அமீர்கான் உடைய தீவிர ரசிகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன். அமீர்கான் அவரது நடிப்பில் வியந்த விஷயங்கள் மிகஅதிகம் அவர் ஆங்கில திரைப்பட நடிகர் மெல் கிப்சன் போன்று அபார திறமை உடையவர். அமீர்கான் தனது நடிப்பின் ஆற்றலை மிககச்சிதமான கதாபாத்திரத்தின் மூலமாக தன்னை சமுதாய சிந்தனையுள்ள மனிதராக அடையாலப்படுதிக் கொண்டார். லகான், 3 idiots , ரங் தி பசந்தி போன்ற படங்களின் மூலமாக சமுதாய கருத்தினை மையமாக கொண்ட படங்கள் மக்களால் மிகவும் விரும்பப்பட்டவை. தனது சாக்லேட் ஹீரோ தோற்றத்தை உதறி எறிந்துவிட்டு சமுதாய சிந்தனையோடு படங்களை அணுகிய விதம் அமீர்கானுக்கே உரிய சிறப்பு அம்சம்.
அமீர்கான் தன்னை சமுதாயதின் அங்கமாக அணுகிய விதம் அவரை சினிமா ஹீரோ என்பதோடு இல்லாமல் நிஜவாழ்க்கையிலும் தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். தனக்கே உண்டான சமுதாய அக்கறையை கையில் எடுத்துக்கொண்டு அதை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் "சத்திய மேவ ஜெயதே" நிகழ்ச்சி கண்டிப்பாக மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அமீர்கான் தன்னை சமுதாயதின் அங்கமாக அணுகிய விதம் அவரை சினிமா ஹீரோ என்பதோடு இல்லாமல் நிஜவாழ்க்கையிலும் தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். தனக்கே உண்டான சமுதாய அக்கறையை கையில் எடுத்துக்கொண்டு அதை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் "சத்திய மேவ ஜெயதே" நிகழ்ச்சி கண்டிப்பாக மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தவாரம் நதிநீர் மாசடைவதை பற்றிய பிரச்சனையை மிக அழகாக எடுத்து சொன்ன விதம். மக்கள் இப்போதாவது விழிப்புணர்வு அடையமாட்டார்களா? என்கின்ற பரிதவிப்பை ஏற்படுத்தியது. ஒரு விதத்தில் நதிநீர் மாசடைய நாமும் ஒரு காரணம் என்பதை அறியும்போதும் நமக்கு அதற்கான தண்டனையை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்கப்போகிரார்கள் என்னும் கொடுமையே நமக்கு மிகப்பரிய தண்டனையாக மனதில் முள்ளாக தைக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்து விட்டுசெல்வோமோ இல்லையோ கண்டிப்பாய் வியாதியை விட்டு செல்வோம் என்பது மிகவும் வருத்த வேண்டிய விசயமாக இருக்கிறது. நல்ல காற்று, நல்ல குடிநீர், நல்ல எதிர்காலம் எப்போது வரும் என்பது தெரியாமல் மனம் ரனமாகிறது. நாளைய சந்ததியினர் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகள் நம்மைவிட அதிகமாக இருக்கும் என்பது எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. என்னதான் நாம் பல விசயங்களை கண்டுபிடித்தாலும் பூமிக்கு நாம் செய்த துரோகத்தை நம்மால் சரிசெய்ய இயலாது. நாம் கொஞ்சம் முயற்சித்தால் பஞ்சபூதங்களை மேலும் மாசடையாமல் தடுக்கலாம்.
நாமும் நினைத்தால் சாதிக்கலாம் இதுபோன்ற நல்ல நிகழ்சிகளை ஊக்குவிப்பதின் மூலமாக. நாமும் முயற்சி செய்வோம் இந்தியாவை வளமாக்க பாடுபடுவோம் சத்திய மேவ ஜெயதே.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக