மனிதர்க்கும் விலங்குகளுக்கும் பொதுவாக படைகபட்டதுதான் இந்த உலகம். ஆனால் ஆண்டவனோ, இயற்கையோ செய்த தவறு மனிதனுக்கு மட்டும் ஒரு அறிவு அதிகமாக படைத்து விட்டதுதான் . அதனால்தான் அறிவில்லாமல் சில விஷயங்கள் செய்கிறான். எல்லாம் தன் ஒருவனுக்காக படைகபட்டதை போல இயற்கையை அழிப்பதில் காட்டுகிற வேகம் பாதுகாப்பதில் இல்லை.
உதாரணம்: கோவை- மேட்டுபாளையம் சாலை அகளபடுத்த வெட்டப்பட்ட மரங்களுக்கான வேகத்தை சாலை போடுவதில் காட்டவில்லை.
இப்படி பல உதாரணங்கள் காட்டலாம்
இந்த படம் காட்டு யானை ஒன்று மருதமலை அடிவாரதிட்கு வந்துவிட்டதாக அதை விரட்டும்போது எடுத்தபடம். ஒரு உண்மை சொல்ல வேண்டுமானால் யானை வந்தது தப்பா இல்லை யானை வரும் இடத்தில் வீடு,கோவில்,ஆசிரமம் மற்றும் உல்லாச விடுதி கட்டியது தப்பா என்ற கேள்வி எழுகிறது.
ஒன்று மட்டும் புரியவில்லை இயற்கை அழிகிறது இயற்கையை அழிகிறார்கள் என்று பேசுகிறோம் ஆனால் அந்த இயற்கை அழிவிளிருந்து காப்பது யார்? ஒவ்வரு உயிர் இனமும் அழிவது மனிதர்க்கு சாவு மணி அடிப்பது போல் ஆகும்.
"சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" என்ற எனது அபிமான பாடல் காலபோக்கில் அர்த்தமற்றதாக போகிறது. காரணம் சிட்டுகுருவி செல்போன் டவர் எழுப்பும் அலைகளிலும் கான்கரெட் வீடுகளின் கதவடைபாலும் தண்ணிர் பற்றகுறையாலும் சாவை சந்திகின்றது. செல்போன் டவர் எழுப்பும் அலைகளால் அதன் கரு சிதைந்து போகிறது.
இப்போது கோடை காலம் கொளுத்தி கொண்டிருகிறது. பறவைகளுக்கு நமது உதவி தேவை ஆகையால் கோடி கோடியாய் பணம் கொடுக்க வேண்டாம் கொஞ்சம் தண்ணிர் கொடுங்கள் போதும் பறவைகளும் உங்களை வாழ்த்தும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக