செவ்வாய், பிப்ரவரி 21, 2012

தியானத்தின் உண்மை நிலை நிம்மதி அடைதல்...

ஈஷா தியான மையத்தின் சிவராத்திரி விழா நேற்று (20-02-2012) அன்று தொடங்கி மறுநாள் காலை 6.00 மணி அளவில் முடிவடைந்தது. ஈஷா தியான மையத்தின் சிறப்பம்சம் தியானலிங்கம் என்பது. ஏழு அடுக்குகளை கொண்ட தியான லிங்கம் நமது உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களை குறிக்கும். தியானம் என்பது தன்னில் இருந்து தன்னை பிரிப்பது. உடம்பில் இருந்து உயிரை அறிவது. பிறப்புக்கு முன் மற்றும் இறப்பிற்குப் பின் வாழ்க்கை  என்ன? என்பதை அறிய முயல்வது. பொதுவாய் நான் யார் என்று கேட்டால்? நான் இன்னாருடைய மகன் அல்லது மகள். இங்கு வசிக்கிறேன், இந்திந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வதோடு நான் யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நீ யார் என்பதை கேட்கும்போது நமது பெயரை கூரினால் அப்போது அந்த பெயர் உயிருக்கு சொந்தமானதா? உடலுக்கு சொந்தமானதா? என்ற கேள்வி எழுகிறது. நான் உடம்பு என்றால் அப்போது இறப்புக்கு பிறகு உயிர் எங்கே போகிறது. உயிர் இருக்கும்வரை மரியாதை கொடுத்த உலகம். உயிரற்ற உடலுக்கு ஒருமையில் பெயர் கூறுவது நாம் இந்த உடலல்ல என்பது புரியவைக்கிறது. பிறகு நான் யார் என்பதன் உண்மையான பொருளோ,  விளக்கமோ என்ன? இதை தேடித்தான் ரமண மகரிசி உண்மையை அடைய நினைத்தார் நான் யார்? என்ற கேள்வியை அவர் தனக்குள்ளேயே விதைத்தார். சரி இந்த உயிருக்குதான் பெயர் என்றால் உயிரை யாரும் கண்ணார பார்த்ததில்லையே.  உடல் என்பது உயிரை போர்த்திய சட்டை. உயிர் என்பது ஐம்பூதங்களின் சங்கமம் (காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் மற்றும் பூமி) என்பதின் அடக்கம்.

ஒரு மனிதன் தன்னை உணர்ந்தால்தான் பிறரை நேசிக்க முடியும். பிறருக்கு அன்பு காட்ட முடியும். பிறரை வாழவைக்க முடியும். அந்த உணர்தலின் அடிப்படை தான் தியானம் என்பது. தியானம் என்பது உணர்சிகளை அடக்குவது மட்டுமல்லை உண்மையான உணர்வுகளை கண்டுபிடிப்பது. நம்முள் இருக்கும் ( காம, குரோத, மோக,லோக,மத,மாச்சரியங்கள்) என்னும் ஆறு தீய குணங்களைவிட்டு ( அன்பு,அடக்கம்,பணிவு, பண்பு, பாசம், பரிவு) என்னும் ஆறினையும் பெறவே நாம் தியானிக்கிறோம். தியானம் என்பது உண்மையை கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சி. அதற்கு நாம் நம்மை அடகு வைப்பது என்பது பொருளல்ல அனுபவிப்பது என்பதே உண்மையான பொருள். உன்னுள்  இருக்கும் மகிழ்ச்சியை, ஆன்மாவை, உயிரை நீதான் அறிய முயற்சிக்கவேண்டும் அது  இன்னொருவரால் செய்யவைக்க முடியாது. தியானம் என்பது உடல் இயக்கமல்ல மன இயக்கம். உடல் தாண்டி வரும் பரவசநிலை என்பது தியானம் செய்தவர் மட்டுமே உணரவோ அனுபவிக்கவோ முடியும். அதை யாராலும் மற்றவருக்கு உணர்த்த முடியாது. அப்படி உணர்தினலோ, உணர்த்த முயற்சித்தாலோ அது உண்மையான தியானம் கிடையாது.


தியானம் என்பது கண்மூடி இருக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல மனம் திறந்திருக்க வேண்டும் என்பது தான் உண்மையான பொருள். மனம்தான் உடம்பின் இயக்கம், உணர்வின் வலிமை, அன்பின் அடையாளம். உண்மை என்பது உணர்வதில் இருக்கிறதே தவிர மற்றவர்  உளறுவதில் இல்லை. யார் என்ன சொன்னாலும் நீயாக எதை உண்மை என்று  உணருகிறாயோ அதை நம்பு அதுவே தியானம் என்பது. உன்னை நீயே  இயற்கையிடமோ, கடவுளிடமோ  ஒப்படைப்பதுதான்  தியானம் என்பது. உண்மையான தியானம் என்பது உண்மையை உணர்வதில் இருக்கிறது. தியானம் என்பது முடிவில்லாத ஆனந்தம் என்பது பொருள். நாம் பூமியில் பிறந்ததே ஒரு முடிவில்லாத ஆனந்தத்தை உணரவே தவிர குழப்பத்தில் வாழ்வதல்ல.

தியானம் என்பது எந்த உயிரையும் இம்சிக்காமல் வாழ்வது என்பதாகும். பல உயிரை வதைத்து ஒரு ராஜ்ஜியம் ஆள்வதில் என்ன பெருமை இருக்க முடியும். "சாம்ராட் அசோகன்" என்னும் மா மன்னன் பலரது உயிரை குடித்து ஒரு பெரிய தேசத்தை உருவாகினான் அப்போது கிடைக்காத பெருமையும், புகழும், நிம்மதியும் எல்லாம் விட்டு "புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி" என்ற மந்திரம் உச்சரிக்கும் ஒரு புத்த துறவியாக மாறிய பிறகே உலகம் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டது. எல்லாம் இருந்தபோது அசோகனுக்கு நிம்மதி மட்டும் அவரிடத்தில் இல்லை. எல்லாம் விட்டு துறவறம் மேற்கொண்ட பொது நிம்மது தவிர அவரிடம் வேறொன்றும் இல்லை. எல்லாம் வேண்டும் என்பது நிம்மதியை தராது. எல்லாம் இருந்தாலும் எனக்கு எதுவும் வேண்டாம் என்பதுதான் உண்மையான நிம்மதியை தரும் அதுவே உண்மையான  தியானம் என்பது.  

தியானத்தின் உண்மை நிலை நிம்மதி அடைதல்.

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

"வாகை சூடவா" - அனைவரது மனதிலும் வாகை சூடும்




"வாகை சூடவா" விமல் நடிப்பில் மற்றும் ஒரு அற்புதமான படம். கதைக்கலம் நடக்கும் காலம் 1966 ஆம் வருடம்  படம் தொடங்குகிறது. முதல் காட்சியே டூரின் டாகிசில் ஆரம்பிக்கிறது படம். அந்த காலத்தில் எம். ஜி.ஆர் மீது மக்கள் எவ்வளவு குருட்டுத்தனமான பாசத்தை  வைத்தார்கள் என்பதற்காக எம்.ஜி.ஆர் அவர்கள் நம்பியாரிடம் அடிவாங்குவதை பொறுக்கமுடியாமல் ஒரு குருவி சுடும் துப்பாகியால் திரையை சுடுவது , அப்போதைய மக்கள் எப்படி  இருந்தார்கள் என்பதை முதல் காட்சியே காட்டி படம் மக்கள் விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது என்பதை தெரியப்படுத்துகிறது. பாக்கியராஜ் தனது மகனாகிய விமலை ஒரு சர்கார் உதியோகத்தில் அமர்த்தவேண்டும் என்பதற்கு சொல்லப்படும் காராணம். சர்கார் உத்தியோகத்தின்மீது மக்கள் கொண்டிருந்த மோகம் பற்றி அடுத்த காட்சி நமக்கு  விளக்குகிறது. படிப்பின் அவசியத்தை அந்த காலத்தில் சில நல்ல உள்ளங்கள் தெளிவுபடுத்தியதால்தான் நாம் இந்த அளவுக்காவது முன்னேறியிருக்கிறோம். ஒரு எழுத்தறிவில்லாத  குக் கிராமத்து குழந்தைகலுக்கு  படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட விமல் எடுக்கும் முயற்சிதான் படம் முழுக்க நமக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

பழைய பாரதி ராஜ படம் பார்த்த திருப்தியை இந்த படம் ஏற்படுத்துகிறது. ஒரு அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கதாநாயகி இனிய. இனியாவின் நடிப்பும் முகபாவனைகளும் மனதை மயக்குகிறது. மனதுக்குள் காதலை வைத்துக்கொண்டு விமலை துரத்துவது. ஒரு கிராமிய காதலை அப்படியே நடிப்பின் மூலமாக பிரதிபலிக்கிறது திரையில். செங்கல் சூலையில் சின்னக் சின்ன சிறுவர்கள் வாழ்கையே அந்த சூலையில்தான் என்றிருந்ததை மாற்றி அவரகளுக்கு கல்வி போதிக்க விமல் எடுக்கும் முயற்சிகள் கண்டிப்பாய் நாம் எந்த திசையில் இருந்து இந்த திசைக்கு வந்திருக்கிறோம் என்பதின் அடையாளம் எனலாம்.
பாடல்கள் உண்மையில் அற்புதமான வரிகள் "சாரக்காத்து வீசும்போது சாரை பார்த்து பேசும்போது   சாரைப்பாம்பு போல மனசு  சத்தம் போடுது" என்ன அற்புதமான வரிகள். மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல் வரிகள். மற்றொரு பாடல் " போறானே போறானே "  என்ற பாடலும் கேட்க இனிமையாக உள்ளது.

விமல் சர்க்கார் உத்தியோகம் கிடைத்து போவது. அந்த பிரிவை நினைத்து  கதாநாயகி வருந்துவது  இயல்பாக உள்ளது. "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்" என்ற பாடம் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் கேட்க முடிந்தது சந்தோசம் தருகிறது. மக்கள் விழிப்புணர்வு அடைந்து படிப்பின் அவசியம் புரிந்து மக்கள் படிக்க  ஆர்வம் காட்டுவது மனதை மயில் தோகையால் வருடுவது போல் உள்ளது. விமலிடம் போலியோவால் பாதிக்கப்பட்ட சிறுவன் விமல் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருவதாக பொய் சொல்லிவிட்டு   செல்லும்போது  தான் சம்பாதித்த பணத்தை கொடுத்து ஊரிலிருந்து திரும்பி வரும்போது எழுத நோட் வாங்கிவர சொல்லும்போது விமல் மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவரும் சற்று திணறல் ஏற்படுகிறது.

பாக்கியராஜ் கொஞ்ச நேரமே திரையில் தெரிந்தாலும் நடிப்பின் மூலம் அனைவருக்கும் நிறைவை தந்திருக்கிறார். மொத்தத்தில் "வாகை  சூடவா" அனைவரது மனதிலும் வாகை சூடும்.





ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தனிமையின் தவிப்பு... (பாகம்- 7)


ஜான் தனது காரை சரி செய்ய எடுத்துச் செல்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஒரு கவலை மனதை வாட்டிக்கொண்டே இருந்தது.அவர் மீண்டும் தனது தொழிலை தொடர யாராவது பண உதவி செய்ய வேண்டும். இப்போதைக்கு ரிப்சியிடம் உதவி பெறலாம் ஆனால் ரிப்சியிடம் உதவி கேட்க சங்கடமாய் இருந்தது. ஏர்கனவே ரிப்சியால்தான் தனது குடும்பம் எந்தவித குறையுமில்லாமல் இருக்கிறது. அவரிடம் போய் எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று எப்படி கேட்பது என்ற கவலை அதோடு மேரிக்கு ரிப்சியின் வீட்டில் தங்கி இருப்பது பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது ஜானுட்கு. இத்தனையும் மனதில் கொண்டு காரை சரி செய்ய எடுத்துச்சென்றார்.

மார்த்தாவும், மார்கசும் ரிப்சியிடம் ஒட்டிக்கொண்டார்கள். ரிப்சி ஒரு நடிகை என்பதால் உடலை கட்டுக்கொபாய் வைத்திருந்தார். அவரது  அழகும் இளமை காலத்தில் இருந்தது போல அப்படியே இருந்தது. அதோடு குழந்தைகளும் ரிப்சியோடு  சேர்ந்து கொண்டது மேரியால் தாங்க முடியவில்லை. தனது பொறாமையை மறைக்க மேரியால்  முடியவில்லை, அதே சமயத்தில் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை காலி செய்யவும் முடியாத சூழ்நிலையில் மேரி இருந்தார். ரிப்சிக்கு  மேரியை பார்த்து பொறாமை ஏற்பட்டது ஒரு அழகான குடும்பம், அருமையான குழந்தைகள், அன்பான கணவன் இவை எதுவும் கொடுத்துவைக்காத வாழ்க்கை என்ற மனக்கசப்பு ரிப்சிக்கு.

மேரி இரவு உறங்க வெகு  நேரமானதால் காலை எழுந்திருக்க நேரமாகிவிட்டது. எழுத்தும்
மார்த்தா! மார்த்தா! என்று தனது பெண்ணை அழைத்தபடியே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்தார்.

அம்மா! நான் இங்க இருக்கேன் என்று சமையல் அறையில் இருந்து பதில் வந்தது மார்தவிடம் இருந்து.

இங்க என்ன செய்யறிங்க ரெண்டு பெரும் ? என்று கோபமாய் கேட்டார் மேரி.

அதற்கு குழந்தையைகள் எனக்கு உதவறதா சொன்னங்க அதான் காய் வெட்டி கொடுக்குறாங்க என்று ரிப்சி சொன்னதும் மேரிக்கு கோபம் வந்துவிட்டது. 

  நான் சமையல் செய்தா சமையலறை பக்கமே வரமாடிங்க இப்ப என்ன புதுசா போங்க என்று மேரி திட்டியதும் இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

ரிப்சிக்கு மேரி தன்மீது கோபமாக இருப்பது புரிந்தது.ரிப்சி மெளனமாக மார்தவும், மார்கசும் போவதை பார்த்தபடி தனது வேலையை தொடர்ந்தார்.

                                                                              ( தொடரும்...)




சனி, பிப்ரவரி 11, 2012

LOVE AND LOVE ONLY...


a
காதல் வாழ்க்கை   பயணத்தில் ஒரு  இனிமையான அனுபவம். காதலை ரசிக்காமல், உணராமல் யாராலும் வாழ்கையை ரசிக்கவோம் அனுபவிக்கவோ முடியாது. காதல் மனதை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் ஒரு உணர்வு.  காதல் எப்படி ஒவ்வரு காலகட்டதிலும் உருமாறியது. காதல் என்பதன் பொருள் என்ன? என்று பார்த்தால். கா + தல் என்று பிரித்தால் "கா"என்றால் உலகம் "தல்" என்றால் இயக்கம் என்று எடுத்துக்கொண்டால் உலகத்தின் இயக்கம் காதல். ஒவ்வரு ஆசைகளும்  காதலை அடிப்படையாக கொண்டவைதான். சிறு வயதில் பொம்மை மீது காதல். வயது கூடக்குட காதல் என்பது மாறிக்கொண்டே இருக்கும்.காதல் உலக பரிணாம வளர்ச்சியின் துவக்கம். காதல் என்பது பருவ வயதில் மட்டும்  வருவதில்லை, பிறந்தது முதலே காதல் என்பது இருந்துகொண்டே  இருக்கிறது. அப்படி காதல் உணர்வற்றவர்கள்தான் மற்ற உயிரை இம்சிக்கிறார்கள். இறையன்பும் காதல்தான், இறைவம் மீது மீரா வைத்த காதல்தான் மீராவை  இறைவியாக்கியது .ஒவ்வரு உயிர்கள் மீதும் கொண்ட காதலால்தான் சாதாரண மனிதனை "மகாத்மா" என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியது. ஒரு பெண்மீது கொண்ட காதல் என்பது அவளை தாயாக, தோழியாக, சகோதரியாக பார்க்கவைக்கிறது. அப்படி பார்க்காதபோதுதான் ஒரு பெண்ணை கெட்ட எண்ணத்தில் நாடுகிறது. காதல் என்பது ஒரு உணர்வு அது பருவவயதை அடைந்த ஆணும், பெண்ணும் கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மட்டுமே அதை பயன்படுத்துவது அபத்தமானது, சில நேரம் ஆபத்தானதும்கூட. காதல் ஒரு ஆண் பெண்ணோடு கொண்ட ஈர்ப்புக்குகாண சம்பந்தம் மட்டுமல்ல உலக இயக்கத்துக்கான சம்பந்தம் அது.


ஒரு மனிதனின் முக்கிய உறுப்பாக இதயம்தான் பிரதிபலிக்கிறது. அத்தகைய இதயத்தை காதலின் அடையாளச்சின்னமாக ஆக்கியிருக்கிறார்கள். காதல் மனதின் தேவை என்பதுதான்  இதன் கருத்து. மனிதனின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய பங்கு இந்த காதலுக்கு உண்டு. மனிதன் ஆதிகாலத்தில் இருந்து இப்போதுவரைக்கும் அவன் முக்கிய தேவையாக ஒரு பெண்ணை அடைவதிலேயே குறியாக இருக்கிறான் அவன் தனது என்று கூரிக்கொள்ள ஒரு சந்ததியை உருவாகவே  அந்த பெண்ணை அடைய, அவளை கவர என்று ஆரம்பித்ததே உலகத்தின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணம் அதனால் ஏற்பட்டது தான் இத்தனை காலநிலை மாற்றம். ஒரு பெண்ணை அடைய எடுத்த முயற்சி காலம் முழுவதும் அவள் தன்னை ரசிக்கவேண்டும் என்ற இடைவிடாத ஆசைகளும், ஏக்கங்களும்தான் இந்த உலகின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் அதுவே இப்போது உலகத்தின் அழிவுக்கு காரணம் என்பது வேறு விஷயம்.

இந்த காதல் ஒட்டுமொத்த உலக வளர்ச்சியின் ஒரு உதாரணம். வரப்போகும் காதலர் தினத்தன்று ஒரு பூவை  கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வரு அழகான பெண் பின்னாடியும் சென்று அலைவதில் அல்ல காதல் என்பது. காதல் உடல் தேவை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல அது மனமும் சம்பந்தப்பட்டது. ஆகையால் அழகோடு சேர்ந்த குணங்களும் ஒரு ஆண் பார்க்கவேண்டிய முக்கிய அம்சம் காதலில். ஒரு பெண் பார்க்கவேண்டிய விசயமாக காதலில் இருப்பது அவன் நல்லவனா? கடைசிவரை தன்னை காப்பவனா? என்று அத்தோடு அவன் அல்ப ஆண்? அல்பா ஆண்? என்பது   . பெண் எப்போதும் அல்ப ஆண்களைவிட அல்பா ஆண்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எப்போது அல்ப ஆண்களுக்கும், அல்பா ஆண்களுக்கும்தான் போட்டி. அல்பா ஆண்கள் தங்கள் திறமையால் மற்ற  பெண்களை கவருவான். ஆனால் அல்ப ஆண்களோ தங்கள் திறமையை நம்பாமல் அரசியலை கையாள்வார்கள் அவர்கள் குறுக்கு புத்திக்காரர்கள்.அல்பா ஆண்கள் போல் அல்ப ஆண்களும் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு அதை கொண்டு பெண்ணை அடைந்தார்களனால் அவர்களும் அல்பா ஆண்கள்தான்.

என்னை பொறுத்தவரை திருமனதிட்கு முன்பு எல்லா பெண்களும் ஆண்களை ஒரு அடி தொலைவில் நின்று பேசுவது நல்லது. அப்போதுள்ள பெண்களுக்கு அல்ப ஆண் யார்? அல்பா ஆண் யார்? என்பது தெரிந்திருந்தது ஆனால் அவர்களுக்கான சுதந்திரம் இல்லாத காரணத்தினால் அல்ப ஆண்களை திருமணம் செய்துகொண்டு அல்பா ஆண்களை பற்றி கனவு கண்டே வாழ்ந்து முடித்தார்கள். இப்போது பெண்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது ஆனால் அவர்களுக்கு கிடைத்த சுதந்திரத்தின் வலிமை தெரியாமால் அல்பா ஆண்களை தேர்வு செய்வதை மறந்து அல்ப ஆண்களிடம் சிக்கி வாழ்கையை தொலைத்துவிடுகிறார்கள். காதல் என்பது எந்த காலத்திலும் ஒன்றுதான். ஒரு பெண் அல்லது ஒரு ஆண் எப்படிப்பட்ட துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பொருத்து அவர்களது வாழ்க்கை அல்பமானதா, அபாரமானதா என்பது முடிவுக்கு வரும்.



வெள்ளி, பிப்ரவரி 10, 2012

" Journey 2" புதிய 3 D படம்




" Journey 2" படம் வந்திருப்பதை பார்க்க ஆவலாய்  படம் பார்க்க சென்றேன். ஒரு 3 D படம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அழகாக எடுக்கப்பட்ட படம் Journey 2. ராக் இதுவரை நடித்த படங்களில் அவரது வியக்கவைக்கும் சண்டை காட்சி பார்க்க முடிந்த எனக்கு அவரது அழகான நடிப்பு திறமையை பார்க்க முடிந்தது இந்த படத்தில்தான் . ஒரு தீவு அந்த தீவை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சி படம் என்று படம்  ஆரம்பம் முதல் முடிவு வரை  போகும் வேகம் மிக ரசனைக்குரியது. ஒரு தீவை இவ்வளவு அழகாக அவதார் படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் பார்க்க முடிந்தது. படம் மிக பிரம்மாண்டமான விஸ்வல் எபக்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரு தேர்ந்த நடிப்பை ராக்கின் நடிப்பில் பார்க்க முடிந்தது. ஒரு தீவை கண்டுபிடிக்கும் முயற்சி அந்த தீவில் சிறிய விலங்குகள் பெரிதாகவும் பெரிய விலங்குகள் சிறியதாகவும் இருக்கிறது என்ற வித்யாசமே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது . ஒரு காட்சியை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் " Journey 2" படக்குழுவினர்.
புதிய புதிய விலங்குகளை நமக்கு பிரம்மாண்டமாக அறிமுகப்படுதுவதாகட்டும். அந்த விலங்குகளிடம் தப்பிபதாகடும் கண்முன் நாமே அந்த படத்தை நடித்ததை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதம் தான் படத்தின் வெற்றி என்பேன். படத்தின் கதாநாயகி ஒரு அழகான நடிப்போடு பார்க்கவும் அழகாக இருக்கிறார். அதுசரி அழகாக இருந்தால்தானே அவள் கதாநாயகி. அழகோடு சேர்ந்து ஒரு அழகான நடிப்பு இருந்துவிட்டால் படம் கண்டிப்பாக அந்த கதாநாயகிகாகவே ஓடும் என்பதில் ஐயமில்லை.
படம் முழுக்க கதாநாயகிக்கு ஒரே ஒரு காஸ்டும் தான். அந்த சிவப்பு நிற உடையில் மனதை மயக்குவது அழகின் சிகரத்தை தொட்ட மாதிரி ஒரு பிரம்மிப்பு. படத்தின் கதாநாயகி தென்படும் முதல் காட்சியில் கதாநாயகன் மட்டும் பார்த்து வியப்படைவதில்லை படம் பார்க்கும் அனைவரும் வியப்படைவதை தவிர்க்க இயலாத ஒன்று.
படத்தில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உள்ள மெல்லிய காதல் வானுயர பருந்துகளோடு சண்டையிட்டு கதாநாயகியின் உயிரை காப்பாற்றி காதலை அடைவது மனதை மார்கழி குளிர் போல் நனையச் செய்கிறது. இந்த படம் குழந்தைகளுக்கு ஏற்ற படம். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று  அனைவருக்கும் ஏற்ற ஒரு அழகான பொழுதுபோக்கு படம் இந்த Journey  2 படம்.

தனிமையின் தவிப்பு... (பாகம்- 6 )


ஜான் தனது குடும்பத்தை ரிப்சிக்கு அறிமுகம் செய்துவைத்தார். ரிப்சி மேரியை மிக அன்பாக உபசரித்தார்.  மேரிக்கு  ரிப்சி செய்யும் இந்த உதவிக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே கருதினார். ஆனாலும் தங்கள் நிலைமைக்கு ஏதோ ஒரு வீட்டின் அடைக்கலாம் அவசியம்  தேவை என்பதால் மேரி ரிப்சியிடம் தனது மனதில் உள்ள கேள்விகளை கேட்க மனம் வரவில்லை.ரிப்சிக்கு மேரி ஜன்ஜிநோவின் சந்தேகம் புரிந்தது. ரிப்சி தானாக மேரிக்கு விளக்கமளிக்க முன்வந்தார். பல கேள்விகள் மேரி மனதில் அலைகளிப்பதை உணர்த்து தனது நிலையை மேரிக்கு எடுத்துரைக்கிறார்.

மேரி நான் உங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய நினைப்பது எனக்கு சந்தோசமளிக்கிறது. எனக்கானாக என்று ஒரு குடும்பம் இல்லை இப்போது. என் கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனக்கான எல்ல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார் ஆனால் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கவில்லை. உங்களுக்கு நல்ல குடும்பம் இருந்தும் அதை அனுபவிக்க வேண்டிய வசதிகள் இல்லை. ஆண்டவன் ஒன்றை கொடுத்தால் இன்னொன்றை கொடுக்க மறந்துவிடுகிறார். வாழ்க்கை எப்போதுமே ஒன்றிருந்தால் ஒன்று இருப்பதில்லை. எனக்கு உங்கள் குடும்பம் பிடித்திருக்கிறது. உங்கள் நிலைமை சரியாகும்வரை நீங்கள் இங்கே தங்கலாம் என்று ரிப்சி கூரி முடித்தார்.

மேரிக்கு மெல்ல நம்பிக்கை பிறந்தது. மெல்ல தனது கையை ரிப்சியின் கைமீது வைத்தார். நான் உங்களை நம்புகிறேன் என்று தனது புன்னகை வெளிப்படுத்தினார் மேரி. இரவு நேரமானதும் ரிப்சி தனது படுக்கை அறையை ஜான் மற்றும் மேரிக்கு கொடுத்து உறங்கச் சொன்னார்.

இரவு மேரியால் அந்த படுக்கையில் உறங்கமுடியவில்லை. ஜான் மேரியை பார்த்தபடி மேரியிடம் என்ன கேட்பது என்பது தெரியாமல் குழப்பத்தோடு கண் விழித்திருந்தார். மேரி தனது எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்கின்ற தீவிர கவலையில் இருக்கிறார் என்பது ஜானுக்கு தெளிவாக தெரிந்தது.

              ( தொடரும்...)

  
    

சனி, பிப்ரவரி 04, 2012

சில நியாபகங்கள்...


                            காலம் மிக வேகமாக மாறிவிட்டது இப்போதும் என் சிறுவயது நியாபகங்கள் சற்று பின்னோக்கி பார்த்தல் பல விசயங்கள் இழந்தது கண்கூடாக தெரியும். அன்று இருந்த சந்தோசத்தை இப்போது தேடினால் அது கிடைக்காத தூரதிட்கு சென்றுவிட்டது . சிறுவயதில் பார்த்த உறவுகள் மீதான எதிர்பார்ப்பும், பாசமும் மறைந்து இப்போது வெறும் வேஷம் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மையாகிவிட்டது. நான் தொலைத்த அந்த நாட்களை சற்று யோசிக்க, யோசிக்க அடடா தொலைத்து விட்டேனே என் பொக்கிஷ நாட்களை என்று மனம் துடிக்கிறது என் காதிற்கு மட்டுமே கேட்கிறது. கையில் எப்போதும் செல்போன் இருக்கிறது இப்போது, அதில் மணிக்கணக்கில் பேச வாய்ப்பிருந்தும் ஏனோ இப்போது மனசு அன்று விரலை நுழைத்து நம்பரை சுற்றி பலநாள் பிரிந்த உறவுகள் ஒரு வார்த்தை காதார கேட்டுவிட்டால் வரும் சந்தோசம் இன்று பேசும்போது அந்த  சந்தோசம்  காணாமலே போய்விட்டது. 

 ஒரு தொலைபேசி வீட்டின் ஒரு அங்கம் போல ஒரு கௌரவம் போல என்ற நிலைமை மாறி ஆளுக்கு ஒரு செல்போன் அவரவர்க்கு ஒரு தனி உலகமாக அது எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. கைக்குள் உலகம் வந்துவிட்டது,ஆனால் மனசுக்குள் அமைதி போய்விட்டது. காலம் மிக வேகமாக ஓடுகிறதா? அல்லது நமது வாழ்க்கை செயட்கைக்குள் சிக்கிவிட்டதா? என்பது விடை தேடும் கேள்வியாகவே என் மனதில் படிந்திருக்கிறது.அன்று பண்டிகை என்றால் ஒன்று கூடி மிக சந்தோசமாக கொண்டாடியது இன்று தொலைக்கட்சிக்கு அடகுவைதுவிட்டோமே என்ற கவலை மனதை வாட்டுகிறது. மனதில் ஏற்படும் அந்த சின்னக் சின்ன நியாபகங்கள் சந்தோசத்தை கொடுத்தாலும்  அது என்னை விட்டு கிட்டத்தட்ட மறைத்து போய்விட்டது என்று நினைக்கும்போது இப்போது மனசு வருந்துவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்பது புரிகிறது. ஒரு சின்ன நகைச்சவை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. பேருந்தில் நானும் எனது பாட்டியும் பயணம் செய்து கொண்டிருந்தோம், அப்போது எனக்கு வயது எட்டிருக்கும். பேருந்தில் எனக்கு என் பாட்டி அரை டிக்கெட் வாங்கினார். அப்போது நடத்துனர் பையனுக்கு எத்தனை  வயது? என்று கேட்டதற்கு ஐந்து வயது என்று பொய் சொன்னார் என் பாட்டி . அதற்கு நான் பாட்டி  யாருக்கு  பாட்டி   ஐந்து வயசு? எனக்கு எட்டச்சு என்றேன். அப்போது அறியா வயசு என்  பாட்டி சும்மா இருடா என்று என்னை முறைத்தார். மீண்டும் அதே கேள்வியை கேட்டேன் பாட்டி யாருக்கு  ஐந்து வயது? என்று, அதற்கு பாட்டி எனக்கு தான் ஐந்து வயசு என்று சொன்னதும் எனக்கு அப்போது புரியவில்லை பாட்டி என்னைவிட சிறியவரா? என்று எனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டேன். பாட்டி ஏன் அப்படி சொன்னார் என்பது கொஞ்ச நாள் கழித்துதான் புரிந்தது. அப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய மக்கு என்று. இப்போது பாட்டியும் உயிரோடு இல்லை எனது வயசும் ஐந்தில்லை.


திண்ணை இப்போது எங்குமே பார்க்க முடியாத  ஆகிவிட்டது. அன்று யார் வந்தாலும் அமர்ந்து பேச படுத்து உறங்க  என்று இருந்த திண்ணை இன்று  இல்லை. பக்கத்து  வீட்டுடன் உள்ள தொடர்பு இப்போது காணமல் போய் விட்டது. இப்போது இழந்தவைகள் பல, பெற்றவைகள் சில. அந்த சில விசயங்கள்தான் இன்று பல விசயங்களை மாற்றிவிட்டது. அன்று இனித்த உறவு இன்று  கசந்து விட்டது. பணம் என்ற ஒன்று மட்டுமே வெற்றிபெற்றதற்கான அடையாளமாக மாறிவிட்டது. அப்போது வீரதிட்கும், திறமைக்கும்   முதலிடம் இப்போது வெறும் பணத்திற்கு மட்டுமே புகலிடம். நான் இழந்தவை இவ்வளவு என்றால் எனக்கு முந்தைய தலைமுறை இழந்தது இன்னும் அதிகம்.



   

வியாழன், பிப்ரவரி 02, 2012

கிளியோபட்ரா என்னும் கருப்பழகி...


கருப்பு அழகி என்று வர்ணிக்கப்பட்ட "ஏழாம் கிளியோபாட்ரா" எகிப்திய நாட்டின் பேரழகி. கிளியோபட்ராவின் வரலாற்றை பார்க்கும்போது மிக  செல்வாக்கான ஒரு பேரழகி மற்றும்  அரசி என்பதில் சந்தேகமில்லை ஒரு அரசியால் சரித்திர சாம்ராஜ்யத்தையே ஆட்டிப்படைக்க முடியும் என்பதன் எடுத்துக்காட்டு கிளியோபட்ரா. தனது தமயன்களையே ஆட்சி பீடத்தில் ஆட்சி செய்ய விவாகம் செய்துகொண்டார் என்று பேசப்பட்டாலும் . அந்த காலத்தில் கிளியோபட்ராவை வர்ணிக்காத கவிங்கர்களே இல்லை என்னும் அளவுக்குக் அவள் ஒரு பேரழகி. இப்போதும் சொல்வார்கள் கிளியோபட்ராவின் மூக்கு சற்று கோணலாக இருந்திருந்தால் சரித்திரமே மாறியிருக்கும் என்று. அந்த அவளது வசீகரத் தன்மை உடையவர் கிளியோபட்ரா.



 "கிளியோபட்ரா" படத்தில் நடித்த எலிசபத் டைலர் கிளியோபற்றாவகவே உருமாறி இருக்கிறார். ஒரு சரித்திரத்தை மாற்றிய சரித்திர நாயகி கிளியோபட்ரா என்பது நாம் ஏற்கவேண்டிய விஷயம். கிளியோபட்ரா ஜூலியஸ் சீசரை ஆட்சிக்காக  விவாகம் செய்தார்  , ஜூலியஸ் சீசர் இறப்புக்கு பிறகு அன்டனியோவை விவாகம்  செய்துகொண்டு  மூன்று பிள்ளைகள் பெற்றார்.  

சரித்திரம் பலகாலமானாலும் மிக சிலரை  மட்டுமே நியாபகம் வைத்திருக்கும். ஒரு கருப்பு அழகியாக எல்லோரையும் கவர்திருக்கும் காரணம் வெறும் அழகு என்பதை தாண்டி ஒரு கம்பீரம், வசீகரம், நளினம், ஆட்சி மேல் கொண்ட மோகம் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் அது கிளியோபட்ரா போன்ற பேரழகிக்கு பொருந்தும். தனது முடிவை தானே தேடிகொண்டதாகட்டும், ஆட்சியில் பங்கேற்றதாகட்டும், ஆண்களை சொன்னபடி ஆட்டிவைப்பதாகட்டும்   தனக்கென ஒரு பாணியை கொண்டவராக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பவர் ஒருநாள் இறப்பர். இறப்பவர் மறுபடியும் எங்கோ பிறப்பார், இது வாழ்வின் தொடர்கதை ஆனால் யார் ஒருவர் இருக்கும்போதும் சரித்திரம் படைத்து, இறந்த பின்பும் சரித்திரம் படைக்கிறார்களோ அவர்கள் சாவை கடந்து விட்டவர்கள். சரித்திரம் என்னும் புத்தகத்தில் தனது பெயரை அழுத்தமாக எழுதிவிட்டு உலகிடமிருந்து விடைபெற்றவர்கள். அவர்களது வாழ்கையை சரித்திரத்தை அலசி ஆராய்ந்து நாம் என்ன செய்யப்போகிறோம். அந்த சரித்திரத்தில் நாம் ஒரு நல்ல பாடம் கற்றோமா என்பதுதான் இப்போது  முக்கியமாக பார்க்கவேண்டிய விஷயம். அத்தகைய வகையில் பார்க்கும்போது கிளியோபட்ரா ஒரு கருப்பு உலக அழகி என்பதோடு முடித்துகொள்கிறேன்.

  

தனிமையின் தவிப்பு... பாகம்- 5

ஜான் தனது மனைவி மேரியையும், மகன் மார்கஸ் மற்றும் மகள் மார்தாவையும் முந்தையநாள் விட்டுச்சென்ற விடுதியில் சென்று பார்கிறார். அப்போது அவர்களோடு ஜினோ என்ற நாயும் அவர்களோடு இருக்கிறது. ஜான் வருவதை பார்த்து ஜினோ சந்தோஷத்தில் சப்தம் எழுப்பியது. ஜான், ஜினோவை தடவிக்கொடுத்தபடியே தனது மனைவி மேரியை சந்திக்கிறார். அப்போது மேரி  கவலையோடு ஜான் முகத்தை பார்க்கிறாள். தனது அப்பா வந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறாள் மகள் மார்த்தா. மகன் மார்கசுக்கு தனது அப்பா  ஜான் மீது கோபம் தங்களை விடுதியில் தங்கவைத்தது அவனுக்கு புரியவும்யில்லை, பிடிக்கவும்யில்லை.

 ஹலோ மேரி, என்று தனது மனைவியின் கைகளை பற்றிக்கொண்டு ஜான் சொன்னதும் மேரி ஜானை அணைத்தபடி அழுதாள்.

                      

மேரி ப்ளீஸ் நான்தான் வந்துட்டேன்ல கண்களை துடைத்துக்கொள், சரி  கிளம்புங்க போகலாம் என்று ஜான் சொன்னதும்  மேரி மற்றும் மார்த்தா எங்கே? என்பதை போல் பார்த்தார்கள். மார்கஸ் மட்டும் அமைதியாகவே இருந்தான் அவனுக்கு அப்பா மீதுள்ள கோபம் இன்னும் குறையவில்லை. ஜான்  இந்தியாவை சேர்ந்தவர். வேலைக்காக அமெரிக்கா வந்தவர். மேரி ஜன்ஜினோ லண்டனை சேர்ந்தவர். மேரியின் குடும்பம் சமீபத்தில்தான்  அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஜானும், மேரி ஜன்ஜினோவும் சர்ச்சில் தான் முதல் முதலில் சந்தித்தனர். இருவருக்குள்ளும் காதல் பிறந்தது. வீட்டில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வேலைக்கு சென்று கடுமையாக உழைத்தனர். அவர்களுக்குக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது மார்கஸ் என்று பெயர் வைத்தனர், பிறகு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது அதற்கு மார்த்தா என்று பெயர் வைத்தனர். வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருக்கும்போது  ஜான் தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து டிபர்ட்மண்டல் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்தார் ஆரம்பத்தில் நன்றாக வியாபரமானது பிறகு அவரது ஸ்டோர் பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வால்மார்ட் நிறுவனத்தின் பெரிய கிளையினால்   அவரது வியாபாரம் அடிவாங்கியது. கடன் அதிகமாகி ஜான் இருந்த வீடு ஏலத்தில் விடும் அளவுக்கு போனது. ஜான் தனது நண்பர்கள் என்று நினைத்த யாரும் உதவி செய்யவில்லை. வீட்டைவிட்டு வெளியேறும் நிலைமையில்தான் தனது குடும்பத்தை ஒரு விடுதியில் தங்கவைத்துவிட்டு தனது நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்தித்து உதவிபெற தனது காரை எடுத்துக்கொண்டு சென்றார் ஜான். ஆனால் அந்த நண்பர் அப்போது அங்கு இல்லை. இனி என்ன செய்யபோகிறோம் என்ற கவலையில் தனது காரை செலுத்தியதால் ஜான் ரிப்சியின் வீட்டில் விபத்தை ஏட்படுத்திவிட்டார். பிறகு ரிப்சி வீட்டில் நடந்தவைகளை  மேரிக்கு சொன்னபோது மேரியால் நம்பமுடியவில்லை. மேரி ஜன்ஜினோ ஒரு சந்தேகதொடவே அங்கிருந்து புறப்பட்டாள்.        


                                                                                  ( தொடரும்...)