல்சன் மண்டேலாவும் ஒருவர். அவர் தனது நாட்டை சுதந்திர நாடக்க இந்தியாவின் வழியை கடைபிடிக்க வேண்டும் என்று குறிபிடுகிறார் என்றால் எந்த நாடும் இதுவரை சந்தித்திராத ஒரு புதுமையை இந்தியா தனது கொள்கையாக செய்ததுதான் என்பது மிகைபடுதபடாத உண்மை வாக்காகும்.
அப்படிப்பட்ட இந்தியா மற்றொரு உதாரணமாக திகழ்வது ஊழல் என்னும் மிகபெரிய அவமானசின்னம்தான். நேற்று நாட்டை சுதந்திரமாக்க கொடுத்த உயிரின் விலையை, பலரது தியாகத்தை இன்று ஆட்சியாளர்கள் விலைபேசி விற்றுவிட்டனர். நாட்டையும், நாட்டு மக்களையும் பற்றி ஒரு பழைய படத்தில் பி.யு. சின்னப்பா அவர்கள் பேசும் வசனம் " இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்" என்பார் அதைப்போலத்தான் இன்று இந்த வசனம் வேறுவிதமாய் காங்கிரஸ் அமைச்சர்கள் வாயில் இருந்து பிரதிபலிக்கிறது.
முன்பு சரித்திரத்தை புரடிபார்த்தல் சர்வாதிகாரம் எப்போதும் நிலைத்ததில்லை. அப்படி பட்ட சர்வாதிகார முயற்சிகள் காங்கிரஸ் எப்போதும் கைவிடுவதாக இல்லை. 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டுவரை இந்திரா காந்தியின் ஆட்சியில் அவசறன நிலை பிரகடனபடுதப்பட்டது அனைவர்க்கும் தெரிந்ததே. அப்படியான ஒரு நிலையை இப்போது மக்கள் கொண்டுவந்த நிறுத்தி இருகிறார்கள். முன்பு நம் தலைவர்கள் சுதந்திர உரையில் " செய் அல்லது செத்துமடி" என்றனர் இப்போதும் அதே வார்த்தைதான் அன்னா ஹசறேவும் பயன்படுத்துகிறார். " ஊழலுக்கு எதிராக லோக் பால் மசோதாவை நிறைவேற்று அல்லது பிரதமர் பதவியை ராஜினாமா செய்". நம் பிரதமரால் எப்படி முடியும்? ஊழலுக்கு எதிராக அப்படி ஒரு லோக் பால் மசோதாவை கொண்டுவர, அவர்களது சொத்து சுஸ் பேங்க்கில் மெத்தை விரித்து தூங்கும் போது.
பணவீக்கத்தை கட்டுபடுத்த முடியாத பிரணாப் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதலாவது செய்யாமல் இருக்கலாம். யார் என்ன சொன்னாலும் பெட்ரோல்
விலையை குறைகமுடியாது என்கிறார். மக்கள் இந்த சுமையை சுமந்துதான் ஆகவேண்டும் என்கிறார். அவர் ஒரு நிதியமைச்சர் போல் பேசுவதில்லை ஒரு சர்வாதிகரிபோல் பேசுகிறார். பா.சிதம்பரம் சொல்லவே வேண்டாம் தனது மாயஜால பேச்சுகளால் எல்லோரையும் மதி மயங்க வைப்பதில் வல்லவர். கபில் சிபில் யாரையும் விட்டுவைபதே இல்லை எப்போதும் மற்றவர்களை வசைபாடுவதில் வல்லவர். ஷீலா திக்சித் காமன் வெல்த் போட்டியில் கல்மாடியோடு சேர்த்து அவர்மீதும் ஊழல் புகார் உள்ளது. இவர்களை கொண்டுதான் சட்டத்தை உருவாக்க படுமானால் Dr . அம்பேத்கார் வகுத்த சட்டங்கள் கூட இவர்களை பாதித்தால் அது அவர்களுக்கு செல்லுபடியாகாது போல் உள்ளது இன்றைய நிலைமை.
ஒன்று காங்கிரஸ் தனது கொள்கையை மக்களுக்காக என்ற அடிப்படையில் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் மக்கள் அவர்களை மாற்றிவிடுவார்கள் என்பது உறுதி.

sonanthu p u chinnappaa illai, p.s.verrappa.
பதிலளிநீக்கு