அனைவர்க்கும் வணக்கம்,
ஜப்பானில் சுனாமி என்கின்ற தலைப்பு "ஜப்பானில் கல்யாணராமன்" பட தலைப்பை தழுவியது. அதற்கு காரணம் உண்டு இரு தினத்திற்கு முன்பு நான் படித்த "THE HINDU " நாளிதழில் நான் படித்த விஷயம் என்னை சற்று சிந்திக்க வைத்தது. சுனாமி என்ற வார்த்தை முதல் முதலில் "அன்பே சிவம்" படம் மூலம் அறிந்துகொண்டேன். நான் மட்டுமல்ல பலர் தமிழ் நாட்டில் அறிந்திருப்பார்கள் அப்போதுதான் . ஒரு திரைபடம் நமக்கு நிறைய கற்றுகொடுகிறது. இப்படிபல படம் பார்த்து நிஜம் கூட படம் பார்ப்பது போலவே உள்ளது.
ஜப்பானில் சுனாமியும் அப்படி என்னை படத்தோடு ஒப்பிட வைத்தது மறுக்கமுடியாத உண்மை. ( eg: DEEP IMPACT, VOLCANO, 2012,2011, IF TOMMOROW COMES,ABBYEES) போன்ற படங்களில் varum சுனாமி உண்மையான சுனாமியோடு என்னை ஒப்பிட வைத்தது. ஜப்பானை உலுக்கிய பூகம்பமும், சுனாமியும் புதிதாய் பார்ப்பது போல் இல்லாமல் பார்த்து பழகியது போல் படங்கள் என்னை மாற்றிவிட்டது ஒன்றும் வியப்பில்லை. ஒரு விதத்தில் படங்கள் நம்முடைய பயத்தை போக்கி இருகிறது என்பதை வீட மனிதாபி மானத்தையும் அல்லவே போக்கி விட்டது. கிரிகெட் வெற்றி, தோல்விக்கு கொடுக்கும் முக்கியதுவம் ஒரு பங்கு கூட ஜப்பானில் சுனாமிக்கு நாம் கொடுத்தோமா என்ற கேள்விதான் என் மனதை வாட்டுகிறது.
நேற்று ஜப்பான் நாளை நமக்கு கூட வரலாம் என்ற யோசனை எத்தனை பேர் மனதில் உள்ளது. இன்று வாழ்தல் போதும் நாளை பற்றி நாளை பார்க்கலாம் என்ற மனநிலை மாறவேண்டும். உதவும் குணம் அனைவர்க்கும் வரவேண்டும். ஜப்பானில் மக்கள் ஒற்றுமை உண்டு, உதவும் குணம் உண்டு. அதனால் தான் விழுந்தாலும் உடனே எலமுடிகிறது. இங்கு போல் இலவசம் ஜப்பானில் இல்லை உழைப்பு தான் இருகிறது. இந்திய உலக கோப்பாய் வாங்கியது எனக்கு கிடைத்த சந்தோசத்தை விட ஜப்பான் மக்களுக்காக என்னுடைய வருத்தமே மிக அதிகம். அந்த வருத்தம் கூட நான் படம் பார்த்து கற்றுகொண்டதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக