ஞாயிறு, நவம்பர் 20, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்- 12


எங்களது முதல் வருடக் கல்லூரி முடிந்து இரண்டாம் வருடம் ஆரம்பமானது. நாங்கள் கல்லூரி சார்பாக சுமார் இருபது பேர் ஈரோட்டில் உள்ள கல்லூரிக்கு அனைத்து கல்லூரி கலந்துகொள்ளும் போட்டிக்கு சென்றோம். நான்,பவித்ரா, கவிதா, ரம்யா, நந்து, முகுந்தன் ஐந்து பேரும்  
ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் வேறு வகுப்பை சேர்ந்தவர்கள். பவித்ரா, ரம்யா, நந்து மற்றும் முகுந்தன் ஆகியோர் நடனப் போட்டிக்கு தயாரானார்கள். நானும் கவிதாவும் பேச்சுப் போட்டிக்குத் தயாரானோம்.கவிதா எப்போதும் குழந்தை மனம் படைத்தவள். அவள் சுபாவம் யாரையும் அவள் பக்கம் ஈர்த்துவிடும். கவிதா பேச்சு போட்டியில் கடைசி நேரத்தில் பயந்தாள். நான் அவளைத்  தேடி சென்ற போது ஒரு பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்தாள். நான் பக்கத்தில் சென்று கவிதா என்று அழைத்தேன். அவள் மெல்ல என்னை திரும்பிப் பார்த்தாள். நான் அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தேன்.

கவிதா ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன் அதற்கு கவிதா பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.மீண்டும் நான் அவளை வற்புறுத்திக்  கேட்டபோது.

எனக்கு பேச்சு போட்டினா பயம், என்று சொன்னாள்.

பிறகு ஏன் பேச்சு போட்டிக்கு பெயர் கொடுத்தாய்? என்று நான் கேட்டேன்.

அதற்கு பவித்ராவையும், உங்களையும் பார்க்காமல் என்னால இருக்க முடியாது. அதனால உங்களோட வர நான் பேச்சு போட்டிக்கு பெயர் கொடுத்தேன் என்று கவிதா சொன்னபோது நான் என்னையும் அறியாமல் கவிதாவை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். மெல்ல அவளது கையை பிடித்தேன். கவிதா என்மீது சாய்ந்தாள். அன்று கவிதாவை மனப்பூர்வமாக காதலிக்க ஆரம்பித்தேன். அவளும் என்னை மிகவும் நேசித்தாள். இருவரும் உருகி உருகி காதலித்தோம். எங்கள் இருவரது காதலுக்கும் ஜாதி தடையானது. எங்கள் இருவரது வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு உருவானது. அதனால்
 நான் செல்வியை மணக்க நேரிட்டது. கவிதாவை அவளது மாமா பையனுக்கு திருமணம் செய்துவைத்து விட்டனர்.



நான் செல்வியிடம் கவிதா பற்றி எதையும் மறைக்காமல் கூரிவிட்டேன். செல்வி மிகவும் வருத்தப்பட்டாள். காலப் போக்கில் கவிதாவை எவ்வளவு நேசித்தேனோ  அதே அளவு செல்வியையும் நேசித்தேன். ஒரு அழகான பெண் குழந்தை எங்களுக்குப் பிறந்தது. அதற்கு பூஜா என்று பெயர் வைத்தோம். பூஜா பத்து வயதிருக்கும்போது செல்வியை ஒரு விபத்தில் பறிகொடுத்தேன். அப்போது பூஜா சிறிய பெண் என்பதால் அவளுக்கு ஒரு அம்மா தேவை என்று என் அம்மா என்னை மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார். நான் அதை மறுத்துவிட்டேன். பூஜாவை யாரோ ஒருத்தியிடம் ஒப்படைக்க என் மனம் மறுத்தது. என் உணர்சிகளை அடக்கிக் கொண்டு பூஜாவிட்காக வாழ முடிவு செய்தேன். பூஜாவின் நண்பன் விபத்தில் அடிபட்டதை அறிந்து மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு இருபது வருடம் நான் மறந்து விட்டதாக என்னையே ஏமாற்றிக்கொண்டிருந்த கவிதாவையும், பவித்ராவையும் மீண்டும் சந்திப்பேன் என்று கனவிலும் நான் எதிர்பார்கவில்லை. மறுநாள் என் மனம் தாங்காமல் பூஜாவை கல்லூரிக்கு அழைத்து செல்லும் சாக்கில் பவித்ராவை சந்தித்தேன். பவித்ரா அப்போது எப்படி இருந்தாளோ இப்போதும் அப்படியே இருக்கிறாள். நான் முதல் முதலில் காதலித்தது பவித்ராவைத்தான் என்ற ரகசியம் என்னையும் என் டைரியைத் தவிர வேறு யார்க்கும் தெரியாது. என் ரகசியம் என்னோடு முடியட்டும் என்பது வரை டைரியை படித்து முடித்த பூஜாவிற்கு கண்களில்  கண்ணிர் வந்தது. அதை துடைத்துக்கொண்டே டைரியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு  தன் அறைக்குச் சென்றாள் பூஜா.

( தொடரும்...)








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக