சல்மான் ருஷ்டி எழுதிய " சாத்தானின் கவிதைகள்" என்ற புத்தகம் சர்ச்சையை கிளப்பியது. இந்தியாவில் இந்த புத்தகம் தடை விதிக்கப்பட்டது. அப்படி அவர் என்ன அதில் எழுதி இருக்கிறார் என்பது தெரியாதபோதும் அவரது கருத்து மதம் சார்ந்த விஷயங்கள் என்று தெளிவாக தெரிகிறது. மதம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும்போதெல்லாம் அது சர்ச்சைகளிலேயே முடிகிறது. ஒரு புத்தகம் எவ்வளவு சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பது சல்மான் ருஷ்டியின் " சாத்தானின் கவிதைகள்" புத்தகம் ஒரு உதாரணம். மனிதன் மதத்தை பின்பற்றிதான் ஆகவேண்டும் என்ற கட்டயாம் இல்லை என்றாலும் மனிதன் தனக்கென ஒரு மதத்தை பின்பற்றுவது அவசியம் என்று நினைக்கிறான். அந்த மதத்தை அவனோடு நிறுத்திக்கொள்ளாமல் பிறர் மதத்தோடு ஒப்பிடுகையில் சண்டை வருகிறது. எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. பல சண்டைக்கு பல பிரச்சனைக்கு காரணம் உண்மையை உணராததுதான். தவறுக்கு வருந்தாததுதான், தவறை ஏற்றுக்கொள்ளாதது. நாம் சில விசயங்களை புரிந்துகொண்டு நடக்கிறோமா? என்பது தான் அவரவர் மனதில் எழவேண்டிய கேள்வி.
பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை விதிக்கவேண்டும் என்ற சர்ச்சை எழுந்தபோது. அவர்கள் சொன்ன கருத்து பகவத் கீதை வன்முறையை தூண்டுவதாக அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த போது அது தவறு என்று தீர்ப்பு தரப்பட்டது. இரு விசயத்தில் சந்தோசங்கள், ஒன்று பகவத் கீதையை ரஷ்யர்கள் ரசிக்கிறார்கள் என்பது ஒன்று. மற்றொன்று பகவத் கீதைக்கு தடை நீங்கியது. மனிதன் மதத்தை பற்றி எவ்வளவு படிக்கிறான் என்பது முக்கியமல்ல மதத்தை எப்படி பார்கிறான் என்பதே முக்கியம்.
எம்.எப். ஹுசைன் அவர்களின் கலைப்படைப்பு மிகவும் போற்றுதலுக்கு உரியவை. அவரது ஓவியம் மனதின் ஆழம்வரை பதியும் என்பது சந்தேகமில்லை. அவருடைய ஓவியமும் சர்ச்சைக்கு உரிய ஓவியமாக ஆனதற்கு காரணம் மதம். மனிதன் எப்படி வாழவேண்டும் என்று சொல்லித்தந்த பகவத் கீதையும் சர்ச்சையில் சிக்கியது. மதத்தை எழுத்துக்களாகவும், வண்ண ஓவியங்களாகவும் வரைந்ததும் சர்ச்சைக்குள் சிக்கியது.
ஒவ்வரு மனிதனுக்கு ஒவ்வரு விதமாக மதம் தென்படுகிறது. அதை எவ்வாறு நாம் பிரதிபளிக்றோம் என்பது சில நேரம் சர்ச்சையை ஏற்படுத்தலாம். ஆனால் நாம் மதத்தை சரியாகா புரிந்துகொண்டோமா? என்பது நமக்குள்ளாகவே கேட்கவேண்டிய கேள்வி அதைவிடுத்து அடுத்தவருடன் சண்டையிடுவது சரியல்ல. ஒருபக்கம் மதம் அன்பை, கருணையை, உண்மையை, நல்ல எண்ணங்களை தாங்கிநிற்கிறது. மற்றொருபுறம் மனிதன் சண்டை, கோபம், வேஷம், பொறாமை, பொய், கொலைவெறி தாங்கிநிற்கிறான். "மதநல்லிணக்கம்"," மதசார்பற்ற" போன்ற வார்த்தைகள் உணராமல் வெறும் வார்த்தையாகவே வைத்திருப்பதால்தான் இத்தனை பிரச்சனைகளும், சர்ச்சைகளுக்கும் காரணம்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக