இன்று என்னுடைய தலைப்பு பயணங்களை பற்றியது பயணம் இல்லாமல் வாழ்க்கை ஒருபோது சுவாரசியம் அடைவதில்லை. பயணம்தான் புதிய தேடலின் துவக்கம். ஒரு பொருளை எடுக்ககூட நாம் ஒரு அடி பயணப்பட்டால்தான் அந்த பொருள் கைவந்து சேரும். பயணம் என்பதற்கு முடிவே இல்லை இறுதி மூச்சு இருக்கும் வரை பயணங்கள் முடிவதில்லை. அப்படி மூச்சு அடங்கியபிறகும் இறுதிப்பயணம் இருக்கும். பயனில்லாத பயணகள் இருக்கலாம் ஆனால் பயணமில்லாமல் ஒருபோதும் நாம் பயன் பெறமுடியாது.

ஒவ்வரு முறை பிரயாணிக்கும் போதும் ஒரு புதிய உலகம் நமக்காக விரிந்திருக்கும் . பிரயாணம் நம்மை அறியாமல் நமக்கு பல வழிமுறைகளை பல அனுபவங்களை தரும். இதுதான் நாம் பெறுவோம் என்று யாராலும் கூரிவிட முடியாது. காரணம் நாம் சந்தோசம் என்று நினைத்து ஆரம்பிக்கும் பயணங்கள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தலாம். நாம் இனிமையாக தொடங்கிய பயணம் இறுதி பயணமாகவும் மாறலாம். பயணம் ஒன்றுதான் அனால் அதன் தாத்பரியம் பல. இருந்தும் பயணம் என்றுமே ஒரு நல்ல அனுபவம். காலம் கடந்து நமது பயணத்தின் புகைப்படம் பார்த்து அக்கால நினைவுகள் அந்த பயணம் தந்த அனுபவங்கள் நினைத்து மெய் சிலிர்கும்பொது அந்த பயணம் நம் வாழ்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது.
இப்போது கண்ணதாசான் வைர வரிகள் நியாபகம் வருகிறது
" எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம்
முடியும் - இதுதான்
பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் பயணம் தொடங்கிவிடும்"

பயணம் ஒரு குறிஈடு எப்போது யாருக்கு என்ன அனுபவம் தரும் என்பது பயணத்தின் முடிவில்தான் தெரியவரும். பயணம் ஒரு தொடர்கதை முடிவில்லா பயணம். பயணத்தை அது தரும் அனுபவத்தை, அது தரும் ஆனந்ததை, அது தரும் துன்பத்தை, அது தரும் நெருக்கடியை, அது தரும் அசதியை, அது தரும் புதிய மனிதர்களை,அது தரும் விரயத்தை உணர்ந்து ரசித்து பயணிப்பவர்களால் என்றுமே பயணத்தை வெறுக்க முடியாது.நீங்களும் பயணித்துப் பாருங்கள் புதிய பரவசத்தோடு,வெறுப்பற்று பயணிக்கும் பயணத்தின் புனிதம் வந்து சேரும் ஒரு புதிய அனுபவமாய். பயணங்கள் முடிவதில்லை மகிழ்ச்சியோடு பயணித்தால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக