வெள்ளி, நவம்பர் 18, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம் 10


மறுநாள் பூஜாவை கல்லூரியில் கொண்டுவந்து விட்ட பூஜாவின் அப்பா சுவாமிநாதன் நடவடிக்கைகள் சற்று வித்யாசமாக இருப்பதாக உணர்ந்தாள் பூஜா. எப்போதும் பூஜா, தன்னை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டாலும்  சுவாமிநாதன் வேலை  இருப்பதாக கூரிவிட்டு சென்றுவிடுவார். ஆனால் இன்று முக்கியமான போர்டு மீட்டிங் இருப்பது தெரிந்தும் பூஜா 
கேட்காமலேயே பூஜாவை கல்லூரிக்கு அழைத்து வந்தது பூஜாவிற்கு விநோதமாக இருந்தது. அத்தோடு சுவாமிநாதன்  எப்போதும் இல்லாமல் சற்று தடுமாறுவதையும் பூஜா கவனிக்கத் தவறவில்லை.  பூஜா காரை விட்டு இறங்கி வகுப்பிற்கு செல்வது போல் சென்று ஒரு மரத்தடியில் மறைந்து கொண்டு அவளது அப்பா சுவாமிநாதனை  கவனித்தாள். அப்போது பூஜாவின் அப்பா சுவாமிநாதன் தனது காரை கல்லூரிக்கு வெளியே நிறுத்திவிட்டு. மீண்டும் கல்லூரிக்கு உள்ளே வந்தார். அப்போது பூஜா மரத்தடியில் நின்று கவனிப்பது தெரியாமல் சுவாமிநாதன் பேராசிரியை பவித்ரா அறைக்கு சென்றார்.

சுவாமிநாதன் வருவதை சற்றும் எதிர்பார்காத பேராசிரியை பவித்ரா சுவாமிநாதனை வரவேற்றார்.

எப்படி இருக்க பவித்ரா?

நான் நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

ஓகே! உன்னையும் கவிதாவையும் அந்த சூழ்நிலையில சந்திப்பேன்னு நான் எதிர்பார்களை. 

 எனக்கும்  அதே உணர்வுதான் சுவாமி.

நீ நம்ம கல்லூரி நாட்களில் எப்படி இருந்தியோ  அப்படியே இருக்க பவித்ரா. அதே சிரிப்பு! அதே அழகு!

போதும் சுவாமி நீங்களும்தான் அப்படியே இருக்கீங்க.

உன் குடும்பத்தைப் பற்றி சொல்லு பவித்ரா...

எனக்கு ஒரு பெண் குழந்தை  பேரு சித்ரா இப்ப பத்தாவது படிக்கறா. என் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு  ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்.
இப்ப நானும் என் பெண்ணும்தான் இருக்கோம். அம்மா, அப்பா ரெண்டு பேருமே எனக்கு கல்யாணம் ஆனதும்  கொஞ்ச நாள் பிறகு இறந்துட்டாங்க.
என் கணவர் இறந்ததுமே என் மாமியார் அவங்க சொந்த ஊரிற்கு சென்றுவிட்டார்கள்.  இப்ப எனக்கு என் பெண்  சித்ரா துணை. சித்ராவிற்கு நான் துணை. வாழ்க்கை அப்படியே போய் கொண்டிருக்கிறது.

இடையில் சிறிது மௌனம். மீண்டும் பேச்சை தொடர்ந்தார் பேராசிரியை பவித்ரா.பூஜா ரொம்ப அழகா இருக்க சுவாமி. முதல் முதலில் அவளை பார்க்கும்போது ஏதோ எனக்குள்ள ஒரு இனம்புரியாத பாசம்.சுவாமி உன்னோட ஜாடை அப்படியே இருக்கு பூஜாவிற்கு. பூஜா உங்க மனைவி  செல்வி இறந்தது பற்றி சொன்னதும் மனசு ரொம்பவே வலித்தது. 

செல்வியோட இழப்பு எனக்கு தாங்கமுடியாத வலியாதான் இருந்தது பவித்ரா. ஆனா பூஜாவை  பார்க்கும்போது அந்த வலி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுடுச்சு.
கவிதா எப்படி இருக்காங்க பவித்ரா?

அவள் நல்ல இருக்காள் சுவாமி. நீங்க ரெண்டு பேரும் காதலிச்சது. உங்க ரெண்டு பேரு வீட்டிலையும் எதிர்ப்பு வந்தது. அவள் மாமா பையனை வலுக்கட்டாயமா அவள் பெற்றோர்  கல்யாணம் செய்து வைத்தது. எதையும் அவள் மறக்கவில்லை. 

சுவாமிநாதன் கண் கலங்கியது. அதை காட்டிக்கொல்லாமல். சரி பவித்ரா எனக்கு மீட்டிங் நேரமாகிறது 
இது என்னோட நம்பர். நாம் மறுபடியும் சந்திப்போம். பூஜாவிற்கு நான் வந்தது தெரிய வேண்டாம் என்று பேராசிரியை பவித்ராவிடம்  விடைபெற்று வெளியே வந்த  சுவாமிநாதன் தன் கைக்குட்டையால் தனது கண்களை துடைத்துக்கொண்டு கல்லூரியை விட்டு வெளியேரினார். இதை அனைத்தையும் தூரத்தில் இருந்து கவனித்த பூஜாவிற்கு பேராசிரியை  பவித்ராவிட்கும்  தனது அப்பா சுவாமிநாதனுக்கும் இடையே இருப்பது என்ன என்பது புரியாமல் குழம்பினாள். 

( தொடரும்...)

  

   





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக