செவ்வாய், நவம்பர் 01, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்- 3



அர்ஜுன் மிக சந்தோசமாக பூஜா பற்றிய விசயங்களை அறிந்துகொண்டு இன்றும் அவன் சீனியர்கள் கண்ணில் படாமல் வீடிற்கு சென்றான். 

அம்மா! அம்மா! எங்கமா இருக்க? என்று கத்திக்கொண்டே வீட்டின் உள்ளே  சென்றான் அர்ஜுன். 

அப்போது பூஜை அறையில் இருந்து மணியோசை கேட்டது.கவிதா பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். 

அர்ஜுன் சென்று பூஜை அறையில் அமர்ந்து அம்மா செய்யும் பூஜையை பார்த்துகொண்டிருந்தான். 

அம்மா இன்னைக்கு என்ன விசேசம்? 

இன்னைக்கு நவராத்திரி அர்ஜுன். உங்க அப்பாவை  கல்யாணம் செய்யறதுக்கு முன்பு 
வருசா வருஷம் கொழுவைத்து பூஜைசெய்வேன். உங்க அப்பாவிற்கு இதெல்லாம் பிடிக்காது அதனால என்னால் முடிந்த சின்ன பூஜை மட்டும் செய்கிறேன். 



எதுக்கு அம்மா நவராத்திரிக்கு கொலுவைக்கிறோம்?

நவராதிரி சிவனுக்கு உகந்த ராத்திரி.அன்று  வழிபட்டால்  நினைத்தது நடக்கும் என்ற ஐதீகம்.  எங்கும் நிறைந்த இறைவனை கொலுபொம்மையையாக்கி. அதை உண்மையான கடவுளாய் நினைத்து பாட்டு பாடி இறைவனை தோழனாய், தலைவனாய், குழந்தையாய் நினைத்து  மகிழ்வது  மிக சுவாரசியமாக இருக்கும் அர்ஜுன்.

சரி அம்மா!

என்ன அர்ஜுன் இன்னைக்கு அந்த பெண்ணிடம்  பேசினாயா?

ஆமா அம்மா! அந்த பெண் அழகு மட்டுமில்ல ரொம்ப புத்திசாலியும்கூட. அந்த பொண்ணு சொந்த ஊரு கோயம்புத்தூர். படிச்சது அவிலா கான்வென்ட். அப்பா சொந்த பிசினஸ் செய்யறார். இப்ப இருக்கிறது   பெசன்ட் நகர். அவங்க அப்பா பெயர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொது அர்ஜுன் அப்பா ராஜேஷ்  வீட்டின் உள்ளே  வந்தார்!

கவிதா! காஸ் சிலிண்டர் வந்திருக்கு பார்! என்றார் ராஜேஷ்.


இதோ வரேங்க! என்று கூரிவிட்டு வாசல் பக்கம் சென்றார் கவிதா. அர்ஜுன் தன் அப்பா வருகையை பார்த்து அவன் அறைக்கு சென்றான்.


 ( தொடரும்...)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக