பூஜா தனது வகுப்பிட்கு சென்றுகொண்டிருந்தாள். அப்போது அங்கு அர்ஜுன் நின்றுகொண்டு இருந்தான். பூஜா அர்ஜுனை பார்த்து நன்றி தெரிவித்தாள்.
நன்றி அர்ஜுன்!
இதுக்கு எல்லாம் எதுக்கு நன்றி பூஜா?
நீ என்ன காப்பாதியதுக்கு மட்டும் இல்லை அர்ஜுன் உன்னால்தான் எனக்கு பவித்ரா மேடம் அறிமுகமானங்க. அதுக்கு உனக்கு
கண்டிப்பா நன்றி சொல்லணும்.
பரவாயில்ல பூஜா வா வகுப்பிற்கு நேரமாகுது.
இருவரும் வகுபிட்கு செல்வதை சீனியர் ரமேஷ் பார்த்துவிட்டான். அவன் அர்ஜுனிடம் வேகமாக வந்து தனது பொறாமையை கோபமாக வெளிப்படுத்தினான்.
என்ன காலையிலேயே கடலையா? என்று நக்கலாக கேட்டான் ரமேஷ்.
சார் அது வந்து... என்று தடுமாறினான் அர்ஜுன்!
ரமேஷ் அப்படி கேட்டதும் பூஜாவிற்கு கடும்கோபம் வந்துவிட்டது.
நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று பூஜா கேட்டதும் ரமேஷ் கோபம் அதிகமானது. அந்த நேரம் பார்த்து கல்லூரி முதல்வர் வந்து கொண்டிருந்தார். அதை கவனித்த ரமேஷ் அங்கிருந்து சென்றான்.
இருவருக்குள்ளும் ஒரு அழகான நட்பு வளர்ந்தது.பூஜா பேராசிரியை பவித்ராவிடம் மிகவும் நெருக்கமானாள். அர்ஜுன், கார்த்திக், மனோஜ், பூஜா,பிரியா, ரம்யா என்று அவர்களது நட்புவட்டம் பெரிதானது. எல்லோரும் நெருக்கமான நண்பர்களானார்கள் . எல்லோருடைய நட்பும் இன்னும் நெருக்கமாகியது பெங்களூர் தொழில் சார்ந்த சுற்றுலாவில்.
அர்ஜுன் பூஜாவை விட்டு ஒரு நிமிடம் கூட விலகிச் செல்லாமல் அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கித் தந்தான்.
மாலை சுற்றுலா முடிந்ததும் தங்கும் விடுதிக்கு சென்றனர். அப்போது பூஜா ஒரு கவிதை புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். அர்ஜுன் சென்று அவளிடம் பேசினான்.
ஹாய் பூஜா என்ன படிக்கிறாய்?
கவிதை புத்தகம் அர்ஜுன்.
யார் எழுதியது என்ன தலைப்பு?
பா.மோகன் குமார் எழுதிய "கடற்கரைச் சுவடுகள்".
கவிதை நல்ல இருக்க?
நல்லா இருக்கு அர்ஜுன் அதுல ஒரு கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பு பற்றி நான் படிக்கிறேன் நீ கேளு.
வாழும் போதே...
சாகும் நியாபகம்
உன் பிரிவால்!
காதலும் காமமும்...
துளைக்காத கவசம்
நம் நட்பு!
ஒரு...
பெண்ணை ரசிததைக்கூட
ஒரு
பெண்ணாகிய உன்னிடம்
உரைப்பதுதான் - நம்
நட்பு!
காதலியைத்...
தள்ளி நின்று பேசுவதும்
தோழியைத் தொட்டுப்
பேசுவதிலும் இருக்கிறது
நட்பின் நம்பிக்கை!
என்னிடம்...
ரகசியம் என்று
தனியாக ஏதுமில்லை
நீதானே என்
வாழ்கையின் எல்லை!
உன்னோடு...
சண்டை அதுதானே
சுவாரசியம் எனக்கு
உன் நினைவுகளை
அசை போடுவதற்கு!
விதி...
நம் இருவரையும்
கண் கட்டாமலேயே
கண்ணாமூச்சி ஆடவிட்டது!
நீ...
எங்கிருந்தாலும்
உன்
நினைவோடே
நான்!
கவிதை நல்ல இருக்கா அர்ஜுன்.
ரொம்ப நல்ல இருக்கு பூஜா நான் உனக்காக எழுத நினைச்ச கவிதை மாதிரியே இருக்கு என்று பூஜாவிட்காக அர்ஜுன் எழுதிய காதல் கவிதையை சட்டை பைக்குள் மறைத்துக் கொண்டு பூஜாவிடம் விடைபெற்றுக் கொண்டு தனது அறைக்கு குழப்பத்துடன் சென்றான் அர்ஜுன்.
( தொடரும்...)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக