"Diana, Princess of Wales" (1 July 1961 – 31 August 1997) -
டயானா அவர்களை பற்றி எழுதவேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றும்போது எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்வி. ஏன் டயானா அவர்களை பற்றி எழுதவேண்டும் என்பதுதான். அதற்கு காரணம் தேடும்போது டயானா என்னும் பெயரை கேட்டவுடன் மனதிற்குள் ஒரு இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு அது அவரது வசிகர புன்னகையா இல்லை அவரது அழகான தோற்றமா என்பது புரியவில்லை. ஒரு அரசியல் வட்டத்திற்குள் வரவிரும்பாத ஒரு இளவரசி. இளவரசர் சார்லசை திருமணம் செய்யும்போது அவர்க்கு தான் இங்கிலாந்த் நாட்டின் இளவரசி என்னும் சந்தோசம், அவர் இளவரசி ஆனபிறகு இருந்ததா என்றால் கண்டிப்பாக இருந்திருக்காது. ஆசை படுவதட்கும் ஆசைபட்டது கிடைத்தபிறகும் உள்ள உணர்சிகளை மதிப்பிட்டால் அந்த ஆசைபட்டது கிடைக்கவேண்டும் என்கின்ற வேட்கை அதனால் ஏற்படும் உந்துதல் அதை அடைய எடுக்கும் முயற்சி நமக்கு அதன்மீதான ஒரு காதலை உண்டாக்குகின்றது. அதே ஆசை நிறைவேறி நாம் ஆசைப்படுவது நமக்கு சொந்தமானால் மனம் அதை விடுத்தது அடுத்த ஒன்றிற்க்கு ஆசைப்பட மனம் ஆயத்தமாகின்றது. இது யாராலும் தவிர்க்க இயலாத ஒன்று ஆனால் ஒன்றை நாம் யோசித்தோமா நாம் ஆசைப்பட்டோம் அந்த ஆசைப்பட்டது கிடைத்துவிட்டது அதை முழுமையாக அனுபவித்தோமா? என்று நாம் என்றைக்காவது யோசித்திருப்போமா?. இதே நிலைதான் டயானவிட்கும் இருந்திருக்க வேண்டும். அப்படி ஆசைப்பட்ட அரச வாழ்க்கையின் பளபளப்பு வெளியில் இருந்து பார்க்கும்போது மட்டுமே அழகானவையாக இருக்கும் உள்தொற்றம் மிக மோசமானதாக இருக்கும் என்பதை சில நாட்களிலேயே உணர்ந்திருப்பார் டயானா.
அரசகுடும்பத்து மருமகலானாலும் நமக்கு அடுத்த வீட்டு மருமகலானாலும் பிரச்சனை ஒன்றுதான். ஆனால் அடுத்த வீட்டு பிரச்சனை பக்கத்துக்கு வீட்டு காதோடு முடிந்துவிடும். அரசகுடும்பத்து பிரச்சனை நாடு முழுக்க பரவிவிடும் அந்த பரவல்தான் டயானாவின் மரணத்திற்கான காரணம். மற்ற அரசகுடும்பத்து பெண்களிடம் உள்ள ஆணவமும், அகங்காரமும் கொஞ்சம்கூட இல்லாத பெண்ணாக டயானா இருந்தது அவரை தனிமைபடுத்தியது. ஆனால் அந்த வேற்றுமையும், தனிமையும்தான் அவரை மக்கள் மனதில் இடம்கிடைக்க செய்தது.தன்னை எப்போதும் மக்களோடு மக்களாக ஒருங்கினைதுக்கொண்ட டயானா பல தொண்டு நிறுவனங்களுக்கு நிதிஉதவி அளித்ததோடு நேரடியாக சென்று உதவவும் முன்வந்தார் இதை சற்றும் விரும்பாத அரச குடும்பம் அவரை கட்டுபடுத்த நினைத்ததன் விளைவுதான் சார்லஸ், டயானா அவர்ளது விவாகரத்து.
நாம் எங்காவது வெளியில் சென்றால் நமக்கு தெரிந்தவர்களோ அல்லது நம்மை தெரிந்தவர்களோ பார்த்துவிடக்கூடாது என்று ஒரு சில நேரங்கள் நினைப்பதுண்டு. டயானா போன்ற ஒருவரது வாழ்க்கையானது எப்போதும் ஒரு கண் நம்மை பார்ப்பது என்பதை தாண்டி எங்கு சென்றாலும் நம்மை துரத்தும் கேமராவிடமிருந்து தப்பித்து எங்குதான் நிம்மதியாக இருக்கமுடியும். டயானா தன்னுடைய இளவரசி பட்டதை விட்டு வெளியே வந்தாலும் உலகம் அவரையேதான் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னை பிரபலமாக்கிய அதே இளவரசி பட்டம்தான் அவரது உயிரையும் குடித்தது. டயானா அரச வாழ்க்கையின் பகட்டை விரும்பாவிட்டாலும் அதன் ஆதிக்க அலைகளிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரது மரணம் வெறும் கார் விபத்தாகமட்டும் கருதமுடியாது. மக்கள் மனதில் என்றென்றும் வாழும் இளவரசி டயானாவின் 15 ஆவது ஆண்டு நினைவஞ்சலி வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரவிருப்பதால் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறேன்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக