பூஜா மாலை வீட்டிற்கு சென்றதும் காலையில் நடந்ததை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள். பூஜா மிகவும் குழப்பத்தில் இருந்தாள். அவள் மனதிற்குள் ஒரு கேள்வி வந்து கொண்டே இருந்தது. அது அர்ஜுன் பற்றியதாகவே இருந்தது. அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அர்ஜுனிடம் உள்ளது நட்பா? காதலா? என்ற கேள்விக்கு விடைதெரியாமல் யோசனையிலேயே இருந்தாள். அப்போது பூஜாவின் அப்பா சுவாமிநாதன் பூஜாவிடம் சென்று பேசுகிறார்.
என்னம்மா சாப்பிடக்கூட வராமல் யோசனையிலேயே இருக்க?
எனக்கு பசியில்லை அப்பா.
அர்ஜுன் பற்றிய கவலையா? அவன் சீக்கிரம் குணமாகிடுவான் நீ போய் சாப்பிடு என்று சுவாமிநாதன் சொன்னதும்
பூஜா மறுக்காமல் சென்று சாப்பிட்டாள். பிறகு தனது படுக்கை அறைக்கு வந்த பூஜா தன்னை அறியாமல் அர்ஜுன் பெயரை நோட்டில் எழுதினாள்.ஒரு ஆண் காதலிக்க ஆரம்பித்தால் அந்தப் பெண்ணை பற்றி பக்கம் பக்கமாக கவிதை எழுதுவான். ஆனால் ஒரு பெண் காதலிக்க ஆரம்பித்தால் அவனோடு கற்பனையிலேயே ஐம்பது வருட வாழ்கையை வாழ்ந்துவிடுவாள். ஒரு ஆணுக்கு காதல் என்பது வாழ்கையில் வரும் கற்பனை. ஆனால் அதுவே ஒரு பெண்ணின் காதல் கற்பனையில் வரும் வாழ்க்கை. பூஜா இப்போது காதல் ஏற்படுத்திய கற்பனையில் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சுயநினைவு வந்து பூஜா தான் எழுதிய அர்ஜுன் பெயரை பார்த்து சிரித்தபடியே உறங்கச் சென்றாள். அப்போதும் உறக்கம் வராமல் அர்ஜுனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். மறுநாள் மாலை பூஜாவும் மற்ற நண்பர்களும் மருத்துவமனைக்குச் சென்று அர்ஜுனை பார்த்தனர்.
அப்போது அர்ஜுன் பூஜாவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். பூஜாவையும் மற்ற நண்பர்களையும் அறையின் உள்ளே வருவதை வரவேற்று உபசரித்தார் அர்ஜுன் அம்மா கவிதா. அப்போது கவிதா பூஜாவையே பார்த்து கொண்டிருந்தார்.
இப்ப எப்படி இருக்கு அர்ஜுன்? என்று மனோஜ் கேட்டான் .
நல்ல இருக்கேன் மனோஜ் என்று சொல்லிவிட்டு பூஜாவை பார்த்தான் அர்ஜுன்.
பூஜா கோவில் பிரசாதத்தை அர்ஜுன் அம்மா கவிதாவிடம் கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.கவிதா பிரசாதத்தை
அர்ஜுன் நெற்றியில் இட்டார்.
எல்லோரும் அர்ஜுனிடம் விடைபெற்றுச் சென்றனர். அப்போது கவிதா பூஜாவை அழைத்தார்.
பூஜா ஒரு நிமிஷம் என்று கவிதா அழைத்ததும் பூஜா திரும்பி பார்த்தாள்.
அப்போது கவிதா ஏதோ கேட்கவந்ததைக் கேட்காமல் விழுங்கிக்கொண்டு. நீ கொடுத்த பிரசாதத்திற்கு நன்றி என்று சொன்னார்.
பூஜா ஒரு சின்ன சிரிப்போடு அங்கிருந்து சென்றாள்.
( தொடரும்...)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக