ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

மணிசித்திரதாழ்


மலையாளப்பட வரிசையில் மிகவும் விரும்பிப்பார்த்த படம் "மணிசித்திரதாழ்". தமிழில் "சந்திரமுகி" என்று வெளியான படம். தமிழில் சந்திரமுகி மிகப்பெரிய  வெற்றியை பெற்றிருந்தாலும்  மணிசித்திரதாழ் படத்தின் ஆளுமையை அதனால் பெற்றுவிடமுடியாது அதற்கு காரணம் நமது மக்களின் கலாசாரம் ரஜினி என்ற தனி மனிதருக்காக உருவாக்கப்பட்ட  படமாக மாற்றப்பட்டிருந்ததுதான், அதனால்தான் ஜோதிகாவுக்கு போய் சேர வேண்டிய கைதட்டல் ரஜினிக்கு கிடைத்துவிட்டது போன்ற பிரமையை படத்தில் தெளித்துவிடப்பட்டதும் ஒரு காரணம் எனலாம்.ஆனால்  மலையாளப்படத்தில்  இயக்குனர் பாசில் அவர்கள் கதைக்கும், கதாபாத்திரதிட்கு மட்டுமே  முக்கியத்துவம் கொடுத்தமையால்   படம் சினிமாத்தனமற்று ஒரு இயல்பான பயத்தையே படம் முழுவதும் நம்மால் உணரமுடிந்தது.

படத்தின் முக்கிய கதைக்கலம் நாகவள்ளியின்  பூட்டப்பட்ட அறை. அதை காட்டும் முதல்  கட்சியே பார்வையாளர்களை  பயமுறுத்துவதாக அமைக்கப்படிருக்கிறது.ஒரு திகில் படம் என்பதை தாண்டி நாமும் அந்த வீட்டில்   இருப்பதைபோன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

படத்தில் ஷோபனா நடிப்பு  அற்புதமாகவே இருந்தது. நாகவல்லியாக உருமாறும்  காட்சி சுவாரசியமாக இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.


ஷோபனாவின் கண்களின் நடிப்புதான் படத்திற்கு பெரிய பிளஸ். நடிப்பு என்பது  வெறும் வசனங்களால் மட்டுமல்ல அதற்கு உடலசைவு பெரிய பங்கு வகிக்கிறது. அதை சரியாக இப்படத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. 

படம் ஒரு உளவியல் ரீதியாக இப்பிரச்னையை கொண்டுசென்றிருப்பது பலருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும். பேய்  வந்தது போல் ஆடுவது பேசுவது என்பது ஒரு உளவியல் ரீதியான பிரச்சனை என்பதை படத்தில்  தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். 

இப்படத்தில் மோகன் லால் மற்றும் சுரேஷ் கோபியின்  நடிப்பு ரசிக்கும்படியாக   இருந்தது. சந்திரமுகியில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்படைதில் கதைக்கு கொடுக்கப்படிருந்ததால் இப்படம் எப்போது பார்த்தாலும் ரசிக்க முடியும் என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

ஷோபனா ஒரு நடன கலைஞர் என்பதால் இப்படத்தில் நாகவல்லியாக மாறும்போது ஆடும் நடனம் நம்மை மறந்து ரசிக்கவைக்கிறது.

கடைசி பாடலாக கங்கா நாகவல்லியாக முமுவதுமாக  மாறிய  பின்வரும்  பாடல் " ஒருமுறை வந்து பார்த்தாயா, என் உள்மனம் நீ அறியாயோ?" என்கின்ற பாடலும் அதில் நாகவல்லியாக உருமாறிய கங்கா ஆடும் நடனம் பயம் கலந்த ஒரு ரசனையை ஏற்படுத்துகிறது.

படத்தின் இறுதிக்காட்சியில் துர்காஷ்டமி அன்று சுரேஷ் கோபியை கொலைசெய்ய துடிக்கும் நாகவல்லி சுரேஷ் கோபியை போன்ற ஒரு பொம்மையை கொன்று கங்கா உடல் விட்டு செல்லும்போது ஷோபனாவின் நடிப்பு அது உண்மையிலேயே நடிப்பா அல்லது உண்மையாகவே ஆவி அவருக்குள் வந்துவிட்டதா  என்கின்ற அளவிட்டு அவரது நடிப்பு மெருகேறியிருந்தது. சந்திரமுகியில் ஜோதிக நடிப்பு அபாரமாக இருந்ததை மறுக்கமுடியாது. சந்திரமுகியை ரசித்த தமிழ் மக்கள் இந்த படத்தையும் பார்த்து ரசிக்கவேண்டும்  என்பது என்னுடைய சிறிய விருப்பம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக