மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரங்களைவிட மேலானவனாக இருக்கின்றான். மனிதர்களின் சில வித்யாசமான முகபாவனைகள் என்ற ஒரு தலைப்பை எழுத ஆசைப்பட்டேன். மனித முகத்தின் சில வித்யாசமான கோணலை பாரத்தால் நமக்கு சிரிக்கத்தோன்றும். மனிதவர்கத்தின் முக்கிய மொழி உடல்மொழியாக கருதப்படுகிறது. அந்த உடல் மொழியை கொண்டுதான் பிறக்கும் குழந்தை தனது பசியை, தூக்கத்தை, வருத்தத்தை, சந்தோசத்தை அழுகையாகவும், சிரிப்பாகவும் தாய்க்கோ, மற்றவர்களுக்கோ உணர்த்துகிறது. அத்தகைய மொழி நாம் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. அத்தகைய உடல் மொழி பற்றிய ஆராய்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. நமக்கு ஏற்படும் ஒவ்வரு சின்னச்சின்ன அசைவுகளும் நமது ஆழ்மனதை அப்படியே அப்பட்டமாய் காட்டும் வலிமை உடையது இந்த உடல்மொழி என்பதில் சந்தேகமில்லை.
சிரிக்கும் போது நமது நரம்பு மண்டலம் எவ்வளவு வேலை செய்யுமோ அதைவிட அதிகமாக கோபப்படும்போது நமது முகம் விகாரமாக மாறிவிடுகின்றது. இதைதான் நாம் அரைப்பைத்தியம் என்கிறோம். உடம்பின் ஒவ்வரு அசைவும் முகபாவத்தோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வரு மனிதனுக்குளும் ஒரு குழந்தையின் சிரிப்பும் ஒரு கொலைகாரனின் ஆக்ரோஷமும் அடங்கியிருக்கும். நாம் யாரை அதிகமாய் வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் நமது குணம் பிறருக்கு தெரியவரும்.
நமது முகபாவனைகளும் , நாம் என்ன பேசுகிறோம் என்பதில்தான் நமது மரியாதை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வரு மனிதனும் தான் என்ன விதமான விசயங்களை உள்வாங்கியிருக்கிறோம் என்பதில்தான் அவனுடைய ஆற்றலும், பேச்சுக்களும் இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் நம்மை யார் என்பதையும், எப்படி நடந்துகொள்வோம் என்பதை அப்பட்டமாய் காட்டிக்கொடுக்கும்.
நாம் என்ன நினைக்கிறோம் என்பதை காடும் கண்ணாடி நமது முகபாவம் அதிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது.
ஒவ்வரவறது ஆசையும் தன்னை பிறர் ரசிக்கவேண்டும் என்பதே. ஒருவரை கவர செய்யும் சேஷ்டைகள் சிலநேரம் நம்முடைய இயல்பை கெடுத்துவிடலாம். இயல்பாக நம்மை அறியாமல் வரும் முகபாவனைகள் பிறருக்கு சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தரும். ஒருவரை மகிழ்விப்பது என்பது கஷ்டமான காரியம். அதை சரியாக செய்ய நாம் முதலில் சரியாக இருக்கவேண்டும்.
ஒவ்வருவருக்குள்ளும் ஒரு கோமாளித்தனம் இருந்துகொண்டுதான் இருக்கும் அது இல்லாவிட்டால் வாழ்க்கை சுவாரசியமற்றுப்போகும். வாழ்கையின் ஆனந்தம் சிலநேரம் நாம் செய்யும் கோமாளிதனம்தான்.
ஒவ்வருவரும் தன்னை எல்லோரும் கவனிக்கவேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கும் அவை சிலநேரம் முகபாவநியாக வெளிப்படும். அதோடு நம்முடைய கோபம், பசி, காதல், நட்பு,பகை, ஆசை, சிரிப்பு, சந்தோசம் எல்லா உணர்சிகளையும் காட்டிக்கொடுப்பது முகம்தான். ஆகையால் நமது முகத்தை முடிந்தவரை சாந்தமாக வைத்துக்கொண்டால் நாம் பார்க்க அழகாக இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக