"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" இறுதிநாள் நிகழ்ச்சி மிகவும் ப்ரம்மிப்பகவும் மிக சுவாரசியமாகவும் இருந்தது. சூர்யா அவரை நாயகனாக பார்த்து பழகிய கண்கள் ஒரு குவிஸ் மாஸ்டராக அமர்ந்து கேள்வி கேட்கும் விதம் இந்த நிகழ்ச்சியை ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக ஆக்கியது. நான் முழுவதுமாக இந்த நிகழ்ச்சியை பார்க்காவிட்டாலும் இறுதிநாள் நிகழ்ச்சி மனதில் ஆழமாய் பதிந்தது. உலகில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் ஆனால் யாருடைய வெற்றியை உலகமே கொண்டாடுகிறதோ அவர்தான் மிகச்சிறந்த தலைவர், வெற்றியாளர் எனலாம். வெற்றி என்பதன் தொடக்கம் தோல்விகள் கொடுத்த அனுபவம் எனலாம். சூர்யா அவரது இயல்பான அந்த அணுகுமுறை பலரை வெற்றிபெற செய்தது எனலாம். இறுதிநாள் சூரியாவின் அந்த அனுபவ பேச்சுக்கள் மனதை தொட்டது. வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே போல்தான் துவங்குகிறது அந்த வாழ்கையை நாம் எப்படி வழிநடத்தி செல்கிறோம் என்பதில்தான் வாழ்கையின் போக்கே மாறுகிறது. சூரியாவை புகழ்வது மட்டும் என்னுடைய நோக்கமல்ல அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவரும் அவர் தந்தை திரு. சிவகுமார் அவர்களும் தந்த விளக்கம் அவர்களது அனுபவம் தந்த பாடம்.
இறுதி நிகழ்ச்சி தனக்கே உரிய முறையில் சூர்யா மக்கள் மனதில் தனது நல்ல குணங்களால் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். எப்போதும் பெரிய திரையில் எப்போதாவது அவர் படங்களை சென்று பார்த்தவர்கள். இப்போது வீடிட்குள்ளே சின்னத்திரையில் தன்னை அழகாக காட்டியதோடு தன் இயல்பான குணத்தையும் காட்டினார். அமீர் கான் உடைய "சத்திய மேவ ஜெயதே" போன்ற நல்ல நிகழ்சிகள் சூர்யா நடத்தும் "அகரம்" நிச்சயம் வரவேற்கபட வேண்டிய நிகழ்வுகள்.
இறுதிநாளன்று சூர்யா மற்றவர்களை பாராட்டிய விதம், அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அவர்களது வாழ்கையில் கிடைத்த சுவாரசியமான அனுபவமாக கண்டிப்பாக இருக்கும். அப்படியொரு சுவாரசியமான அனுபவம் இறுதிநாள் நிகழ்ச்சியை பார்த்த எனக்கும் கிடைத்தது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக