வியாழன், நவம்பர் 24, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம் - 14

அர்ஜுன் முழுவதுமாக குணமாகி கல்லூரிக்கு வந்தான். தான் கல்லூரிக்கு வந்தது பூஜா சந்தோசப்படுவாள் என்று எதிர்பார்த்த அர்ஜுனிட்கு ஏமாற்றமே மிஞ்சியது. அர்ஜுன் பேசினாலும் அவன் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு மௌனமாகவே இருந்தாள் பூஜா. அர்ஜுனும் தான் வராத நாட்களில் நடந்த பாடங்களை எழுதுவதை தொடர்ந்தான். கொஞ்ச நேரம் எழுதியதும் பூஜாவிடம் மறுபடியும் பேசினான்.

பூஜா ஏன் பேசாம இருக்க? இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? என்று அர்ஜுன் கேட்டான். அதற்கு பூஜா பதில் சொல்லாமல் மெளனமாக புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அர்ஜுன் வேறு எதுவும் பேசாமல் மறுபடியும் எழுதுவதில் கவனம் செலுத்தினான். பூஜாவின் இந்த செயல் அர்ஜுனிட்கு விநோதமாக இருந்தது, அவனால் பூஜா மனதில் இருப்பதை அறியமுடியவில்லை. அவனால் மட்டுமல்ல இந்த உலகத்தில் எந்த ஆணாலும் ஒரு பெண் நினைப்பதை அப்படியே புரிந்துகொள்ள முடியாது. அவ்வளவு ஏன் ஒரு பெண்ணால் கூட இன்னொரு பெண் நினைப்பதை புரிந்துகொள்வது கடினம்.அப்படி இருக்க பூஜாவின் மனதில் என்ன இருக்கிறது என்று அர்ஜுன் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். வகுப்பு முடிந்து பூஜா கிளம்பினாள். அப்போதும் அர்ஜுனோடு ஒரு
வார்த்தை கூட பேசவில்லை. அர்ஜூனால் இதை தாங்க முடியவில்லை வீடிற்கு சென்றதும் அர்ஜுன் தன் அம்மாவிடம்
சென்று பூஜா அன்று அவனோடு பேசாமல் விநோதமாக நடந்து கொண்டதை கூரினான்.

அர்ஜுனின் அம்மா கவிதாவிற்கு பூஜா பற்றி பேசும்போதெல்லாம் முகம் மாறியது. தனது முன்னால் காதலனின் மகள்தான் பூஜா என்பதை அறியாத அர்ஜுனிடம் எப்படி இதை சொல்வது. அதை சொன்னால் அர்ஜுன் எப்படி எடுத்துக்கொள்வான் என்று தெரியாமல் மிகவும் வேதனையோடு சமையலறை உள்ளே
சென்றார் கவிதா. கவிதாவிற்கு சந்தேகமும், பயமுமாக இருந்தது, அது பூஜா அந்த உண்மையை
அறிந்திருப்பாளோ என்ற சந்தேகம் அப்படி அறிந்திருந்தால் அதை அர்ஜுனிடம் சொல்லிவிடுவாளோ என்ற பயமும் கவிதாவின் மனதை காயப்படுத்திக்கொண்டே இருந்தது.

                                                                         ( தொடரும்...)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக