சனி, டிசம்பர் 15, 2012

மாறவேண்டும் துப்பாக்கி கலாசாரம்...


Ana Marquez-Greene



Ana Marquez-Greene, aged six, died in hospital after being shot at Sandy Hook Elementary School in Newtown, Connecticut. Picture: Twitter Source: Supplied

இப்போது தெரிகிறதா உலகம் எங்கு போய்க்கொண்டு இருக்கிறது என்பதை .நாம் எவ்வளவு துயரமான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை. ஒரு இருபத்திநான்கு வயது நிரம்பிய "ஆடம் லான்சா" என்னும் மன நோயாளியின் வெறி செயலுக்கு அமெரிக்காவில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் அவனது வெறிபிடித்த தாக்குதலால் உயிரிழந்த சம்பவம்  இப்போதைய தலைமுறையின்
தவறான முடிவுகளின் அஸ்திவாரம் என்பதை மட்டும் உணர்த்தவில்லை அவர்கள  செல்லும்
பாதை சரிவர கவனிக்கப்படவில்லை என்பதையும் உணர்த்துகிறது. இறப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரும் எப்படிவேண்டுமானாலும் ஆனால் இப்படி வரும் இறப்பு யாரால்  ஏற்றுக்கொள்ள முடியும்.  

 A woman waits to hear about her sister, a teacher, following a shooting at the Sandy Hook Elementary School. Picture: AP

இந்த இளைய சமுதாயம் கவர்ச்சிக்கும், சொகுசான வாழ்க்கைக்கும் கொடுக்கும் முக்கியதுவம் அந்த வாழ்க்கையின்  அடிப்படை தெரியாமல் இருப்பதே பிரச்சனையின் முக்கிய காரணம். மீடியா ஒருபுறம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் வேண்டும் என்பதே தெரியாத தலைமுறை மறுபுறம். அதை தாண்டி தோல்விகளை ஒப்புக்கொள்ளாத மனப்போக்கு இவைதான்  இப்போது இளைய சமுதாயத்தை படுகுழிக்கு எடுத்து செல்கிறது. ஒரு சிறு அவமானதிட்குகூட உயிரை விடும் இந்த இளையசமூகம் அதோடு நில்லாமல் மற்ற உயிரையும் கொன்றுகுவிப்பது என்ன நியாயம் ?.இன்று  இந்த இளைய சமுதாயம் கண்டிப்பாக திருத்தப்படவேண்டும். இல்லை என்றால் ஒவ்வருவரும் தீவிரவாதியாய் மாறி பலரை தீர்த்துக்கட்ட தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.   

In this photo provided by the Newtown Bee, Connecticut State Police lead children from the Sandy Hook Elementary School after a reported shooting. Picture: AP/Newtown Bee/Shannon Hicks

 துப்பாக்கி கலாசாரம் உள்ள நாடு எப்போதுமே பயத்தொடுதான் வாழவேண்டி இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இதை புரிந்து கொண்டாவது அடுத்த தலைமுறை அமைதியை மட்டும் விரும்பட்டும். இறந்த அந்த  அமெரிக்க குழந்தைகளின் ஆத்மா சாந்தியடையட்டும். இனி இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருக்கட்டும்.
 

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

"மாற்றான்" மற்றும் "சாருலதா" - படங்களில் (+) மற்றும் (-)

 மாற்றான் 

 
சாருலதா 


தற்போது வெளியாகியுள்ள "மாற்றான்" மற்றும் "சாருலதா" இரண்டுமே உடன் பிறப்புகள் ஒட்டி பிறந்து ஒருவர் இறந்து மற்றொருவர் தன்  உடன்பிறப்பின் காதலை மற்றொருவர் அடைவது
என்கின்ற ரீதியில்  எடுக்கப்பட்ட படம். இந்த இரு படங்களில் உள்ள (+) மற்றும் (-)  பற்றி பார்போம்.
 
"மாற்றான்" 
 
 
(-)
 
*சூர்யா படம் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது சூரியாவின்  முழுமையான நடிப்பு திறமை + வெகுளித்தனம் + உழைப்பு + முயற்சி. "ஏழாம் அறிவு" படத்தில்  சூர்யா உண்மையான போதிதருமராக நடித்து உண்மையான போதிதருமராகவே காட்சியளித்தார். அத்தகைய சூர்யா இளைய சமுதாயத்திற்கு ஒரு பாடமாக இருந்தார். இதுவரை அவர் நடித்த படம் எதுவும் மாற்றான் அளவிற்கு மோசமானதாக இல்லை. படம் சரியில்லை பிளாப் என்று ஒரே வரியில் முடிந்துவிடும். ஆனால் மாற்றான் படத்தில் சூரியாவே சரியில்லை என்பதுதான்
பிரச்சனை. அண்ணன் காதலியை அண்ணன் இறந்ததும் தன் காதலியாக்குவது என்பது  
உறவுகள் பற்றிய உணர்வுகளை தவறாக அல்லவா இளைஞர் மத்தியில் காட்டுகிறது.   
 
* ஒரு தமிழ் படத்தை தமிழ் படம் பாணியிலேயே எடுக்கலாமே அதைவிடுத்து ஏன் ஆங்கில படம் போன்று ஒரு சண்டை காட்சி? ஆங்கில படம் போன்ற ஒரு அமைப்பு?. எதற்கு இப்படி ஒரு ஆங்கில படம் எடுக்க  எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். அதற்கு  பேசாமல் ஒரு ஆங்கில படத்தை பார்த்துவிடலாமே   எதற்கு சூர்யா படத்திற்கு வரவேண்டும்.  
 
* ஒரு சூர்யா நல்லவன் ஒரு சூர்யா கெட்டவன். ஒருவன் இறந்ததும் இன்னொரு சூர்யாவிற்கு இதையம் மாற்றப்பட்டதும் கெட்ட சூர்யா நல்ல சூர்யாவாக உருமாறுகிறார். இறந்த அண்ணன் காதலி  காஜல் அகர்வாலை தன் காதலி ஆக்குகிறார். என்ன ஒரு நல்ல எண்ணம்.
 
* படம் முழுக்க கொலைகள் கேவலமான வசனம். வெளிப்படையான உதட்டு முத்தம். பெண்கள் குடிப்பது என்று எதற்கும் சென்சார் போர்ட் இல்லாமல் எல்லோரும் எப்படிதான்  குடும்பத்துடன் படம் பார்ப்பது  என்பதுதான் கேள்வி. 
  
(+)
 
* படத்தில் பாரதியாரை நியாபகப்படுத்தியது. கலீல் ஜிப்ரான் கவிதைகளை அறிமுகப்படுத்தியது. ஒரு பாடல் மிகச்சிறந்த முறையில் படமாக்கியது இவை தவிர வேறு எதுவும் மனதில் பதியவில்லை.
 
என்னை பொறுத்தவரை சூரியாவிட்கு இந்த படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்தாலும் தரத்தின் அடிப்படையில் படம் பெரிய  மைனஸ்.
 
சாருலதா 
 
 
(+)
 
* ப்ரியாமணியின் வித்தியாசமான நடிப்பு. உண்மையிலேயே இருவேறு நடிப்பை படம் முழுக்க காட்டப்படுள்ளது. ப்ரியாமணியின் உடல் மொழி இப்படத்தில் கட்சிதமாக அமைந்திருக்கிறது. ஒரு முகத்தில் காதலும் ஒரு முகத்தில் வெறுப்புமான நடிப்பு மனதை தொட்டது.
 
* ஒரு அமானுஷ படமாக எடுத்ததோடு அதில் கடைசியில் ஆவியாக வருவது லதா அல்ல சாரு என்பது ஒரு சரியான யுக்தி. லதா சாருவாக ஆள்மாறாட்டம் செய்து இறுதியாக மரணம் வரை சென்று தன் காதலனோடு சேருவது நன்றாக திரைகதை அமைக்கப்பட்டிருக்கிறது 
 
*படத்தில் காமடிக்காக வரும்  சிறுவன் வயதிற்கு மீறி பேசினாலும் ரசிக்கும்படியாகவே  
உள்ளது.

(-)

* படத்தில் மனநல மருத்துவராக வரும் சீதாவின் நடிப்புக்கு இன்னும்  கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

* சாரு நல்லவள் என்று காடப்படாலும் தன் தாயையே  பழிவாங்க நினைப்பதாய் வரும் காட்சிகள் தேவையற்றது .

* படத்தில் சில இடங்களில் தேவையற்ற கிராபிக்ஸ் கட்சிகள் தவிர்த்திருக்கலாம். 
 

 

புதன், அக்டோபர் 10, 2012

" சாட்டை" - படம் நல்ல முயற்சி


" சாட்டை" இந்த படம் ஒரு விழிப்புணர்வுமிக்க படம். இந்த படம் நான் மிகவும் ரசித்த நம்மவர் படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.இந்த  படம் வெறும் படமாக இல்லாமல் பாடமாக மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறது. ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு படிக்காத மாணவனையும் படிக்கவைக்கலாம் அதற்கு  கொஞ்சம் அன்பு காட்டுங்கள் என்று சொல்லித் தருகின்றது இப்படம். சமுத்திரகனி அவர்கள் இப்போது உள்ள கல்வியின் அழுத்தம் எத்தகையது என்கின்ற ஒரு விழிப்புணர்வை படத்தில்  நன்றாக வெளிப்படுத்தி இருக்கின்றார் . படிப்பை காசாக்கும் கல்வி நிலையங்கள், ஏழைகள் அவர்களுது குழந்தைகள் அரசு பள்ளியில் யாரும் கவனிப்பாரற்று மற்றொருபுறம் என்று கல்வி பல கேள்விகளை நமக்கு இன்று விடைதேடும் வேலையை மட்டுமே  கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறந்த மாணவனை, ஒரு சிறந்த சமுதாயத்தை நாம் படைக்க தவறும்போதெல்லாம் அந்த சமுதாயம் மிக மோசமான தீவிரவாதம், போதைக்கு அடிமை என்று நதியாக  ஓடவேண்டியது இன்று குட்டையாய் தேங்கி அதுவே
சாக்கடையாய் மாறிவிடுகின்றது. இதற்கு காரணம் தேடுவதை விட்டுவிட்டு நம்மிடம் உள்ள    குறைகளை நிவர்த்தி செய்வோம்.கல்வியின் தரம் உயர்த்தவேண்டும் என்கின்ற சிந்தனை மட்டுமே நாம் கருத்தில் எடுக்கவேண்டிய முக்கிய விஷயம் இப்போது.

                
கல்வி அறிவு எல்லோரும் பெறவேண்டும், தவறு செய்யும் ஒவ்வருவரும் திருந்தி நல்வழியில்  சமுதாயத்தை உயர்த்தவேண்டும் என்கின்ற இலட்சியத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் முயற்சி கண்டிப்பாய் பாரட்டப்படவேண்டிய ஒன்று. இப்படி ஒரு ஆசிரியர் ஒவ்வருவர் வாழ்விலும் கிடைக்கவேண்டும், அப்படி எனக்கு  கிடைத்த நல்ல  ஆசிரியர்களை நினைத்து அவர்களுக்கு இப்போது  என்  மனமார்ந்த  நன்றிகளை  சொல்ல விரும்புகிறேன்.

 

செவ்வாய், அக்டோபர் 02, 2012

நதி எங்கே போகிறது...


உலகத்தில் மனிதனால் உருவாக்கமுடியாத பலவற்றுள் நதியும் ஒன்று. நதி பூமியை குளிர்விக்க, எல்லா உயிரினமும் ஜனிக்க, அனுபவிக்க, தாகம் தீர்க்க, நீந்தி மகிழ, பார்த்து ரசிக்கவென்று படைக்கப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு. பிரபஞ்சமே ஒரு அழகான ரகசியம் அந்த ரகசியத்தின் மெய்பொருள் இந்த நதிகள். நதி தன்னை காயப்படுத்துபவர்களையும் குளிர்விக்கிறது. தன்னை மாசுபடுதுபவர்களையும் தூய்மைப்படுத்துகிறது. அதனால்தான் முன்னோர்கள் தாய்மைக்கு இலக்கணமான நதிகளுக்கு கங்கா, யமுனா, காவேரி என்று பெயரிட்டு பெண்ணும் நதியும் ஒன்றாக கருதினர். ஒரு பெண் கெட்டுப்போனால் அந்த குடும்பம் கெட்டுப்போகும் அதேபோல்  ஒரு நதி கெட்டுப்போனால் அது அந்த நதியை சார்ந்த அத்தனையும் கெட்டுப்போகும் என்கின்ற மனநிலையோடு வைக்கப்பட்ட பெயர்களாக பெண்ணின் பெயரை நதிக்கு வைத்தனர் முன்னோர்கள். 
எங்கெல்லாம் நதிகள் ஓடுகின்றனவோ அங்கெல்லாம் பூக்கள் சொரிந்து நந்தவனமாகுகின்றன. நதி மனிதருக்கு ஒரு வரப்பிரசாதம். நதி கடவுளுக்கு இணையான ஒன்று. நதி தனக்கான கடமையை சரியாக செய்து வாய்க்கால்  வரப்பாக, மலைமேல் அருவியாக ஓடி கடலில் கலப்பதுவரை நதி ஒரு நடமாடும் தேவதையாக, கண்களுக்கு விருந்தாக, உடலுக்கு இனிமையாக, தாகத்தை தணிக்கும் தாயாக, பசிக்கு மீன்களை உணவாக தந்து நம்மை வளர்த்தெடுப்பதில் நதிக்கு முக்கிய பங்குண்டு. நதிக்கும் நமக்குமான தொடர்பு எக்காலத்திலும் இருந்துகொண்டே இருப்பவை. நதி வற்றிப்போனால் அது நமக்கு தரப்பட்ட தண்டனை.

நதிக்கு இவ்வளவு சிறப்பு இருக்க, நாம் நதியை எப்படி வைத்திருக்கிறோம். நமது நாட்டில் உள்ள நதிகள் செத்து ரொம்ப நாளாகிவிட்டது. அந்த நதிக்குதான் நாம் காகிதங்களாலும், பிளாஸ்டிக் பொருட்களாலும், தண்ணீர் பாட்டில்களாலும், நமது மனித மலங்களாலும், ரசாயன குழம்புகளாலும் இப்போது சமாதி கட்டிக்கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட நமது இந்திய நாட்டில் உள்ள எல்ல நதிகளும் கொலை செய்யப்பட்டு சடலங்கலாக்கப்பட்டுவிட்டன. அந்த செத்த நதிகளில்தான் இன்னும் நாம் உறவு வைத்துக்கொண்டிருக்கிறோம். புனிதமான கங்கை நதி எப்போதோ செத்துப்போய்விட்டது. அதை புனிதம் என்று நம் கழிவுகளை கொட்டிக்கொட்டி நாசமாகிகொண்டே இருக்கிறோம்.
இந்த பிரபஞ்சம் முழுவதும் ஐம்பூதங்களால் ஆனவை நீர்,நிலம்,காற்று, ஆகாயம், பூமி இதைதான் கடவுள் என்று நாம் உருவங்களாக்கி வெவ்வேறு ரூபத்தில் நாம் வழிபடுகிறோம். அதை கருத்தில் கொண்டு மண்ணால் ஆனா உருவத்தை கடவுள் என்று நினைத்து நீரில் கரைக்கப்பட்டு வந்த வழிபாடுதான் விநாயகர் சதுர்த்தி இதை புரியாமல் ரசாயன கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை சாயம் பூசி அதை ஆற்றிலும், கடலிலும் கரைத்து நதியை நாசம் செய்வதை விநாயகரே ஏற்கமாட்டார்.நதியை மாசாக்கும் சடங்கு அது சடங்கே அல்ல அது நதிகளுக்கு கட்டப்படும் சமாதி. அதனால் கடவுள் ஒருபோதும் திருப்தியடையப்போவதில்லை. நாம் கடவுள் பெயரால் நதியை கொலை செய்கிறோம் என்பதே உண்மை.
இதுவரை நதிகளை கொலைசெய்தது போதும், நதிக்கு நாம் செய்யும் ஒவ்வரு கெடுதலும் நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் சவக்குளியாகும். இனியாவது இருக்கும் நதியை காப்பாற்றினால் மட்டுமே அடுத்த தலைமுறை வாழ வழியுண்டாகும். நாம் சேர்த்து வைக்கும் பல கோடி சொத்துக்கள் நமது அடுத்த தலைமுறைக்கு உதவுகிறதோ இல்லையோ அவர்களுக்கு நாம் விட்டுச்செல்லும் சுத்தமான காற்று, நீர்தான் அவர்களை ஆரோக்கியமாக வைத்து வாழவகைசெய்யும். இயற்கையை அழிப்பதும் பெற்ற தாயை அழிப்பதும் ஒன்றுதான். ஆகையால் இயற்கையை நாம் காப்பாற்ற வேண்டாம் அழிக்காமல் இருப்போம் என்பதே என்னுடைய கருத்தாகும்.    

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!...

கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று கூப்பிட்ட குரல் தேடி ஓடி வருவான் கிருஷ்ணன். அவனே ஆத்மசக்தி அவனே அனைத்தும், அவனே ஆதியும், அந்தமும், ஜோதியும், சுடர் ஒளியும். அவனை நினைத்தாலே மனம் இனிக்கும், உடல் சிலிர்க்கும், மனதில் பக்தி தானாய் வந்து துளிர்க்கும். கிருஷ்ணா என்று அழைக்கும்போதே அண்ட சராசரமும் நம்மை ஆனந்தமாய் ரசிக்கும். அவன் பேரை சொன்ன வாய்க்கு தேவஅமுதம் கிடைக்கும்.நாளும் பொழுதும் அவனை நான் நினைக்க நயமாய் அருள் புரிந்திடுவான். வாழும் உயிரெல்லாம் அவன்ர் அவனே  ஆவான். இனியென்ன வேண்டும் இவ்வுலகில் அவனே  அனைத்துமாய் அலைபவன் அவனைத்தவிர வேறு எதை பெற்று நம்மால்  வாழ்த்திட முடியும்.   
 பலரும் பலவிதத்தில் அவனை சொந்தம் கொண்டாடுக்கின்றனர், அவனை குழந்தையாய், நண்பனாய், தெய்வமாய், காதலனாய், கணவனாய், மன்னனாய், தேரோட்டியாய் எல்லாமாய் அவரவர் விருப்பதிட்கேட்ப அவனை போற்றுகின்றனர்.பாவத்தை போக்குகின்ற பரந்தாமனைப்பற்றி கொஞ்சம் கேளுங்களேன், அவன் நாமம் சொன்னால் போதும் அணைத்து பாவமும் பறந்து ஓடும்.   
கண்ணன் கார்குழல் வண்ணன். புல்லாங்குழல் கொண்டு அனைவரையும் கவரும் மன்னன். அன்புக்கு அவன் அடிமை. அன்பால் கட்டுண்டான். அகிலத்தை ஆளுக்கின்றான். அவனே அனைதுமாவான். பயமற்றவன், பிறப்பற்றவன் அவனே அவதாரபுருஷன். 
வாழ்கையில் ஒருவன் ஒவ்வரு பருவத்திலும் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்த்துகாட்டியவன் ஸ்ரீ கிருஷ்ணன். அவனே அன்பின் சுடர். அவனே அனுபவ வெளிச்சம். அவனே ஆத்மா நம்பிக்கை.அவனே இடையன் அவனே பசுவுமாவன். அவன் கை புல்லாங்குழல் அதில் வரும் கீதமோ தேவகுரல். காதலாய் உருகுவான். மகனாய் அடம்பிடிப்பான். தோழனாய் தோளில் கைபோட்டு நடப்பான். எதிரியின் உயிரை எடுப்பான். அவனே உலகநாயகன்.
 கிருஷ்ண பக்திக்கு அவன் கொடுப்பான் முக்தி. நீ நீயாகவே இரு அப்போதும் தெய்வத்தை நினைத்திரு. கடமையை செய் மடமையை செய்யாதே என்று உபதேசித்தவன். அவனை நினைத்தால் உடலும், உள்ளமும் சுகப்படும். அவனது ஒவ்வரு பருவமும் நமக்கு  ஒவ்வரு பாடம். அவனை வணங்குவோம். அவன் சொன்னதை ஏற்று நடப்போம்.  சர்வம் கிருஷ்ணட்பனம்!

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

நான் காலம் பேசுகிறேன்...


நான் காலம் பேசுகிறேன் எனக்கு என் கடமையை செய்துதான் பழக்கம் வெட்டிப்பேச்சு பேசி பழக்கமில்லை, ஆனால் உங்களை உருவாக்கியவன் என்கின்ற முறையில் உங்களிடம் கொஞ்சம் பேச எண்ணுகிறேன்.  உங்களுக்கு நான் கொடுத்த ஆறாம் அறிவை அகந்தைக்கு பயன்படுத்தினீர்கள். உங்கள் அறிவை அழிவிற்கு பயன்படுத்தினீர்கள். எல்ல உயிர்களுக்காகவும் படைக்கப்பட்ட பூமியை உங்கள் சொந்த உபயோகத்திற்காக அழிக்கத் தொடங்கினீர்கள். உங்கள் கழிவுகளால் புனிதமான நதிநீரை கெடுத்தீர்கள். நச்சு புகைகளால் பூமியை வெப்ப காடாக்கினீர்கள். உங்களை பெரியவன் என்று நிரூபிக்க நீங்கள் செய்த கேவலங்களை பார்க்க சகிக்காமல் உலகம் உங்கள் கையில் இல்லை என்பதை நிரூபிக்க  சுனாமிகளையும், பூகம்பங்களையும் உங்களுக்கு கொடுத்தேன் ஆனாலும் உங்கள் ஆணவம் அடங்காமல் அணுஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு உலகை அழிக்கிறேன் என்று புறப்பட்டுவிட்டீர்கள். அட முட்டாள் மனிதர்களே! நீங்கள் அழிக்க நினைப்பது நான் படைத்த ஒரு சிறிய உருண்டையை. நீங்கள் கற்பனைகூட செய்யமுடியாத பிரபஞ்சத்தை காட்டுகிறேன். அதை பார்த்த பிறகு யார் பெரியவர் என்கின்ற முடிவெடுங்கள். நீங்கள் மேலே பார்க்கும் படத்தில் உள்ளதுதான் பூமி. இப்போது உங்கள் பூமி பெரியதாக உங்கள் கண்களுக்கு தெரியலாம் ஆனால் என்னுடைய படைப்பின் துவக்கமே தவிர முடிவல்ல.   
இப்போது தெரிகிறதா உங்கள் பூமி எங்கே இருக்கிறது என்று.என்னுடைய படைப்பின்  ரகசியம் அறிந்தவர் யாரும் தன்னை எல்லாவற்றிலும் மேலானவன் என்று கர்வப்படமாட்டார்கள், அனைத்தும் எனக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடமாட்டார்கள். தனக்கு, தனக்கு என்று சுயநலமாக இருக்கமாட்டார்கள். என்னுடைய  படைப்பு இதோடு முடியவில்லை பாருங்கள் இன்னும் காட்டுகிறேன்.  

உங்கள் பூமி எங்கு இருக்கிறது தெரிகிறதா?  உங்கள் பூமியின் நிலை இதோ நீங்கள் பார்க்கும் நிலையில்தான் உள்ளது ஆனால் இதுவும் முடிவல்ல.இப்போது கர்வப்பட யார் இருக்கிறார்கள் பூமியில் நான்தான் பெரியவன் எனக்கே எல்லாம் சொந்தம் என்று கர்வப்படுபவன் அடிமுட்டாள் என்றே கருதிக்கொள்ளலாம். இன்னும் என் படைப்பை நான் காட்டுகிறேன் அதையும் பாருங்கள்
பெரிய சூரியணே அதைவீட பெரிய அர்ச்டுருஸ் (ARCTURUS) முன்னால் எவ்வளவு சிறியவையாக காட்சிதருவதை பார்கிறீர்கள் அல்லவா. இப்போது எங்கே உங்கள் பூமி? அதற்குள் ஏன் பைனாகுலரை தேடுகிறீர்கள். பூமியின் அளவுகோல் மிகசிறியது என்று உங்களுக்கு இப்போது தோன்றினால் உங்கள் அளவுகோல் என்ன? சரி என்னுடைய முழு படைப்பையும் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யுங்கள். 
  என்னை யார் போற்றினாலும், தூற்றினாலும் எதற்கும் சந்தோசமோ, வருத்தமோ படப்போவதில்லை.
உங்கள் அகந்தையை, பெரியவன், சிறியவன் என்கின்ற வேறுபாட்டினை கழைந்துவிட்டு உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி பாருங்கள் நான் இப்போது உங்கள் கண்களுக்கு என் முழு வடிவையும் காண்பிக்கிறேன். நான்தான் முலாதார சக்தி. நான் அன்னிச்சையாக செயல்படுபவன். நான் எல்லோருக்கும் சமமானவன். என்னை புரிந்துகொண்டவர்கள் ஞானி ஆகிறார்கள் அவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை. என்னை புரியாதவர்கள் மற்றும் புரிய முயற்சிக்காதவர்கள் மறுபடியும் பிறக்கிறார்கள். அவர்களது பிறப்பும், இறப்பும் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். எனக்கு முக்காலமும் தெரியும். நேற்று நடந்தது, இன்று நடப்பது மற்றும் நாளை நடக்கப்போவது எல்லாம் எனக்கு தெரியும் ஆனால் என்னால் எதையும்  தடுக்க இயலாது. நான் அனைத்தும் அறிந்தவனாக இருந்தாலும் எனக்கும் விதியை மாற்றும் சக்தி கிடையாது ஆகையால் நான் கர்வப்பட்டு பயனில்லை . எதுவும் என் கையில் இல்லை அதனால் நான் கர்வப்படுவதில்லை. இதை  உங்களுக்கு உணர்த்தவே இப்போது பேசினேன்.

புதன், ஆகஸ்ட் 01, 2012

மரணம்


ஒரு வார்த்தை கேட்டால் நமக்கு நடுக்கம் வருகிறதே அந்த வார்த்தையை கேட்ககூட நாம் விரும்புவதில்லை. ஆனால் வாழ்கையில் ஒவ்வருவரும் சந்திக்கபோகிற விஷயம். தினமும் எங்கோ ஒரு இடத்தில் நிகழ்த்துகொண்டிருக்கும் விஷயம். யாரும் விரும்பாத விஷயம் அப்படி விரும்பினாலும் அதை செயலபடுத்த பயம்கொள்ளும் விசயம் "மரணம்". ஒரு குழந்தை இந்த உலகத்தில் ஜனிக்கும்போது அதன் முடிவும் எழுதப்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்ட மரணம் தனக்கு வரக்கூடாது என்பதில் எல்லோரது நம்பிக்கையாக இருக்கிறார்கள். பலர் தங்களுக்கான மரணம் வருவதற்கு முன்பே மரணபயத்தில் தாங்களே மரணத்தை வரவழைத்து கொள்கிறார்கள். மரணம் என்ற வார்த்தை கேட்டாலே மரணம் வந்துவிட்ட பயம்தான் ஒரு மனிதனை அதிலிருந்து தப்பிக்க பலவாறான தவறுகளை செய்யவைக்கிறது. ஒவ்வரு மரணமும் நமக்கு கற்றுத்தருவது என்ன? நீயும் ஒருநாள் மரணமடைவாய் அதனால் தலைகனத்தோடு ஆடாதே என்பதை எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடிந்தது. நாளை இறக்கப்போகும் மனிதன் இன்று இறந்தவனை பார்த்து அழுகிறான். இந்த மரணம் வாழ்கையைவீட சிறந்ததாக நினைத்து செய்யும் தற்கொலைகூட துன்பமுள்ள வாழ்கையைவீட கொடுமையானது. 

பகவத்கீதை சொல்கிறது "மரணம் என்பது உடலுக்கு மட்டுமே ஆத்மாவிற்கு மரணம் கிடையாது. ஆத்மாவை யாராலும் கொல்லமுடியாது, தண்ணீரால் நனைக்கமுடியாது, காற்றால் உலர்த்த முடியாது. நாம் அணியும் சட்டை பழையதாகி கிழிவது போல உடலாகிய சட்டை கிழிந்து வேறொரு உடல் என்னும் புதிய சட்டைக்குள் புகுகிறது. ஆத்மாவை கொன்றதாக நினைப்பவனும், கொலைசெய்யப்பட்டதாக நினைபவனும் முட்டாள்களே". ஆகவே மரணத்தை பார்த்து பயம்கொள்வது கூடாது. முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியமும் மரணமில்லாத வாழ்கையும் என்றுமே அர்த்தம்தராது.   

மரணம் என்பது இயற்கை நமக்கு கொடுத்த சுழற்சிமுறை. பிறப்பதும் பின்பு இறப்பதும் மீண்டும் பிறப்பதும் காலத்தால் நடந்துகொண்டே இருப்பவை. எந்த மனிதனும் இறக்காமல் இருக்கப்போவதில்லை அப்படியானால் யாருக்காக, எதற்காக "தான்" என்கின்ற ஆணவத்தோடு அலைகின்றான்?.தன் உயிர் எங்கிருக்கிறது என்பதுகூட அறியாதவன் எப்படி அடுத்தவர் உயிரை எடுக்கிறான்?. ஒவ்வருவரும் தனக்குள்ளேயே ஒரு மயானத்தை வைத்துக்கொண்டு அடுத்தவருக்காக ஒரு மயானம் தேடுவதுதான் வேடிக்கையாக உள்ளது. மரணத்தை ஒத்திப்போடலாமே தவிர மரணம் வராமல் தடுக்க யாராலும் முடியாது. அத்தகைய ஒத்திப்போடல்தான் மனிதன் இயற்கையை தன் அறிவால் வென்றுவிட்டதாக வந்த ஆணவம். எங்கு சென்றாலும் பின்தொடரும் மரணத்தை கண்டு பயப்படுவதும் தவறு, மரணத்தை அறிவால் வென்றுவிட்டதாக ஆணவம் கொள்வது தவறு. இரண்டுமே அறியாமையால் நிகழ்வது. உண்மையை அறிந்தவர் பயப்படவும்மாட்டார்கள், ஆணவப்படவும்மாட்டார்கள். மரணம் என்பது முழுஅமைதி அந்த அமைதியை மனதுள் பார்க்க பழகியவர்கள் மரணத்தை வீட மேலானவர்கள் அத்தகைய மரணம் வரும்வரை அமைதியாக காத்திருப்பார்கள்.

வெள்ளி, ஜூலை 27, 2012

பொறுப்பில்லாத நிர்வாகத்தால் ஏற்பட்ட மரணம்...


பணம் ஒன்றே வாழ்கையின் முக்கிய குறிக்கோளாய் வாழும் காலம் வந்தபின்பு, தன் குடும்பம் என்பதை தாண்டி பலர்  யோசிப்பதே இல்லை. தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் துடிக்கும் மனம் அடுத்தவர் என்றால் அதே மனம் கல்லாய் மாறும் சுபாவம் கேவலத்திலும் கேவலம். வெறும் பணம்தான் முக்கியமென்றால் மனிதன் எப்போதுதான் உண்மையிலேயே மனிதாபிமானமுள்ள மனிதனாய் மாறப்போகிறான். இன்னும் எத்தனை சுருதியை பலிகொடுத்து பாடம் கற்கப்போகிறோம். ஒரு அழகான குழந்தை அந்த அவலச்சனமான பேருந்தில் உட்காரும் இடத்தில் ஒரு ஓட்டை வழியாக விழுந்து இறக்கும் கொடுமை இன்னும் எவ்வளவு காலம் தான் சகித்துக்கொள்ளமுடியும். கும்பகோணம் தீ விபத்தில் 90 குழந்தைகளை தீக்கு பலிகொடுத்துவிட்டு இப்போது அலட்சியம் காரணமாக சுருதி என்னும் குழந்தையை கொன்றாகிவிட்டது.இதற்கு யார் காரணம்? யார் இதற்கு பொறுப்பேற்பது?பணமே பிரதானம் என்று நினைத்த அந்த பள்ளி நிர்வாகமா? பேருந்தின் சொந்தகாரரா? பேருந்தை இயக்கியவரா? பேருந்தை பராமரித்தவரா? இல்லை அந்த சம்பவம் நடந்த பதினைந்து நாள் முன்பு அந்த வண்டியை தரமுள்ளது என்று வாக்களித்த பிரேக் இன்ஸ்பெக்டரா? அந்த குழந்தை கற்கவந்த பாவத்திற்காக அதன் உயிரை வாங்கியாகிவிட்டது. இவர்கள் இப்போது நிம்மதியாக தான் உண்டு தனக்கான சம்பாத்தியம் உண்டு தான் குடும்பமுண்டு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழப்போகிறார்களா?.

மனசாட்சியை கொன்று சொத்து சேர்ப்பதுதான் வாழ்கையின் லட்சியமா? போதும் ஒவ்வரு உயிர் போனபின்பு பாடம் கற்று என்ன பயன்?. செய்வதைகூட சரியாக செய்யாமல் சின்ன பிள்ளைகள் செல்லும் பேருந்தில் இவ்வளவு கேவலமாக வைத்திருந்த அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான ஒவ்வருவரும் சட்டத்தின் பிடியில் தப்பிக்கவிடக்கூடாது. அப்போதுதான் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும். அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.

ஞாயிறு, ஜூலை 22, 2012

"Satyamev Jayate" - அமீர்கான் நடத்தும் அசத்தல் நிகழ்ச்சி...

அமீர்கான் உடைய தீவிர ரசிகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன். அமீர்கான் அவரது நடிப்பில் வியந்த விஷயங்கள் மிகஅதிகம் அவர் ஆங்கில திரைப்பட நடிகர் மெல் கிப்சன் போன்று அபார திறமை உடையவர். அமீர்கான் தனது நடிப்பின் ஆற்றலை மிககச்சிதமான கதாபாத்திரத்தின் மூலமாக தன்னை சமுதாய சிந்தனையுள்ள மனிதராக அடையாலப்படுதிக் கொண்டார். லகான், 3 idiots , ரங் தி பசந்தி போன்ற படங்களின் மூலமாக சமுதாய கருத்தினை மையமாக கொண்ட படங்கள் மக்களால் மிகவும் விரும்பப்பட்டவை. தனது சாக்லேட் ஹீரோ தோற்றத்தை உதறி எறிந்துவிட்டு சமுதாய சிந்தனையோடு படங்களை அணுகிய விதம் அமீர்கானுக்கே உரிய சிறப்பு அம்சம். 

அமீர்கான் தன்னை சமுதாயதின் அங்கமாக அணுகிய விதம் அவரை சினிமா ஹீரோ என்பதோடு இல்லாமல் நிஜவாழ்க்கையிலும் தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். தனக்கே உண்டான சமுதாய அக்கறையை கையில் எடுத்துக்கொண்டு அதை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் "சத்திய மேவ ஜெயதே" நிகழ்ச்சி கண்டிப்பாக மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்தவாரம் நதிநீர் மாசடைவதை பற்றிய பிரச்சனையை மிக அழகாக  எடுத்து சொன்ன விதம். மக்கள் இப்போதாவது விழிப்புணர்வு அடையமாட்டார்களா? என்கின்ற பரிதவிப்பை ஏற்படுத்தியது. ஒரு விதத்தில் நதிநீர் மாசடைய நாமும் ஒரு காரணம் என்பதை அறியும்போதும் நமக்கு அதற்கான தண்டனையை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்கப்போகிரார்கள் என்னும் கொடுமையே நமக்கு மிகப்பரிய தண்டனையாக மனதில் முள்ளாக தைக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்து விட்டுசெல்வோமோ இல்லையோ கண்டிப்பாய் வியாதியை விட்டு செல்வோம் என்பது மிகவும் வருத்த வேண்டிய விசயமாக இருக்கிறது. நல்ல காற்று, நல்ல குடிநீர், நல்ல எதிர்காலம் எப்போது வரும் என்பது தெரியாமல் மனம் ரனமாகிறது. நாளைய சந்ததியினர் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகள் நம்மைவிட அதிகமாக இருக்கும் என்பது எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. என்னதான் நாம் பல விசயங்களை கண்டுபிடித்தாலும் பூமிக்கு நாம் செய்த துரோகத்தை நம்மால் சரிசெய்ய இயலாது. நாம் கொஞ்சம் முயற்சித்தால் பஞ்சபூதங்களை மேலும் மாசடையாமல் தடுக்கலாம்.   
 நாமும் நினைத்தால் சாதிக்கலாம் இதுபோன்ற நல்ல நிகழ்சிகளை ஊக்குவிப்பதின் மூலமாக. நாமும் முயற்சி செய்வோம் இந்தியாவை வளமாக்க பாடுபடுவோம் சத்திய மேவ ஜெயதே. 

" MUGHAL - E- AZAM" ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படம்...


 முகல் - - அசாம் படம் தமிழில் மொழிபெயர்க்கபட்டு அக்பர் என்ற பெயரில் வெளிவந்தபோதிலும் தமிழில் சரியாக ஓடாத இந்த படம் ஹிந்தியில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இப்படம் ஒரு சரித்திரத்தை கிட்டதட்ட பதினைத்து வருடம் தக்கவைத்துக்கொண்டது என்றால் அது மிகையாகாது. படம் பலவருட போராடதிட்குபிறகுதான் வெளிவந்தது அதற்கு காரணம் இப்படத்தின் ஒவ்வரு காட்சியமைப்பும் மிக பிரம்மிக்கத்தக்க வகையில் எடுத்துக்கொண்ட முயற்சிதான். ஒரு மென்மையான காதலை மையமாக கொண்ட படத்தின் வடிவமும் முகாலைய காலத்து வடிவமைப்பை கொண்டுவந்தது அதை நம் கண்களுக்கு விருந்தாக்கியது அந்த காலத்திற்கே சென்றது போன்ற உணர்வினை கொண்டு வந்தது நிச்சயம். இந்த படம் பிரம்மிப்பின் முக்கிய அம்சம் மதுபாலாவுடைய நடிப்பு ( அனார்கலி) இந்த படத்தில் மதுபாலாஅனார்கலியாக உருமாறியிருந்தார்.
இந்த படம் 1960 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை இயக்கியவர் கே. ஆசிப் மற்றும் இந்த படத்தில் அக்பராக பிரிதிவிராஜ் கபூர் நடித்துள்ளார். சலிமாக திலிப் குமார், ஜோதா பாயாக துர்க்கா கோட்டி நடித்துள்ளார். ராஜகுமாரன் சலீம் நாட்டிய தாரகையான அனார்கலியை காதலிப்பதால் அவர் தந்தை மற்றும் அரசராகிய அக்பர் எதிர்கிறார். ஒரு அழகான காலத்தால் அழிக்க முடியாத  காதல் காவியம் கண்ணீறால்  நனைக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுத்துவது மதுபால நடிப்பின் உச்சகட்டம். ஒரு அழகான நடன தாரகையாக நடனமாடுவதாகட்டும், காதல் வயப்பட்டு வெட்கப்படுவதாகட்டும், காதலனை பிரிந்து துயரில் அழுதுகொண்டே அழகான பாடல் ஒன்றை சிறையில் இருந்தபடி பாடுவதாகட்டும் காட்சிக்கு காட்சி அழகு பதுமையாக உலாவரும் மதுபாலா நடிப்பு படத்தின் உயிர் துடிப்பு.
அரசபையில் தனது காதலன் சலீம் மற்றும் அரசர் அக்பர் முன்பாக தன் காதலை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க போவதில்லை என்பதை தனது பாட்டின் மூலமும் நடன அசைவுகள் மூலமாகவும் காதலை கொடு அல்லது மரணத்தை கொடு என்று அரசர் முன்னால் பாடி நடனமாடும் ஆசாத்திய துணிச்சல் கொண்ட அனார்கலி. அத்தகைய அனார்கலிக்காக தனது தந்தையையே எதிர்த்து போர்களத்தில் போராடும் சலீம் என்று தங்கள் உயிரைக்கொடுத்து காதலை வாழவைக்கும் படமாக இந்த படம் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
தன் மகனிடம் அனார்கலியை மறக்கும்படி கெஞ்சுவதாகட்டும் அதனை மறுக்கும் சலீமுடன் சண்டையிட்டு சலீமை கைதுசெய்து மரணதண்டனை விதித்து அதற்காக வருந்துவதாகட்டும் பிரிதிவிராஜ் கபூர் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவரது அந்த கடுமையான பார்வை அதட்கேட்ப வசனங்கள் அவரது உடல் மொழி எல்லாமே அக்பர் கதாபத்திரதிற்கு ஏற்றவாறு இருந்தது.
இந்த படத்தின் முக்கிய பங்கு மதுபாலாவின் அழகாண நடிப்பு என்பதோடு சரித்திர வரலாற்றை பிசகாது எடுத்த முயற்சி. காதலை எதிர்க்க எதிர்க்க வளரும் என்பதை அழகாக கட்சிபடுத்தபட்டிருக்கும் விதம். நடன அசைவுகள் பாடல்  கொடுத்த இனிமை  என்று படத்தை பலமுறை  பார்த்து ரசிக்கலாம் என்பதற்கான உத்தரவாதம் கண்டிப்பாக இந்த படதிற்கு  கொடுக்கலாம். 

ஞாயிறு, ஜூலை 15, 2012

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" இறுதிநாள் நிகழ்ச்சி...

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" இறுதிநாள் நிகழ்ச்சி மிகவும் ப்ரம்மிப்பகவும் மிக சுவாரசியமாகவும் இருந்தது. சூர்யா அவரை நாயகனாக பார்த்து பழகிய கண்கள் ஒரு குவிஸ் மாஸ்டராக அமர்ந்து கேள்வி கேட்கும் விதம் இந்த நிகழ்ச்சியை ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக ஆக்கியது. நான் முழுவதுமாக இந்த நிகழ்ச்சியை பார்க்காவிட்டாலும் இறுதிநாள் நிகழ்ச்சி மனதில் ஆழமாய் பதிந்தது. உலகில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் ஆனால் யாருடைய வெற்றியை உலகமே கொண்டாடுகிறதோ அவர்தான் மிகச்சிறந்த தலைவர், வெற்றியாளர் எனலாம். வெற்றி என்பதன் தொடக்கம் தோல்விகள் கொடுத்த அனுபவம் எனலாம். சூர்யா அவரது இயல்பான அந்த அணுகுமுறை பலரை வெற்றிபெற செய்தது எனலாம். இறுதிநாள் சூரியாவின் அந்த அனுபவ பேச்சுக்கள் மனதை தொட்டது. வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே போல்தான் துவங்குகிறது அந்த வாழ்கையை நாம் எப்படி வழிநடத்தி செல்கிறோம் என்பதில்தான் வாழ்கையின் போக்கே மாறுகிறது. சூரியாவை புகழ்வது மட்டும் என்னுடைய நோக்கமல்ல அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவரும் அவர் தந்தை திரு. சிவகுமார் அவர்களும் தந்த விளக்கம் அவர்களது  அனுபவம் தந்த பாடம்.  
இறுதி நிகழ்ச்சி தனக்கே உரிய முறையில் சூர்யா மக்கள் மனதில் தனது நல்ல குணங்களால் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். எப்போதும் பெரிய திரையில் எப்போதாவது அவர் படங்களை சென்று பார்த்தவர்கள். இப்போது வீடிட்குள்ளே சின்னத்திரையில் தன்னை அழகாக காட்டியதோடு தன் இயல்பான குணத்தையும் காட்டினார். அமீர் கான் உடைய "சத்திய மேவ ஜெயதே" போன்ற நல்ல நிகழ்சிகள் சூர்யா நடத்தும் "அகரம்" நிச்சயம் வரவேற்கபட வேண்டிய நிகழ்வுகள்.
இறுதிநாளன்று சூர்யா மற்றவர்களை பாராட்டிய விதம், அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அவர்களது வாழ்கையில் கிடைத்த சுவாரசியமான அனுபவமாக கண்டிப்பாக இருக்கும். அப்படியொரு சுவாரசியமான அனுபவம் இறுதிநாள் நிகழ்ச்சியை பார்த்த எனக்கும் கிடைத்தது.


 

வியாழன், ஜூலை 12, 2012

அரசியலை விரும்பாத இளவரசி டயானா...


"Diana, Princess of Wales" (1 July 1961 – 31 August 1997) -
டயானா அவர்களை பற்றி எழுதவேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றும்போது எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்வி. ஏன் டயானா  அவர்களை பற்றி எழுதவேண்டும் என்பதுதான். அதற்கு காரணம் தேடும்போது டயானா  என்னும் பெயரை கேட்டவுடன் மனதிற்குள் ஒரு இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு அது அவரது வசிகர புன்னகையா இல்லை அவரது அழகான தோற்றமா என்பது புரியவில்லை. ஒரு அரசியல் வட்டத்திற்குள் வரவிரும்பாத ஒரு இளவரசி. இளவரசர் சார்லசை திருமணம் செய்யும்போது அவர்க்கு தான் இங்கிலாந்த் நாட்டின் இளவரசி என்னும் சந்தோசம், அவர் இளவரசி ஆனபிறகு இருந்ததா என்றால் கண்டிப்பாக இருந்திருக்காது. ஆசை படுவதட்கும் ஆசைபட்டது கிடைத்தபிறகும் உள்ள உணர்சிகளை மதிப்பிட்டால் அந்த ஆசைபட்டது கிடைக்கவேண்டும் என்கின்ற வேட்கை அதனால் ஏற்படும் உந்துதல் அதை அடைய எடுக்கும் முயற்சி நமக்கு அதன்மீதான ஒரு காதலை உண்டாக்குகின்றது. அதே ஆசை நிறைவேறி நாம் ஆசைப்படுவது நமக்கு சொந்தமானால் மனம் அதை விடுத்தது அடுத்த ஒன்றிற்க்கு ஆசைப்பட மனம் ஆயத்தமாகின்றது. இது யாராலும் தவிர்க்க இயலாத ஒன்று  ஆனால் ஒன்றை நாம் யோசித்தோமா நாம் ஆசைப்பட்டோம் அந்த ஆசைப்பட்டது கிடைத்துவிட்டது அதை முழுமையாக அனுபவித்தோமா? என்று நாம் என்றைக்காவது யோசித்திருப்போமா?. இதே நிலைதான் டயானவிட்கும் இருந்திருக்க வேண்டும். அப்படி ஆசைப்பட்ட  அரச வாழ்க்கையின் பளபளப்பு வெளியில் இருந்து பார்க்கும்போது மட்டுமே அழகானவையாக இருக்கும் உள்தொற்றம் மிக மோசமானதாக இருக்கும் என்பதை சில நாட்களிலேயே உணர்ந்திருப்பார் டயானா.

அரசகுடும்பத்து மருமகலானாலும் நமக்கு அடுத்த வீட்டு மருமகலானாலும் பிரச்சனை ஒன்றுதான். ஆனால் அடுத்த வீட்டு பிரச்சனை பக்கத்துக்கு வீட்டு காதோடு முடிந்துவிடும். அரசகுடும்பத்து பிரச்சனை நாடு முழுக்க பரவிவிடும் அந்த பரவல்தான் டயானாவின் மரணத்திற்கான காரணம். மற்ற அரசகுடும்பத்து பெண்களிடம் உள்ள ஆணவமும், அகங்காரமும் கொஞ்சம்கூட இல்லாத பெண்ணாக டயானா இருந்தது அவரை தனிமைபடுத்தியது. ஆனால் அந்த வேற்றுமையும், தனிமையும்தான் அவரை மக்கள் மனதில் இடம்கிடைக்க செய்தது.தன்னை எப்போதும் மக்களோடு மக்களாக ஒருங்கினைதுக்கொண்ட டயானா பல தொண்டு நிறுவனங்களுக்கு நிதிஉதவி அளித்ததோடு நேரடியாக சென்று உதவவும் முன்வந்தார் இதை சற்றும் விரும்பாத அரச குடும்பம் அவரை கட்டுபடுத்த நினைத்ததன் விளைவுதான் சார்லஸ், டயானா அவர்ளது விவாகரத்து.

நாம் எங்காவது வெளியில் சென்றால் நமக்கு தெரிந்தவர்களோ அல்லது நம்மை தெரிந்தவர்களோ பார்த்துவிடக்கூடாது என்று ஒரு சில நேரங்கள் நினைப்பதுண்டு. டயானா போன்ற ஒருவரது வாழ்க்கையானது எப்போதும் ஒரு கண் நம்மை பார்ப்பது என்பதை  தாண்டி எங்கு சென்றாலும் நம்மை துரத்தும் கேமராவிடமிருந்து தப்பித்து எங்குதான் நிம்மதியாக இருக்கமுடியும். டயானா தன்னுடைய இளவரசி பட்டதை விட்டு வெளியே வந்தாலும் உலகம் அவரையேதான் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னை பிரபலமாக்கிய அதே இளவரசி பட்டம்தான் அவரது உயிரையும் குடித்தது. டயானா அரச வாழ்க்கையின் பகட்டை விரும்பாவிட்டாலும் அதன் ஆதிக்க அலைகளிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரது மரணம் வெறும் கார் விபத்தாகமட்டும் கருதமுடியாது. மக்கள் மனதில் என்றென்றும்  வாழும் இளவரசி டயானாவின் 15 ஆவது ஆண்டு நினைவஞ்சலி வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரவிருப்பதால் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறேன்.

சனி, ஜூலை 07, 2012

கடவுளை வெளியே தேடியதின் விளைவு நித்தியானந்தா...


நித்தியானந்த ஒரு சாதாரணமான மனிதர் அவரை பற்றி பேச ஒன்றுமில்லை என்று விட்டுவிடலாம், ஆனால் நித்தியானந்த ஒரு சாமியார் என்கின்ற போர்வையில் ஆன்மீகத்தை கொலைசெய்து அந்த சடலத்தின் மீது பெரிய தனது சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். ஆன்மீகத்தை காம கண்கொண்டு பார்பதான அத்தனை நாடகங்களும் நமது கடவுள் பக்தியின் மீது வைக்கப்படும் மலர்வளையம். முன்பு விவேகனந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜர், வள்ளலார் போன்ற பல மகான்கள் இன்று இல்லாவிட்டாலும் அவர்கள் சொன்ன கருத்துக்களை வாழ்க்கை வழிமுறைகளை கடைபிடித்தோமானால் நமது வாழ்க்கை சிறக்கும். வெற்று மனிதனை உயரத்தில் அமரசெய்துவிட்டு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவதிப்படுவது ஆன்மீகமல்ல அது வெறும் ஆணவம் "பசுதோல் போர்த்திய புலி" என்பதாகும். நித்தியானந்தாவை வளர்த்தது உண்மையில் நாம்தான் என்பதை சற்று புத்தியுள்ளவர்கள் யோசிக்கவேண்டும். கூடபிறந்தவனையே நம்பாத நாம் வெறும் சித்து வேலைகளை செய்து தனது வார்த்தை ஜாலத்தை காட்டி மயக்கிவிட்டால் அவனது காலடியில் கோடிகளை கொட்டுவதோடு, கற்பையும் இலக்க சம்மதிக்கும் கேடுகெட்ட புத்திக்கு பெயர் ஆன்மீகமல்ல. மனஅரிப்பின் துவக்கமே ஆன்மீகம் அது உடலரிப்பிட்கான வேட்கையல்ல. மனமே திரைகடலாய் உடலே அதன் அலையாய் அலைந்து திரிந்து அவனை அடைவதே ஆன்மீகம். அதைவிட்டு ஒரு சாமியார் தன்னை கடவுள் என்பாராம் அதை நம்பி அவரோடு உறவு கொள்வார்களாம் உடனே அவர்களுக்கு மோட்சதிற்கான டிக்கெட் வழங்கப்படுமாம். பலருக்கு தெரிவதே இல்லை அவர் ப்ளாக்கில் விற்கும் அந்த டிக்கெட் நரகத்திற்கான டிக்கெட் என்பது. பார்க்க அமைதியாக இருந்தால் அவர் நல்லவர் அவர் செய்வதெல்லாம் சரி என்று நம்பும் முட்டாள் ஜனங்கள் இருக்கும் வரை ஆயிரம் பெரியார் அவதரித்தாலும் வேஸ்டுதான். 

மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது. தன்னை கடவுள் என்று எந்த கடவுளும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாது. கடவுள் என்பது வேறு மனிதன் என்பது வேறு. நாம் மனிதாபிமானமுள்ள மனிதர்கள்தானா ? என்பதே சந்தேகம் எழும்போது அதாவது முதல்கட்டமே முழுமையடையாதபோது கடைசி கட்டத்தை அடைந்துவிட்டதாக தன்னை பிரகடனப்படுதிக்கொண்டவர் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உணராமல் அவர்களை தேடி செல்பவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பது சொல்லியா தெரியவேண்டும். மனதுள் இருக்கும் கடவுளை எங்கு தேடி கண்டுபிடிக்கப்போகிறார்கள், மனம் அலைபாய்ந்தால் மௌனம் பிறக்காது அங்கு அமைதியும் கிடைக்காது. மனம் அமைதியானால் ஞானம் பிறக்கும், கடவுள் தெரிவார் அந்த அமைதியில். ஒருமுறை இறைவன் தனக்கே உரிய ஒரு இடம் தேடி அலைந்தார் அவர் எங்கு சென்றாலும் மனிதர்கள் அவரை தொந்தரவு செய்தார்கள் அவரோ யாரும் தன்னை கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்திற்கு செல்ல நினைத்தார் அதனால் மனிதனின் மனதுள் சென்று அமர்துவிட்டார். எங்கெங்கோ அலைந்த மனிதர்கள் கடவுளை கண்டுபிடிக்க முடியாமல் வேறு வழியின்றி தாங்களே தங்கள் கடவுளை உருவமாக்கி தனக்குள் இருக்கும் கடவுளை வெளியில் தேட ஆரம்பித்தார்கள் அந்த தேடுதலின் உச்சகட்டம்தான் தன்னை கடவுள் என்று பிறரை நம்ப வைப்பது பிறகு அவர்களை முழுவதுமாய் ஆக்கிரமித்து அவர்களது சுயத்தை அழித்து தானே கடவுள் என்கின்ற தர்க்கத்தை கொண்டுவருவது.
நித்தியானந்தா மட்டும் தவறு செய்யவில்லை அடிப்படையில் மனித மனதின் மொத்த உருவம் நித்தியானந்த. மனிதர்கள் மற்றவர்கள் தாங்கள் ஆசைபடும் நிலையை நித்தியானந்தா அடைந்துவிட்டார் என்கின்ற பொறாமைதான் பலர் நித்தியானந்தாவை வெறுக்க காரணம்.அது தேவைக்கு அதிகமான பணம், தேவைக்கு அதிகமான பெண்களிடம் உறவு, மற்றவர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து தான் விருப்பதிற்கு அவர்களை ஆடவிடுவது என்கின்ற போதை எல்லோருக்குமே தேவை அதை வெற்றிகரமாக நித்தியானந்த நிறைவேற்றிவிட்டார். அடிப்படையில் ஒன்று யோசிக்க மறந்துவிட்டோம் அது எல்லோரும் நிதியானந்தாவாக ஆகா ஆசைப்படுவது அது நடக்காதபோது அவரை வெறுப்பது என்கின்ற ரீதியில் நடந்தவைதான் என்பதே உண்மை.இதை புரிந்துகொண்டால் தவறு நித்தியானந்தவிடம் மட்டும் இல்லை என்பதும் புரியும்.

சனி, ஜூன் 16, 2012

புத்தகங்கள்....

புத்தகங்கள் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கின்றன. நாம்தான் புத்தகங்களை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. புத்தகங்கள் ஒரு மனிதனின் முழு வாழ்கையை அனுபவங்களை நமக்கு ஒரு மணிநேரத்தில் சொல்லிவிடுகின்றது. நான் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த, என்னை பாதித்த விஷயங்களை பற்றி ஒரு சிறிய பகிர்வு. சுகி சிவம் அவர் பேசும்போது கூரிய விஷயம் ஒருவர் வந்து அவரிடம் கேட்டார் எந்த புத்தகம் சிறந்த புத்தகம் என்று அதற்கு சுகி சிவம் அவர்கள் சொன்ன விளக்கம் " நீ போய் புரட்டி புரட்டி எடுக்கற புத்தகம் சிறந்த புத்தகம் அல்ல, எந்த புத்தகம் உன்ன புரட்டி புரட்டி எடுக்குதோ அதுதான் சிறந்த புத்தகம் என்று". புத்தகத்தின்மேல் எப்போதும் எனக்கு காதல் உண்டு. அந்த புத்தகங்கள் சொல்லித்தந்த விஷயங்கள், ஞான அக்னியை என்னோடு வெட்டி அரட்டை அடிப்பவரிடம் இருந்து நான் ஒருபோதும் பெற்றதில்லை.
இறையன்பு அவர்கள் புத்தகங்கள் பற்றி பேசும்போது சொன்ன விஷயங்கள் ஒரு மனிதன் அவனது வாழ்நாளில் குறைந்தபச்சம் நூறு புத்தகங்களாவது படித்திருக்கவேண்டும். பகவத் கீதை சொல்லும் கருத்து "அழியாத செல்வம் கல்வி" என்பதாகும். பலருக்கு படிப்பது என்பது கல்லூரியோடு முடிவடைந்ததாக நினைக்கிறார்கள். கல்லுரி படிப்பு சம்பாதிக்க கற்றுக்கொடுப்பது. சாந்தமாக வாழ, சந்தோசமாக வாழ நாம் தேடித்தேடி படிக்கும் புத்தகமே நமக்கு கற்றுக்கொடுக்கும். அறிவிற்கு எல்லையே இல்லை. அவ்வை சொன்ன வார்த்தை " கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு". எப்போது நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்கின்ற தெளிவு வருகிறதோ அப்போது ஞானம் பிறக்கிறது. எப்போது நான் என்பது நானல்ல என்கின்ற உண்மை புரிகிறதோ  அப்போதுதான் நமக்குள் ஏற்படும் மௌனத்தின் சப்தம் நமக்கு கேட்கிறது.  

எனக்கு மனதில் ஆழமாய் பதிந்துவிட்ட இறையன்பு அவர்களின் சோளக்காட்டு பொம்மை பற்றிய விளக்கம். சோளக்காட்டு பொம்மைகள் மனிதர்களின் அடையாளம். சோளக்காட்டு பொம்மைகள் பயமுறுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பறவைகள் எப்போதும் ஒரு மனிதன் தானியங்களை பாதுகாக்க நிற்பதாய் நினைத்துவிடுகின்றது. மனிதனுக்கு மட்டும் இயற்கை கொடுத்த அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணுகின்றான். அவனது சுயநலம்தான் இந்த சோளக்காட்டு பொம்மைகள். சோளக்காட்டு பொம்மைக்கு மற்றவர்களை பயமுறுத்துவதை பெருமையாக நினைக்கிறது. மனிதர்களும் தங்களை மற்றவர்கள் பார்த்து பயப்படவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு நாள் அந்த பறவைகளுக்கு நிற்பது மனிதனல்ல சோளக்காட்டு என்பது தெரியவரும்போது அறுவடை முடிந்துவிடும். மனிதர்கள் தங்களின் உருவமாக சோளக்காட்டு பொம்மைகள் பிரதிபலிக்கின்றன.