முகல் - ஈ - அசாம் படம் தமிழில் மொழிபெயர்க்கபட்டு அக்பர் என்ற பெயரில் வெளிவந்தபோதிலும் தமிழில் சரியாக ஓடாத இந்த படம் ஹிந்தியில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இப்படம் ஒரு சரித்திரத்தை கிட்டதட்ட பதினைத்து வருடம் தக்கவைத்துக்கொண்டது என்றால் அது மிகையாகாது. படம் பலவருட போராடதிட்குபிறகுதான் வெளிவந்தது அதற்கு காரணம் இப்படத்தின் ஒவ்வரு காட்சியமைப்பும் மிக பிரம்மிக்கத்தக்க வகையில் எடுத்துக்கொண்ட முயற்சிதான். ஒரு மென்மையான காதலை மையமாக கொண்ட படத்தின் வடிவமும் முகாலைய காலத்து வடிவமைப்பை கொண்டுவந்தது அதை நம் கண்களுக்கு விருந்தாக்கியது அந்த காலத்திற்கே சென்றது போன்ற உணர்வினை கொண்டு வந்தது நிச்சயம். இந்த படம் பிரம்மிப்பின் முக்கிய அம்சம் மதுபாலாவுடைய நடிப்பு ( அனார்கலி) இந்த படத்தில் மதுபாலாஅனார்கலியாக உருமாறியிருந்தார்.
இந்த படம் 1960 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை இயக்கியவர் கே. ஆசிப் மற்றும் இந்த படத்தில் அக்பராக பிரிதிவிராஜ் கபூர் நடித்துள்ளார். சலிமாக திலிப் குமார், ஜோதா பாயாக துர்க்கா கோட்டி நடித்துள்ளார். ராஜகுமாரன் சலீம் நாட்டிய தாரகையான அனார்கலியை காதலிப்பதால் அவர் தந்தை மற்றும் அரசராகிய அக்பர் எதிர்கிறார். ஒரு அழகான காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் கண்ணீறால் நனைக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுத்துவது மதுபால நடிப்பின் உச்சகட்டம். ஒரு அழகான நடன தாரகையாக நடனமாடுவதாகட்டும், காதல் வயப்பட்டு வெட்கப்படுவதாகட்டும், காதலனை பிரிந்து துயரில் அழுதுகொண்டே அழகான பாடல் ஒன்றை சிறையில் இருந்தபடி பாடுவதாகட்டும் காட்சிக்கு காட்சி அழகு பதுமையாக உலாவரும் மதுபாலா நடிப்பு படத்தின் உயிர் துடிப்பு.

அரசபையில் தனது காதலன் சலீம் மற்றும் அரசர் அக்பர் முன்பாக தன் காதலை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க போவதில்லை என்பதை தனது பாட்டின் மூலமும் நடன அசைவுகள் மூலமாகவும் காதலை கொடு அல்லது மரணத்தை கொடு என்று அரசர் முன்னால் பாடி நடனமாடும் ஆசாத்திய துணிச்சல் கொண்ட அனார்கலி. அத்தகைய அனார்கலிக்காக தனது தந்தையையே எதிர்த்து போர்களத்தில் போராடும் சலீம் என்று தங்கள் உயிரைக்கொடுத்து காதலை வாழவைக்கும் படமாக இந்த படம் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
தன் மகனிடம் அனார்கலியை மறக்கும்படி கெஞ்சுவதாகட்டும் அதனை மறுக்கும் சலீமுடன் சண்டையிட்டு சலீமை கைதுசெய்து மரணதண்டனை விதித்து அதற்காக வருந்துவதாகட்டும் பிரிதிவிராஜ் கபூர் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவரது அந்த கடுமையான பார்வை அதட்கேட்ப வசனங்கள் அவரது உடல் மொழி எல்லாமே அக்பர் கதாபத்திரதிற்கு ஏற்றவாறு இருந்தது.
இந்த படத்தின் முக்கிய பங்கு மதுபாலாவின் அழகாண நடிப்பு என்பதோடு சரித்திர வரலாற்றை பிசகாது எடுத்த முயற்சி. காதலை எதிர்க்க எதிர்க்க வளரும் என்பதை அழகாக கட்சிபடுத்தபட்டிருக்கும் விதம். நடன அசைவுகள் பாடல் கொடுத்த இனிமை என்று படத்தை பலமுறை பார்த்து ரசிக்கலாம் என்பதற்கான உத்தரவாதம் கண்டிப்பாக இந்த படதிற்கு கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக