தமிழ் சேனல்கள் ரியாலிடி ஷோ என்று சொல்லப்படுகிற நிகழ்சிகள் மக்களின் மூளையை மலுங்கடிக்கிறது. மக்களின் உணர்சிகளை காசாக்கி
TRP ரேட்டிங் வரிசையில் முதலிடம் பெற மக்களை கேலிக்கூத்தாடுகிறது இந்த
ரியாலிடி ஷோகள். நீயா? நானா? கோபிநாத்தை பிரபலமாக்கிய நிகழ்ச்சி என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி சமுதாய அக்கறையோடு தொடங்கப்பட்டதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி யாருடைய நலனை பற்றியும் கவலைபடாமல். வெறும் தெருச்சடை போடுவது
போல ஆக்கிவிட்டது இந்த நிகழ்ச்சி. உதரணமாக: மாமியார் VS மருமகள், ஆண்கள் அதிகம் விரும்புவது சிவப்பு நிறப் பெண்களா? மாநிறப் பெண்களா? போன்ற
தேவையற்ற வெறும் மக்களை கவர செய்த முயற்சியே தவிர அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை பிரச்சனைகள் மட்டுமே
நிச்சயம். அவர்கள் பிரச்னையை தீர்க்க இந்த நிகழ்ச்சியை உருவாக்கவில்லை மாறாக பிரச்சனைகளை
உருவாக்குகிறார்கள். சிலருக்கு டிவியில் தன் முகம் தெரியவேண்டும் என்பதற்காகவே சிலர் என்ன பேசுவது என்றே
தெரியாமல் உலகத்தில் பலநாடுகள், பலதரப்பட்ட மனிதர்கள் பார்கிறார்கள் என்ற ஒரு நினைவுகூட இல்லாமல் சிலர் கண்டமேனிக்கு பேசுகின்றார்கள். வெளிப்படையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு எதிரில் இருப்பவர் மனம் என்ன பாடுபடும் என்பதுகூடத் தெரியாமல் கண்டபடி பேசி பிரச்சனைகளை விலைக்கு வாங்கிக்கொள்கிரார்கள் அல்லது வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள். மக்களும் இதைப்போன்ற
நிகழ்சிகளை விரும்பிப் பார்பார்கலானால் அவர்கள் நிச்சயம் மனஉளைச்சலுக்கு ஆளாவர்கள். மன்னியுங்கள் திரு. கோபிநாத் அவர்களே உங்களுடைய மேடைபேச்சிற்கு நான் ரசிகன்தான் ஆனால் நீங்கள் கொடுக்கும் எல்ல தலைப்பும் சிறந்தவையல்ல. ஒரு மணிநேரம் தொடரும் நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நூறு விளம்பரம் போடும் உங்கள் நிகழ்ச்சி எந்த சமுதாயத் எப்படி மாற்றப்போகிறது
என்பது எனக்கு புரியவில்லை.
இந்த நிகழ்ச்சி என்னை இப்படி எழுதவைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை உங்கள் நிகழ்ச்சி சமுதாய பார்வையில் இருந்து சற்று விலகிவிட்டது என்கின்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.
சிலநாள் நான் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி இப்போது வெறுப்பையே கொடுக்கிறது. முதலில் இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது குழந்தைகள் எவ்வளவு அழகாக பாடுகிறார்கள் என்பதை பார்த்து ரசித்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சி போகப்போக குழந்தைகளுக்கு படிப்பைவிட்டு மனஅழுத்தத்தையே தந்துள்ளது. பாடகர்களை உச்சாகப்படுத்தவரும் நீதிபதிகள் ஒவ்வரு குழந்தையை ஒவ்வரு விதமாக ட்ரீட் செய்வது
அவர்களுக்கு குழந்தை மீது உணமையான அக்கறை இருக்கிறதா? அல்லது வெறும்
TRP ரேட்டிங் மட்டுமே அவர்களது குறிக்கோளா? என்பது தெரியவரும். அழகான குழந்தைகள் தோல்வி சோகம் தாளாமல் அழுதுகொண்டு போவதை
படம்பிடித்து காட்டுவது அந்த குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது ஏன் இவர்களுக்கு
புரியவில்லை. ஒரு குழந்தை நன்றாக பாடினால் சாக்லேட் மழை பொழிவதும், கண்ணத்தில் முத்தமிடுவது, தோற்ற குழந்தை எவ்வளவு மன வேதனைப்படும் என்பது எப்போது புரிந்துகொள்வார்கள். ஒரு குழந்தை தோற்றுவிட்டால் ஆறுதல் சொல்லவேண்டிய பெற்றோரே அழுவது அந்த குழந்தைக்கு தான் எதற்கும் லாயக்கற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். அந்த குழந்தை பாடுவதில் வல்லவனாக இல்லாவிட்டாலும் வேறு ஒரு துறையில் சிறந்தவன்
என்பதை அந்த குழந்தைக்கு யார் புரியவைப்பது?
ஜாக்பாட் என்கின்ற பொதுஅறிவு நிகழ்ச்சி. அறிவே இல்லாதவர்கூட சுலபமாக இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்கலாம். எவ்வளவு அழகான கேள்விகள் எவ்வளவு கஷ்டமான பதில்கள். பலபேர் இந்த நிகழ்ச்சியில் சிம்ரன் உடுத்திய ஆடை அலங்காரத்தை பார்க்கவே இந்த நிகழ்ச்சியை பார்கிறார்கள் எனலாம். ஒரு கேள்வி என்பது மக்களை விழிக்க செய்யவேண்டும் அதைவிடுத்து வெறும் மக்களை மயக்கும் கவர்ச்சிப் பொருளாக அவை இருப்பது தயவு செய்து இதை அறிவுசார் நிகழ்ச்சி என்று
சொல்வதை விடுத்தது அறியாமைசார் நிகழ்ச்சி என்று சொல்வதே சரியானதாய் இருக்கும்.
சிறியவர் முதல் பெரியவர்வரை பார்க்கும் நிகழ்ச்சியில் ஒன்றான DEAL OR NO DEAL என்ற நிகழ்ச்சி இதை நான் கடைசிவரை என்ன நிகழ்ச்சி என்றே பார்கவில்லை. இருந்தும் மக்களை எப்படி அடிமையாகி முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதை பார்த்த போது மிகவும் வேதனைப்பட வைத்தது. நமது காலசாரத்தை குழிதோண்டி புதைப்பது போன்ற நிகழ்ச்சி ஒன்றை சன் டிவி அரங்கேற்றியது. கிட்டத்தட்ட நாற்பது பெண்கள் அரைகுறை ஆடைகளோடு காட்சிப்பொருளாய் வைத்து
ஆடப்பட்ட சூதாட்டம் எனலாம். இதில் மக்கள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அழுவது அதை மற்றவர்கள் ரசிப்பது என்ற அபத்தமான நிகழ்ச்சி அரங்கேறியது. நல்லவேளை ஆட்சி மாறியதால் இந்த மாதிரி
கேவலமான நிகழ்ச்சி தடைபட்டது.
ரியாலிடி ஷோக்களில் நடன நிகழ்ச்சி என்ற ஒன்று நம் கலாச்சாரத்தை மறந்து கண்டவரோடு கண்டபடி நடனமாடி கண்டபடி
உடையணிந்து ஆண்கள் பெண்கள் என்ற ஒரு அடையாளம்கூட இல்லாமல் ஆடும் ஆட்டத்தை பெறோரே ஊக்குவிப்பது சற்று வேதனையாக உள்ளது. படங்களில்
ஒரு கதாநாயகனும், கதாநாயகியும் எப்படி கட்டிப்பிடித்து நடனமாடுவார்களோ அப்படியே ஒரு வயதுவந்த
ஆணும் வயது வந்த பெண்ணும் ஆடுவது நமது கலாச்சாரம் சீரழிகிறது என்பது தெளிவாக புரிகிறது.
நடனமாடுவது தப்பில்லை ஆனால் நாகரீகத்தோடு ஆடவேண்டும் என்பதை யார் இந்த இளைஞர்களுக்கு புரியவைப்பது?
நாம் நடத்துவது ஒரு தொலைக்காட்சி அதை பலதரப்பட்ட வயதுக்காரகள் பார்பார்கள் என்ற ஒரு யோசனைகூட இல்லாமல் எதையுமே எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பி மக்களின் மனதை,
மூளையை, நேரத்தை, பணத்தை, வாழ்கையை கெடுத்துக்கொண்டு இருக்கிறது இந்த
ரியாலிட்டி ஷோக்கள் இதை சரியான முறையில் சீரமைப்பது அரசின் கடமை. அதை அரசு செய்யாவிட்டால் பலரது வாழ்கை கெட்டுப்போகும். நிகழ்ச்சி நடத்துபவர்களும் சற்று சிந்தித்து சமுதாயதிட்கு எது நல்லதோ அதை செய்யவேண்டும் அதை விடுத்து வெறும் TRP ரேட்டிங் மட்டுமே கருத்தில் கொண்டு மக்களை தவறான வழிக்கு அழைத்து சென்றால் அந்த பாவம் உங்களை எப்போது தொடர்ந்து வரும் என்பதை மனதில் கொண்டு நிகழ்ச்சியை நடத்துங்கள். அதுதான் நாடிட்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.