செவ்வாய், நவம்பர் 29, 2011

பரதநாட்டியம் கலையும் அழகும்...


பரதநாட்டியம் நமது தமிழ் கலாச்சாரத்தினை உணர்த்தும் கலை. பரதநாட்டியம் மனதை இறைவனோடு ஒன்றாக்கும் கலையம்சம். நாம் கடவுள் என்று வணங்குவது  சிவன், அவனே நாட்டியத்தின் தலைவன். மனம் லயித்து உடல் லயித்து ஆடும் கலையின் ஆர்ப்பரிக்கும் அழகு நம்மை ஒரு மயில்தோகையால் மனதை மென்மையாய் வருடுவது போல் உள்ளம் பரவசமடையும். நாட்டியம் ஆடும் பெண்ணை வெறும் பெண்ணாய் மட்டும் பார்க்கமுடியாதபடி ஆடும் அவளே நாட்டியமாய் மாறுவதே நாட்டியத்தின் உச்சகட்டம். பரதம் வெறும் நாட்டியம் மட்டுமல்ல அது நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு.
தமிழ் கவிதைகளின் பொற்காலம் என்று சொல்லப்படுகின்ற தொல்காப்பியம், சிலப்பத்திகாரம் ஆகிய நூல்கள் படித்தோமானால் அதில் 
பரதநாட்டியதிட்கு என்று ஒரு தனியிடம் உண்டு. சிலப்பதிகாரத்தில்   "மாதவி" என்ற தேவதாசி குடும்பத்தை சேர்ந்த நாட்டியத்  தாரகையால் 
மதிமயங்கி கோவலன் அவன்  கட்டிய மனைவி கண்ணகியை விட்டு மாதவியை தேடிச் சென்றான்
இவ்வாறாக  அமரகாவியம் உருவாக ஒரு  காரணமாக அமைந்தது பரதநாட்டியம் எனலாம் .


பரதநாடியத்தை "சதிராட்டம்" எனவும் அழைப்பார்கள். அன்றைய காலகட்டத்தில் கோவிலில் தேவதாசிப் பெண்கள் என்று அழைக்கப்படும் பெண்கள் கோவிலில் நடனமாடி இறைவனுக்கு தொண்டு செய்தனர். அவர்கள் ஆடும் கலையில் 
மிக சிறப்பானவர்கள். அரசர்கள் மண்டபத்திலும், கோவில் விழாக்களிலும் இவர்களது நடனம் 
சிறப்புவாய்ந்ததாக இருக்கும். பிற்காலத்தில்  தேவதாசி என்ற இனம் பலரது எதிர்ப்பினால் காணமல்போனது. 

பரதநாட்டியமும், கர்நாடக இசையும் சேர்த்து பக்தி என்று சொல்லப்படுக்கிறது. ஐந்து வகை  நாட்டியங்களில்  ஒன்று இந்த 
பரதநாட்டியம் மற்றவை  ஒடிசி, மோகினியாட்டம், குச்சிபுடி, கதகளி ஆகும்.

பரதநாட்டியம் - நெருப்பு 
ஒடிசி             - நீர்
மோகினியாட்டம் - காற்று
குச்சிபுடி - நிலம்
கதகளி - ஆகாயம்
என்று ஐம்பூதங்களை உள்ளடக்கியது.



                                    பரதநாட்டியம் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது

  •   ரசம் - பாசத்தை, பரிவை உணர்த்துவது
  •   பாவம் - உணர்சிகளை வெளிப்படுத்துவது
  •  கிரியாஸ் - செயலை உணர்த்துவது
  •  ஸ்ரின்காரம் - காதலை, பக்தியை உணர்த்துவது



பரதநாட்டியத்தின் மூன்று பிரிவுகள்

  • அபிநயம்- நாட்டியத்தின் மூலமாக கதை சொல்வது
  • நரிட்ட - இசைக்கு ஏற்ப நடன அசைவுகள் மட்டும் கண்பிப்பது
  • நரித்ய- அபிநயமும், நரிட்டவும் சேர்ந்த  கலவை.

                                                 பரதநாட்டிய நடன வகைகள்
  • அல்லரிப்பு - தாளமிடுபவர் ஜதிக்கேட்ப நடன அசைவுகள் இருப்பது.
  • குடுவம் - பழங்காலத்து நடன முறை ஜதிக்கேட்ப நடனமாடுவது.     
  • கணபதி வந்தனம் - கணபதியை வணக்குவது. இறைவழிபாடு.
  • ஜதிஸ்வரம்- தாளதிட்கேட்ப உடல் அசைவுகள் மற்றும் கால் அசைவுகள் கொண்டது.


  • ஷப்டம் - பக்தி இசைக்கேட்ப, பாடல் வரிகளுக்கு தகுந்தபடி நடனமாடுவது.
  • வர்ணம் - ஒரு கதையை மையப்படுத்தி காதலை வெளிபடுத்தும் மிக நீண்ட ஒரு அசைவுகள் கொண்டது.


  • படம் - நடனதிட்கு மத்தியில் நடனமாடுபவர்கள் பேசுவது மற்றும் பாடுவது.
  • ஸ்துதி- நடனதிட்கு இடையே ஸ்துதி பாடுவது.

  • கூத்து - நாடகத்தோடு கூடிய நடனம்
  • ஜவளி - இறக்கையை வணங்கி நடனமாடுவது.
  • தில்லான - முழுவதும் நடனத்திட்கேட்ப பாடுவது. எல்லா நடன அசைவுகளும் உள்ளடக்கியது.
பரதம் நம் கண்களுக்கு விருந்து... மனதுக்கு அமைதியைத் தரும் மருந்து...




சனி, நவம்பர் 26, 2011

மறந்துபோன காதல் கதை... கடைசி பாகம்


தான் அர்ஜுனிடம் பேசாமல் இருப்பது தன்னையும் காயாப்படுதுகிறது அர்ஜுனையும் காயாப்படுதுகிறது என்பதை உணர்ந்த பூஜா செமஸ்டர் விடுமுறை முடிந்து இறுதி ஆண்டு கல்லூரிக்குள் நுழைந்ததும் பூஜா அர்ஜுனை தேடிச்சென்றாள். அப்போது அர்ஜுன் மரத்தடியில் சோகமாய் அமர்ந்திருந்தான்.

அர்ஜுன்! உன்கிட்ட பேசாம இருந்ததுக்கு என்னை மன்னிச்சுடு.

நான் ஏதாவது தப்பு செய்தேனா பூஜா? என்று மென்மையாக கேட்டான் அர்ஜுன்.

அப்போது பூஜா தன் அப்பா அர்ஜுனுடைய அம்மா கவிதா பற்றி தனது டைரியில் குறிபிட்ட கவிதாவின் குணங்கள் அப்படியே 
அர்ஜுனிடமும் இருப்பதை நினைத்து வியந்தாள். அதை காட்டிக்கொள்ளாமல் அர்ஜுனை சமாதானப்படுத்தினாள்.
இருவருக்குளும் காதல் வளர்ந்தது. அப்போது ஒரு பெரிய நிறுவனமாகிய வால்- மார்ட்  தங்கள் கல்லூரிக்கு வந்து  மாணவர்களை வேலைவாய்ப்பிற்கு  தேர்வு செய்யப்போவதாக செய்தி அறிவிக்கப்பட்டது.   



இந்த அறிவிப்பை கேட்டதும் பூஜா,அர்ஜுன் மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவரும்  நேர்காணலுக்கு தயாரானார்கள். நேர்காணலில் பூஜா, அர்ஜுன்,ப்ரியா, கார்த்திக் இவர்களை சேர்த்து பத்து பேர் தேர்வானார்கள். இந்த பத்து பேரும் ஒரு வருடம் அமெரிகாவில் வேலை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. 

பூஜா அமெரிக்க செல்ல சுவாமிநாதனிடம் அனுமதிகேட்டாள்.

அப்பா எனக்கு அமெரிக்கால வேலை கிடைத்திருக்கிறது. கல்லூரி முடிந்து இரண்டு மாசத்தில்  அமெரிக்கா போகவேண்டும்.

எப்படிமா கல்யாணமாகாமல்  உன்னை  தனியா அமெரிக்கா  அனுப்பமுடியும்?

என்னோடு அர்ஜுனும் தேர்தேடுக்கப்பட்டிருக்கான், அப்பா நானும் அர்ஜுனும் ஒருத்தர ஒருத்தர் விரும்புகிறோம். எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து அமெரிக்கா செல்வோம் என்றாள் பூஜா.

சுவாமிநாதனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. சுவாமிநாதனால் பதில் சொல்லமுடியாமல் திகைத்தார். தனது முன்னால் காதலியின் மகனை காதலிப்பதாக அவனை திருமணம் செய்து வைக்கும்படி 
தன் மகள் கூரியதைக் கேட்டு  மெளனமாக தன் அறைக்கு சென்றார் சுவாமிநாதன். 

அர்ஜுனும் தனக்கு வேலை கிடைத்த விசயத்தை தனது அம்மா கவிதாவிடம் கூரினான். அதோடு பூஜாவை காதலிப்பதாகவும் தங்களுக்கு
திருமணம் செய்து வைத்தால் இருவரும் சேர்ந்து அமெரிக்கா செல்வதாகவும் கூரினான். எது நடந்துவிடக்  கூடாது என்று  கவிதா பயந்தாரோ அதுவே நடந்துவிட்டது.

அம்மா நீதான் அப்பகிட்ட பேசி எனக்கும், பூஜாவிட்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டான் அர்ஜுன்.

முடியாது அர்ஜுன் பூஜாவை திருமணம் செய்துகொள்ள நான் அனுமதிக்கமாட்டேன்.

இந்த பதிலை சற்றும் எதிர்பார்காத அர்ஜுன் அதிர்ச்சி அடைந்தான்.

ஏன் முடியாது? நான்  பூஜா பற்றி பேசும்போதெல்லாம் நீ ஒண்ணுமே சொல்லாமல்  இப்ப முடியாதுன்னு சொன்னா என்ன  அர்த்தம்?

அப்போ பூஜா யாருன்னு தெரியாது அதனால அப்படி பேசினேன். என்று தன்னை அறியாமல் கவிதா கூரிவிட்டார்.

அர்ஜுனிட்கு இந்த பதில் தூக்கிவாரிப் போட்டது. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அர்ஜுனுடைய அப்பா சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளே வந்தார். அர்ஜுனும் கவிதாவும் ராஜேஷ் வந்ததை
கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போ பூஜா யாரும்மா?

கவிதா தன் துக்கம் தாளாமல் அழுதுகொண்டே தான் மறைத்து வைதிருந்த ரசசியத்தை உடைத்தார்.

பூஜாவுடைய அப்பா சுவாமிநாதனும் நானும் கல்லூரி படிக்கும்போது காதலித்தோம் என்ற உண்மை கேட்டு அர்ஜுன் மட்டுமல்ல ராஜேஷும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

  கவிதா கண்களை துடைத்தபடி எல்லாவற்றையும் அர்ஜுனிடம் கூரினார். எல்லாவற்றையும் கேட்ட ராஜேஷ் மெல்ல கவிதாவிடம் சென்றார்.

என்னை மன்னிச்சுடும்மா உன்னுடைய உணர்வுகளை  புரிந்துகொள்ளாமல் நான் உன்னை கஷ்டப்படுத்திடேன். அர்ஜுன் நீயும் என்னை மன்னிச்சுடு என்று தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

மறுநாளே ராஜேஷ்  சுவாமிநாதனை அவரது அலுவலகத்தில்  சந்தித்தார்.


 நான் ராஜேஷ் அர்ஜுனுடைய அப்பா.

அவரை முன்பே தெரியும் என்பது போல் தலைஅசைத்து ஆமோதித்தார்.

நீங்களும் கவிதாவும் கல்லூரி நாட்களில் காதலித்தது நேற்று கவிதா சொல்லி  தெரிந்துகொண்டேன். அது விதியாக
கூட இருக்கலாம். நாம விரும்பியது கிடைக்காமல் கஷ்டப்பட்டது போல் நம்ம பசங்களும் கஷ்டப்பட
வேண்டாம். அதனால் பூஜாவை அர்ஜுனுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார் ராஜேஷ்.

ராஜேஷ் இவ்வளவு மெச்சுர்டாக பேசுவார் என்பதை எதிர்பார்க்காத சுவாமிநாதன், ராஜேஷ் சொன்னதை ஆமோதித்து பெண் பார்க்க வரும்படி சம்மதம் தெரிவித்தார்.

  

திருமணம் நிச்சயிக்கப்பட்டு மிக சிறப்பாக நடந்தது.


 திருமணம் முடிந்ததும் பூஜா பேராசிரியை பவித்ராவிடம் சென்று எல்லோர் முன்னிலையிலும் பேசினாள்.
  
  நான் உங்ககிட்ட ஒன்னு கேட்ட மறுக்கமாட்டிங்களே என்று பேராசிரியை பவித்ராவிடம் கேட்டார் பூஜா. 

சொல்லு பூஜா கண்டிப்பா உனக்காக எதையும்  செய்வேன். என்ன வேண்டும்? 

நீங்க என் அப்பாவை கல்யாணம் செய்துகொள்வீர்களா? 

பூஜாவின் இந்த கேள்வி பவித்ராவிட்கு மட்டுமல்ல திருமணத்திட்கு வந்த எல்லோருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. 

பூஜா தொடர்ந்தாள் என் அப்பாவிற்கு ஒரு நல்ல துணையா நீங்க  இருக்கணும் சம்மதிப்பீர்களா? 

பூஜா நீ என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா?

ஆமாம்! இதை பற்றி சித்ராவிடம் சம்மதம் வாங்கிவிட்டேன் என் பாட்டியிடமும் சம்மதம் வாங்கிவிட்டேன். இனி உங்க சம்மதமும், அப்பா சம்மதமும்தான் மிச்சம் என்று முடித்தாள்.


பேராசிரியை பவித்ரா மெல்ல தன் மகள் சித்ராவை பார்த்தார். சித்ரா கைதட்டி சம்மதம் தெரிவித்தாள். பவித்ராவும் சித்ராவின் வாழ்கையை கருத்தில்கொண்டு திருமணத்திட்கு சம்மதம் தெரிவித்தார். பூஜா, அர்ஜுன் திருமணம் நடந்த அதே பந்தலில் பவித்ராவிட்கும், சுவாமிநாதனுக்கும் திருமணம்
நடந்தது. அங்கிருந்த அனைவரும் பூஜாவை வாழ்த்தி பாராட்டினர். அப்போது கவிதா பூஜா செய்த செயலைப் பாராட்டி அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். எல்லோரும் சந்தோசமாக விடைபெற்றனர்.
 
பூஜாவும், அர்ஜுனும் எல்லோருடைய ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றனர்.

                                                                     ( முற்றும்...)



  



  

மறந்துபோன காதல் கதை... பாகம்- 15


பூஜா அர்ஜுனிடம் பேசுவதை தவிர்த்துக்கொண்டே இருந்தாள். அதை அர்ஜூனால் தாங்கிக்கொள்ள  முடியவில்லை. அர்ஜுன் பேசாமல் இருப்பதற்கு  காரணம் தெரியாமல் மனோஜிடம் புலம்பினான்.

 மனோஜ்! என்னனே தெரியவில்லை  பூஜா என்கிட்ட முன்புபோல்  பேசுவதேயில்லை. ஏன் இப்படி இருக்கானும்  புரியவில்லை. அவள் பேசாத அளவிற்கு நான் என்ன தப்பு செய்தேனும் புரியவில்லை.
நானும் கவனிச்சேன் அர்ஜுன். கவலைபடாதே  சரிபடுத்திடலாம். இன்னும் ரெண்டு நாளில்  பரிச்சை முடியப்போகுது   
 அதுக்குள்ளே சரிபண்ணிடலாம்.அதனால இதைப்பற்றியே நினைக்காமல் போய்  பரிட்சைக்குப் போய் படி   மற்றதை நான் பார்துக்கொள்கிறேன் என்று மனோஜ் சொன்னதும் அர்ஜூனால் சமாதனமானன். 

கடைசி பரிட்சை முடிந்து மதியம் ப்ரியா, பூஜா, மனோஜ், ரம்யா, அர்ஜுன்,கார்த்திக்  எல்லோரும் மரத்தடியில்  நின்று பேசிக்கொண்டிருந்தனர். பூஜா எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள். அர்ஜுன் பூஜாவை ஓரக் கண்ணால் பார்த்தான். அதை கவனித்த பூஜா தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள வேறு திசையில் பார்த்தாள்.

நாம்  எல்லோரும் சேர்ந்து  "எங்கையும் எப்போதும்" படத்துக்கு போகலாமா? என்று கேட்டான் மனோஜ்.


அதற்கு எல்லோரும் தலையாட்ட பூஜா மட்டும் மௌனமாகவே இருந்தாள்.

பூஜா நீ என்ன சொல்ற?

இல்லை மனோஜ் நீங்க போங்க நான் வரவில்லை.

நோ பூஜா! நீ வரவில்லை என்றால் நாங்களும் போகமாட்டோம் என்று மனோஜ் வற்புறுத்தி  கூப்பிட்ட பிறகு அரைமனதோடு வர சம்மதித்தாள்.

அர்ஜுன் நீ என்னோட கார் எடுத்துக்கோ. நானும் கார்த்திக்கும் பைக்கில் வரோம் என்று கார் சாவியை அர்ஜுனிடம் கொடுத்துவிட்டு கார்த்திக்குடன் பைக்கில் சென்றான் மனோஜ்.
அர்ஜுன் காரரை ஸ்டார்ட் செய்தான். ரம்யா காரின்  முன்பு சீட்டில்  அமர்ந்தாள். பூஜாவும், ப்ரியாவும் பின்னால் சீட்டில் அமர்ந்தனர்.

அப்போது அர்ஜுன் கண்ணாடி வழியாக பூஜாவை பார்த்தான். அர்ஜுன் பார்ப்பதை பூஜாவும் பார்த்தாள். அப்போது  அர்ஜுன் பூஜா கண்களை உற்று கவனித்தான் அதில் பூஜாவின் காதல் அப்பட்டமாய் தெரிந்தது. அதை தாண்டி ஏதோ ஒரு விஷயம் அர்ஜுனிடம் பூஜா மறைப்பதை காட்டிக்கொடுதுக் கொண்டே இருந்தது. அதை மறைக்க முயற்சிக்கும்போதெல்லாம் பூஜா தோல்வி அடைகிறாள் என்பதை உணர்ந்த அர்ஜுன். தன்னிடம் மறைக்கும் அளவிட்டு 
பூஜாவிடம் என்ன ரகசியம் இருக்கிறது என்று யோசித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு 
தியேட்டரை அடைந்தான்.

தியட்டரில் மனோஜ் எல்லோருக்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டு காத்திருந்தான். எல்லோரும் சென்று  இருக்கையில் அமர்ந்தனர். பூஜா இடது பக்கத்தில் அர்ஜுன் அமர்ந்தான். 
படம் ஆரம்பித்தது பூஜாவும் மற்ற நண்பர்களும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர் படத்தின் முடிவு  பூஜாவை ரொம்பவே பாதித்தது. ஏற்கனவே அவள் அம்மா செல்வியை கண்முன்னே  பறிகொடுத்த பூஜா அதேபோல்
ஒரு  கோர விபத்தை படத்தில் பார்த்து  ஜீரணிக்க முடியாமல் பூஜா அழுதாள். அர்ஜுன் மெல்ல பூஜாவின் கைகளை பற்றி அவளை ஆறுதல்படுத்தினான். பூஜா சோகம் தாங்காமல் அர்ஜுன் மீது சாய்ந்து அழுதாள். பூஜா அழுவதை பார்த்ததும் அர்ஜுனும் அவனது நண்பர்களும் பூஜாவை அழைத்துக்கொண்டு காரிட்கு சென்றனர். பூஜா தன் கண்களை துடைத்துக்கொண்டு காரில் சென்று அமர்ந்தாள்.

( தொடரும்...)



வியாழன், நவம்பர் 24, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம் - 14

அர்ஜுன் முழுவதுமாக குணமாகி கல்லூரிக்கு வந்தான். தான் கல்லூரிக்கு வந்தது பூஜா சந்தோசப்படுவாள் என்று எதிர்பார்த்த அர்ஜுனிட்கு ஏமாற்றமே மிஞ்சியது. அர்ஜுன் பேசினாலும் அவன் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு மௌனமாகவே இருந்தாள் பூஜா. அர்ஜுனும் தான் வராத நாட்களில் நடந்த பாடங்களை எழுதுவதை தொடர்ந்தான். கொஞ்ச நேரம் எழுதியதும் பூஜாவிடம் மறுபடியும் பேசினான்.

பூஜா ஏன் பேசாம இருக்க? இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? என்று அர்ஜுன் கேட்டான். அதற்கு பூஜா பதில் சொல்லாமல் மெளனமாக புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அர்ஜுன் வேறு எதுவும் பேசாமல் மறுபடியும் எழுதுவதில் கவனம் செலுத்தினான். பூஜாவின் இந்த செயல் அர்ஜுனிட்கு விநோதமாக இருந்தது, அவனால் பூஜா மனதில் இருப்பதை அறியமுடியவில்லை. அவனால் மட்டுமல்ல இந்த உலகத்தில் எந்த ஆணாலும் ஒரு பெண் நினைப்பதை அப்படியே புரிந்துகொள்ள முடியாது. அவ்வளவு ஏன் ஒரு பெண்ணால் கூட இன்னொரு பெண் நினைப்பதை புரிந்துகொள்வது கடினம்.அப்படி இருக்க பூஜாவின் மனதில் என்ன இருக்கிறது என்று அர்ஜுன் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். வகுப்பு முடிந்து பூஜா கிளம்பினாள். அப்போதும் அர்ஜுனோடு ஒரு
வார்த்தை கூட பேசவில்லை. அர்ஜூனால் இதை தாங்க முடியவில்லை வீடிற்கு சென்றதும் அர்ஜுன் தன் அம்மாவிடம்
சென்று பூஜா அன்று அவனோடு பேசாமல் விநோதமாக நடந்து கொண்டதை கூரினான்.

அர்ஜுனின் அம்மா கவிதாவிற்கு பூஜா பற்றி பேசும்போதெல்லாம் முகம் மாறியது. தனது முன்னால் காதலனின் மகள்தான் பூஜா என்பதை அறியாத அர்ஜுனிடம் எப்படி இதை சொல்வது. அதை சொன்னால் அர்ஜுன் எப்படி எடுத்துக்கொள்வான் என்று தெரியாமல் மிகவும் வேதனையோடு சமையலறை உள்ளே
சென்றார் கவிதா. கவிதாவிற்கு சந்தேகமும், பயமுமாக இருந்தது, அது பூஜா அந்த உண்மையை
அறிந்திருப்பாளோ என்ற சந்தேகம் அப்படி அறிந்திருந்தால் அதை அர்ஜுனிடம் சொல்லிவிடுவாளோ என்ற பயமும் கவிதாவின் மனதை காயப்படுத்திக்கொண்டே இருந்தது.

                                                                         ( தொடரும்...)



செவ்வாய், நவம்பர் 22, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்- 13


பூஜா தனது அப்பா சுவாமிநாதன் டைரியைப் படித்து, அவரது ரகசியங்களை தெரிந்து கொண்டபின் பூஜாவால் கல்லூரியில் சரியாக பாடங்களை கவனிக்க முடியவில்லை. ஒரு பக்கம்
அர்ஜுன் மீது காதல். இன்னொரு பக்கம் அப்பாவின் ரசியங்கள் என அவளை காயப்படுத்திக் கொண்டே
இருந்தது. பூஜா கல்லூரி முடிந்ததும் பேராசிரியை பவித்ரா வீடிட்குச் சென்றாள். அப்போது பேராசிரியை பவித்ரா வீட்டில் இல்லை பூஜா கதவைத் தட்டினாள். அப்போது சித்ரா உள்ளிருந்து வந்து கதவைத் திறந்தாள்.


இது பேராசிரியை பவித்ரா வீடுதானே? என்று சித்ராவிடம் பூஜா கேட்டாள்.

ஆமாம்! நான் அவங்க பெண் பேர் சித்ரா. நீங்க பூஜாதானே.

ஆமாம்! என்று தலையை அசைத்தாள் பூஜா.

உங்களைப்பற்றி அம்மா நிறைய சொல்லி இருக்காங்க. உள்ளே வாங்க என்று பூஜாவை வீட்டின் உள்ளே அழைத்து உபசரித்தாள் சித்ரா.




பூஜா சித்ராவைப் பார்த்ததும் மனசு சற்று நிதானமானது. இறுக்கமான முகம் சற்று தளர்ந்தது.

என்ன சாப்பிடரீங்க? காப்பி? டீ?

கொஞ்சம் டீ மட்டும் போதும்  என்று சித்ராவின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு  சித்ராவுடன்
பேச்சைத் தொடர்ந்தாள். சித்ராவை பற்றியும் அவளது குடும்ப பின்னனி பற்றியும் பூஜா சித்ராவிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். கொஞ்ச நேரம் பேசியிருந்தாலும் பூஜாவும், சித்ராவும் ஒரு மென்மையான நட்பை
தங்களுக்குள் உணர்ந்தனர். அப்போது பேராசிரியை பவித்ரா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்துவிட்டு வீட்டின்   உள்ளே நுழைந்தார்.

வா பூஜா ரொம்ப நாளா உன்னை வீட்டிக்கு கூப்பிட்டு   வரணும்னு நினைத்திருந்தேன் ரொம்ப ஆச்சரியமா இருக்கு நீயே வந்துட்டே. சித்ரா கிட்ட உன்னை பற்றிதான் அடிக்கடி பேசுவேன்.

ஆமாம்! ஆமாம்! உங்களை தவிர வேற எதையும் அம்மா பேசறதே  இல்லை என்று சித்ரா தன் அம்மாவை கேலி செய்தாள்.

உங்க அப்பா எப்படி இருக்காரு? என்று பேராசிரியை பவித்ரா பூஜாவின் அப்பா பற்றி ஒன்றுமே தெரியாதது போல் கேட்டாலும் அவரது கண்களில் உள்ள எதிர்பார்ப்பை பூஜா உணராமல் இல்லை. பூஜா அங்குள்ள ஒவ்வரு பொருளையும் கூர்ந்து கவனித்தபடியே அப்பா நன்றாக இருப்பதாக கூரினாள். பூஜாவிடம் இருந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்ததாய் அவள் உள் மனம் அறிவுறுத்தியது. பூஜா தன் மனம் சற்று லேசாவதை உணர்ந்தாள்.

பூஜா, பேராசிரியை பவித்ரா மற்றும் சித்ராவின் உரையாடல் அவர்களுக்குள் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இறுக்கமான சூழ்நிலையோடு வந்த பூஜா முகத்தில் சிரிப்போடு இருவரிடமும் விடைபெற்று வீடு திரும்பினாள்.


( தொடரும்...)






ஞாயிறு, நவம்பர் 20, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்- 12


எங்களது முதல் வருடக் கல்லூரி முடிந்து இரண்டாம் வருடம் ஆரம்பமானது. நாங்கள் கல்லூரி சார்பாக சுமார் இருபது பேர் ஈரோட்டில் உள்ள கல்லூரிக்கு அனைத்து கல்லூரி கலந்துகொள்ளும் போட்டிக்கு சென்றோம். நான்,பவித்ரா, கவிதா, ரம்யா, நந்து, முகுந்தன் ஐந்து பேரும்  
ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் வேறு வகுப்பை சேர்ந்தவர்கள். பவித்ரா, ரம்யா, நந்து மற்றும் முகுந்தன் ஆகியோர் நடனப் போட்டிக்கு தயாரானார்கள். நானும் கவிதாவும் பேச்சுப் போட்டிக்குத் தயாரானோம்.கவிதா எப்போதும் குழந்தை மனம் படைத்தவள். அவள் சுபாவம் யாரையும் அவள் பக்கம் ஈர்த்துவிடும். கவிதா பேச்சு போட்டியில் கடைசி நேரத்தில் பயந்தாள். நான் அவளைத்  தேடி சென்ற போது ஒரு பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்தாள். நான் பக்கத்தில் சென்று கவிதா என்று அழைத்தேன். அவள் மெல்ல என்னை திரும்பிப் பார்த்தாள். நான் அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தேன்.

கவிதா ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன் அதற்கு கவிதா பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.மீண்டும் நான் அவளை வற்புறுத்திக்  கேட்டபோது.

எனக்கு பேச்சு போட்டினா பயம், என்று சொன்னாள்.

பிறகு ஏன் பேச்சு போட்டிக்கு பெயர் கொடுத்தாய்? என்று நான் கேட்டேன்.

அதற்கு பவித்ராவையும், உங்களையும் பார்க்காமல் என்னால இருக்க முடியாது. அதனால உங்களோட வர நான் பேச்சு போட்டிக்கு பெயர் கொடுத்தேன் என்று கவிதா சொன்னபோது நான் என்னையும் அறியாமல் கவிதாவை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். மெல்ல அவளது கையை பிடித்தேன். கவிதா என்மீது சாய்ந்தாள். அன்று கவிதாவை மனப்பூர்வமாக காதலிக்க ஆரம்பித்தேன். அவளும் என்னை மிகவும் நேசித்தாள். இருவரும் உருகி உருகி காதலித்தோம். எங்கள் இருவரது காதலுக்கும் ஜாதி தடையானது. எங்கள் இருவரது வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு உருவானது. அதனால்
 நான் செல்வியை மணக்க நேரிட்டது. கவிதாவை அவளது மாமா பையனுக்கு திருமணம் செய்துவைத்து விட்டனர்.



நான் செல்வியிடம் கவிதா பற்றி எதையும் மறைக்காமல் கூரிவிட்டேன். செல்வி மிகவும் வருத்தப்பட்டாள். காலப் போக்கில் கவிதாவை எவ்வளவு நேசித்தேனோ  அதே அளவு செல்வியையும் நேசித்தேன். ஒரு அழகான பெண் குழந்தை எங்களுக்குப் பிறந்தது. அதற்கு பூஜா என்று பெயர் வைத்தோம். பூஜா பத்து வயதிருக்கும்போது செல்வியை ஒரு விபத்தில் பறிகொடுத்தேன். அப்போது பூஜா சிறிய பெண் என்பதால் அவளுக்கு ஒரு அம்மா தேவை என்று என் அம்மா என்னை மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார். நான் அதை மறுத்துவிட்டேன். பூஜாவை யாரோ ஒருத்தியிடம் ஒப்படைக்க என் மனம் மறுத்தது. என் உணர்சிகளை அடக்கிக் கொண்டு பூஜாவிட்காக வாழ முடிவு செய்தேன். பூஜாவின் நண்பன் விபத்தில் அடிபட்டதை அறிந்து மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு இருபது வருடம் நான் மறந்து விட்டதாக என்னையே ஏமாற்றிக்கொண்டிருந்த கவிதாவையும், பவித்ராவையும் மீண்டும் சந்திப்பேன் என்று கனவிலும் நான் எதிர்பார்கவில்லை. மறுநாள் என் மனம் தாங்காமல் பூஜாவை கல்லூரிக்கு அழைத்து செல்லும் சாக்கில் பவித்ராவை சந்தித்தேன். பவித்ரா அப்போது எப்படி இருந்தாளோ இப்போதும் அப்படியே இருக்கிறாள். நான் முதல் முதலில் காதலித்தது பவித்ராவைத்தான் என்ற ரகசியம் என்னையும் என் டைரியைத் தவிர வேறு யார்க்கும் தெரியாது. என் ரகசியம் என்னோடு முடியட்டும் என்பது வரை டைரியை படித்து முடித்த பூஜாவிற்கு கண்களில்  கண்ணிர் வந்தது. அதை துடைத்துக்கொண்டே டைரியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு  தன் அறைக்குச் சென்றாள் பூஜா.

( தொடரும்...)








சனி, நவம்பர் 19, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்-11




பூஜா காலையில் நடந்ததை புரிந்துகொள்ள முடியாமல் மிகவும் குழப்பத்தில் இருந்தாள். அன்று முழுவதும் பூஜாவிற்கு இதை தாண்டி வேறு சிந்தனை ஓடவில்லை.இரண்டு நாட்களுக்குப்  பிறகு  பூஜா தனது அப்பா சுவாமிநாதன் அறைக்குச் சென்றாள்.அப்போது சுவாமிநாதன் அங்கு இல்லை அவர் வெளியூர் சென்றிருந்தார். சுவாமிநாதனுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு என்று பூஜாவிற்கு நன்றாகத்  தெரியும்.
பூஜா சுவாமிநாதன்  அறையில் அவரது  டைரியை தேடினாள். 

ஒரு மரப்பெட்டிக்குள் அவரது பழைய டைரிக்களை  கண்டுபிடித்தாள். இத்தனை வருடம் அவள் அப்பா சுவாமிநாதன் மனதில் உள்ள அனைத்து ரகசியங்களும்  தனது நண்பனாக பாவித்து அந்த டைரிகளில் எல்லாவற்றையும் அவர் எழுதியிருந்தார்.

பூஜா ஒவ்வரு டைரியாகப் படித்தாள். அதில் சுவாமிநாதன் கல்லூரியில் படித்த காலத்தில் எழுதப்பட்ட டைரியை எடுத்துப்
படித்தாள்.  அதில் குறிப்பிட்டிருப்பது

இன்று நான் கல்லூரிக்குள்  அடியெடுத்து வைக்கும் முதல் நாள். எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. இன்றுதான் முதல் முதலில்   டைரி எழுதுகிறேன் அதைத்  தூண்டியது ஒரு பெண்.இன்றுதான் அவளை முதல் முதலில் பார்த்தேன். பார்த்ததும் என்னை அவளிடம் தோற்றேன். அவள் பெயர் "பவித்ரா" என்று பேராசிரியை பவித்ராவின் பெயரைப்  படித்ததும் அதிர்ந்துபோன  பூஜா கொஞ்சம் மனதை திடப்படுத்திக் கொண்டு மேலும் படித்தாள்.
அவள் பெயரை பலமுறை சொல்லிவிட்டேன் எவ்வளவு முறை சொன்னாலும் அவள் பெயர் அவளை விட அழகாக இருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல எனக்கு பவித்ரா மிகவும் பிடித்துப்போனது. ஆனால் பவித்ராவோ  எப்போதும் படிப்பிலேயே மிக கவனமாக இருந்தாள். என்னால் அவளை கவர முடியவில்லை. எல்ல பசங்களும்
பவித்ராவை நட்பாக்கிக்கொள்ள பல முயற்சி செய்து தோற்றுப்போனார்கள். நான் ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்தேன். அதன்படி அவளுடைய மிக  நெருக்கமான தோழியான கவிதாவை நட்பாக்கிக் கொண்டேன். கவிதா மிகவும் பொறுமைசாலி. கவிதவிட்கு என் நோக்கம் தெரியாது. கவிதா ஒரு  அப்பாவி எல்லோரையும் மதிக்கும் குணம் உடைய அவளது சுபாவம் எனக்கு மிகவும் பிடித்தது.


பவித்ரா மீதும் கவிதா மீதும் மாறிமாறி என் கண்கள் சென்றது. இருவருமே அழகு, எப்படிப்பட்ட அழகு என்றால் பவித்ரா கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி போன்றவள். நல்ல நிறம், கம்பிரமான உருவம், மயக்கும் கண்கள், சிவந்த இதழ்கள், அடர்ந்த நெற்றி, அழகிய கொண்டை. ஆனால் கவிதாவின் அழகு குந்தவை போன்றது. மதிநுட்ப கண்கள், மௌனமான கண்ணம், தெளிந்த முகம், மா நிறம், விரிந்த கூந்தல். இருவருமே என்னை கவர்ந்தனர். காலப்போக்கில் இருவருமே என்னோடு நட்பானார்கள்.
   
                                                                           ( தொடரும்...)


வெள்ளி, நவம்பர் 18, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம் 10


மறுநாள் பூஜாவை கல்லூரியில் கொண்டுவந்து விட்ட பூஜாவின் அப்பா சுவாமிநாதன் நடவடிக்கைகள் சற்று வித்யாசமாக இருப்பதாக உணர்ந்தாள் பூஜா. எப்போதும் பூஜா, தன்னை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டாலும்  சுவாமிநாதன் வேலை  இருப்பதாக கூரிவிட்டு சென்றுவிடுவார். ஆனால் இன்று முக்கியமான போர்டு மீட்டிங் இருப்பது தெரிந்தும் பூஜா 
கேட்காமலேயே பூஜாவை கல்லூரிக்கு அழைத்து வந்தது பூஜாவிற்கு விநோதமாக இருந்தது. அத்தோடு சுவாமிநாதன்  எப்போதும் இல்லாமல் சற்று தடுமாறுவதையும் பூஜா கவனிக்கத் தவறவில்லை.  பூஜா காரை விட்டு இறங்கி வகுப்பிற்கு செல்வது போல் சென்று ஒரு மரத்தடியில் மறைந்து கொண்டு அவளது அப்பா சுவாமிநாதனை  கவனித்தாள். அப்போது பூஜாவின் அப்பா சுவாமிநாதன் தனது காரை கல்லூரிக்கு வெளியே நிறுத்திவிட்டு. மீண்டும் கல்லூரிக்கு உள்ளே வந்தார். அப்போது பூஜா மரத்தடியில் நின்று கவனிப்பது தெரியாமல் சுவாமிநாதன் பேராசிரியை பவித்ரா அறைக்கு சென்றார்.

சுவாமிநாதன் வருவதை சற்றும் எதிர்பார்காத பேராசிரியை பவித்ரா சுவாமிநாதனை வரவேற்றார்.

எப்படி இருக்க பவித்ரா?

நான் நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

ஓகே! உன்னையும் கவிதாவையும் அந்த சூழ்நிலையில சந்திப்பேன்னு நான் எதிர்பார்களை. 

 எனக்கும்  அதே உணர்வுதான் சுவாமி.

நீ நம்ம கல்லூரி நாட்களில் எப்படி இருந்தியோ  அப்படியே இருக்க பவித்ரா. அதே சிரிப்பு! அதே அழகு!

போதும் சுவாமி நீங்களும்தான் அப்படியே இருக்கீங்க.

உன் குடும்பத்தைப் பற்றி சொல்லு பவித்ரா...

எனக்கு ஒரு பெண் குழந்தை  பேரு சித்ரா இப்ப பத்தாவது படிக்கறா. என் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு  ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்.
இப்ப நானும் என் பெண்ணும்தான் இருக்கோம். அம்மா, அப்பா ரெண்டு பேருமே எனக்கு கல்யாணம் ஆனதும்  கொஞ்ச நாள் பிறகு இறந்துட்டாங்க.
என் கணவர் இறந்ததுமே என் மாமியார் அவங்க சொந்த ஊரிற்கு சென்றுவிட்டார்கள்.  இப்ப எனக்கு என் பெண்  சித்ரா துணை. சித்ராவிற்கு நான் துணை. வாழ்க்கை அப்படியே போய் கொண்டிருக்கிறது.

இடையில் சிறிது மௌனம். மீண்டும் பேச்சை தொடர்ந்தார் பேராசிரியை பவித்ரா.பூஜா ரொம்ப அழகா இருக்க சுவாமி. முதல் முதலில் அவளை பார்க்கும்போது ஏதோ எனக்குள்ள ஒரு இனம்புரியாத பாசம்.சுவாமி உன்னோட ஜாடை அப்படியே இருக்கு பூஜாவிற்கு. பூஜா உங்க மனைவி  செல்வி இறந்தது பற்றி சொன்னதும் மனசு ரொம்பவே வலித்தது. 

செல்வியோட இழப்பு எனக்கு தாங்கமுடியாத வலியாதான் இருந்தது பவித்ரா. ஆனா பூஜாவை  பார்க்கும்போது அந்த வலி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுடுச்சு.
கவிதா எப்படி இருக்காங்க பவித்ரா?

அவள் நல்ல இருக்காள் சுவாமி. நீங்க ரெண்டு பேரும் காதலிச்சது. உங்க ரெண்டு பேரு வீட்டிலையும் எதிர்ப்பு வந்தது. அவள் மாமா பையனை வலுக்கட்டாயமா அவள் பெற்றோர்  கல்யாணம் செய்து வைத்தது. எதையும் அவள் மறக்கவில்லை. 

சுவாமிநாதன் கண் கலங்கியது. அதை காட்டிக்கொல்லாமல். சரி பவித்ரா எனக்கு மீட்டிங் நேரமாகிறது 
இது என்னோட நம்பர். நாம் மறுபடியும் சந்திப்போம். பூஜாவிற்கு நான் வந்தது தெரிய வேண்டாம் என்று பேராசிரியை பவித்ராவிடம்  விடைபெற்று வெளியே வந்த  சுவாமிநாதன் தன் கைக்குட்டையால் தனது கண்களை துடைத்துக்கொண்டு கல்லூரியை விட்டு வெளியேரினார். இதை அனைத்தையும் தூரத்தில் இருந்து கவனித்த பூஜாவிற்கு பேராசிரியை  பவித்ராவிட்கும்  தனது அப்பா சுவாமிநாதனுக்கும் இடையே இருப்பது என்ன என்பது புரியாமல் குழம்பினாள். 

( தொடரும்...)

  

   





புதன், நவம்பர் 16, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்- 9


பூஜா மாலை வீட்டிற்கு சென்றதும்  காலையில் நடந்ததை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள். பூஜா மிகவும் குழப்பத்தில் இருந்தாள். அவள் மனதிற்குள் ஒரு கேள்வி வந்து கொண்டே இருந்தது. அது அர்ஜுன் பற்றியதாகவே இருந்தது. அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அர்ஜுனிடம் உள்ளது நட்பா? காதலா? என்ற கேள்விக்கு விடைதெரியாமல் யோசனையிலேயே இருந்தாள். அப்போது பூஜாவின் அப்பா சுவாமிநாதன் பூஜாவிடம் சென்று பேசுகிறார்.

என்னம்மா சாப்பிடக்கூட வராமல் யோசனையிலேயே இருக்க? 

எனக்கு பசியில்லை அப்பா.

அர்ஜுன் பற்றிய கவலையா? அவன்  சீக்கிரம் குணமாகிடுவான் நீ போய் சாப்பிடு என்று சுவாமிநாதன் சொன்னதும் 
பூஜா மறுக்காமல்  சென்று சாப்பிட்டாள். பிறகு தனது  படுக்கை அறைக்கு வந்த பூஜா தன்னை அறியாமல் அர்ஜுன் பெயரை நோட்டில் எழுதினாள்.ஒரு ஆண் காதலிக்க ஆரம்பித்தால்  அந்தப் பெண்ணை பற்றி பக்கம் பக்கமாக கவிதை  எழுதுவான். ஆனால்  ஒரு பெண் காதலிக்க ஆரம்பித்தால்  அவனோடு கற்பனையிலேயே ஐம்பது வருட வாழ்கையை வாழ்ந்துவிடுவாள். ஒரு ஆணுக்கு காதல் என்பது வாழ்கையில் வரும் கற்பனை. ஆனால் அதுவே ஒரு பெண்ணின் காதல் கற்பனையில் வரும் வாழ்க்கை. பூஜா இப்போது காதல் ஏற்படுத்திய  கற்பனையில் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
 

சிறிது நேரத்திற்குப்   பிறகு சுயநினைவு வந்து பூஜா தான் எழுதிய அர்ஜுன் பெயரை பார்த்து சிரித்தபடியே உறங்கச் சென்றாள். அப்போதும் உறக்கம் வராமல் அர்ஜுனைப்  பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். மறுநாள் மாலை பூஜாவும் மற்ற நண்பர்களும்  மருத்துவமனைக்குச்   சென்று அர்ஜுனை பார்த்தனர். 

  
அப்போது அர்ஜுன் பூஜாவைப்   பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். பூஜாவையும்  மற்ற நண்பர்களையும் அறையின் உள்ளே வருவதை  வரவேற்று உபசரித்தார் அர்ஜுன் அம்மா கவிதா. அப்போது கவிதா பூஜாவையே பார்த்து கொண்டிருந்தார்.

இப்ப எப்படி இருக்கு அர்ஜுன்? என்று மனோஜ் கேட்டான் .

நல்ல இருக்கேன் மனோஜ் என்று சொல்லிவிட்டு பூஜாவை பார்த்தான் அர்ஜுன்.
பூஜா கோவில் பிரசாதத்தை அர்ஜுன் அம்மா கவிதாவிடம் கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.கவிதா பிரசாதத்தை
அர்ஜுன் நெற்றியில் இட்டார்.
எல்லோரும் அர்ஜுனிடம் விடைபெற்றுச் சென்றனர். அப்போது கவிதா பூஜாவை அழைத்தார்.

பூஜா ஒரு நிமிஷம் என்று கவிதா அழைத்ததும் பூஜா திரும்பி பார்த்தாள்.
அப்போது கவிதா ஏதோ கேட்கவந்ததைக் கேட்காமல்  விழுங்கிக்கொண்டு. நீ கொடுத்த பிரசாதத்திற்கு நன்றி என்று சொன்னார்.

பூஜா ஒரு சின்ன சிரிப்போடு அங்கிருந்து சென்றாள்.

( தொடரும்...)




செவ்வாய், நவம்பர் 15, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்- 8


பூஜா அர்ஜுனின் விபத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் மறுநாள் கல்லூரிக்கு செல்ல மனமில்லாமல் வெறுமையுடனே கல்லூரிக்கு வந்தாள்  எப்போதும்
ப்ரியாவுடன் கல்லூரிக்கு வரும் பூஜா அன்று தனிமை தேவைப்பட்டது. பூஜாவிற்கு அப்பா, பாட்டிக்குப் பிறகு அர்ஜுன், பேராசிரியை பவித்ரா மட்டுமே
அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தார்கள். பூஜா சிறு வயதில் அவள் அம்மா என்றால் அவ்வளவு பிடிக்கும். அப்போது பூஜாவிற்கு பத்து வயதிருக்கும் பூஜா அவள் அம்மா செல்வியோடு கோவிலுக்கு சென்று வரும் வழியில்
ஒரு குடிகாரன் அதிகமாக குடித்திருந்தான் அவன் தனது காரை வேகமாக ஓட்டி வந்து பூஜாவை இடிக்க வந்தான் ஆனால் அந்த நேரம் பூஜாவை காப்பாற்ற அவள் அம்மா செல்வி பூஜாவை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்தார். அம்மாவை கண் முன்னே விபத்தில் பறிகொடுத்த பூஜா அர்ஜுன் அதே போல் ஒரு விபத்தில் அடிபட்டது அவளை ரொம்பவே பாதித்திருந்தது. ரொம்ப இறுக்கமாக வந்துகொண்டிருந்த பூஜாவை சீனியர் ரமேஷ் வம்புக்கு இழுத்தது  பூஜாவை மேலும்  கோபமூட்டியது.

என்ன பூஜா தனியாவர... அர்ஜுன் வரல? ஓ அவன்தான் அடிபட்டு படுத்து கிடக்கான்ல நான் மறந்தே போய்டேன் என்று ரமேஷ் சொன்னதும்  பூஜா மௌனமாகவே நடந்தாள்.

என்ன பூஜா பேசமாட்டியா? அர்ஜுன் கூடத்தான் பேசுவியா? நானும் ஆம்பளதான் என்கிட்டையும் பேசு என்று ரமேஷ் சொன்னதும்   பூஜா தன் கட்டுப்பாட்டை இழந்து கோபத்தில் வெடித்தாள்.

நீயாட ஆம்பள... ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசனும்கிற அறிவு கூட இல்லாமல் நீ ஆம்பளைன்னு சொல்லிக்கிரியே உனக்கு வெட்கமா இல்லை.

அப்ப அர்ஜுன் தான் ஆம்பளையா? நீ என்ன அவனை காதலிகிறையா? என்று ரமேஷ் ஆவேசமாக  கேட்டான்.

ஆமாம்! நான் அர்ஜுனை காதலிக்கிறேன்! என்று பூஜா கூரிவிட்டு வேகமாக நடந்து சென்றாள். ரமேஷ் தான் பூஜாவிடம்  பேசியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது பூஜா சென்ற பின்புதான்  புரிந்தது.  அர்ஜுனை காதலிப்பது பூஜாவிற்கு அப்போதுதான் புரிந்தது. ரமேஷ் கேட்டதும் அர்ஜுனை காதலிக்கிறேன் என்று சொன்னது ரமேஷ் மீதான கோபத்தினால் அல்ல அர்ஜுன் மீதான காதலினால் என்பதை பூஜா மெல்ல உணர்ந்து கொண்டாள்.


 அதுவரை இறுக்கமாக இருந்த பூஜா மெல்ல மனதுக்குள் சிரித்தாள்.அவளுக்குள் காதல் மலர்ந்தது.

                                                                        ( காதல் தொடரும்...)


                                                                               

    

சனி, நவம்பர் 12, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம் - 7


அர்ஜூன் தனக்கு ஏற்பட்ட விபத்தின் வலியை விட பூஜா  அழுததுதான் அவனுக்கு
மிகவும் வலித்தது. அவன் பூஜாவை  பார்த்தபடியே அவனை சுற்றி இருந்தவர்கள் அருகில் இருந்த ராமகிருஷ்ணா மருத்தவமனைக்கு
கொண்டு  சென்றனர். பூஜாவும்  மற்ற நண்பர்களும் பின்தொடர்ந்து ராமகிருஷ்ணா  மருத்துவமனைக்கு சென்றார்கள்.அர்ஜூன்
அடிபட்ட செய்தி கேட்டு பேராசிரியை பவித்ராவும் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அர்ஜூன் அம்மா  கவிதா அழுதுகொண்டிருந்தார்.

கவிதா அர்ஜூன் எப்படி இருக்கான்?

பவித்ரா என்று சொல்லவந்து பேசமுடியாமல்   வெடித்து அழுதார் கவிதா. அங்கு பக்கத்தில் இருந்த பூஜாவிடம் சென்ற  பவித்ரா விசாரித்தார்.

பூஜா  என்ன ஆச்சு அர்ஜூனிற்கு?

சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது மேடம். இன்னும் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை என்று பூஜா சொல்லிக்கொண்டிருகும்போது பூஜாவை  கல்லூரியில் இருந்து வீட்டிற்கு   அழைத்து செல்ல வந்த பூஜாவின்  அப்பா சுவாமிநாதன். பூஜாவின்  நண்பன் விபத்த ஏற்பட்டு ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் பூஜாவும்  அங்கு சென்றிருப்பதை  அறிந்து கொண்டு அங்கு வந்தார். சுவாமிநாதன் அங்கு வருவது சற்றும் எதிர்பார்க்காத பவித்ராவும், கவிதாவும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் சுவாமிநாதன் கூட பவித்ராவும், கவிதாவும் அங்கிருப்பதை பார்த்து  மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தார்.

அப்பா என்று பூஜா  அழைத்தாள், அது மேலும் பவித்ராவிட்கும், கவிதாவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்கும் டாக்டர் ஆப்பரேஷன் தியேட்டரை விட்டு வெளிவருவதற்கும் சரியாக இருந்தது. டாக்டர் கவிதாவிடம் சென்று

நீங்க தான் அர்ஜுனுடைய அம்மாவா?

ஆமாம் டாக்டர்.

அவரு இப்ப நல்ல இருக்கார். பயப்பட வேண்டியதில்லை. கையில் மட்டும் காயம் அதிகமா இருக்கு. இரண்டு வாரம் ஓய்வு எடுத்தா சரியாகிடும் என்று டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அர்ஜூன் அப்பா சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு வந்தார். அவர் டாக்டரிடம் சென்று விசாரித்தார். டாக்டர் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று சொன்னதும் ராஜேஷ் வேகமாக  அர்ஜுனை பார்க்கா உள்ளே சென்றார். கவிதா திரும்பி சுவாமிநாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அர்ஜுனை பார்க்க சென்றார். பேராசிரியை பவித்ராவும் சுவாமிநாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அர்ஜுனை பார்க்க உள்ளே சென்றார்.

பூஜா  நீ போய் அர்ஜுனை பார்த்துவிட்டு வா நான் காரில் காத்திருக்கிறேன் என்று கூரிவிட்டுச் சென்றார் சுவாமிநாதன்.


 அர்ஜுனை எல்லோரும் சென்று பார்த்தார்கள் பூஜா  கடைசியாக சென்று பார்த்தாள். அர்ஜூன் காயங்கலோடு படுத்திருப்பதை பார்த்து பூஜா  தாங்கிக்கொள்ள முடியாமல் தனக்கு வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அர்ஜுனை பார்த்தாள். பூஜா அர்ஜுனை பார்த்துவிட்டு தன்னுடைய அழுகையை அடக்கியபடியே அங்கிருந்து
சென்றாள்.

                                                                                ( தொடரும்...)

வெள்ளி, நவம்பர் 11, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்- 6




 அர்ஜுன் மிகவும் குழப்பத்தோடு தனது அறைக்கு வருகிறான் அப்போது மனோஜ் அர்ஜுனிடம்

 என்ன அர்ஜுன் பூஜாகிட்ட காதலை சொல்லிட்டியா?

இல்லை மனோஜ் அவகிட்ட போகிறவரைக்கும் இருந்த தைரியம் அவளை பார்த்தவுடன் காணாம போயிடுச்சு அது மட்டும் இல்லை நான் என் காதல் கவிதையை சொல்லலாம்னு போனேன் ஆனா அவளோ  நட்பு பற்றிய கவிதையை எனக்கு படிச்சு காட்டினாள். அதனால அவகிட்ட சொல்ல முடியலை.

சரி வருத்தப்படாதே அர்ஜுன்.

இல்லடா அவகிட்ட காதலை சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல. ரொம்ப அவஸ்த்தப்படுறேன். எதுக்கு அவள்  மேல் காதல் வந்தது?  ஏன் நான் இப்படி இருக்கேன்? என்னால சரியா சாப்பிட முடியல, தூங்க முடியல. அவளை தாண்டி என்னால யோசிக்க முடியல.

அர்ஜுன் நீ ரொம்பவே குழம்பிப் போய்யிருக்க நீ போய் சாப்பிட்டு தூங்கு.

எனக்கு சாப்பாடு வேண்டாம் மனோஜ் என்று கூரிவிட்டு தனது அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டான் அர்ஜுன்.

சுற்றுலா முடிந்து கல்லூரிப்  பேருந்து  கல்லூரிக்கு வந்தது அங்கிருந்து  அனைவரும்  வீ ட்டிற்கு  சென்றனர். அர்ஜுன்  பூஜாவை பார்க்கவும் முடியாமல்.பார்ப்பதை தவிர்க்கவும் முடியாமல் ரொம்ப பலகீனமாய் பூஜாவிட்கு விடையளித்துவிட்டு வேகமாக தனது பைக்கை செலுத்தினான். அவன் மனம் பூஜாவையே  நினைத்திருந்ததால் அவனல்  பைக்கை  சரியாக ஓட்ட முடியவில்லை.

அப்போது திடீர் என்று விபத்து ஏற்பட்ட சப்தம் கேட்டு எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தனர்.
பூஜாவும்  சத்தம் கேட்டு வேகமாக  சென்று பார்த்தாள் கல்லூரி வாசலை வேகமாக தண்டிச்  சென்ற அர்ஜுன் எதிர்பாராத விதமாக
ஒரு கார் மீது மோதி விழுந்துகிடந்தான்.இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத    பூஜா அதிர்ச்சியில் செயலற்றுப்  போனாள் அவள் ஏற்கனவே தனது தாயை விபத்தில் பறிகொடுத்தது  அவள் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது. அப்போது பூஜா தன்னை அறியாமல் அழுதாள்.அப்போது அது அர்ஜுன் மீது வைத்த காதல் என்று அவளுக்கு புரியவில்லை. அவனுக்கு விபத்து ஏற்பட்டதனால் அழுகிறாள் என்று எல்லோரையும்  போல் அவளும் நினைத்துக் கொண்டாள்.

                                                               ( காதல் தொடரும்....)







   

திங்கள், நவம்பர் 07, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம் 5



 பூஜா தனது வகுப்பிட்கு சென்றுகொண்டிருந்தாள். அப்போது அங்கு அர்ஜுன் நின்றுகொண்டு இருந்தான். பூஜா அர்ஜுனை பார்த்து நன்றி தெரிவித்தாள்.

நன்றி அர்ஜுன்!

இதுக்கு எல்லாம் எதுக்கு நன்றி பூஜா?

நீ என்ன காப்பாதியதுக்கு மட்டும்   இல்லை அர்ஜுன் உன்னால்தான் எனக்கு பவித்ரா மேடம் அறிமுகமானங்க. அதுக்கு உனக்கு 
கண்டிப்பா நன்றி சொல்லணும்.

பரவாயில்ல பூஜா வா வகுப்பிற்கு நேரமாகுது.

இருவரும் வகுபிட்கு செல்வதை சீனியர்   ரமேஷ் பார்த்துவிட்டான். அவன் அர்ஜுனிடம் வேகமாக வந்து தனது பொறாமையை கோபமாக வெளிப்படுத்தினான். 

 என்ன காலையிலேயே கடலையா? என்று நக்கலாக கேட்டான் ரமேஷ்.

சார் அது வந்து... என்று தடுமாறினான் அர்ஜுன்!

ரமேஷ் அப்படி கேட்டதும் பூஜாவிற்கு கடும்கோபம் வந்துவிட்டது.

நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று பூஜா கேட்டதும் ரமேஷ் கோபம் அதிகமானது. அந்த நேரம் பார்த்து கல்லூரி முதல்வர் வந்து கொண்டிருந்தார். அதை கவனித்த ரமேஷ் அங்கிருந்து சென்றான்.  

இருவருக்குள்ளும் ஒரு அழகான நட்பு வளர்ந்தது.பூஜா பேராசிரியை  பவித்ராவிடம் மிகவும் நெருக்கமானாள்.  அர்ஜுன், கார்த்திக், மனோஜ், பூஜா,பிரியா, ரம்யா என்று அவர்களது நட்புவட்டம் பெரிதானது. எல்லோரும்  நெருக்கமான நண்பர்களானார்கள் . எல்லோருடைய நட்பும் இன்னும்  நெருக்கமாகியது   பெங்களூர் தொழில் சார்ந்த சுற்றுலாவில்.

அன்று பூஜா நீல நிற உடையில் மிகவும் அழகாக இருந்தாள். அர்ஜுன் மனதும் கண்ணும் பூஜாவை மீறி போகவில்லை.  
அர்ஜுன் பூஜாவை விட்டு ஒரு நிமிடம் கூட விலகிச்  செல்லாமல் அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கித்  தந்தான்.



மாலை  சுற்றுலா முடிந்ததும் தங்கும் விடுதிக்கு சென்றனர். அப்போது பூஜா ஒரு கவிதை புத்தகம்  வாசித்துக் கொண்டிருந்தாள். அர்ஜுன் சென்று அவளிடம் பேசினான்.

ஹாய் பூஜா என்ன படிக்கிறாய்?

கவிதை புத்தகம் அர்ஜுன்.

யார் எழுதியது என்ன தலைப்பு?

பா.மோகன் குமார் எழுதிய "கடற்கரைச் சுவடுகள்".

கவிதை நல்ல இருக்க?

நல்லா  இருக்கு அர்ஜுன்   அதுல ஒரு கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பு பற்றி நான் படிக்கிறேன் நீ கேளு.

   வாழும் போதே...
   சாகும் நியாபகம் 
    உன் பிரிவால்!

   காதலும் காமமும்...
   துளைக்காத கவசம்
   நம் நட்பு!

  ஒரு...
  பெண்ணை ரசிததைக்கூட
  ஒரு 
  பெண்ணாகிய உன்னிடம் 
  உரைப்பதுதான் - நம் 
  நட்பு! 

 காதலியைத்...
 தள்ளி நின்று பேசுவதும்
 தோழியைத் தொட்டுப்
 பேசுவதிலும் இருக்கிறது
 நட்பின் நம்பிக்கை!

 என்னிடம்...
 ரகசியம் என்று
 தனியாக ஏதுமில்லை
 நீதானே என்
 வாழ்கையின் எல்லை!

 உன்னோடு...
 சண்டை அதுதானே
 சுவாரசியம் எனக்கு
 உன் நினைவுகளை
 அசை போடுவதற்கு!

 விதி...
 நம் இருவரையும்
 கண் கட்டாமலேயே
 கண்ணாமூச்சி ஆடவிட்டது! 

 நீ... 
 எங்கிருந்தாலும் 
 உன் 
 நினைவோடே
 நான்! 

 கவிதை நல்ல இருக்கா அர்ஜுன். 

 ரொம்ப நல்ல இருக்கு பூஜா நான் உனக்காக எழுத நினைச்ச கவிதை மாதிரியே இருக்கு என்று பூஜாவிட்காக அர்ஜுன் எழுதிய காதல்  கவிதையை சட்டை பைக்குள் மறைத்துக் கொண்டு பூஜாவிடம் விடைபெற்றுக் கொண்டு தனது அறைக்கு குழப்பத்துடன்  சென்றான் அர்ஜுன்.    

    
                                                                     ( தொடரும்...)