கணவன், மனைவி ஒற்றுமை என்பது உடலை பகிர்வதுமட்டுமல்ல மனதை பகிர்வதே ஆகும். கணவன் என்றால் மனைவிக்கு கண்ணாக இருப்பவன் என்று பொருள். மனைவி என்றால் கணவனின் குடும்பத்தை காப்பவள் என்று பொருள். எப்போது ஒரு கணவன் மனைவிக்கு கண்ணில்கண்ணீரையும், மனதில் கவலையும் தருகிரானோ, எப்போது ஒரு மனைவி குடும்பத்தை காக்க மறக்கிறாளோ அப்போது குடும்பம் நிலைதடுமாறிவிடும்.
முன்பு மேரிக்கும், ஜானுக்கும் இடையே காதல் இருந்தது அதனால் கவலை இல்லாமல் இருந்தது. இப்போது இருவருக்கும் தங்களது வருங்காலத்தை பற்றிய கவலை வந்துவிட்டதால் கவலை வந்தபின் காதல் மறைந்துவிட்டது. என்னதான் கணவன், மனைவி என்றாலும் அவரவர் தேவை என்பது மாறிக்கொண்டே இருக்கும்போது அவரவர் தனித்தீவாகதான் இருக்க முடியும்.
மேரி எப்போதும் இப்படி இருப்பது ஜானுக்கு பொறுக்கமுடியாத துயரத்தை தந்தது. பொறுமையிழந்த ஜான் மேரியிடம் சண்டை போடுகிறார்.
மேரி! மேரி!
.....
மேரி எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமர்ந்திருப்பதை பார்த்து ஜான் பொறுக்காமல் என்னை என்ன பண்ண சொல்கிறாய் மேரி? என்று ஆத்திரமாக கேட்டார்.
.....
மேரி பதில் சொல்லவில்லை. சில நேரம் மௌனம் கொடுக்கும் வலி எந்த வார்த்தையாலும் கொடுக்கமுடியாது. மேரியின் மௌனம் ஜானுக்கு கோபத்தின் அனலை கக்கவைத்து.
இப்ப பேசப்போறியா? இல்லையா ? என்று உரத்தே கேட்டார் ஜான்.
என்னுடைய நிலைமை தெரிந்தும் இப்படி என்னை வதைகிராயே! நான் செத்துப்போனால் சந்தோசமாய் இருப்பாய் அப்படிதானே, என்று ஜான் கேட்டவுடன் மேரியால் தனது கண்ணீரை அடக்க முடியாமல் விக்கித்தார்.
பெண்களுக்கு கண்ணீர் என்பது மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுததின் தாக்குதல் எந்த ஒரு நல்ல ஆணும் எதிர்த்து வென்றுவிட முடியாது. கைகேயின் அழுகைதான் தசரதனை நிலைகுலையவைத்தது ராமனை காட்டுக்கு அனுப்பியது. ராமயாணம் என்ற காவியம் உருவாக காரணமாகியது. அப்படிதான் மேரியின் அழுகையும் ஜானையும் நிலைகுலையவைத்தது.
( தொடரும்...)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக