"வாகை சூடவா" விமல் நடிப்பில் மற்றும் ஒரு அற்புதமான படம். கதைக்கலம் நடக்கும் காலம் 1966 ஆம் வருடம் படம் தொடங்குகிறது. முதல் காட்சியே டூரின் டாகிசில் ஆரம்பிக்கிறது படம். அந்த காலத்தில் எம். ஜி.ஆர் மீது மக்கள் எவ்வளவு குருட்டுத்தனமான பாசத்தை வைத்தார்கள் என்பதற்காக எம்.ஜி.ஆர் அவர்கள் நம்பியாரிடம் அடிவாங்குவதை பொறுக்கமுடியாமல் ஒரு குருவி சுடும் துப்பாகியால் திரையை சுடுவது , அப்போதைய மக்கள் எப்படி இருந்தார்கள் என்பதை முதல் காட்சியே காட்டி படம் மக்கள் விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது என்பதை தெரியப்படுத்துகிறது. பாக்கியராஜ் தனது மகனாகிய விமலை ஒரு சர்கார் உதியோகத்தில் அமர்த்தவேண்டும் என்பதற்கு சொல்லப்படும் காராணம். சர்கார் உத்தியோகத்தின்மீது மக்கள் கொண்டிருந்த மோகம் பற்றி அடுத்த காட்சி நமக்கு விளக்குகிறது. படிப்பின் அவசியத்தை அந்த காலத்தில் சில நல்ல உள்ளங்கள் தெளிவுபடுத்தியதால்தான் நாம் இந்த அளவுக்காவது முன்னேறியிருக்கிறோம். ஒரு எழுத்தறிவில்லாத குக் கிராமத்து குழந்தைகலுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட விமல் எடுக்கும் முயற்சிதான் படம் முழுக்க நமக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
பழைய பாரதி ராஜ படம் பார்த்த திருப்தியை இந்த படம் ஏற்படுத்துகிறது. ஒரு அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கதாநாயகி இனிய. இனியாவின் நடிப்பும் முகபாவனைகளும் மனதை மயக்குகிறது. மனதுக்குள் காதலை வைத்துக்கொண்டு விமலை துரத்துவது. ஒரு கிராமிய காதலை அப்படியே நடிப்பின் மூலமாக பிரதிபலிக்கிறது திரையில். செங்கல் சூலையில் சின்னக் சின்ன சிறுவர்கள் வாழ்கையே அந்த சூலையில்தான் என்றிருந்ததை மாற்றி அவரகளுக்கு கல்வி போதிக்க விமல் எடுக்கும் முயற்சிகள் கண்டிப்பாய் நாம் எந்த திசையில் இருந்து இந்த திசைக்கு வந்திருக்கிறோம் என்பதின் அடையாளம் எனலாம்.
பாடல்கள் உண்மையில் அற்புதமான வரிகள் "சாரக்காத்து வீசும்போது சாரை பார்த்து பேசும்போது சாரைப்பாம்பு போல மனசு சத்தம் போடுது" என்ன அற்புதமான வரிகள். மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல் வரிகள். மற்றொரு பாடல் " போறானே போறானே " என்ற பாடலும் கேட்க இனிமையாக உள்ளது.
விமல் சர்க்கார் உத்தியோகம் கிடைத்து போவது. அந்த பிரிவை நினைத்து கதாநாயகி வருந்துவது இயல்பாக உள்ளது. "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்" என்ற பாடம் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் கேட்க முடிந்தது சந்தோசம் தருகிறது. மக்கள் விழிப்புணர்வு அடைந்து படிப்பின் அவசியம் புரிந்து மக்கள் படிக்க ஆர்வம் காட்டுவது மனதை மயில் தோகையால் வருடுவது போல் உள்ளது. விமலிடம் போலியோவால் பாதிக்கப்பட்ட சிறுவன் விமல் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருவதாக பொய் சொல்லிவிட்டு செல்லும்போது தான் சம்பாதித்த பணத்தை கொடுத்து ஊரிலிருந்து திரும்பி வரும்போது எழுத நோட் வாங்கிவர சொல்லும்போது விமல் மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவரும் சற்று திணறல் ஏற்படுகிறது.
பாக்கியராஜ் கொஞ்ச நேரமே திரையில் தெரிந்தாலும் நடிப்பின் மூலம் அனைவருக்கும் நிறைவை தந்திருக்கிறார். மொத்தத்தில் "வாகை சூடவா" அனைவரது மனதிலும் வாகை சூடும்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக