சனி, ஜூன் 29, 2013

இயற்கை பேரழிவும் மனிதர்களின் பங்கும்...


மலைகளையும், காடுகளையும் அழித்த பெறுமை மனிதர்களாகிய நம்மைதான் சாரும். இன்று "இமாலைய சுனாமி" என்று வாய் கூசாமல் சொல்லி இயற்கையின் மேல் பழிசொல்லிவிட்டு ரிசிகேசில் மனித இனம் செய்யும் அடாவடித்தனம் இயற்கை மனிதர்களுக்கு சொன்ன பாடம் பொய்யாய் போனதற்கான அடையாளம் . இருக்கும் மனிதன் இறந்த மனிதனின் சடலத்தை பார்த்து இது போல் ஒரு நாள் இல்லாமல் போவோம் என்கின்ற ஒரு பாடம் ஏன் இல்லாமல் போனது இப்போது. இயற்கை சீற்றம் மனிதர்களை கொன்று மனிதர்களுக்கு புத்தி புகட்டியும் மனிதயினம் மாறுபட்டு நிற்பது பணத்தினால் ஆனா உலகம் என்பதன் எடுத்துக்காட்டு. மாண்டோர் உடமைகள் களவாடுவதும், பசித்தோருக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு பசியோடு அலைவோர்க்கு உணவின் விலை  250 ரூபாய் என உயர்த்திக் கூறுவதும், பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது, குழந்தைகளை கடத்துவது என்று என்னென்ன கேவலங்கள் இயற்கை கொஞ்சும் ரிசிகேசில்.
இறை அருள் தேடி சென்றவர்கள் இயற்கையுன் மிரட்டலுக்கு இரையானது போக காட்டுமிராண்டி மனிதர்களின் பணத்தாசைக்கு பலியானது கண்டு இறைவனே மனிதயினத்தை கண்டு ஒதுங்கிவிட்டான் போலும். குளத்திலும், குட்டைகளிலும் வாரி சுருட்டி பெரிய பெரிய மாடி கட்டிடம் கட்டி இப்போது மடிந்து போனது இயற்கையை அழிப்பதனால் ஏற்ப்படும் அழிவிற்கான அடையாளம்.  மரங்களை வெட்டி சாய்ப்பதும், இயற்கையை அழிப்பதுமாக நாம் செய்ததுதான்   நமக்கு வினையாக முடிந்தது இப்போது. அழிவது,ஆள்வதும் இயற்கையாக இருக்கட்டும். அவற்றை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நாம் கடமையாக ஏற்று செய்வோம். அப்படி செய்வதே நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் மிகப்பெரிய சொத்தாகும்.

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

LIFE IS BEAUTIFUL...

 
வாழ்க்கை அழகானவைதான்  யார் இல்லை என்றது அது வாழ்கையை வாழ்பவரை பொருத்தது. அழகு என்பது பார்வையின் வெளிப்பாடு ஒருவன் எப்படி வாழ்கையை  பார்கிறான், ரசிக்கிறான் என்பதோடு வாழ்க்கை அழகானவையாக  மாற்றம்பெருகிறதேதவிர வாழ்க்கை  எல்லோருக்கும் அழகானவையல்ல. ஒரு சிறு விதைதான் மிகப்பெரிய ஆலமரத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. அந்த விதை மண்ணில் விழுந்து மரமாய் ஆவதும் நீரில்  மூழ்கி மக்கிப்போவது அதன் விதியென்னும் முன்வினையை
பொருத்தே அமையும். வாழ்க்கை என்பது எல்லோருக்கும்  வாழ கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு. அதை விரும்பி ஏற்போர் வாழ்க்கையின் இன்ப,துன்பங்களை  மனதார ஏற்று வாழ்கிறார்கள்.அவர்களது வாழ்க்கை பலாபழத்தை போன்றது. வெளிப்பார்வைக்கு முள்ளாக தெரிந்தாலும் உள்ளே சுவையான பழம்  இருக்கும்.  இன்பத்தை மட்டுமே விரும்புவோர் எப்போதும் இனிப்பை மட்டுமே விரும்பி சுவைத்து இறுதியில் இனிப்பை தொடக்கூட கூடாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களால் இனிமையான வாழ்க்கையைகூட கள்ளத்தனமாக சக்கரை நோயாளி இனிப்பை தேடி திருட்டுத்தனமாக உண்டு பிறகு அதனால் அவதிப்படுபவர்களை போன்று வாழ்க்கையை வாழ்வார்கள்.அவர்களது வாழ்க்கை சிவப்பு மிளகாய் போன்றது பார்க்க அழகாக 
இருக்குக்கும் ஆனால் உள்ளே காராம் வாயை கிழிக்கும். துன்பத்தை மட்டுமே விரும்பும் மனிதன் இவ்வுலகில் இன்னும் பிறக்கவே இல்லை.
ஆனால் பிறருக்கு துன்பம் என்றால் அதை தனக்கு இன்பமாக கருதும் மனிதர்கள்தான் இங்கு அதிகம்.

வாழ்கையை எதனோடும் ஒப்பிடமுடியாது. இப்படிதான் வாழவேண்டும் என்கின்ற வரைமுறையை வகுத்ததுகூட மனிதன்தான் ஒரு செடி எப்படி முளைக்க வேண்டும், எப்படி வளரவெண்டும்  என்பது இயற்கை அதட்கிட்ட கட்டளைப்படிதான். ஆனால் மனிதன் மட்டும்தான் பணம், பதவி, அதிகாரம் என்கின்ற ஆணவத்தினால் பிறரை அழிக்க நினைப்பதோடு தானும் அழிந்தே போகின்றான். அவனுக்கு தெரிவதில்லை எத்தனை கோடி பணம் இருந்தாலும் வாழப்போவது ஒரு சிலவருடங்கல்தான். அப்படியிருக்க  நமக்கு வாழகிடைத்த வாழ்கையை முழுவதாய் ஆத்ம திருப்தியோடு வாழ்ந்தோமா? என்பதை எப்போதாவது நினைத்து பார்க்க முடிந்ததா நம்மால். வெறும் உடல் வளர்க்கவா வாழ்க்கை. உயிரின் ஒரு  துளி போய் சேரவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்தால் இன்னொரு உயிர் உலகை காண உதையமாகிறது.
அந்த ஒரு துளி உயிர்தான் உலகின் இயக்கம் என்றால் அந்த ஒரு துளி உயிர் நமக்கு இயற்கை கொடுத்த உணவால் வந்தது. அந்த உணவுக்கு நாம்  இதுவரை நன்றி உணர்வை செலுத்தியிருக்கிரோமா ? இப்போது புரிகிறதா எதையெல்லாம் மறந்துவிட்டு நாம் வாழ்கையை வாழ்கிறோம் என்று.
 

நாம் சிலநேரத்தில் நினைத்த வாழ்க்கை வேறு அமைந்த வாழ்க்கை வேறு என்றுதான் வாழவேண்டியிருக்கும். அப்படி வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருந்தாலும் நாம் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரம்.  நாம் நமது உடலை மாற்ற முடியாது, ஆனால் மனதை மாற்றிக்கொள்ளலாம். அப்படி மனதை   மாற்றிக்கொள்ளும்பட்சத்தில் வாழ்க்கை எப்போதுமே இனிமையானவைதான். இதை மனதில்கொண்டு நாமும் சந்தோசமாய் வாழ்ந்திடுவோம்.