புகழின் போதையில் "தான்" என்கின்ற அகங்காரத்தில் புத்திகெட்ட மனிதன் இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தின் தான் மட்டுமே ராஜா என்கின்ற ஆணவத்தில் ஒவ்வரு உயிரையும் தனக்கு அடிமையாய் எண்ணுகின்ற ஒரு மதிகெட்ட மனம் வருங்காலத்துக்கு ஒரு பாடம்.எப்போது ஆணவம் நம்மை ஆட்கொல்கிறதோ அப்போது நம்மிடம் இருக்கும் நல்லவை அழிந்து, செயலிழந்து போகிறது. பக்குவம் நம்மைவிட்டு நகர்த்துவிடுகிறது. புகழ் என்பதே ஒரு போதை அந்த போதையோடு சேர்ந்த அதிகாரம், அந்த அதிகாரத்தோடு சேர்ந்த செல்வாக்கு எப்போது ஒருவன் இவற்றை ருசிகண்டு விடுகிறானோ அப்போது அவன் நல்லவை, தீயவைகளை தரம் பிரிக்கும் தகுதியை இழக்கிறான். உலகத்தில் அனைவருக்கும் புகழ்,அதிகாரம் மற்றும் செல்வாக்கு தேவைப்படுகிறது.புகழ் என்னும் போதையில் இருப்பவன் குணத்தை இழக்கிறான். அதிகாரம் என்னும் போதையில் இருப்பவன் நல்ல ஒழுக்கத்தை இழக்கிறான். ஆடம்பரம் என்னும் போதையில் இருப்பவன் நல்லவை அனைத்தையும் இழக்கிறான். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று கிடைக்கும். நாம் தீயதை இழக்க நினைத்தால் நல்லதை பெற முடியும். நல்லதை இழக்க நினைத்தால் தீயதைதான் நம்மால் பெற முடியும். ஹிட்லர் ஒரு ஜெர்மானிய சாம்ராஜியதையே உலகத்தின் ஆளுமையாக ஆக்க நினைத்து தனக்கு பிடிக்காத யூத இனத்தையே கொன்று குவித்தார். அந்த யூத இனம் அழியவேண்டும் என்று நினைத்தார் ஹிட்லர். அந்த யூத இனத்தில் பிறந்தவர்தான் சிக்மண்ட் ப்ராய்ட் என்னும் மேதை. ஹிட்லரால் உருவாகப்பட்ட நாசிசமும் அழிந்தது ஹிட்லரும் அழிந்தார். ஆனால் ஹிட்லர் செய்த கொடுமைகள் ஹிட்லரின் மோசமான வரலாறு அழியவில்லை.

ஒவ்வரு மனிதர்க்கும் இப்படியான ஒரு அதிகாரமோ, புகழோ,பண பலமோ கிடைக்கும் என்று கூரமுடியாது.அப்படி அமையும்போது அது தனக்கான ஒரு அங்கீகாரம் மற்றும் அடையாளமாக நினைக்காமல் அது தனக்கு மட்டுமே உரிய சொத்தாக நினைத்து அதற்கு ஏற்ப பல பாவங்களை செய்து யாரும் மன்னிக்க முடியாத அளவில் பிறர் வாட பல செயல்கள் செய்து.நரை கூடும் முன்பே பலர் உயிர் போக காரணமாய் இருக்கும் மதிகெட்ட மனிதரின் அழுகையும் சாபமே. தான் மட்டுமே வாழ தகுதியானவன் என்கின்ற ஆணவம், அதிகாரம் ஆகியவை எப்போதும் ஒரு நல்ல தலைவனை உருவாக்காது. அதிகாரம் எப்போதும் நம் சொத்தாக முடியாது. அதற்கு நாம் எஜமானர் அல்ல. நாம் எஜமானர் என்று நினைக்கும்போதே நாம் நம்முடைய ஆணவத்தின் அடையாலமாகிவிடுகிறோம். அடிமையாவதும் தவறு அடிமைப்படுத்துவதும் தவறு. நம்மோடு உலகம் முடிவதில்லை நம்மை தாண்டிய உலகம் நாம் செய்யும் ஒவ்வரு செயலுக்கான கர்மவினைகளை நமக்கு நிச்சயம் அளிக்கும்.









