புத்தகங்கள் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கின்றன. நாம்தான் புத்தகங்களை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. புத்தகங்கள் ஒரு மனிதனின் முழு வாழ்கையை அனுபவங்களை நமக்கு ஒரு மணிநேரத்தில் சொல்லிவிடுகின்றது. நான் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த, என்னை பாதித்த விஷயங்களை பற்றி ஒரு சிறிய பகிர்வு. சுகி சிவம் அவர் பேசும்போது கூரிய விஷயம் ஒருவர் வந்து அவரிடம் கேட்டார் எந்த புத்தகம் சிறந்த புத்தகம் என்று அதற்கு சுகி சிவம் அவர்கள் சொன்ன விளக்கம் " நீ போய் புரட்டி புரட்டி எடுக்கற புத்தகம் சிறந்த புத்தகம் அல்ல, எந்த புத்தகம் உன்ன புரட்டி புரட்டி எடுக்குதோ அதுதான் சிறந்த புத்தகம் என்று". புத்தகத்தின்மேல் எப்போதும் எனக்கு காதல் உண்டு. அந்த புத்தகங்கள் சொல்லித்தந்த விஷயங்கள், ஞான அக்னியை என்னோடு வெட்டி அரட்டை அடிப்பவரிடம் இருந்து நான் ஒருபோதும் பெற்றதில்லை. இறையன்பு அவர்கள் புத்தகங்கள் பற்றி பேசும்போது சொன்ன விஷயங்கள் ஒரு மனிதன் அவனது வாழ்நாளில் குறைந்தபச்சம் நூறு புத்தகங்களாவது படித்திருக்கவேண்டும். பகவத் கீதை சொல்லும் கருத்து "அழியாத செல்வம் கல்வி" என்பதாகும். பலருக்கு படிப்பது என்பது கல்லூரியோடு முடிவடைந்ததாக நினைக்கிறார்கள். கல்லுரி படிப்பு சம்பாதிக்க கற்றுக்கொடுப்பது. சாந்தமாக வாழ, சந்தோசமாக வாழ நாம் தேடித்தேடி படிக்கும் புத்தகமே நமக்கு கற்றுக்கொடுக்கும். அறிவிற்கு எல்லையே இல்லை. அவ்வை சொன்ன வார்த்தை " கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு". எப்போது நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்கின்ற தெளிவு வருகிறதோ அப்போது ஞானம் பிறக்கிறது. எப்போது நான் என்பது நானல்ல என்கின்ற உண்மை புரிகிறதோ அப்போதுதான் நமக்குள் ஏற்படும் மௌனத்தின் சப்தம் நமக்கு கேட்கிறது.
எனக்கு மனதில் ஆழமாய் பதிந்துவிட்ட இறையன்பு அவர்களின் சோளக்காட்டு பொம்மை பற்றிய விளக்கம். சோளக்காட்டு பொம்மைகள் மனிதர்களின் அடையாளம். சோளக்காட்டு பொம்மைகள் பயமுறுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பறவைகள் எப்போதும் ஒரு மனிதன் தானியங்களை பாதுகாக்க நிற்பதாய் நினைத்துவிடுகின்றது. மனிதனுக்கு மட்டும் இயற்கை கொடுத்த அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணுகின்றான். அவனது சுயநலம்தான் இந்த சோளக்காட்டு பொம்மைகள். சோளக்காட்டு பொம்மைக்கு மற்றவர்களை பயமுறுத்துவதை பெருமையாக நினைக்கிறது. மனிதர்களும் தங்களை மற்றவர்கள் பார்த்து பயப்படவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு நாள் அந்த பறவைகளுக்கு நிற்பது மனிதனல்ல சோளக்காட்டு என்பது தெரியவரும்போது அறுவடை முடிந்துவிடும். மனிதர்கள் தங்களின் உருவமாக சோளக்காட்டு பொம்மைகள் பிரதிபலிக்கின்றன.






