வெள்ளி, ஏப்ரல் 29, 2011

"49 O" - நாகரிகமான மறுதலிப்பு

                                   அரசியல் என்னும்  அமுத ஊற்று  இன்று ஊழல், இலவசம் என்னும்  சாக்கடையாக மாறி இப்போது  பல வியாதிகளை மக்களுக்கு  பரப்பும் கிருமிகலகிவிட்டது.ஓட்டு போடுவது உரிமை என்றார்கள் மறுக்கவில்லை  ஜனநாயக கடமை என்றார்கள் மறுக்கவில்லை. நல்லவர்களாய் பார்த்து ஓட்டு போடுங்கள் என்னும்போதுதான் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. கண்டிப்பாக காமராஜரையோ,காந்தியையோ,அப்துல் கலாமையோ,அன்னா ஹசரேவையோ  தேர்ந்தெடுக்க 
முடியும் என்ற நம்பிக்கை போனபின் நாம் யாரை தேர்ந்தெடுப்பது? இந்த அரசியல்வாதிகள் தைரியமாக யாருக்கும் பயப்படாமல் ஊழலை தனது சட்டையாக அணிந்துகொண்ட பிறகு நாம்   "49 O " போடுவது தப்பில்லை என்று தோன்றுகிறது.  

                                 ஆனால் "49 O " போட தைரியம் வேண்டும். அந்த தைரியம் நாம் உண்மையாக  ஜனநாயகத்தை காக்க, யாரிடமும் ஓட்டை  விற்கவில்லை என்பதுதான். இதைப்பற்றிய ஒரு அழகான பாட்டு நண்பர்கள் வடிவமைத்து இருகிறார்கள். இதையும் கொஞ்சம் ரசியுங்களேன்

பாட்டு பிடித்த "O" போடுங்க. மறக்காம எல்ல தேர்தலிலும் ஓட்டு போடுங்க.
நல்லவர்களை தேர்ந்தெடுங்க. உங்களுக்கு யார்க்கும் ஓட்டு போடவிருபமில்லைனா மட்டும் "49 O" போடுங்க.   




திங்கள், ஏப்ரல் 25, 2011

"கோ"- கோடையில் ஒரு மழை


                                                          "கோ" படம் பார்க்கும் முன்பும் பார்த்த பின்பும் புரியாத புதிராய் இருப்பது கோ படத்தின் டைட்டில்தான். இந்த படத்தை தைரியமாக எடுத்த திரு. KV ஆனந்த் அவர்களுக்கு  பாராட்டுகள். ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு டுவிஸ்ட் வைத்து படம் ஆரம்பம் முதலே விருவிருப்போடு படம் எடுத்துள்ளார். 
.                                                       "கோ" என்னை பொறுத்தவரை கோடையில்  மழை வந்ததை போலத்தான் மக்கள் ரசித்தனர். படத்தில் கதாநாயகன் ஜீவவிட்கு கதாநாயகி கார்த்திகா அறிமுகபடுத்தும் போது ஒரு வசனம் வரும் இவர்தான் இலங்கையில் நடப்பதை எழுதும் ரிப்போர்ட்டர் என்று அறிமுகபடுத்தும் போது    இலங்கையில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட "இசை பிரியா" நியாபகம் வருகிறது. இன்றைய அரசியலையும் நேற்றைய அரசியலையும் ( நடந்த விபரீத விசயங்களை) நியாபகம் படுத்தியது.

                                 பிரகாஷ் ராஜ் முதல்அமைச்சராக நடித்தது முன்பு அவர் நடித்த "இருவர்" படத்தை   நியாபகபடுத்தியது.


 ஜீவா ஒரு பத்திரிகை போடோக்ராபர்ராய் படம் முழுக்க கேமரா கையுமாய் வந்து  படத்தை கிளிக்கி கொண்டே இருக்கிறார். ஒரு காட்சியில் பத்திரிகை நிருபர்கள் இருவிதமாக காட்ட முயற்சித்துள்ளார்  இயக்குனர். ஒன்று எதை பற்றியும்
கவலை படாது  கிசு கிசு எழுதுவது. கண்ட கேள்விகளை  கேட்பது என்று,மற்றொன்று
உயிரை பணயம் வைத்து உண்மையை மக்களிடம் சேர்ப்பது.

                   
                      இவர்தான் "கோ" படத்தின் இரண்டவது கதாநாயகி. ஜீவாவை துரத்தி துரத்தி காதலிபதாய் ஆரம்பத்தில் காட்டினாலும். துணிச்சலான யாருக்கும் பயபடாத ஒரு பெண்ணாய் (இசை ப்ரியாவை) நியாபகபடுத்துகிறார்.ஆனால் இவர் பேசுவதாக வரும் ஒன்று,இரண்டு வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
குறிப்பாக ஒரு சிறுவன் இவரது பின்னால் அலைவது போல் காட்டுவது நகைச்சுவைக்கு என்றாலும் குடும்பத்துடன் 
படம் பார்கவருகிரவர்களுக்கு அந்த சிறுவன் அலைவதைபோல் உள்ள காட்சியை தவிர்த்திருக்கலாம்.மற்றபடி தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கடைசியாக
அப்பாவித்தனமாய் இறக்கும் காட்சியில் நம் மனதில் பதிகிறார்.
  ஜீவாவும் கார்த்திகாவும் காதலிப்பது தெரிந்ததும் விட்டுகொடுக்கும் காட்சி நட்புக்கான அடையாளமாய் காட்சியளிகிறார் .
கார்த்திகா பிளஸ் பாயிண்ட் "கண்கள்", மைனஸ் "நடிப்பு".

பாடல்கள் பொறுத்த வரை ஹாரிஸ் ஜெயராஜ் என்பதால் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தேன்
படத்திற்கான வேகம் பாட்டில் இல்லை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் ஹாரிஸ் கொஞ்சம்
சிறப்பாக செய்திருக்கலாம். kv ஆனந்த் அவர்கள் எடுத்த படம் "அயன்" அந்த படத்தை அவரே கிண்டல் செய்வது  போல் ஒரு வசனம் வரும் அப்போது அவரை மனதுக்குள் பாராட்டமல் அடுத்த காட்சிக்கு போகமுடியவில்லை. இந்த படத்தில் யார் உண்மையான வில்லன் என்பது தான்  முடிச்சு. இதை வசந்த் என்கிற கதாபத்திரம் சரியாக செய்துள்ளது.
                        வில்லன் கதாபத்திரத்தில் இவருக்கு சரியாக   பொருந்துகிறது. உதாரணம்: தன் நண்பனாகிய ஜீவவிட்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்றதும்
நக்செலாக நடித்த போசீடம் "இரு நம்ப கதையை அப்பறம் பேசுவோம் மொதல்ல நான் அவன்கிட்ட அடிவாங்கிட்டு வரேன்". என்று சாதாரணமாக சொல்லும்போது சைலன்ட் வில்லன் என்ற பட்ட பெயரே கொடுக்கலாம்.

மொத்ததில் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். எல்லோரும் ஒட்டு போடவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது படம். இந்த படத்தில் ஜீவவிட்கு நடிப்பில் நல்ல முதிர்ச்சி. கார்த்திகா தமிழில் முதல் படம் என்பதால் ஓகே. இரண்டவது கதாநாயகியும், வில்லன் நடிகரும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர். கோடை விடுமுறையில் நல்ல படத்தை தந்த kv ஆனந்த் அவர்களுக்கு பட குழுவினர்களுக்கும் மனமார்ந்த  பாராட்டுகள்.

சனி, ஏப்ரல் 23, 2011

இலங்கையும் தமிழர் அழுகையும்

  
                                    இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து கொலை செய்கிறது  தமிழர் என்றாலோ தமிழ் இனம் என்றாலோ இலங்கை அரசுக்கு பிடிப்பதே இல்லை அவர்களை அழிப்பதே குறி.  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த போது இந்தியாவிடம் இலங்கை தோற்றதற்காக 4 மீனவர்கள் உயிர் குடிகபட்டது. ஐயா உலக கோப்பைக்கும் மீனவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

                            இலங்கை கடற்படை இடம் துப்பாக்கி இருகிறது. மீனவனிடம் துடுப்பு மட்டுமே இருகிறது. எதிர்க்கவும் முடியாது சுற்றிலும் கடல் மட்டுமே இருகிறது. எனக்கு தமிழ் இனத்தார் மற்றும் மீனவர்களை பற்றியும் நினைக்கும் போதெல்லாம் ரோஜா படத்தில் வரும் "தமிழா தமிழா நாளை நம்நாடே! விடியும் விடியும் உள்ளம் கலங்காதே!" என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது.

வியாழன், ஏப்ரல் 21, 2011

சச்சினும் பாரத் ரத்னாவும்

     




















சச்சின் டெண்டுல்கர் பற்றி நான் அதிகம் சொல்லதேவையில்லை. ஆனால் அவருக்கு பரத்  ரத்னா ஏன் கொடுக்கவேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாய் சொல்லியாக வேண்டும். சச்சின் கிரிக்கெட் கடவுள் என்றே எல்லோரும் சொல்லிவிட்ட பின் நான் என்ன புதிதாய் சொல்ல இருகிறது.
                     சச்சின் தன் கடமையை சரியாக செய்கிறார். பல நேரங்களில் அவர் ஒழுக்கத்தை விட்டு கொடுபதில்லை
உலக கோப்பை கனவு கோப்பைகாக விளையாடும்போதும் கூட நடுவர் தீர்ப்புக்கு எதிர்பார்க்காமல் அவுட் என்று தெரிந்ததும்
மைதானத்தை விட்டு வெளியேறும் தன்மை எத்தனனை வீரர்க்கு வரும்.

 
  சாலமன் பாப்பையா போல் சொல்லவேண்டுமானால் "தெய்வம்யா சாதாரண மனுசனா அவரு  உண்மைலேயே நடமாடும் கிரிகட் தெய்வம்யா". என்று சொல்லதொன்றுகிறது. 

  சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்கவேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. சச்சினை பற்றி ஒரு உண்மை சொல்லவேண்டுமானால் சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அவரது ஆட்டத்தில் மாற்றம் இருக்காது. காரணம் அவர் கடமையை செய்கிறார் பலனை பற்றி எதிர்பார்பதில்லை. அவர் இலக்கு இல்லாமல் பறக்கும் பறவை. பறவையை பிடிகதவர்க்கு கூட சச்சினை பிடிக்கும். எனக்கு பறவையும் பிடிக்கும் சச்சினையும் பிடிக்கும். சச்சினுக்கும் பறவைகள் பிடிக்கும். ஆகையால் பறவைகளுக்கு தண்ணிர் வையுங்கள் ப்ளீஸ்.

புதன், ஏப்ரல் 20, 2011

cast away-ஆங்கில படம் ஒரு பார்வை














தமிழ் படம் பார்த்து அலுத்து போனவர்களுக்கு " Cast away" என்ற ஆங்கில படத்தை அறிமுகபடுத்த விரும்புகிறேன்.நான் Tom Hanks தீவிர  ரசிகன்.

     Tom Hanks ஒரு நல்ல நடிகர் என்றோ இவ்வளவு அருமையாக நடிப்பார் என்றோ எனக்கு தெரியாது Cast away படம் பார்க்கும் வரை.




      படம் தொடங்கும் போது டோம் ஹான்க்ஸ் நல்ல நடுத்தர உடம்பு மற்றும் அழகான தோற்றத்துடன்
இருக்கும் ஒரு பணக்கார முதலாளி. 

  தனது  தொழில் விசயமாக தான் காதல் மனைவியிடம் விடைபெற்று விமானத்தில் பயணிக்கிறார் .
விமானத்தில் கோளாறு நடு வானில் தத்தளிகிறது. விமானம் நடு கடலில் விழுகிறது. இவருடன் பயணித்த எல்லோரும் இறக்கிறார்கள்.Tom Hanks மட்டும் உயிர் பிழைக்கிறார். ஒரு தீவை அடைகிறார். அந்த தீவில் யாருமே இல்லை.  இவர் ஒருவர் மட்டுமே.

   
 பேச்சு துணை இல்லை. சாப்பிட உணவு இல்லை. குடிக்க தண்ணிர் இல்லை. தீவை சுற்றிலும் கடல் மட்டுமே. விமானத்தில் இருந்து கறை ஒதுங்கிய பார்சல் எல்லாம் பிரித்து பார்கிறார் அதில் ஒரு பந்து கிடைகிறது. அதை தனது ரத்தத்தால் முகம் வரைத்து அதனுடன் பேசுகிறார், கோபபடுகிறார்.

பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லை நான்கு வருடம் அந்த தீவில் தனி ஆளாக வாழகிறார். பிறகு ஒரு கட்டுமரத்தை உருவாக்கி கடலில் பயணிக்கிறார் தனி மனிதனாக.

பல போரட்ட பயண முடிவில் ஒரு பெரிய கப்பல் வருகிறது அவரை அவருடைய வீட்டில் சேர்கிறார்கள். அவரது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தார். Tom hanks நான்கு வருடம் பின்பு உயிருடன் வந்ததை அவராள் நம்ப முடியவில்லை.

எல்லோருக்கு பார்டி கொடுக்கிறார் அவரது முன்னால் மனைவி உள்பட. பார்டி முடிந்து மீதமாகிய உணவை பார்க்கும் போது அவருடைய கண்களில் வெறுமை மட்டுமே தெரிகிறது. கடைசி காட்சி தன்னுடைய பாதை எதுவென்று தெரியாமல் தனது மனைவிக்கு விடைகொடுத்து விட்டு நான்கு சாலைகள் நடுவே தயங்கி நிற்கும்போது படம் நம் மனதில் நிற்கிறது. இந்த படம் பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் ப்ளீஸ்.

திங்கள், ஏப்ரல் 18, 2011

People got colorblindness in traffic signal

                   

               மக்களுக்கு இப்போது டிராபிக் சிக்னலில் நிறம் அறியா தன்மை (Color Blindness) வந்துவிட்டது போலும். ஒரு சிலர் ரெட் சிக்னலை மதிபதில்லை. யாரும் ஒரு நிமிடம் கூட
 காத்திருக்க தயாராக இல்லை போலும். உயிரை விட வேகமாக  கண்முடித்தனமாக வாகன ஓட்டவே விரும்புகின்றனர். 

           சாலையோ சாவுக்கு மணியடிக்க காத்து கொண்டிருப்பதை போல வாயை  பிளந்து கொண்டு சிரிகிறது.
விழுந்து எழும் மனிதர்க்கு தான்  தெரியும் எவ்வளவு வலிக்குமென்று.   

இரு தினங்களுக்கு முன்பு நான் டிராபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு( Red signal) குறிப்பு: தமிழ் அர்த்தம் நன்றாகதான் இருகிறது தமிழர் மனம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகதான் சப்-டைட்டில் கொடுத்தேன்.       ரெட்சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். வலது பக்கம் வாகனங்கள் வர தாமதம் ஆனது, 
    உடனே எனக்கு பின்னல் நின்ற வாகனம் விசில் அடிக்க ஆரம்பித்து விட்டது வழிவிட கூறி. ஒரு சிக்னலில் சிவப்பு வரபோவதை அறிந்து 80 km வேகம் எடுதார்கள் அவர்கள் உயிர் மீது கவலை படாவிட்டால் பரவா  இல்லை ஆனால் மற்றவர்கள் உயிரும் அல்லவ 
இதில் அடகுவைக்க படுகிறது இதை எல்லோரும் உணறுவது எப்போது? 

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

அடுத்த தலைமுறை குழந்தைகள் மீது ஒரு சின்ன கவலை...

 ஒரு பத்து வருடத்திற்கு முன்பு இருந்தது போல் காலம் இப்போது இல்லை. செல்போன் உலகமாகிவிட்டது பிறந்த குழந்தை முதல் செல்போன் உபயோகபடுத்த பட்டுவிட்டது. இப்போது உள்ள குழந்தைகள் அறிவு மிக்கவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்கள் விளையாட்டு திறன்  வளர்வதை விட வீடியோ கேம்ஸ் மற்றும்  தொலைகட்சிகளிலும் தங்களை அடகு வைக்கின்றனர். சிப்ஸ்களை தின்றும் குளிர்பானங்களை குடித்தும் உடம்பை பெரியதாகி கொள்கின்றனர். என்ன செய்வது அவர்கள் விளையாட மைதானம் உண்டா எல்லாம் அடுக்குமாடி குடியிருப்பாகி விட்டது. மொட்டை மாடி மீது ஓட தடை என்று வீட்டுகுள்ளயே ஓடி கடைசியல் " ஓடி விளையாடு பாபா" - என்ற பாட்டை பாடத்தில் மட்டுமே படிகிறார்கள்.

 இதை விட கொடுமை என்னவென்றால் தாய் மொழி தமிழை குழந்தைகளுக்கு தராமல் தடை செய்வதோடு, ஆங்கிலம் மற்றும் வட மொழிக்கு கொடுக்கும் உரிமையை தமிழுக்கு கொடுப்பது இல்லை. எனக்கு தெரிந்த ஒரு நண்பரிடம் பேசும்போது தமிழ் எப்படி புறகணிக்கபடுகிறது என்பதை கூறினர். அவருக்கு தெரிந்த ஒருவரது வீட்டில் பையன் +2 பாடம் தேர்ந்து எடுக்கும்போது தமிழை புறக்கணித்து விட்டு பிரெஞ்சு மொழியை தேர்ந்து எடுத்திருந்தார். காரணம் கேட்டல் தமிழ் எடுத்தால்  மார்க் 95 க்கு மேல போடமாட்டாங்க அதனால பிரெஞ்சு தேர்வு செய்தேன் என்றர்கலாம். இவர்களுக்கும் பிரெஞ்ச்கும் சம்பதம் இருந்தால் பரவாயில்லை எனலாம் வெறும் மதிப்பெண் தேவைக்காக தமிழ் புறகணிக்க படுவது சரியல்ல.

 தாய் நாடு, தாய் மொழி, தாயை புறகணிபவர்கள் நிம்மதியாய் வாழ்த்ததாக சரித்திரம் இல்லை. மாணவர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்.  

பாதை மற்றும் தண்ணீர் இன்றி தவிக்கும் உயிரினங்கள்...

        மனிதர்க்கும் விலங்குகளுக்கும் பொதுவாக படைகபட்டதுதான்   இந்த உலகம். ஆனால் ஆண்டவனோ,  இயற்கையோ செய்த தவறு மனிதனுக்கு மட்டும் ஒரு அறிவு அதிகமாக படைத்து  விட்டதுதான் . அதனால்தான் அறிவில்லாமல் சில விஷயங்கள் செய்கிறான். எல்லாம் தன் ஒருவனுக்காக படைகபட்டதை போல இயற்கையை அழிப்பதில் காட்டுகிற வேகம் பாதுகாப்பதில் இல்லை.

உதாரணம்: கோவை- மேட்டுபாளையம் சாலை  அகளபடுத்த வெட்டப்பட்ட மரங்களுக்கான வேகத்தை சாலை போடுவதில் காட்டவில்லை.


இப்படி பல உதாரணங்கள் காட்டலாம்  

இந்த படம் காட்டு யானை ஒன்று மருதமலை  அடிவாரதிட்கு  வந்துவிட்டதாக அதை விரட்டும்போது எடுத்தபடம். ஒரு உண்மை சொல்ல வேண்டுமானால் யானை வந்தது தப்பா இல்லை யானை வரும் இடத்தில் வீடு,கோவில்,ஆசிரமம் மற்றும் உல்லாச விடுதி கட்டியது தப்பா என்ற கேள்வி எழுகிறது.

ஒன்று மட்டும் புரியவில்லை இயற்கை அழிகிறது இயற்கையை அழிகிறார்கள் என்று பேசுகிறோம் ஆனால் அந்த இயற்கை அழிவிளிருந்து காப்பது யார்?  ஒவ்வரு உயிர் இனமும் அழிவது மனிதர்க்கு சாவு மணி அடிப்பது போல் ஆகும்.
 "சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" என்ற எனது அபிமான பாடல் காலபோக்கில் அர்த்தமற்றதாக போகிறது. காரணம் சிட்டுகுருவி செல்போன் டவர் எழுப்பும் அலைகளிலும் கான்கரெட்  வீடுகளின் கதவடைபாலும் தண்ணிர் பற்றகுறையாலும் சாவை சந்திகின்றது. செல்போன் டவர் எழுப்பும் அலைகளால் அதன் கரு சிதைந்து போகிறது.


இப்போது கோடை காலம் கொளுத்தி கொண்டிருகிறது. பறவைகளுக்கு நமது உதவி தேவை ஆகையால் கோடி கோடியாய் பணம் கொடுக்க வேண்டாம் கொஞ்சம் தண்ணிர் கொடுங்கள் போதும் பறவைகளும் உங்களை வாழ்த்தும்.

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

Candle for corruption

அனைவர்க்கும் வணக்கம்,

                நாட்டில் நடக்கும் ஊழல் பற்றிய விளிபுணர்வுக்காகவும்   அன்னா ஹசாரே  அவர்களின் 
உண்மையான  உண்ணாவிரதம் என்னை யோசிக்க வைத்தது.  கொஞ்சம் வாங்கினால் லஞ்சம் அதிகம் வாங்கினால் ஊழல். உண்மையில் நாடு இலவசம்,ஊழல் என்று  நாசமாகி போய் கொண்டிருகிறது. அன்னா ஹசாரே   போல் உண்மையான சிலர் செய்யும் தியாகம்  மதிக்க படவேண்டும்.

" நாட்டை நாசமாக்கும்...
  ஊழல் நச்சுபாம்புகளை
  நசுக்க  வேண்டும்!

 நாட்டை வளப்படுத்த...
 லஞ்சம் வாங்கும் பழக்கத்தை
ஒழிக்க வேண்டும்!"

இதை வலியுறுத்தும் விதமாக கோவை  வ.உ.சி மைதானத்தில் (08 / 04 / 2011 ) அன்று  மாலை 6 .45 மணிக்கு மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஊழலுக்கு முற்றுபுள்ளி வைக்க உறுதி மேற்கொண்டனர்.




ஊழலை ஒழிக்க முடியாத ஒன்றுமில்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒன்று படுவோம் ஊழலை ஒழிப்போம். அடுத்த தலைமுறை அமைதியாக வாழ வகை செய்வோம்.

                                                               ஜெய்ஹிந்த்

சனி, ஏப்ரல் 02, 2011

ஜப்பானில் சுனாமி

அனைவர்க்கும் வணக்கம்,

                                 ஜப்பானில் சுனாமி என்கின்ற தலைப்பு "ஜப்பானில் கல்யாணராமன்" பட தலைப்பை தழுவியது. அதற்கு காரணம் உண்டு இரு தினத்திற்கு முன்பு நான் படித்த "THE HINDU " நாளிதழில் நான் படித்த விஷயம் என்னை சற்று சிந்திக்க வைத்தது. சுனாமி என்ற வார்த்தை முதல் முதலில் "அன்பே சிவம்" படம் மூலம் அறிந்துகொண்டேன். நான் மட்டுமல்ல பலர் தமிழ் நாட்டில் அறிந்திருப்பார்கள் அப்போதுதான் . ஒரு திரைபடம் நமக்கு நிறைய கற்றுகொடுகிறது. இப்படிபல படம் பார்த்து நிஜம் கூட படம் பார்ப்பது போலவே உள்ளது.
                               ஜப்பானில் சுனாமியும் அப்படி என்னை படத்தோடு ஒப்பிட வைத்தது மறுக்கமுடியாத உண்மை. ( eg: DEEP IMPACT, VOLCANO, 2012,2011, IF TOMMOROW COMES,ABBYEES) போன்ற படங்களில் varum  சுனாமி உண்மையான சுனாமியோடு என்னை ஒப்பிட வைத்தது. ஜப்பானை உலுக்கிய பூகம்பமும், சுனாமியும் புதிதாய் பார்ப்பது போல் இல்லாமல் பார்த்து பழகியது போல் படங்கள் என்னை மாற்றிவிட்டது ஒன்றும் வியப்பில்லை. ஒரு விதத்தில் படங்கள் நம்முடைய பயத்தை போக்கி இருகிறது என்பதை வீட மனிதாபி மானத்தையும் அல்லவே போக்கி விட்டது. கிரிகெட் வெற்றி, தோல்விக்கு கொடுக்கும் முக்கியதுவம் ஒரு பங்கு கூட ஜப்பானில்   சுனாமிக்கு நாம் கொடுத்தோமா என்ற கேள்விதான் என் மனதை வாட்டுகிறது.
                                 நேற்று ஜப்பான் நாளை நமக்கு கூட வரலாம் என்ற யோசனை எத்தனை பேர் மனதில் உள்ளது. இன்று வாழ்தல் போதும் நாளை பற்றி நாளை பார்க்கலாம் என்ற மனநிலை மாறவேண்டும். உதவும் குணம் அனைவர்க்கும் வரவேண்டும். ஜப்பானில் மக்கள் ஒற்றுமை உண்டு, உதவும் குணம் உண்டு. அதனால் தான் விழுந்தாலும் உடனே எலமுடிகிறது. இங்கு போல் இலவசம்  ஜப்பானில் இல்லை உழைப்பு தான் இருகிறது. இந்திய உலக கோப்பாய் வாங்கியது எனக்கு கிடைத்த சந்தோசத்தை விட ஜப்பான் மக்களுக்காக என்னுடைய வருத்தமே மிக அதிகம். அந்த வருத்தம் கூட நான் படம் பார்த்து கற்றுகொண்டதுதான்.