உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா? என்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது டிச்கோவேரி சேனலில் " MAN VS WILD " நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் BEAR GRYLLS அவர்களை பார்க்கும்போது. இவர் ஒரு அசாதாரண மனிதர் உலகில் மனிதன் எங்கெல்லாம் தனியாக மாட்டிக்கொள்கிரானோ அங்கெல்லாம் பேர் க்ரில்ஸ் அவர்கள் எப்படி உயிர் பிழைத்திருப்பது என்கின்ற முறையினை நமக்கு கற்றுதருகின்றார். மனிதன் செல்லமுடியாத பகுதிகள்கூட பேர் க்ரில்ஸ் அவர்களின் சாகசம் நம்மை வியக்கவைகிறது. டிச்கோவேரி சேனலில் நான் விரும்பிப்பார்ப்பது மட்டுமல்லாமல் பிரமிக்கக்கூடிய நிகழ்ச்சி இது என்றும் சொல்லும் அளவுக்கு பல சாகசங்களை அவர் நிகழ்த்திக்காட்டுகிறார்.
மனிதர்கள் நாகரிகம் அறியா காலத்தில் இருந்து எப்படி உணவுக்காகவும், குடிநீருக்காகவும், வாழ்க்கை நடத்துவதட்காகவும் கஷ்டப்படிருப்பர்கள் என்பதை பேர் க்ரில்ஸ் அவர்கள் படும் கஷ்டத்தில் இருந்து நமக்கு புரிகிறது. இங்குதான் நமக்கு வகைவகையான உணவும், ஆடம்பரம் எல்லாம். பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், நாகரிகம் அறிந்தவன், நாகரிகமற்றவன் எல்லாம் நாம் நாட்டில் வாழும் வரைதான். காட்டுவாழ்க்கை என்பது முற்றிலும் மாறுபட்டது. அங்கு நமது உயிரை பாதுகாப்பது மட்டுமே முக்கிய பிரச்சனையாகும். நமக்கு விலங்குகள் இரையாகின்றனவா? அல்லது விலங்குகளுக்கு நாம் இரையாகின்றோமா? என்கின்ற கேள்விதான் முதன்மையாக நமக்கு நிற்பது. உணவு உயிர் வாழ்வதற்காக என்பது இல்லாமல் சுவைக்காக உண்பது என்ற நிலைமையில் நாம் வாழுகிறோம். ஆனால் காட்டு வாழ்க்கை அப்படியல்ல எது கிடைக்கிறதோ அதை உண்டு உயிரை காப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம். அதை தான் பேர் க்ரில்ஸ் அவர்கள் நமக்கு வழிகாட்டியாக செயல்படுகிறார்.
உலகில் உள்ள எல்ல மனிதர்களும் செய்ய யோசிக்கும் வேலையைகூட யோசிக்காமல் செய்கிறார் பேர் க்ரில்ஸ் அவர்கள். உணவு எது கிடைத்தாலும் அதை சளைக்காமல் உண்ணும் பேர் க்ரில்ஸ் கிடைப்பதை எல்லாம் அப்படியே பச்சையாக (வேகவைக்காமல்) உண்ணுகிறார். சில நேரம் அவர் சாப்பிடும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதுபற்றிய எந்தவித கவலையும் இல்லாமல் உயிர் வாழ தேவையானது என்ற அறிவுரையோடு மனிதன் உண்ணும் அட்டகாசம் உண்மையில் என்ன சொல்வது என்று தெரியாமல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
பேர் க்ரில்ஸ் உயிர்வாழ தேவையான அனைத்தையும் செய்பவர். அவர் ஒருநாள் கூட வாழமுடியாத இடத்தில் கூட ஒரு வாரம் சென்று அந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவர் சாப்பிடும் உணவு என்னவெனில் வண்டுகள்,புழுக்கள், பச்சை மாமிசம், கிழங்கு, என்று எதையும் விட்டுவைப்பதில்லை. வெயிலில் நீர்சத்து குறையும் நேரத்தில் கூட தனது சிறுநீரையே நீராக பருகும் ஒரு வித்யாசமான மனிதர். பேர் க்ரில்ஸ்சிடம் எனக்கு பிடித்தது, தான் என்ன செய்ய நினைக்கிறாரோ அதை பயப்படாமல் செய்வது. பலமுறை எலும்பு முறிந்து, பாம்பு கடித்து, என்று எண்ணிலடங்கா துயரத்தை சந்தித்தாலும் தன்னம்பிக்கை குறையாத மனிதர் பேர் க்ரில்ஸ். அவர் கொடுக்கும் ஒவ்வரு அறிவுரையும் எங்கோ ஒரு மனிதர் இப்படி காட்டில் சிக்கி உயிருக்கு போராட நேர்ந்தாலும் அவரது உயிரை காப்பாற்ற பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
பேர் க்ரில்ஸ் அவர்கள் செய்யும் சாகசங்கள் கிட்டதட்ட ஹாலிவுட் படங்களை மிஞ்சிவிடும். படங்களில் காட்டுவது நிஜவாழ்க்கைக்கு ஒத்துவராது ஆனால் பேர் க்ரில்ஸ் அவர்களின் சாகசம் நமக்கு பாடம் கற்பிப்பது போல் உள்ளது. அது நமது நிஜவாழ்க்கையில் எங்காவது எசக்கு பிசக்காக மாட்டிக்கொண்டால் காட்டாயம் உதவும் என்று சொல்லமுடியும்.
நாம் பார்க்கும் படங்களில் வரும் ஹீரோக்களின் சாகசங்களை பார்த்து பாராட்டுகின்றோம். அது போலியான செட்டிங் என்று தெரிந்தும் அந்த ஹீரோவை பாரட்டும் நாம் நிஜவாழ்க்கையில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு பாடம் கற்பிக்கும் பேர் க்ரில்ஸ் போன்ற மனிதர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியாக இருக்காது. பேர் க்ரில்ஸ் நிஜவாழ்க்கையில் உண்மையான ஹீரோ. அவரது அசாதாரணமான திறமைகள் கண்டிப்பாக பாரடப்படவேண்டியவைகள். நான் பேர் க்ரில்ஸ்சின் ரசிகன் என்று சொல்வதில் பெருமை அடைகின்றேன். பேர் க்ரில்ஸ்சின் இந்த சாகசம் மக்களுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வு நீண்ட பயணமாக அமைய வாழ்த்துகிறேன். எனக்கு பிடித்த சாகச ஹீரோ பேர் க்ரில்ஸ் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.






















