பூஜா அர்ஜுனிடம் பேசுவதை தவிர்த்துக்கொண்டே இருந்தாள். அதை அர்ஜூனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அர்ஜுன் பேசாமல் இருப்பதற்கு காரணம் தெரியாமல் மனோஜிடம் புலம்பினான்.
மனோஜ்! என்னனே தெரியவில்லை பூஜா என்கிட்ட முன்புபோல் பேசுவதேயில்லை. ஏன் இப்படி இருக்கானும் புரியவில்லை. அவள் பேசாத அளவிற்கு நான் என்ன தப்பு செய்தேனும் புரியவில்லை.
நானும் கவனிச்சேன் அர்ஜுன். கவலைபடாதே சரிபடுத்திடலாம். இன்னும் ரெண்டு நாளில் பரிச்சை முடியப்போகுது
அதுக்குள்ளே சரிபண்ணிடலாம்.அதனால இதைப்பற்றியே நினைக்காமல் போய் பரிட்சைக்குப் போய் படி மற்றதை நான் பார்துக்கொள்கிறேன் என்று மனோஜ் சொன்னதும் அர்ஜூனால் சமாதனமானன்.
கடைசி பரிட்சை முடிந்து மதியம் ப்ரியா, பூஜா, மனோஜ், ரம்யா, அர்ஜுன்,கார்த்திக் எல்லோரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். பூஜா எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள். அர்ஜுன் பூஜாவை ஓரக் கண்ணால் பார்த்தான். அதை கவனித்த பூஜா தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள வேறு திசையில் பார்த்தாள்.
நாம் எல்லோரும் சேர்ந்து "எங்கையும் எப்போதும்" படத்துக்கு போகலாமா? என்று கேட்டான் மனோஜ்.
அதற்கு எல்லோரும் தலையாட்ட பூஜா மட்டும் மௌனமாகவே இருந்தாள்.
பூஜா நீ என்ன சொல்ற?
இல்லை மனோஜ் நீங்க போங்க நான் வரவில்லை.
நோ பூஜா! நீ வரவில்லை என்றால் நாங்களும் போகமாட்டோம் என்று மனோஜ் வற்புறுத்தி கூப்பிட்ட பிறகு அரைமனதோடு வர சம்மதித்தாள்.
அர்ஜுன் நீ என்னோட கார் எடுத்துக்கோ. நானும் கார்த்திக்கும் பைக்கில் வரோம் என்று கார் சாவியை அர்ஜுனிடம் கொடுத்துவிட்டு கார்த்திக்குடன் பைக்கில் சென்றான் மனோஜ்.
அர்ஜுன் காரரை ஸ்டார்ட் செய்தான். ரம்யா காரின் முன்பு சீட்டில் அமர்ந்தாள். பூஜாவும், ப்ரியாவும் பின்னால் சீட்டில் அமர்ந்தனர்.
அப்போது அர்ஜுன் கண்ணாடி வழியாக பூஜாவை பார்த்தான். அர்ஜுன் பார்ப்பதை பூஜாவும் பார்த்தாள். அப்போது அர்ஜுன் பூஜா கண்களை உற்று கவனித்தான் அதில் பூஜாவின் காதல் அப்பட்டமாய் தெரிந்தது. அதை தாண்டி ஏதோ ஒரு விஷயம் அர்ஜுனிடம் பூஜா மறைப்பதை காட்டிக்கொடுதுக் கொண்டே இருந்தது. அதை மறைக்க முயற்சிக்கும்போதெல்லாம் பூஜா தோல்வி அடைகிறாள் என்பதை உணர்ந்த அர்ஜுன். தன்னிடம் மறைக்கும் அளவிட்டு
பூஜாவிடம் என்ன ரகசியம் இருக்கிறது என்று யோசித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு
தியேட்டரை அடைந்தான்.
தியட்டரில் மனோஜ் எல்லோருக்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டு காத்திருந்தான். எல்லோரும் சென்று இருக்கையில் அமர்ந்தனர். பூஜா இடது பக்கத்தில் அர்ஜுன் அமர்ந்தான்.
படம் ஆரம்பித்தது பூஜாவும் மற்ற நண்பர்களும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர் படத்தின் முடிவு பூஜாவை ரொம்பவே பாதித்தது. ஏற்கனவே அவள் அம்மா செல்வியை கண்முன்னே பறிகொடுத்த பூஜா அதேபோல்
ஒரு கோர விபத்தை படத்தில் பார்த்து ஜீரணிக்க முடியாமல் பூஜா அழுதாள். அர்ஜுன் மெல்ல பூஜாவின் கைகளை பற்றி அவளை ஆறுதல்படுத்தினான். பூஜா சோகம் தாங்காமல் அர்ஜுன் மீது சாய்ந்து அழுதாள். பூஜா அழுவதை பார்த்ததும் அர்ஜுனும் அவனது நண்பர்களும் பூஜாவை அழைத்துக்கொண்டு காரிட்கு சென்றனர். பூஜா தன் கண்களை துடைத்துக்கொண்டு காரில் சென்று அமர்ந்தாள்.
( தொடரும்...)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக