செவ்வாய், ஏப்ரல் 03, 2012

தனிமையின் தவிப்பு... (பாகம்- 8 )


பெண்கள் தங்களது கணவன் தன்னை தவிர அடுத்த பெண்களோடு பேசுவதையே விரும்பமாட்டார்கள். அப்படியிருக்க ஒரு நடுத்தர வயது அழகான நடிகையின் வீட்டில் தானும்,  தன்னுடைய குடும்பமும் அடைகலமாக வந்திருப்பது நினைத்து மேரிக்கு எப்போதும் உள்ளுர ஒருவித  பயம் இருந்துகொண்டே இருந்தது. என்னதான் தன்னுடைய கணவன் ஜான் நல்லவராக இருந்தாலும், ஆண்கள்  எப்போது பெண்கள் விசயத்தில் மாறுவார்கள் என்பதை  முன்பே கணித்து  சொல்லிவிட முடியாது. ஊசி இடம் கொடுக்காமலேயே நூள் நுழைந்துவிடும் காலத்தில் ஊசியே  வழியவந்தால் என்ன செய்வது? என்ற மேரிக்கு கவலை பிடுங்கித்தின்றது. இருக்க இடமே இல்லாதபோது ஒரு கணவனை பிரிந்த   பெண் வழியவந்து தனக்கும் தன்னுடைய  கணவனுக்கும், அதுவும் யாரென்ரே தெரியாத தன்னுடைய குடும்பத்திற்கு  இருக்க இடம் தந்தால் அதற்கு  ஆதாயம் இல்லாமலா இருக்கும்? என்ற தீராத கேள்வியையே திரும்பத்திரும்ப  மனதிற்குள் கேட்டுக்கொண்டார் மேரி.அப்போது ஜான் அறையின்  உள்ளே   வந்து படுக்கையில் அமர்ந்தார்.மேரி எதுவும் பேசாமலேயே மெளனமாக இருந்தார்.
மேரி ஏன் எதுவே பேசாமல் கவலையாக இருக்கிறாய் ? என்று ஜான் கேட்கிறார்.
........................

மேரி உன்னைதான் கேட்கிறேன் இப்படி பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?

........................... சிறிது மௌனதிட்கு பிறகு
நாம எப்ப வேற வீட்டுக்கு போக போகிறோம் ஜான்? என்று மெதுவாய் கேட்டார் மேரி.

ஏன் மேரி இந்த வீட்டுக்கு என்ன குறை?

இது  யாருடைய வீடு ஜான்?

ஜான் பதில்  சொல்லவில்லை  இப்போது ஜான் மௌனமானார்.

பதில் சொல்லுங்க ஜான் இது யார் வீடு? கடைசிவரைக்கும் நாம  இந்த வீட்டில்தான் இருக்கப்போகிறோமா?
........................

மேரி நீ கேட்கின்ற  கேள்விக்கு இப்போது என்னிடம் பதில் இல்லை. எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு எப்படியாவது ஒரு ஏற்பாடு செய்கின்றேன்   அதுவரை  சற்று பொறுமையாக இரு என்று  பதிலளித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றார் ஜான். 

        ( தொடரும்....) 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக