தனுஸ் நல்ல நடிகர், நல்ல பாடகர் என்றாலும் தமிழ் கலாச்சாரம் தமிழ் பாடல்களின் இனிமையை ஒரு கொலைவெறி பாடல் மூலம் கொலை செய்த பெருமையும் அவரையே சேரும். தனுஸ் ஒரு பாடல் மூலம் உலகபுகழ் அடைந்திருக்கலாம். அவர்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கலாம். அவரை எல்லோரும் பாராடியிருக்கலாம். இந்த பாட்டின் மூலம் அவரது வங்கிக் கணக்கில் பலகோடி ருபாய் உயர்ந்திருக்கலாம். எல்லோரது வாயும் அந்த பாடலை முனுமுக்கலாம் ஆனால் இந்த வெற்றி நிலையானது அல்ல. கலாச்சாரத்தை காயப்படுத்திய பாடல் நல்ல பாடல் என்ற அந்தஸ்து பெறுவது இன்றைய கலாச்சாரத்தின் சீர்கேடு. ஒரு பெண்ணை கேவலபடுத்தி பாடும் பாடலை பெண்களே ரசித்து கேட்க வைத்த வகையில் தனுஸ் வெற்றிபெற்றிருக்கிறார்.
இனி தமிழ் பாடல்கள் மேலும் சீரழிந்து போக இவர் ஒரு தடம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். இனி வரும் தமிழ் பாடல்கள் இவர் வழியை பின்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கொலைவெறி பாடல் பலகாலம் நிலைக்க போவதில்லை என்றாலும் இந்த பாடலின் வெற்றி வளரும் திரைப்பட பாடலாசிரியர்களை வேறு தவறான வழிகாட்டுதல் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த உலகப்புகழ் தமிழ் மொழியை கொன்று அதன் மேல் ஏற்றப்பட்ட தீபம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். நமது தாய் மொழியை கொச்சைபடுத்திய பாடலை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்பது
ஆங்கில மோகத்தில் எப்படி நாம் அடிமையாய் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. நாம் இன்னும் ஆங்கில மொழிக்கு அடிமைதானே.
சுருதி ஹாசன் " 7 ஆம் அறிவு" படத்தில் நரம்பு வெடிக்கும்படி வசனம் பேசுவார் "தமிழில் பேசினால் கேவலாமா பாக்கறாங்க. தமிழ் என்றால் அவ்வளவு கேவலமா போச்சா?" என்று பேசிவிட்டு கொலைவெறி பாடலை உற்சாகமாக பாடி, நடித்து பணம் பார்பதையே தொழில் தர்மம் என்ற அழகான பாடத்தை கற்று கொடுத்துவிட்டார். அப்போ " 7 ஆம் அறிவு" படத்தில் பேசிய வசனம் வெறும் ஊருக்கு உபதேசம் அப்படிதானே. பணம், புகழ் இவைக்காக எதையும் செய்யாலாம் அல்லவா?. ஒரு நாட்டில் தனது மொழியை கொச்சைபடுத்தி அதனால் உலகபுகழ் அடைய நினைப்பது ஒரு தமிழனால் மட்டுமே முடியும். ஒரு மலையாளி இதை கண்டிப்பாக செய்யமாட்டான். அதனால்தான் எல்ல இடங்களிலும் அவர்களால் வாழமுடிகிறது. தாய் மொழியை கொச்சைபடுத்தியவர்கள் தாயை கொச்சைபடுத்தியதட்கு சமம்.
நீங்கள் ஜப்பானில் இருக்கவேண்டுமானால் ஜப்பானிய மொழி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் ஆங்கிலம் தெரிந்தாலும் ஜப்பான் மொழிதான் பேசுவார்கள் பயன்படுத்துவார்கள். ஜப்பானிய மக்களின் மொழி உணர்வு நமக்கு ஒரு சதவிகிதமாவது இருக்கிறதா? ஜப்பான் நாடு முன்னேற மொழிப்பற்று முக்கியமான அம்சம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
அதேபோல் ஜெர்மன் மக்களும் ஜெர்மன் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற மொழிக்கு கிடையாது. அவ்வளவு ஏன் மும்பை சென்று ஆங்கிலத்தில் பேசினாலும் ஹிந்தியில்தான் பதில் தருவார்கள். எல்லோரும் அவரவர் மொழிக்கு மதிப்பு தருகிறார்கள் தமிழர்களை தவிர. தமிழை கொலை செய்து உலகபுகழ் அடைந்தாலும் உண்மையில் அது தாய் மொழியை கொலை செய்து பெற்ற விருதே தவிர அதை தலையில் வைத்து கொண்டாட முடியாது. தமிழர்களே தாய் மொழியை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்களே தமிழை கேவலப்படுத்தினால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக