செவ்வாய், ஜனவரி 31, 2012

" THE BLIND SIDE " - ஒரு நல்ல படம்...


எப்போதும் நாம் பார்க்கும் படங்களில் ஒரு உண்மை கதை நம் மனதை நெருடினால் அந்த படமும் அந்த உண்மையான மனிதரை நம் மனம் ஏற்றுக்கொள்ளும் என்பதை  மறுக்கமுடியாது. " THE BLIND SIDE " படம் ஒரு நல்ல உதாரணம். கால்பந்து ஆட்டத்தில் ஒரு சகாப்தமாக ஒரு கருப்பு மனிதர் "மைக்கல் ஆர்தர்" பற்றிய படம். ஒரு கருப்பு உருவம் மிகப்பெரிய உருவம் குடும்பமற்ற பிக் மைக் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதனை பார்த்தவுடன் எல்லோரும்  வெறுத்து ஒதுக்குகின்றனர். அந்த பிக் மைக்கை ஒரு குடும்பம் ஆதரிக்கிறது. பிறகு அவன் வாழ்கையை மாற்றுகிறது இதுதான் படத்தின் கதை.

"சான்றா புல்லோக்" மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு குடும்ப தலைவியாக ஒரு குடும்பத்தை வழிநடத்தி செல்வதாகட்டும். பிக் மைக்கை தான் குடும்பத்தோடு ஒருவராய் இனைப்பதாகட்டும் சான்றா புல்லோக் ஒரு நல்ல நடிகை என்பதை மறுபடியும் நிருபித்து உள்ளார். பிக் மைக்கிட்க்கு கால் பந்தாட்டத்தை விளக்கும்போது நமக்கும் தெளிவாக புரிகிறது.


                        சான்றா புல்லோக் ஒரு குடும்ப தலைவியாக கம்பிரமாக இருப்பதுடன்.தனது முகபாவனைகளில் தன்னுடைய நடிப்பாற்றலை நன்றாக பயன்படுத்தியுள்ளார். பிக் மைக்கை குடும்ப உறுப்பினராக  முடிவேடுப்பதன் மூலம் தனது குடும்பத்தின் அங்கமாக ஆக்கிகொள்ள   சக தோழி அவரை பார்த்து ஒரு கருப்பு குண்டான மனிதன் எப்படி குடும்பஉறுப்பினராக்க  உன்னால் முடியும்?  என்று பிக் மைக்கை கேவலமாக பேசும்போது சான்றா புல்லோக் கோபப்படுவது எதார்த்தத்தை காட்டுகிறது.


பிக் மைக் பெரும் ஒவ்வரு வெற்றிக்கும் அந்த குடும்பத்தின் பங்கு இருக்கிறது என்பது மிக அழகாக படமாக்கபடிருக்கிறது. ஒரு குடும்பம் ஒரு புறக்கணிக்கப்பட்ட மனிதன் அந்த குடும்பத்தோடு சேரும்போது. படம் மிக சுவாரசியாமகவே முடிகிறது. இந்த படம் மிக சிறந்த படம் என்பதில் சந்தேகம் இல்லை.
            பிக் மைக் உலகபுகழ் அடையும்போது தன் குடும்பத்தை அரவணைப்பது. என்று இந்த படத்தில் நல்ல முறையில் கொண்டுசெல்லப்படுள்ளது. நான் ரசித்த நல்ல படங்களில் இதுவும் ஒன்று.

புதன், ஜனவரி 25, 2012

தனிமையின் தவிப்பு... ( பாகம்-4)


ரிப்சி தான் செய்வது சரியா? என்று தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது வயது பருவத்தில் யாரும் வேண்டாம் என்று உதாசினப்படுதிக்கொண்டு இருந்துவிடலாம். ஆனால் முதுமையில் அப்படி இருக்கமுடியாது என்னதான் பணம் இருந்தாலும் கூடவே யாரவது துணை இருந்தால் மட்டுமே வாழ்கையை தொடரமுடியும் இல்லையென்றால் வாழ்க்கை வாழ்ந்து பயனில்லை. தனக்காக மட்டும் சமைத்து தான் மட்டும் சாபிடுவது என்பது மிகப்பெரிய கஷ்டம்.இதை ரிப்சி நன்றாகவே உணர்ந்திருந்தார். தனக்கென ஒரு குழந்தை இருந்திருந்தால் கூட கணவன் இல்லாவிட்டாலும் அந்த குழந்தைக்காக வாழ்ந்திருக்கலாம் ஆனால் அதற்கும் இப்போது வாய்ப்பில்லை என்பதால் தனக்கு ஒரு குடும்பம் தேவை. ஆகையால் வருவது வரட்டும் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று நினைதுக்கொண்டிருகும்போது வீட்டின் கதவு திறக்கும்படி அழைப்பு வந்தது.
ரிப்சி தனது வீட்டின் கதவை திறந்தார். அப்போது வெளியே ஒரு போலீஸ் உடையணிந்த ரீகன் நின்றிந்தார்.
ஹலோ மேடம்!  என் பெயர் ரீகன் போலீஸ் ஆபிசர். உங்க வீடிற்கு முன்பு ஒரு கார் இடித்திருக்கிறது. அது யாருடைய கார்?

ஆபிசர் அது என்னுடைய நண்பர் கார்  தவறுதலாக வந்து  இடித்துவிட்டார். கார் செயலிழந்துவிட்டது ஆகையால் அவர் கார் ரிப்பேர் செய்பவரை அழைத்துவர சென்றிருக்கிறார் என்றார்  ரிப்சி.

ஓகே மேடம் ஏதாவது பிரச்சனையினா  எனக்கு இந்த நம்பருக்கு  கூப்பிடுங்க   என்று கூறிவிட்டு சென்றார்.

 ரிப்சி மறுபடியும் சிந்தையில் ஆழ்ந்தார் மறுபடியும் அதே கேள்வி தன் மனதில் எழுந்தது. தான் செய்வது சரியா? என்று...

     ( தொடரும்...)


திங்கள், ஜனவரி 23, 2012

மதம்... மனிதன்... சர்ச்சைகள்...



                            கலை,இலக்கியம்  என்பது எல்லாமே மனிதன் உண்மையை  உணர, அழகை அறிய, சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள படைக்கப்பட்ட விசயங்களே. ஆனால் மனிதன் எப்படி அதை ஏற்றுக்கொள்கிறான் என்பதில்தான் பிரச்சனையும், ரசிப்புத்தன்மையும் அடங்கியிருக்கிறது. இருவேறு கலைகர்கள் எப்படி தங்கள் படைப்புகள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்று பார்த்தல் அவசியம் என்று தோன்றுகிறது. ஒருவர் சல்மான் ருஷ்டி மற்றொருவர் எம்.எப். ஹுசைன். ஒருவர் எழுத்தாளர், இலக்கியவாதி தற்போது லண்டனில் வசிக்கிறார். இன்னொருவர் ஓவியர் இப்போது உயிரோடு இல்லை. இருவருமே சர்ச்சையில் சிக்கியவர்கள்.



சல்மான் ருஷ்டி எழுதிய " சாத்தானின் கவிதைகள்" என்ற புத்தகம் சர்ச்சையை கிளப்பியது. இந்தியாவில் இந்த புத்தகம் தடை விதிக்கப்பட்டது. அப்படி அவர் என்ன அதில் எழுதி இருக்கிறார் என்பது தெரியாதபோதும் அவரது கருத்து மதம் சார்ந்த விஷயங்கள் என்று தெளிவாக தெரிகிறது. மதம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும்போதெல்லாம் அது சர்ச்சைகளிலேயே முடிகிறது. ஒரு புத்தகம் எவ்வளவு சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பது சல்மான் ருஷ்டியின் " சாத்தானின் கவிதைகள்" புத்தகம் ஒரு உதாரணம். மனிதன் மதத்தை பின்பற்றிதான் ஆகவேண்டும் என்ற கட்டயாம் இல்லை என்றாலும் மனிதன் தனக்கென ஒரு மதத்தை பின்பற்றுவது அவசியம் என்று நினைக்கிறான். அந்த மதத்தை அவனோடு நிறுத்திக்கொள்ளாமல் பிறர் மதத்தோடு ஒப்பிடுகையில் சண்டை வருகிறது. எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. பல சண்டைக்கு பல பிரச்சனைக்கு காரணம் உண்மையை உணராததுதான். தவறுக்கு வருந்தாததுதான், தவறை ஏற்றுக்கொள்ளாதது.   நாம் சில விசயங்களை  புரிந்துகொண்டு நடக்கிறோமா? என்பது தான் அவரவர் மனதில்  எழவேண்டிய கேள்வி.


பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை விதிக்கவேண்டும் என்ற சர்ச்சை எழுந்தபோது. அவர்கள் சொன்ன கருத்து பகவத் கீதை வன்முறையை தூண்டுவதாக  அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த போது அது தவறு என்று தீர்ப்பு தரப்பட்டது. இரு விசயத்தில் சந்தோசங்கள், ஒன்று பகவத் கீதையை ரஷ்யர்கள்  ரசிக்கிறார்கள் என்பது ஒன்று. மற்றொன்று பகவத் கீதைக்கு தடை நீங்கியது. மனிதன் மதத்தை பற்றி எவ்வளவு படிக்கிறான் என்பது முக்கியமல்ல மதத்தை எப்படி பார்கிறான் என்பதே முக்கியம்.


எம்.எப். ஹுசைன் அவர்களின் கலைப்படைப்பு மிகவும் போற்றுதலுக்கு உரியவை. அவரது ஓவியம் மனதின் ஆழம்வரை  பதியும் என்பது சந்தேகமில்லை. அவருடைய ஓவியமும் சர்ச்சைக்கு உரிய ஓவியமாக ஆனதற்கு காரணம் மதம். மனிதன் எப்படி வாழவேண்டும் என்று சொல்லித்தந்த பகவத் கீதையும் சர்ச்சையில் சிக்கியது. மதத்தை எழுத்துக்களாகவும், வண்ண ஓவியங்களாகவும் வரைந்ததும் சர்ச்சைக்குள் சிக்கியது.

ஒவ்வரு மனிதனுக்கு ஒவ்வரு விதமாக மதம் தென்படுகிறது. அதை எவ்வாறு நாம் பிரதிபளிக்றோம் என்பது சில நேரம் சர்ச்சையை ஏற்படுத்தலாம். ஆனால் நாம் மதத்தை சரியாகா புரிந்துகொண்டோமா? என்பது நமக்குள்ளாகவே   கேட்கவேண்டிய கேள்வி அதைவிடுத்து அடுத்தவருடன் சண்டையிடுவது சரியல்ல. ஒருபக்கம் மதம் அன்பை, கருணையை, உண்மையை, நல்ல எண்ணங்களை தாங்கிநிற்கிறது. மற்றொருபுறம் மனிதன் சண்டை, கோபம், வேஷம், பொறாமை, பொய், கொலைவெறி தாங்கிநிற்கிறான். "மதநல்லிணக்கம்"," மதசார்பற்ற" போன்ற வார்த்தைகள் உணராமல் வெறும் வார்த்தையாகவே வைத்திருப்பதால்தான் இத்தனை பிரச்சனைகளும், சர்ச்சைகளுக்கும்   காரணம்.

      

   

  

சனி, ஜனவரி 21, 2012

"கொலைவெறி" பாடல் தமிழ் பாடலின் இனிமையை கொன்றுவிட்டது...



தனுஸ் நல்ல நடிகர், நல்ல பாடகர் என்றாலும் தமிழ் கலாச்சாரம் தமிழ் பாடல்களின் இனிமையை ஒரு கொலைவெறி பாடல் மூலம் கொலை செய்த பெருமையும் அவரையே சேரும். தனுஸ் ஒரு பாடல் மூலம் உலகபுகழ் அடைந்திருக்கலாம். அவர்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கலாம். அவரை எல்லோரும் பாராடியிருக்கலாம். இந்த பாட்டின் மூலம் அவரது வங்கிக் கணக்கில்  பலகோடி ருபாய் உயர்ந்திருக்கலாம். எல்லோரது வாயும் அந்த பாடலை முனுமுக்கலாம் ஆனால் இந்த வெற்றி நிலையானது அல்ல. கலாச்சாரத்தை காயப்படுத்திய பாடல் நல்ல பாடல் என்ற அந்தஸ்து பெறுவது இன்றைய கலாச்சாரத்தின் சீர்கேடு. ஒரு பெண்ணை கேவலபடுத்தி பாடும் பாடலை பெண்களே ரசித்து கேட்க வைத்த வகையில் தனுஸ் வெற்றிபெற்றிருக்கிறார்.

இனி தமிழ் பாடல்கள் மேலும் சீரழிந்து போக இவர் ஒரு தடம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். இனி வரும் தமிழ் பாடல்கள் இவர் வழியை பின்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கொலைவெறி பாடல் பலகாலம் நிலைக்க போவதில்லை என்றாலும் இந்த பாடலின் வெற்றி வளரும் திரைப்பட பாடலாசிரியர்களை வேறு தவறான வழிகாட்டுதல் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த உலகப்புகழ் தமிழ் மொழியை கொன்று அதன் மேல் ஏற்றப்பட்ட தீபம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். நமது தாய் மொழியை கொச்சைபடுத்திய பாடலை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்பது
ஆங்கில மோகத்தில் எப்படி நாம் அடிமையாய் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. நாம் இன்னும் ஆங்கில மொழிக்கு அடிமைதானே.

சுருதி ஹாசன் " 7 ஆம் அறிவு" படத்தில் நரம்பு வெடிக்கும்படி வசனம் பேசுவார் "தமிழில் பேசினால் கேவலாமா பாக்கறாங்க. தமிழ் என்றால் அவ்வளவு கேவலமா போச்சா?" என்று பேசிவிட்டு கொலைவெறி பாடலை உற்சாகமாக பாடி, நடித்து பணம் பார்பதையே தொழில் தர்மம் என்ற அழகான பாடத்தை கற்று கொடுத்துவிட்டார். அப்போ " 7 ஆம் அறிவு" படத்தில் பேசிய வசனம் வெறும் ஊருக்கு உபதேசம் அப்படிதானே. பணம், புகழ் இவைக்காக எதையும் செய்யாலாம் அல்லவா?. ஒரு நாட்டில் தனது மொழியை கொச்சைபடுத்தி அதனால் உலகபுகழ் அடைய நினைப்பது ஒரு தமிழனால் மட்டுமே முடியும். ஒரு மலையாளி இதை கண்டிப்பாக செய்யமாட்டான். அதனால்தான் எல்ல இடங்களிலும் அவர்களால் வாழமுடிகிறது. தாய் மொழியை கொச்சைபடுத்தியவர்கள் தாயை கொச்சைபடுத்தியதட்கு சமம்.

நீங்கள் ஜப்பானில் இருக்கவேண்டுமானால் ஜப்பானிய மொழி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் ஆங்கிலம் தெரிந்தாலும் ஜப்பான் மொழிதான் பேசுவார்கள் பயன்படுத்துவார்கள். ஜப்பானிய மக்களின் மொழி உணர்வு நமக்கு ஒரு சதவிகிதமாவது  இருக்கிறதா? ஜப்பான் நாடு முன்னேற மொழிப்பற்று முக்கியமான அம்சம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.


அதேபோல் ஜெர்மன் மக்களும் ஜெர்மன் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற மொழிக்கு கிடையாது. அவ்வளவு ஏன் மும்பை சென்று ஆங்கிலத்தில் பேசினாலும் ஹிந்தியில்தான் பதில் தருவார்கள். எல்லோரும் அவரவர் மொழிக்கு மதிப்பு தருகிறார்கள் தமிழர்களை தவிர. தமிழை கொலை செய்து உலகபுகழ் அடைந்தாலும் உண்மையில் அது தாய் மொழியை கொலை செய்து பெற்ற விருதே தவிர அதை தலையில் வைத்து கொண்டாட முடியாது. தமிழர்களே தாய் மொழியை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்களே தமிழை கேவலப்படுத்தினால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்.








பழங்குடியின மக்களை பாதுகாப்பது நமது கடமை...


 
இந்தியாவிற்கு சொந்தமான தீவு சில வருடங்களுக்கு முன்பு சுனாமியால் சுழற்றப்பட்ட தீவு அந்தமான் நிக்கோபார் தீவு.உலகம் எங்கோ நிலவிற்கு குடிப்பெயர முயற்சி செய்துகொண்டிருக்கும்போது இந்த பழங்குடி மக்கள் பலகாலம் வேட்டையாடப்பட்டு மிச்சமுள்ள சொச்ச மக்கள் கொச்சைப்படுத்தப்படுவது சர்ச்சைக்குரிய விசயமாக தெரியவில்லையா?. இன்று அவர்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் தங்கள் உணர்வை தொலைத்து உடையின்றி நடனமாடுவது நாகரிகமாக தெரிகிறதா என்ன?. ஆங்கிலேயர்கள் அந்தமானை ஆக்ரமித்தபோது இந்த பழங்குடியினர் அனுபவித்த துன்பம் கொஞ்சமில்லை. ஒரு நாயை சுடுவதை போலே சுட்டுக்கொன்று அதை பெருமையாக கொண்டாடிய வெள்ளையர்கள் அதை வேடிக்கை மட்டும் பார்த்த நம்மை போன்ற இந்தியர்கள், இந்த பாவத்தை எந்த கங்கையில் போய் கழுவப்போகிறோம்? மனிதனின் அடிப்படை தேவைக்காக ஒரு இனம் இனாம் தேடி நிர்வாண நடனமாடுவது, அதை ரசிக்க ஒரு கூட்டம் இங்கிலாந்த் நாட்டில் இருந்து ஓடுவது நியாயம்தான?. அவர்கள் நம்மை போன்ற மனிதர்கள் என்பது அவர்களுக்கு மறந்துபோனதா?

ஒரு கூட்டம் யானைகள், விலங்குகளை காட்டுவதை போல மனிதர்களை காட்டுவது நம்முடைய பலகீனமே தவிர அவர்களை அந்த நிலையிலேயே வைத்திருக்கும் இந்திய அரசின் பலகீனமே தவிர அந்த அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள் பாவம். அறிவும், திறமையும் உள்ளவன் மற்றவரை அடிமையாக்க நினைப்பது மனித இனத்தின் சாபக்கேடு. அப்படிப்பட்ட மனிதர்கள்தான் இலங்கையில் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள். உலகின் சித்தாந்தங்களை மறந்து சின்னபுத்தியோடு மாவீரன் என்று சொல்லிக்கொள்கின்றனர். கையில் துப்பாக்கி இருந்தால் யாரையும் கொன்றுகுவிக்கும் அதிகாரம் இருந்தால் அவர்கள் தங்களை வீரர்கள் என்று சொலிக்கொள்ளும் அவலத்தை யூதர்களை லட்சக்கணக்கில் கொன்றுகுவித்த ஹிட்லரை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


பழங்குடியினர் என்பவர்கள் யாரோ அல்ல. உலகத்தின் மாற்றங்களை சந்திக்காதவர்கள். நாம் சந்தித்தவர்கள் அவ்வளவுதான். மற்றபடி பசி, தாகம், காமம், வலி, காதல், உடல் உபாதைகள் எல்லாம் அவர்களுக்கும் நமக்கும் ஒன்றுதான். இன்னொரு விஷயம் யாரும் மறந்து விடக்கூடாத ஒன்று அது "மரணம்". அது எல்லோருக்கும் பொதுவானது. நம் முன்னோர்களும் பழங்குடியினர்தான் என்பதை மறந்துவிட்டு அவர்களை நிர்வாணப்படுத்தி நடனமாடவைத்து, கும்மாளமடித்து நாய்க்கு பிஸ்கட் போடுவது போல அவர்களுக்கும் உணவளித்து, அவர்களை கஷ்டப்படுத்தி, காயபடுத்தி அதில் சந்தோசம் காண நினைக்கும் மனிதர்கள் உண்மையில் மனிதர்கள் அல்ல மிருகமும் அல்ல காரணம் எந்த மிருகமும் இதை செய்யாது என்பதால் அவர்கள் தாங்கள் யார் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.

பழங்குடியினர் பாவப்பட்ட மக்கள் அவர்களுக்கு நமது ஆதரவு தேவை. நாமும் அவர்களைப்போல் இருந்து வந்தவர்கள்தான் என்ற தெளிவு இருக்கட்டும்.நமது இந்திய அரசு அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கிலாந்து மக்கள் அவர்களை கேலிப்பொருளாக பார்க்காமல் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிட்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டும். பசித்தவனுக்கு உணவு கொடுப்பதுதான் நாகரிகம். அவர்களின் உணர்வுகளை கொன்றுவிட்டு உணவை பிச்சையிடுவது நாகரிகமல்ல.







சனி, ஜனவரி 14, 2012

இது ஒரு பொங்கல் கவிதை...


                                                               
                                                            இந்த பொங்கல் திருநாள்...
                                                            உழவர்களுக்கு மட்டும்
                                                            சொந்தமான நாளல்ல
                                                             உழைப்பவர்களுக்கு
                                                             சொந்தமான நாள்!
                                                                                
                                                             சூரியன்...
                                                             மனமுவந்து கொடுத்த
                                                             வெளிச்சம்
                                                             மழை மண் நுகர்ந்து
                                                             கொடுத்த ஆற்றல்
                                                             விதைகள் மனமகிழ்ந்து
                                                              கொடுத்த வளர்ச்சி!

                                                             
                                                              இயற்கையின்  கொடைக்கு...
                                                               நமது அப்பழுக்கற்ற
                                                               நன்றிக்கடன் செலுத்துவதற்கே
                                                               இந்த
                                                               பொங்கல் திருநாள்! 

                                                               இந்த திருநாளில்...
                                                                சிரித்து மகிழ்ந்திட
                                                                இனிப்பு வழங்கிட
                                                                 எல்ல வளமும்
                                                                 பெற்று இன்புற்று
                                                                  வாழ பொங்கல்
                                                                   நல்வாழ்த்துக்கள்!

                                                                   இது ஒரு பொங்கல் கவிதை...
                                                                    இன்பம் பொங்கும் கவிதை!