மறுநாள் அர்ஜுன் கல்லூரிக்கு செல்கிறான். அவன் சீனியர் கண்ணில் படாமல் கல்லூரியின் பின் பக்கமாக வருகிறான். அங்கு பூஜாவை சீனியர் பெண்கள் ராகிங் செய்து கொண்டிருந்தார்கள். அதை பார்த்த அர்ஜுன் உடனே தனது தொலைபேசியை எடுத்து அதே கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் அர்ஜுனுடைய அம்மா கவிதாவின் உயிர் தோழி பவித்ராவிற்கு அழைத்தான்.
மேடம் நான் அர்ஜுன்!
சொல்லு அர்ஜுன் எப்படி இருக்க? உங்க அம்மா எப்படி இருக்காங்க?
நல்ல இருக்காங்க மேடம்!
மேடம் எல்லாம் வேண்டாம் கல்லூரிக்குள்ளேதான் நான் உனக்கு மேடம். போன்ல எப்பவும் போல ஆன்ட்டினே கூப்பிடு.
ஆன்டி நீங்க காலேஜ் வந்துடிங்களா?
ஆமா அர்ஜுன்!
ஆன்டி காலேஜ் பின்னாடி என் கிளாஸ் படிக்கிற பூஜாவை ராகிங் செய்யறாங்க. கொஞ்சம் வந்து தடுக்க முடியுமா?
சரி அர்ஜுன் நான் உடனே அங்கே போகிறேன் என்று கூரிவிட்டு தொலைபேசியை வைத்தார்.
பேராசிரியை பவித்ரா என்றால் எல்லா மாணவர்களுக்கும் ஒரு தனி மதிப்பு காரணம் இரண்டு வருடங்களுக்கு
முன்பு அவரது கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். பவித்ரவிட்கு ஒரு பெண் குழந்தை பத்தாம் வகுப்பு படிக்கிறாள் பெயர் சித்ரா. பவித்ரா எப்போதுமே எல்லோருக்கும் உதவும் தன்மை உடையவர்.
யாரையும் புண்படுத்தி பேசமாட்டார். அர்ஜுன் சொன்னதும் பவித்ரா அந்த இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது சீனியர் ஹேமலதா பூஜாவை ராகிங் செய்துகொண்டிருந்தாள்.
நீதான் கல்லூரியிலேயே பெரிய அழகாமே? எந்த அழகு நிலையத்துக்கு போகிறாய்? நானும் அழகு கலை நிபுனிதான் இரு நானும் உன்னை அழகு படுத்துகிறேன் என்று குளிர்பானத்தை எடுத்து பூஜா மீது ஊற்ற முயற்சித்தாள் கல்லூரி கடைசி ஆண்டு படிக்கும்
ஹேமலதா.
ஹேமா என்ன செய்யரே? என்று கோபமான குரலில் பவித்ரா கேட்டதும் ஹேமா தான் செய்வதை உணர்ந்து அமைதியானாள்.
ஒன்னு தெரிஞ்சுக்கோ ஹேமா அழகுங்கறது அழகு நிலையத்துக்கு போவதனால் வருவது கிடையாது. அது நமக்கு இயல்பா வரவேண்டிய விஷயம். உடம்பு அழகா இருக்கணும் நினைக்கிற நீ முதல்ல மனச அழகா வச்சுக்கோ! உடம்பில் இருக்கிற அழகு மாறிடும் ஆனா மனசு அழகா இருந்தா அது என்னைக்கும் மாறது. ஒரு பெண்ணா இருந்து நீயே இன்னொரு பெண்ணை கொடுமை செய்தால் பெண் அடிமைத்தனத்தை பற்றி பேசி என்ன பயன். முதலில் உன்னுடைய பொறாமை குணத்தை விடு நீ செய்த தவறுக்கு பூஜாகிட்ட மன்னிப்பு கேளு.
சாரி பூஜா! சாரி மேடம்! என்று தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு. எல்லா சீனியர் பெண்களும் பூஜாவை விட்டு விலகி சென்றனர்.
பூஜா தன்னுடைய உணர்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதால். அதை பார்த்து பவித்ரா ஆறுதல் கூரினார். பூஜா பற்றி அவளிடமே கேட்டு தெரிந்து கொண்டார்.
மேடம் உங்களை பார்த்தா என் அம்மா நியாபகம் வருகிறது.
உங்க அம்மா எங்க இருக்காங்க பூஜா?
மேடம் அவங்க நான் சின்ன வயசா இருக்கும்போதே ஒரு விபத்தில் இறந்துட்டாங்க என்று அழுதாள் பூஜா.
அதை கேட்டதும் அந்த வலியை முன்பே உணர்ந்திருந்த பவித்ரா பூஜாவை தன்னோடு அணைத்து கொண்டார்.
ரொம்ப தேங்க்ஸ் மேடம்! எனக்காக நீங்க வந்ததற்கு.
அதுக்கு நீ அர்ஜுனிட்குதான் நன்றி சொல்லவேண்டும், அர்ஜுன் தான் உன்னை ராகிங் செய்யற விஷத்தை என்கிட்ட சொல்லி உன்னை காப்பாற்ற சொன்னான்.
பூஜவிட்கு அர்ஜுன் மீது ஒரு தனீ மரியாதை வந்தது.
பூஜா எனக்கு வகுப்பிட்கு நேரமாச்சு நீ நேரம் கிடைக்கும் போது என்னுடைய அறைக்கு வா என்னுடைய அறை எண்
341 .
பூஜா மீண்டும் பேராசிரியை பவித்ராவிட்கு நன்றி சொல்லிவிட்டு தன்னுடைய வகுப்பிற்கு சென்றாள்.
( தொடரும்...)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக