முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், நாளை எப்படி இருப்போம் என்று கணக்கு பார்க்கவும் மற்றவரோடு நம்மை ஒப்பிடவும் காலத்தை நாம் பார்க்கிறோம். காலம் கடக்கும்போது ஒரு சிலர் மட்டுமே காலத்தோடு பயணிக்கிறார்கள் மற்றவர்கள் தங்களது பழைய பாதைகளையும், பெருமைகளையும் பேசிக்கொண்டே அடையவேண்டிய வழியை விட்டு பின்னோக்கியே செல்கிறார்கள்.சிலர் பயணத்தில் கவனமில்லாமல் கற்பனையான பயத்தை மனதில் போட்டுக்கொண்டு பாதை இருந்தும் பயனற்ற பயணத்தைதான் தொடர்கிறார்கள் அவர்கள் எதிர்பார்ப்பது போல் பாதையும் இல்லை பயணமும் இல்லை. இது தெரியும்போது பயணம் முடிந்துவிடுகிறது.

காலம் நம் கையில் இல்லம் நம்மிடம் இருப்பது காலத்தை பயனுள்ள வகையில் காலத்தோடு பிரயாணிப்பது மட்டும்தான். வரும் துன்பங்கள் யாவும் நிகழ்காலத்து துன்பங்களாக இருக்கட்டும். வரும் இன்பங்கள் யாவும் இப்போதே பெற்றுக்கொள்வோம் அதை இறந்த காலத்திற்கு கொண்டுசெல்வது கெட்டுப்போன உணவை சமைத்து சாபிடுவது போலாகும் அதனால் ஒரு நல்ல ருசியை தரமுடியாது அதனால் தரக்கூடியது நோய்களை மட்டுமே.எதிர்காலத்து கவலை, இல்லாத ஒன்றை இருப்பதாய் கற்பனை செய்ய மட்டுமே பயன்படும் அதனால் ஒருபோது நிகழ்காலத்தின் சுவையினை கூட்டிவிட முடியாது. நாம் எப்போது இறப்போம் என்கின்ற எதிர்காலம் தெரிந்துவிட்டால் அதனால் வரும் துன்பம் எதிர்காலத்தில் அல்ல நிகழ்காலதில்தான்.அதனால்தான் எதிர்காலத்தை மனிதனுக்கு தெரியாமலேயே படைத்துவிட்டான் ஆண்டவன். மூடி வைத்த பொருள் கெட்டுப்போவதும்மில்லை, ருசியும் குறைவதில்லை. மறைக்கப்படும்போதுதான் அதை அறிய சுவாரசியம் கூடுகிரது. வெளிப்படையாய் உள்ள எதுவும் சுவாரசியத்தை தருவதில்லை. எதிர்காலமும் அப்படித்தான் அதற்கு உரியகாலம் வரும்போதுதான் அதற்கும் மதிப்பு நமக்கும்,நமக்கும் இருக்கும் பிணைப்பு. வாருங்கள் கொஞ்சம் நிகழ்காலத்தை வாழ்த்துதான் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக